என் மலர்tooltip icon

    விளையாட்டு

    மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 2-வது டெஸ்ட் ’டிரா’வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

    இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.  2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டின் காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

    தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான பந்து வீச்சில் ஈடுபட்டனர். 

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 எடுத்தது.

    இதையடுத்து, 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். 

    3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ்
    அணியை விட 219 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. 

    ஆனால், டெஸ்ட் போட்டியில் நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் இருப்பதால் இப்போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

    3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
     
    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக
    5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.  2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாளான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வேட் மற்றும் ஜோசப் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஜோசப் 32 ரன்கள் எடுத்திருந்த போது டோம் பீஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புரோக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த பிராத்வேட் நிதானமாக ஆடினார்.

    இருவீரர்களும் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர். பிரேத்வேட் 75 ரன்கள் எடுத்த நிலையிலும், புரோக்ஸ் 68 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர் ரோஸ்டன் 51 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். 

    அடுத்து வந்த பிளாக் வுட், டவ்ரிஷ், கேப்ரியல் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் ரன் எதுவும் எடுக்காமேலே அவுட் ஆகி 
    வெளியேறினர். 

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை விட 182 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

    இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் கிரீஸ் ஓக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை குறித்து ஐசிசி இறுதி முடிவை நாளை அறிவிக்க இருக்கிறது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது  சந்தேகமே. ஆனால் இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்  (ஐ.சி.சி.) பலமுறை கூடியும் இறுதி முடிவு எடுக்கவில்லை.

     இந்தத்தொட்ர் நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே அறிவித்து விட்டது.

    இதற்கிடையே ஐ.சி.சி. உறுப்பினர்களின் கூட்டம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நாளை நடக்கிறது. இந்தக் கூட்டத்தில் 20 ஓவர் உலககோப்பை போட்டி குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும்.

     இந்தப் போட்டியை தள்ளிவைப்பது என்று முடிவு செய்யப்படலாம். அடுத்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இந்தியாவில் நடக்கிறது. இதனால் இந்தப் போட்டி 2022 -ம் ஆண்டுக்கு தள்ளி வைக்கப்படலாம்.

    உலக கோப்பை ஒத்தி வைக்கப்படும்போது அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல் .20 ஓவர் போட்டியை  நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது. கொரோனாவால் ஏப்ரல் - மே மாதங்களில் நடைபெற இருந்த ஐ.பி.எல்.போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.

    இந்தியாவில் கொரோனா  பாதிப்பு அதிகமாக இருப்பதால் ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளது.

    இந்த போட்டியை செப்டம்பர் 26 முதல் நவம்பர் 7 வரை நடத்த கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருக்கிறது.

    ஐ.பி.எல். போட்டி ரத்து செய்யப்பட்டால் பி.சி.சி.ஐ.க்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதன் காரணமாகவே இந்த போட்டியை எப்படியாவது எந்த இடத்திலாவது நடத்திவிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
    உயிர் பாதுகாப்பு வளையத்தை மீறியதாக 2-வது டெஸ்டில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்ட ஜாஃப்ரா ஆர்சர் அபராதத்துடன் தப்பித்துள்ளார்.
    கொரோனா தடுப்பு விதிகளை மீறி மான்செஸ்டர் ஸ்டேடியத்திற்கு செல்லும் வழியில் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு சென்று வந்த இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் கிரிக்கெட் வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளானார்.

    வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து கழற்றிவிடப்பட்ட அவரை 5 நாள் தனிமைப்படுத்திக் கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டது. இந்த நிலையில் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணை நடத்தியது.

    இதில் அவருக்கு குறிப்பிட்ட தொகை அபராதமாக விதிக்கப்பட்டதுடன், எழுத்துபூர்வமாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அபராதத்துடன் தப்பியதால் அவர் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்டில் ஆடுவதில் உள்ள சிக்கல் நீங்கியது.

