என் மலர்
விளையாட்டு
மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. டொமினிக் சிப்லி 86 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து நேற்று இரண்டாம் நாள் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் டொமினிக் சிப்லி சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் சதம் விளாசினார்.
இங்கிலாந்து அணி 341 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது.
டொமினிக் சிப்லி 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஆனால், சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 17 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 176 ரன்கள் குவித்து ரோச் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதையடுத்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. பிராத்வேட் மற்றும் ஜான் கேம்பால் அந்த அணியின் தொடக்க
ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஜான் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம் கர்ரன் பந்து வீச்சில் எல்டபுள்யூ முறையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
பின்னர் வந்த ஜோசப் நிதான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வேட் 6 ரன்களுடனும், ஜோசப் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மான்செஸ்டர் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினர்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. டொமினிக் சிப்லி 86 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் டொமினிக் சிப்லி சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் சதம் விளாசினார். இங்கிலாந்து அணி 341 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டொமினிக் சிப்லி 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 260 ரன்கள் குவித்தது.

அடுத்து வந்த ஒல்லி போப் 7 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். ஒரு பக்கம் இரண்டு விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் 150 ரன்னைக் கடந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ் உடன் இணைந்து பட்லர் விளையாடி வருகிறார்.
141 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
மூன்று மாதங்கள் பயிற்சி எடுத்து சில ரஞ்சி போட்டிகளில் விளையாடினால், இந்திய அணிக்காக விளையாடக்கூடிய தகுதியை பெற்றுவிடுவேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இடது கை பேட்ஸ்மேனும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி ஓய்வு பெற்ற கடைசிக்கால கிரிக்கெட் குறித்து பெங்கால் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்தார்.
அப்போது பிசிசிஐ தலைவர் கங்குலி கூறும்போது ‘‘எனக்கு இன்னும் இரண்டு தொடர்கள் ஒருநாள் போட்டியில் கூடுதலாக கொடுக்கப்பட்டிருந்தால் இன்னும் அதிகமான ரன்கள் அடித்திருப்பேன். நாக்பூர் போட்டியில் ஓய்வு பெறாமல் இருந்திருந்தால், அடுத்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் அதிக ரன்கள் அடித்திருப்பேன்.
உண்மையிலேயே, தற்போது எனக்கு ஆறு மாதம் பயிற்சி கொடுக்கப்பட்டால், அதன்பின் மூன்று ரஞ்சி போட்டிகளில் விளையாடி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக என்னால் ரன்கள் அடிக்க முடியும். ஆறுமாதம் கூட வேண்டாம். மூன்று மாதங்கள் கொடுத்தால் போதும். அப்போது கூட ரன்கள் அடிக்க முடியும்.
நீங்கள் வாய்ப்புகள் கொடுக்காமல் போகலாம், ஆனால் எனக்குள் இருக்கும் நம்பிக்கையை எப்படி உடைக்க முடியும்?’’ என்றார்.
மேலும் 2007-08 சிறப்பாக ரன்கள் அடித்த போதிலும் அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்த கேள்விக்கு ‘‘அதை என்னால் நம்பமுடியவில்லை. அந்த வருடத்தில் நான் அதிக ரன்கள் அடித்தவர்களில் ஒருவராக திகழ்ந்த போதிலும் நீக்கப்பட்டேன். நன்றாக விளையாடிய போதிலும் நீக்கப்பட்டால், அப்புறம் எப்படி நிரூபிப்பது, யாரிடம் நிரூபிப்பது, என்ற விஷயம் எனக்கும் நிகழ்ந்து கொண்டே இருந்தது’’ என்றார்.
113 டெஸ்ட் போட்டிகளில் 7212 ரன்களும், 311 ஒருநாள் போட்டிகளில்11,363 ரன்களும் அடித்துள்ளார். கிரேக் சேப்பல் உடனான மோதலால் 2006-ல் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின் மீண்டும் அணிக்கு திரும்பி 2008 வரை விளையாடினார்.