    அடுத்தடுத்த நாட்களில் இரண்டு முறை கொரோனா சோதனை நடத்தப்பட்டு ‘நெகட்டிவ்’ முடிவு வந்து விட்டால் 21-ந்தேதி அவரால் அணியுடன் இணைந்து கொள்ள முடியும்.
    ஹர்பஜன் சிங்கிடம் ஓய்வு குறித்து கேள்வி கேட்ட நிலையில், இளம் வீரரை என் முன் நிறுத்துங்கள் என்று பதில் அளித்துள்ளார்.
    இந்தியாவின் மூத்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான 40 வயது ஹர்பஜன்சிங் அளித்த ஒரு பேட்டியில், ‘‘நீங்கள் எனது திறமையை பரிசோதிக்க விரும்பினால், சிறந்தவராக கருதும் இளம் வீரரை என் முன் நிறுத்துங்கள். அவரது திறமையுடன் நான் போட்டியிட தயார்.

    பீல்டிங் செய்யும்போது பந்தை கால்களுக்கு இடையில் தவற விட்டாலோ? அல்லது குனிந்து பந்தை பிடிக்க முடியாமல் தடுமாறினாலோ? வயது குறித்து பேசலாம். ஆனால் நான் இந்திய அணியின் சீருடையை அணிந்து சுமார் 800 நாட்களுக்கு மேல் களத்தில் நின்று விளையாடி இருக்கிறேன். நான் சாதனையாளன். எனக்கு யாருடைய அனுதாபமும் தேவையில்லை.

    எனக்கு அதிக வயதாகி விட்டது என்று உணர வைக்க முயற்சிக்கிறீர்கள். அசாருதீன் கேப்டனாக இருக்கையில் நான் இந்திய அணியில் விளையாட தொடங்கினேன். 20 ஆண்டுகள் நல்லதொரு பயணத்தை மேற்கொள்ள அனுமதித்த கடவுளுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன்.

    இதுதான் எனக்கு கடைசி ஐ.பி.எல். போட்டியாக இருக்கும் என்று சொல்லமாட்டேன். எனது உடல் நிலையை பொறுத்துதான் முடிவெடுப்பேன். கடந்த 4 மாதங்களாக பயிற்சி, ஓய்வு, யோகா ஆகியவற்றின் மூலம் 2013-ம் ஆண்டில் இருந்தது போன்ற புத்துணர்ச்சியை பெற்று இருக்கிறேன். அந்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் நான் 24 விக்கெட்டுகள் வீழ்த்தினேன்’’ என்று தெரிவித்தார்.

    இதற்கிடையில் ஹர்பஜன்சிங் தனது டுவிட்டர் பதிவு ஒன்றில், ‘‘கடந்த 3 ஆண்டுகளில் சர்வதேச போட்டிகளில் ஒருவரின் செயல்பாட்டை கணக்கில் கொண்டுதான் விளையாட்டு விருது வழங்கப்படும். அதன்படி பார்த்தால் நான் ‘கேல்ரத்னா’ விருதுக்கு தகுதி படைத்தவன் கிடையாது என்பதுதான் உண்மையாகும். அதனால் எனது பெயரை விருதுக்காக பரிந்துரைத்ததை திரும்ப பெறும்படி பஞ்சாப் மாநில அரசை கேட்டுக்கொண்டேன். விருதுக்கான பரிந்துரையை பஞ்சாப் அரசு திரும்ப பெற்றதில் தவறு எதுவும் கிடையாது. இதில் யூகத்துக்கு இடமளிக்க வேண்டாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டின் நேற்றைய 3-வது நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் இங்கிலாந்து வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

    டொமினிக் சிப்லி (120 ரன்), பென் ஸ்டோக்ஸ் (176 ரன்) சதம் அடித்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது. கிரேக் பிராத்வைட் 6 ரன்னுடனும், அல்ஜாரி ஜோசப் 14 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