ஐபிஎல் கிரிக்கெட் லீக்கை எப்போது வேண்டுமென்றாலும் நடத்துவதற்கு தயாராக இருக்கிறோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தொடர்ச்சியாக கூறி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 டி20 லீக் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20- உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பில்லாததால் செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் லீக்கை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என விருப்பம் தெரிவித்தது. இலங்கையும் விருப்பம் தெரிவித்திருந்தது.
கடந்த மாதம் இறுதியில் நியூசிலாந்தும் விருப்பம் தெரிவித்திருந்ததாக செய்தி வெளியானது. அப்போது, அப்படி ஒரு எண்ணம் எங்களுக்கு இல்லை என்று நியூசிலாந்து முற்றிப்புள்ளி வைத்தது.
அதன்பின் பிசிசிஐ தலைவர், இந்தியாவைத் தவிர்த்து வெளியில் போட்டியை நடத்தும் எண்ணம் இல்லை. அப்படி இருந்தாலும் அது இறுதி கட்ட முயற்றியாகத்தான் அது இருக்கும் என்றார்.
இதனால் ஐபிஎல் லீக் நடந்தால் இந்தியாவில்தான் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்தியாவில் போட்டி நடந்தாலும் பரவாயில்லை. ஒருவேளை இந்தியாவில் நடத்த முடியாத நிலை ஏற்பட்டால், கடைசி நேரத்தில் அழைக்கலாம் என்பதால் நாங்கள் தயார் நிலையிலேயே இருக்கிறோம் என்று துபாய் விளையாட்டு சிட்டியின் கிரிக்கெட் மற்றும் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் சல்மான் ஹனிஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சல்மான் ஹனிஃப் கூறுகையில் ‘‘துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானம் மற்றும் ஐசிசி அகாடமி டி20 லீக் போட்டிக்கு தயாராக இருப்பதற்காக சாத்தியக்கூறு உள்ள மைதானம். இங்கு 9 ஆடுகளங்கள் உள்ளன. குறுகிய நாட்களுக்குள் அதிகப்படியாக போட்டிகளை நடத்திட முடியும். நாங்கள் எந்த போட்டிக்கான அட்டவணையையும் தயார் செய்யாததால் ஆடுகளங்கள் புதிதாக இருக்கின்றன’’ என்றார்.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு மில்லியனை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2014-ல் இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது பெரும்பாலான ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கவாஸ்கர் காலத்தில் தலைசிறந்த வீரர்கள் விளையாடிய போதிலும், யாரும் 10 ஆயிரம் ரன்னை நினைத்தது கிடையாது என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் இவர்தான். 125 டெஸ்ட் போட்டிகளில் 214 இன்னிங்சில் பேட்டிங் செய்து 34 சதங்களுடன் 10,122 ரன்கள் அடித்துள்ளார்.
கவாஸ்கர் காலத்திற்கு முன்னதாக பல ஜாம்பவான்கள் விளையாடியுள்ளனர். இருந்தாலும் யாரும் 10 ஆயிரம் ரன்களை நினைத்தது கிடையாது என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘கவாஸ்கர் காலக்கட்டத்திலும், அதற்கு முன்னதாகவும் பல தலைசிறந்த வீரர்கள் இருந்தனர். ஜாவித் மியான்தத், விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன் போன்றோர்கள் 10 ஆயிரம் ரன்களை நினைத்தது கிடையாது. தற்போதைய காலக்கட்டத்தில் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் நடக்கிறது. இருந்தாலும் சில வீரர்களே 10 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை கடந்துள்ளனர்.
என்னிடம் நீங்கள் கேட்டால், சுனில் கவாஸ்கரின் 10 ஆயிரம் ரன்கள், தற்போதைய 15 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரன்களுக்கு சமமானது. அதைவிட அதிகமாகத்தான் இருக்குமே தவிர, குறைவாக இருக்காது.
தற்போது நல்ல பார்மில் இருந்தால் ஒரு சீசனில் 1000 முதல் 1500 ரன்கள் வரை அடிக்க முடியும். கவாஸ்கர் விளையாடிய காலத்தில், சூழ்நிலை இதுபோன்று கிடையாது. தற்போது முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் தயார்படுத்தப்பட்டுள்ளது. ஐசிசி-யும் இதைத்தான் விரும்புகிறது. அப்போதுதான் ரசிகர்கள் வருவார்கள் என்று.