    இந்த நிலையில் 3-வது நாளான நேற்றைய ஆட்டம் மழையால் முழுமையாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் 3-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியை குறைந்த ரன்னில் ஆல்-அவுட் ஆக்கி முன்னிலை வகிக்கலாம் என்று நினைத்திருந்த இங்கிலாந்து வீரர்கள் போட்டி ரத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் நடக்கிறது. இன்னும் இரண்டு நாட்களில் மூன்று இன்னிங்ஸ் விளையாட வேண்டியிருக்கிறது. மழை பெய்யாமல் ஆட்டம் முழுமையாக நடைபெற்றால் ஒருவேளை இங்கிலாந்துக்கு வாய்ப்பு உள்ளது. இல்லையெனில் போட்டி டிராவில் முடிவும்.
    தென்ஆப்பிரிக்காவில் நடந்த புதுமையான கிரிக்கெட் போட்டியில் டிவில்லியர்ஸ் தலைமையிலான ஈகிள்ஸ் அணி வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வசப்படுத்தியது.
    கொரோனாவின் சீற்றத்தால் தென்ஆப்பிரிக்காவில் விளையாட்டு போட்டிகள் முற்றிலும் முடங்கி விட்டது. நிலைமை ஓரளவு சீரடைந்து வரும் நிலையில் கொரோனா பாதிப்புக்கு நலநிதி திரட்டுவதற்காக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் 3டிசி என்ற பெயரில் புதுமையான கிரிக்கெட் போட்டியை நடத்த ஏற்பாடு செய்தது. இந்த ஆட்டம் செஞ்சூரியனில் நேற்று நடந்தது.

    டி வில்லியர்ஸ் தலைமையில் ஈகிள்ஸ் அணியும், டெம்பா பவுமா தலைமையில் கைட்ஸ் அணியும், ரீஜா ஹென்ரிக்ஸ் தலைமையில் கிங்பிஷர்ஸ் அணியும் பங்கேற்றன. முதலில் குயின்டான் டி காக், ரபடா ஆகியோரும் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் அவர்கள் சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.

    ஒவ்வொரு அணியிலும் 8 வீரர்கள் இடம் பிடித்திருந்தனர். மொத்தம் 36 ஓவர் அடிப்படையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிக்கு எதிராக தலா 6 ஓவர் வீதம் விளையாட வேண்டும். பந்து வீச்சாளர் தலா 3 ஓவர் வீசிக்கொள்ளலாம். இதன்படி ஒவ்வொரு அணியும் 12 ஓவர் விளையாடி முடித்த பிறகு யார் அதிக ரன்கள் குவித்து இருக்கிறார்களா? அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். டாப்-2 அணிகள் சரிசம ரன்கள் எடுத்திருந்தால் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்படும்.

    மிகுந்த எதிர்பார்ப்புடன் நடத்தப்பட்ட இந்த ஆட்டத்தில் வீரர்கள் முதலில் மைதானத்தில் முட்டிப்போட்டு கருப்பினத்தவருக்கு ஆதரவு தெரிவித்தனர். அத்துடன் ‘கருப்பினத்தவரின் வாழ்க்கை முக்கியம்’ என்ற வாசகம் அடங்கிய கருப்பு பட்டையை ஒவ்வொரு வீரர்களும் கையில் அணிந்திருந்தனர்.

    டி வில்லியர்ஸ்

    இந்த வித்தியாசமான போட்டியில் டி வில்லியர்ஸ் தலைமையிலான ஈகிள்ஸ் அணி அமர்க்களப்படுத்தியது. 12 ஓவர்களில் மொத்தம் 4 விக்கெட்டுக்கு 160 ரன்கள் குவித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. இரண்டு முறை களம் இறங்கிய டிவில்லியர்ஸ் மொத்தம் 24 பந்தில் 64 ரன்கள் விளாசினார். இதே அணிக்காக ஆடிய மார்க்ராம் 33 பந்துகளில் 70 ரன்கள் நொறுக்கினார்.

    கைட்ஸ் அணி வீரர் பிரிட்டோரியஸ் சுழற்பந்து வீச்சாளரான ஷம்சியின் (கிங்பிஷர்ஸ்) ஒரே ஓவரில் 3 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 28 ரன்கள் பதம் பார்த்தது இன்னொரு சிறப்பு அம்சமாகும். கைட்ஸ் அணி 3 விக்கெட்டுக்கு 138 ரன்களுடன் வெள்ளிப்பதக்கமும், கிங்பிஷர்ஸ் 5 விக்கெட்டுக்கு 113 ரன்களுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றன.
    1998-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய அவர் சக வீரர்களே தன்னிடம் இனவெறி பாகுபாட்டுடன் நடந்து கொண்டதை இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.
    ஜோகன்னஸ்பர்க்:

    ‘கருப்பின மக்களின் வாழ்க்கை முக்கியம்’ என்ற இயக்கத்திற்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர்களில் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதில் முன்னாள் வீரர் மகாயா நிதினியும் ஒருவர். 43 வயதான நிதினி தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய முதல் கருப்பின வீரர் ஆவார். வேகப்பந்து வீச்சாளரான நிதினி 101 டெஸ்டில் ஆடி 390 விக்கெட்டுகளும், 173 ஒரு நாள் போட்டிகளில் 266 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். 1998-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தென்ஆப்பிரிக்க அணிக்காக விளையாடிய அவர் சக வீரர்களே தன்னிடம் இனவெறி பாகுபாட்டுடன் நடந்து கொண்டதை இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

    காலிஸ், ஷான் பொல்லாக், டொனால்டு, குளுஸ்னர், கிரேமி சுமித், கிப்ஸ் உள்ளிட்டோருடன் இணைந்து விளையாடியவரான நிதினி அளித்த ஒரு பேட்டியில், ‘எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் எப்போதும் தனிமையையே உணர்ந்தேன். டின்னருக்கு சாப்பிட போகலாம் என்று எந்த வீரரும் எனது அறைக்கு வந்து அழைக்கமாட்டார்கள். இத்தனைக்கும் என் முன்னால் தான் திட்டம் போடுவார்கள். ஆனால் கிளம்பும் போது என்னை தவிர்த்து விடுவார்கள். சாப்பிடும் அறைக்கு சென்றாலும் என் அருகில் உட்கார மாட்டார்கள். நாங்கள் அனைவரும் ஒரே மாதிரியான சீருடை அணிகிறோம். ஒன்றாக விளையாடுகிறோம், பயிற்சி எடுக்கிறோம், ஒரே தேசிய கீதத்தை படிக்கிறோம். ஆனாலும் சக வீரர்களின் இத்தகைய பாகுபாட்டை கடந்து தான் சாதிக்க வேண்டி இருந்தது. இதனால் தான் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு புறப்படும் போது சக வீரர்களுடன் பஸ்சில் செல்வதை தவிர்த்து நான் ஓடியே அங்கு செல்வேன். நான் ஏன் இவ்வாறு செய்கிறேன் என்று வீரர்கள் புரிந்து கொண்டதில்லை. நானும் இது பற்றி அவர்களிடம் பேசியதில்லை. தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் போது எல்லாம் மகிழ்ச்சி தாண்டவமாடும். தோற்கும் போது மட்டும் முதலில் என்னை தான் குறை சொல்வார்கள். ஜூனியர் கிரிக்கெட்டில் விளையாடிய போது எனது மகனும் இனவெறி பிரச்சினையை சந்தித்து இருப்பதாக கூறியுள்ளான்’ என்றார்.
    இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து 2008-ம் ஆண்டு நீக்கப்பட்டபோது கிரிக்கெட் வாழ்க்கை பாதுகாப்பற்றது போன்று உணர்ந்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தடுப்புச்சுவர் என்ற அழைக்கப்பட்டவர் ராகுல் டிராவிட். அவர் டெஸ்ட் போட்டியில் மட்டுமே நன்றாக விளையாடியுள்ளார் என்று ரசிகர்கள் நினைத்திருப்பார்கள். ஆனால் ஒருநாள் போட்டியிலும் 10 ஆயிரம் ரன்கள் அடித்துள்ளார்.

    ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வடிவிலான கிரிக்கெட்டிலும் 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்த சில ஜாம்பவான்களில் இவரும் ஒருவர்.

    47 வயதாகும் ராகுல் டிராவிட் 1996-ம் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011 செப்டம்பர் மாதம் வரை 344 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 சதங்களுடன் 10,899 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.16 ஆகும்.