கடந்த காலங்களில் ஆடுகங்கள் அப்படி கிடையாது. குறிப்பாக ஆசிய கண்டத்திற்கு வெளியே கடினமானதாக இருக்கும்’’ என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதுதான் கவாஸ்கர் 10 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை எட்டினார்.
பென்ஜிமா இரண்டு கோல்கள் அடிக்க ரியல் மாட்ரிட் வில்லாரியல் அணியை 2-1 என வீழ்த்தி 34-வது முறையாக லா லிகா சாம்பியன் பட்டம் வென்றது.
லா லிகா கால்பந்து லீக் ஆட்டத்தில் கொரோனா வைரசால் போட்டி நிறுத்தப்பட்டபோது பார்சிலோனா முன்னிலை வகித்தது. கொரோனா தொற்று குறைந்த பின் மீண்டும் போட்டிகள் தொடங்கின. அப்போது ரியல் மாட்ரிட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர் வெற்றியால் பார்சிலோனா அணியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியது.
ரியல் மாட்ரிட் அணி 35 போட்டிகளில் முடிவில் 80 புள்ளிகள் பெற்றிருந்தது. பார்சிலோனா 36 போட்டிகளில் 79 புள்ளிகள் பெற்றிருந்தது. இதனால் எந்த அணி முதல் இடம் பிடிக்கும் என்பதில் பரபரப்பு தொற்றியது.
ஆனால் 36-வது போட்டியில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று 83 புள்ளிகள் பெற்றது. நேற்றிரவு பார்சிலோனா ஒசாசுனா அணியையும், ரியல் மாட்ரிட் வில்லாரியல் அணியையும் எதிர்த்து விளையாடின.
ரியல் மாட்ரிட் 2-1 என வில்லாரியல் அணியை வீழ்த்தியது. பென்ஜிமா இரண்டு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். அதே சமயம் பார்சிலோனா சொந்த மைதானத்தில் ஒசாசுனா அணியிடம் 1-2 எனத் தோல்வியை தழுவியது.

இதனால் ரியல் மாட்ரிட் 37 போட்டிகளில் முடிவில் 86 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. பார்சிலோனா 37 போட்டிகளில் 79 புள்ளிகளே பெற்றுள்ளது. இன்னும் ஒருபோட்டி மீதமுள்ளது. இதில் தோல்வியடைந்தாலும் ரியல் மாட்ரிட் அணிக்கு பாதிப்பு ஏற்படாது.
கடந்த 2017-க்குப்பின் தற்போது ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. லா லிகா கோப்பையை ரியல் மாட்ரிட் 34-வது முறையாக கைப்பற்றியுள்ளது.
ஐ.பி.எல். மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை தொடங்குவது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
கொல்கத்தா:
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்கள். 11 விதமான அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய அணி எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்திய அணிக்குரிய இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டிகளை வேறுதேதியில் நடத்துவது குறித்தும், இந்திய அணியின் வருங்கால போட்டி அட்டவணை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதே போல் முதல்தர போட்டியான ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பை மற்றும் ஜூனியர் அளவிலான போட்டிகளை உள்நாட்டில் எப்போது தொடங்கலாம், அதற்குரிய சாத்தியக்கூறு உள்ளதா? எனவும் விவாதிக்கப்படுகிறது. கொரோனா அச்சத்தால் போதுமான காலஅவகாசம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் இந்த முறை ரஞ்சி போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். உள்ளூர் சீசனை தாமதமாக தொடங்கும் போது விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, முஸ்தாக் அலி ஆகிய போட்டிகளில் ஒன்று நீக்கப்படலாம்.