    1996-ம் ஆண்டு ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகி 2012-ம் ஆண்டு ஜனவரி வரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 36 சதங்களுடன் 13,288 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 52.31 ஆகும். ஒரேயொரு டி20 போட்டியில் விளையாடியுள்ளார்.

    1998-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். சுமார் ஒரு வருடம் கழித்து மீண்டும் அணிக்கு திரும்பினார்.

    அணியில் இருந்து நீக்கப்பட்டபோது கிரிக்கெட் வாழ்க்கை பாதுகாப்பற்றது என உணர்ந்ததாக ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் பாதுகாப்பற்றது என்ற கட்டத்தை நான் அடைந்துள்ளேன். 1998-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்டபோது அதை உணர்ந்தேன். ஒரு வருடமாக அணியில் இல்லாத போது, மீண்டும் அணிக்கு திரும்ப கடுமையாக போராடினேன். நான் ஒருநாள் போட்டிக்கு சிறந்தவனா? அல்லது இல்லையா என்பதை விட குறிப்பிட்ட பாதுகாப்பற்ற தன்மைதான் இருந்தது.

    ஏனென்றால் நான் ஏற்கனவே டெஸ்ட் வீரராகவும், டெஸ்ட் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கவும், பந்தை தரையில் அடிக்கவும், பந்தை மேலே தூக்கிய அடிக்கக்கூடாது, பயிற்சியாளர் போன்றவற்றை விரும்பினேன். ஒருநாள் போட்டிக்கான திறமை இருந்தும் கூட, மனதிற்குள் அதை திறம்பட செய்ய முடியுமா? என்ற கவலை இருந்தது.

    எனக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை பல கட்டங்களில் இருந்தது. இளம் கிரிக்கெட் வீரராக வளரும்போது, இந்திய அணியில் இடம் பிடிப்பது எளிதான காரியம் இல்லை. ஏராளமான போட்டிகள் உண்டு. நான் வளர்ந்து வரும் நேரத்தில் ரஞ்சி கோப்பை, இந்திய அணி மட்டுமே உண்டு. ஐபிஎல் கிடையாது. ரஞ்சியில் பணமும் குறைவாகத்தான் கிடைக்கும் என்பதால் தொடர் சவால் இருந்து வந்தது.

    உங்கள் வாழ்க்கையை படிப்பில் செலவிடுகிறீர்கள். அதை நான் மோசம் என்று சொல்லமாட்டேன். ஆகவே, நான் எளிதான எம்.பி.ஏ. அல்லது மற்ற படிப்பு எதையாவது எளிதாக செய்ய முடியும். கிரிக்கெட் வாழ்க்கையில், விளையாட்டு சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை எனில், அதை விட்டுவிட்டு வெளியே வருவதற்கு ஒன்றுமில்லை.

    அதனால் அந்த வயதிலும் பாதுகாப்பற்ற நிலை இருந்தது. இந்த தலைமுறை கிரிக்கெட் வீரர்களிடம் உரையாடும்போது, எனக்கு அவகைள் உதவியாக இருந்தன. சில பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது’’ என்றார்.
    இந்திய கிரிக்கெட் வாரியம் டெக்கான் சார்ஜர்ஸ் நிறுவனத்திற்கு 4800 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று நடுவர் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த போட்டியில் விளையாடிய அணிகளில் ஒன்று டெக்கான் சார்ஜர்ஸ்.
     ஐதராபாத் நகரை மையமாக கொண்ட இந்த அணி, 2008-ம் ஆண்டு முதல் 2012 வரை விளையாடியது.

    2009-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஐ.பி.எல். போட்டியில், டெக்கான் சார்ஜஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 
    2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 14-ந்தேதி ஐ.பி.எல். போட்டியில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டது.

    வங்கி உத்தரவாத தொகையான ரூ.100 கோடியை செலுத்த தவறியதால், அந்த அணியை கிரிக்கெட் வாரியம் நீக்கியது. கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தத்தை மீறியாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ஐ.பி.எல்.லில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளரான டி.சி.எச்.எல். நிறுவனம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. 
    மும்பை ஐகோர்ட்டின் உத்தரவுபடி நடுவர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டது.

    ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி சி.கே. தாக்கர் இந்த வழக்கை விசாரித்தார். அவர் இந்த வழக்கில் ‘‘ஐ.பி.எல்.லில் இருந்து டெக்கான் சார்ஜஸ் அணி நீக்கப்பட்டது சட்ட விரோதமானது’’ என்று தீர்ப்பு வழங்கியுள்ளார்.

    மேலும், ‘‘டெக்கான் சார்ஜஸ் நிறுவனத்துக்கு ரூ.4,814.67 கோடியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வழங்க வேண்டும். 2012-ல் இருந்து 10 சதவீத வட்டியை கொடுக்கவும்’’உத்தரவிட்டுள்ளார்.

    நடுவர் தீர்ப்பாயத்தின் இந்த உத்தரவு கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
    இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தரம்சாலா உள்பட மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றில் பயிற்சி மேற்கொள்ளப்படலாம் எனத் தெரிகிறது.
    இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரியத்தின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று காணொலி மூலம் நடந்தது. 4 மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த கூட்டத்தில் ஐ.பி.எல். போட்டி, எதிர்கால போட்டி அட்டவணை மற்றும் உள்ளூர் போட்டிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருப்பதால், ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல்.யை போட்டியை ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. 
    ஐக்கிய அரபு எமிரேட்சில் மருத்துவ வசதி உள்பட பல்வேறு வசதிகள் மற்றும் ஏற்கனவே போட்டி நடத்திய அனுபவம் ஆகியவை காரணமாக, அங்கு போட்டியை நடத்த பெரும்பாலான நிர்வாகிகள் தங்களது ஆதரவை தெரிவித்தனர். 


    ஐ.பி.எல்.போட்டியை செப்டம்பர் முதல் நவம்பர் தொடக்கம் வரை 5 அல்லது 6 வாரங்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் இலக்கு வைத்துள்ளது.
     உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகே, ஐ.பி.எல். அட்டவணையை தயாரிக்க முடியும்.

    ஏற்கனவே ஐ.பி.எல். போட்டி 2014-ம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்துள்ளது. 
    இந்தியாவில் தேர்தல் நடந்ததால், அங்கு நடத்தப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்சில் துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய 3 மைதானங்கள் உள்ளன.

    இலங்கையில் பொது தேர்தல் நடக்க இருப்பதால், அங்கு ஐ.பி.எல்.லை நடத்துவது சரியாக இருக்காது என்று இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் ஐ.பி.எல்லின் ஆட்சிமன்ற கூட்டத்தில்தான் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

    இதேபோல இந்திய வீரர்களின் பயிற்சி முகாமுக்கு 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. துபாய், தர்மசாலா, அகமதாபாத் ஆகிய 3 இடங்கள் இந்திய வீரர்களின் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
     இதில் ஏதாவது ஒரு இடத்தில் பயிற்சி முகாம் நடத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
    மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 469 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதையடுத்து, ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவடைந்தது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. டொமினிக் சிப்லி 86 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இதையடுத்து நேற்று இரண்டாம் நாள் தொடங்கியது.  ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் டொமினிக் சிப்லி சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் சதம் விளாசினார். 

    இங்கிலாந்து அணி 341 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. 
    டொமினிக் சிப்லி 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    ஆனால், சிறப்பாக ஆடிய பென் ஸ்டோக்ஸ் 17 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் உள்பட 176 ரன்கள் குவித்து ரோச் பந்து வீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆனதையடுத்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 469 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் இங்கிலாந்து வீரர்கள்

    வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கியது. பிராத்வேட் மற்றும் ஜான் கேம்பால் அந்த அணியின் தொடக்க
    ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். ஜான் 12 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சாம் கர்ரன் பந்து வீச்சில் எல்டபுள்யூ முறையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    பின்னர் வந்த ஜோசப் நிதான் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்புக்கு 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வேட் 6 ரன்களுடனும், ஜோசப் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 
    ×