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது நடத்துவது, இந்தியாவில் நிலைமை சீராகாவிட்டால் அதை வெளிநாட்டிற்கு மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி. முறைப்படி தள்ளிவைத்ததும் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான ஆயத்தபணிகளை தொடங்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மத்திய அரசிடம் இருந்து வரி விலக்கு பெற்றுத் தர இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. டிசம்பர் மாதம் வரை கெடு விதித்துள்ளது. அது குறித்தும், இந்திய அணியின் சீருடைக்கான ஸ்பான்சர்ஷிப் பெற்றிருந்த நைக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் புதிதாக டெண்டர் கோருவது குறித்தும், கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிப்பதற்கான பணிகளை தொடங்குவது குறித்தும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உயர்மட்ட குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் நிர்வாகிகள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்துகிறார்கள். 11 விதமான அம்சங்கள் குறித்து அவர்கள் ஆலோசிக்க உள்ளனர்.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இந்திய அணி எந்த வித போட்டிகளிலும் விளையாடவில்லை. இந்திய அணிக்குரிய இலங்கை, ஜிம்பாப்வே மற்றும் இங்கிலாந்து தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. இந்த போட்டிகளை வேறுதேதியில் நடத்துவது குறித்தும், இந்திய அணியின் வருங்கால போட்டி அட்டவணை குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இதே போல் முதல்தர போட்டியான ரஞ்சி கோப்பை மற்றும் விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, சையத் முஸ்தாக் அலி கோப்பை மற்றும் ஜூனியர் அளவிலான போட்டிகளை உள்நாட்டில் எப்போது தொடங்கலாம், அதற்குரிய சாத்தியக்கூறு உள்ளதா? எனவும் விவாதிக்கப்படுகிறது. கொரோனா அச்சத்தால் போதுமான காலஅவகாசம் இல்லாத சூழ்நிலை உருவாகியுள்ளதால் இந்த முறை ரஞ்சி போட்டி அட்டவணையில் மாற்றம் செய்ய வேண்டியது இருக்கும். உள்ளூர் சீசனை தாமதமாக தொடங்கும் போது விஜய் ஹசாரே, துலீப் கோப்பை, முஸ்தாக் அலி ஆகிய போட்டிகளில் ஒன்று நீக்கப்படலாம்.
காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டு இருக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை எப்போது நடத்துவது, இந்தியாவில் நிலைமை சீராகாவிட்டால் அதை வெளிநாட்டிற்கு மாற்றலாமா? என்பது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டியை ஐ.சி.சி. முறைப்படி தள்ளிவைத்ததும் ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கான ஆயத்தபணிகளை தொடங்க கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மத்திய அரசிடம் இருந்து வரி விலக்கு பெற்றுத் தர இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஐ.சி.சி. டிசம்பர் மாதம் வரை கெடு விதித்துள்ளது. அது குறித்தும், இந்திய அணியின் சீருடைக்கான ஸ்பான்சர்ஷிப் பெற்றிருந்த நைக் நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டதால் புதிதாக டெண்டர் கோருவது குறித்தும், கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிப்பதற்கான பணிகளை தொடங்குவது குறித்தும் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.
மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்துள்ளது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. போட்டி இந்திய நேரப்படி நேற்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை காரணமாக போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
மழை நின்று, அவுட் பீல்டு உலர்ந்ததால் டாஸ் சுண்டப்பட்டது, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதையடுத்து இங்கிலாந்தின் ரோய் பர்ன்ஸ், டொமினிக் சிப்லி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். பர்ன்ஸ் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெஸ்ட் இண்டீசின் ரோஸ்டன் பந்து வீச்சில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய சக் (0) தான் சந்தித்த முதல் பந்திலேயே ஹோல்டரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்ட ஜோ ரூ சற்று நிதானமாக ஆடி 23 ரன்களை சேர்த்து ஜோசப் பந்து வீச்சில் வெளியேறினார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ், சிப்லியுடன் இணைந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக ஆடிய சிப்லி மற்றும் ஸ்டோக்ஸ் அரை சதம் கடந்தனர். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் எடுத்துள்ளது.
சிப்லி 86 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
சிறந்த பேட்ஸ்மேன் என்பதை பாபர் அசாம் நிரூபிக்க இங்கிலாந்து டெஸ்ட் இறுதி பரீட்சை என்று முன்னாள் வீரர் முடாசர் நாசர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர கிரிக்கெட் வீரர் பாபர் அசாம். அவரது கிரிக்கெட் திறமையை பார்க்கும்போது பல்வேறு சாதனைகள் படைக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட சென்றுள்ளார். இந்த டெஸ்ட் தொடர் பாபர் அசாம் அவரை சிறந்த பேட்ஸ்மேன் என்பதை நிரூபிப்பதற்கான கடைசி பரீட்சை என்று பாகிஸ்தான் முன்னாள் ஆல்-ரவுண்டர் முடாசர் நாசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முடாசர் நாசர் கூறுகையில் ‘‘இங்கிலாந்து தொடர் பாபர் அசாமுக்கான இறுதி பரீட்சை. இதற்கு முன் ஏற்கனவே இங்கிலாந்துக்கு சென்றுள்ளார். பாபர் அசாம் இதுவரை சரியான முறையில் பரிசோதிக்கவில்லை. இந்த முறை ரன்கள் குவித்தால், தற்போது பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தும் வகையில், இங்கிலாந்திலும் ஆதிக்கம் செலுத்தினார் யாரும் அவரது திறமை குறித்து கேட்க முடியாது.
ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியில் வீசும் பந்தை டிரைவ் ஆடுவது பாபர் அசாமின் பலவீனமாக இருந்தது. பாகிஸ்தான் ஆடுகளத்தில் விளையாடி வளர்ந்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு இது வழக்கமான பலவீனம்தான். ஆனால், தற்போது அந்த பந்தை கொஞ்சம் காலதாமதமாக பேட்டில் பந்து வலுவாக படும் அளவிற்கு மாற்றிக் கொண்டார். தென்ஆப்பிரிக்காவிவல் டேல் ஸ்டெயின் அவுட் ஸ்விங் பந்தை சிறப்பாக எதிர்கொண்டார். இங்கிலாந்து தொடரிலும் சிறப்பாக விளையாடுவார் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
ஆஸ்திரேலிய தொடரின்போது இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்மித், வார்னர் ஆகியோர் குறித்து கவலைப்படக்கூடாது என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 2018-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியபோது தொடரை 2-1 எனக்கைப்பற்றி சாதனைப் படைத்தது. அதன்பின் இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. தற்போது ஸ்மித், வார்னர் அணியில் இருப்பதால் சவாலானதாக இருக்கும் என கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் ஸ்மித், வார்னர் குறித்து கவலைப்படக்கூடாது என்று கம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கம்பிர் கூறுகையில் ‘‘இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் எந்த அணிக்கு எதிராகவும், எந்த சூழ்நிலையிலும் சவால் கொடுக்கக் கூடியவர்கள். கடந்த முறை வெற்றி பெற்ற அணியோடு நாம் ஆஸ்திரேலியாவுக்கு செல்லும்போது, போட்டியை நடத்தும் அணிக்கு மிகவும் சவலாக இருப்போம் என்பதில் உறுதியாக இருக்கிறேன்’’ என்றார்.
மான்செஸ்டர் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியில் மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.
மழை நின்று, அவுட் பீல்டு உலர்ந்ததால் 4.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட், ஜாஃப்ரா ஆர்சர் ஆகியோர் நீக்கப்பட்டு, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சரியாக ஐந்து மணிக்கு போட்டி தொடங்கும்.
கத்தாரில் 2022-ல் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பிபா வெளியிட்டுள்ளது.
2022 கால்பந்து உலக கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. நவம்பர் 1-ந்தேதியில் போட்டி தொடங்கி டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. குரூப் இடையிலான போட்டிகள் ஒரு நாளை நான்கு போட்டிகள் நடைபெறும் உள்ளூர் நேரப்படி போட்டிகள் மதியம் 1 மணி (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி), மாலை 4 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணிக்க நடைபெறும்.
நவம்பர் 1-ந்தேதி 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதானத்தில் போட்டி நடைபெறும். டிசம்பர் 18-ந்தேதி 6 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும். இந்த போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
8 மைதானங்களில் 28 நாட்கள் இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது.






