என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெறும் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து பார்க்கலாம்.
    சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சதம் அடிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. அதிலும் 100க்கும் குறைவான பந்துகளில் சதம் அடிப்பது என்பது இன்னும் கடினமான ஒரு விஷயம்.
     

    அந்த வகையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் வெறும் 75 பந்துகளுக்குள் அதிகமுறை சதம் அடித்த ஐந்து முக்கிய வீரர்கள் குறித்து இங்கு பார்ப்போம்.

    அப்ரிடி உலக வரலாற்றில் இவர் ஒரு மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் ஆவார். பாகிஸ்தானை சேர்ந்தவர், பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். இவர் 398 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று ஆறு முறை சதம் அடித்துள்ளார். அதில் 4 முறை 75 பந்துகளுக்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார். இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒருநாள் தொடரில் 36 பந்துகளில் சதம் அடித்து உலக சாதனையாக இருந்தது.


    ஸ்ரீலங்காவின் ஓபனர் ஆன ஜெயசூர்யா கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென தனி அடையாளத்தைப் படைத்துள்ளார். இடது கை பேட்ஸ்மேனான இவர் தனது அணிக்காக பல சாதனைகளைப் புரிந்துள்ளார்.  இவர் 100க்கும் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 14 முறை சதம் அடித்துள்ளார். ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறப்பான பங்காற்றிய இவரின் ஸ்ட்ரைக் ரேட் 90-க்கும் அதிகமாகவே இருந்தது.  சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 28 சதங்கள் அடித்துள்ள சனத் ஜெயசூர்யா அதில் ஐந்து சதங்களை 75-ற்கும் குறைவான பந்துகளில் அடித்துள்ளார்.
     

    இந்திய வீரரான சேவாக் பவுலர்களை அச்சுறுத்தக் கூடிய வகையிலான பேட்ஸ்மேன். பவுலர்கள் பந்து போடுவதற்கு அஞ்சும் வகையில் இவரது ஆட்டம் இருக்கும்.உலக கிரிக்கெட் வரலாற்றில் பிரபலமான வீரர்களில் ஒருவரான இவர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் வேகமான மூன்று சதம் அடித்த வீரர்களில் ஒருவர். மற்றும் ஒருநாள் தொடரில் இரட்டை சதம் அடித்த சில வீரர்களில் இவரும் ஒருவர். இது போன்ற பல சாதனைகளை பெற்ற இவர் தனது சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 38 முறை சதம் அடித்துள்ளார். அதிலும் குறிப்பாக ஏழு முறை 75-ற்கும் குறைவான பந்துகளில் சதம் அடித்துள்ளார். 

    தற்போதைய இங்கிலாந்து அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் இவரும் ஒருவர். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியான வாய்ப்பு கிடைக்காததால் இதுவரை ஒரு சதம் மட்டுமே எடுத்துள்ளார். இருந்தபோதும் ஒருநாள் தொடரில் 9 சதங்கள் அடித்துள்ளார். சர்வதேச டி20 தொடரில் சதம் அடிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். சர்வதேசகிரிக்கெட் தொடரில் இவர் அடித்த 10 சதங்களில் 7 சதம் 75 இற்கும் குறைவான பந்துகளில் எடுக்கப்பட்டதாகும். 

    சூப்பர் மேன், மிஸ்டர் 360, போன்ற பட்டங்களுக்கு சொந்தக்காரரான டிவில்லியர்ஸ், கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் பிரபலமான வீரர். இவரின் பேட்டிங் ஸ்டைலை பார்த்து பல ஜாம்பவான்களும் வியந்து போனார்கள்.

    இவரை போன்ற ஒரு வீரரை இனி உலகம் கண்டிராத அளவுக்கு இவரின் ஆட்டம் பார்ப்பவரின் மனதை கவரும் வகையில் இருக்கும். இவர் அதிவேகமான 50,100,150 ரன்களை அடித்து ஒருநாள் தொடரில் பல சாதனைகள் படைத்துள்ளார்.  சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை 47 சதங்கள் அடித்துள்ள ஏ.பி டிவில்லியஸ் அதில் 9 சதங்களை 75 பந்துகளுக்குள் எடுத்து இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டில் வெற்றி பெற காரணமாக இருந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ்-க்கு இங்கிலாந்து கேப்டன் ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2- வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நடந்தது.

    இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 469 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்னில் 'ஆல் அவுட் ' ஆனது.

     182 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து 4-வது நாள்  ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 37 ரன் எடுத்து இருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னும், கேப்டன் ஜோ ரூட் 8 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

    நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. 219 ரன்கள் முன்னிலை, கைவசம் 7 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து தொடர்ந்து ஆடியது.

    இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதனால் வெஸ்ட் இண்டீசுக்கு 312 ரன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக விளையாடி 57 பந்தில்  4 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ரன் (அவுட் இல்லை) எடுத்தார்.

    312 ரன் இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 37 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டான  புரூக்ஸ் - பிளாக்வுட் ஜோடி சரிவில் இருந்து மீட்டது. இருவரும் அரைசதம் அடித்தனர்.

     தேனீர் இடைவேளைக்கு முன்பு இந்த ஜோடி பிரிந்தது. பிளாக்வுட் 55 ரன்னில் வெளியேறினார்.

    பின்னர் எஞ்சிய வெஸ்ட்இண்டீஸ் விக்கெட்டுகள் எளிதில் சரிந்தன. புரூக்ஸ் 62 ரன்னில் 7-வது விக்கெட்டாக  ஆட்டம் இழந்தார். அந்த அணி 70.1 ஓவர்களில் 198 ரன்னில் சுருண்டது. இதனால் இங்கிலாந்து 113 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

    ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ், பென் ஸ்டோக்ஸ், டாம் பெஸ் தலா 2 விக்கெட்டும், சாம் கரண் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    இந்த டெஸ்டில் 254 ரன்கள் ( 176+78)  குவித்து ,3 விக்கெட் சாய்த்த பென் ஸ்டோக்ஸ் ஆட்ட நாயகனாக தேர்வு பெற்றார். அவர் 2- இன்னிங்சில் 36 பந்தில் அரைசதம் அடித்து இங்கிலாந்து வீரர்களில் சாதனை படைத்தார்.

    இந்த வெற்றி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் கூறியதாவது:-

    பென் ஸ்டோக்ஸ் பாராட்டுக்குரியவர். அவர் நம்ப முடியாத அபாரமான வீரர். உண்மையிலே அவருக்கு வானமே இல்லை என்று நினைக்கிறேன்.

    இவ்வாறு ஜோ ரூட் தெரிவித்தார்.

    இந்த டெஸ்ட் தொடர் ஐ.சி.சி. உலக சாம்பியன்ஷிப் போட்டியாகும். வெற்றி மூலம் இங்கிலாந்துக்கு 40 புள்ளிகள் கிடைத்தது. அந்த அணி 186 புள்ளியுடன் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. வெஸ்ட் இண்டீஸ் 40 புள்ளியுடன் 7-வது இடத்தில் இருக்கிறது.

    பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட்

    இந்தியா (360) முதலிடத்திலும், ஆஸ்திரேலியா (296) 2-வது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து பாகிஸ்தான, இலங்கை  4 முதல் 6-வது இடங்களிலும், தென் ஆப்பிரிக்கா வங்காளதேசம் 8 மற்றும் 9-வது இடங்களிலும் உள்ளன.

    இந்த வெற்றி மூலம் முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இங்கிலாந்து பதிலடி கொடுத்தது. முதல் டெஸ்டில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட்டில் வெற்றி பெற்று இருந்தது. தற்போது 3 போட்டி கொண்ட தொடர் 1-1 என்ற  கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 24-ம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
    ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கு அனுமதி தருமாறு மத்திய அரசிடம் பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் 2020 டி20 லீக் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டி20- உலக கோப்பை போட்டியை நடத்த வாய்ப்பில்லாததால் செப்டம்பர், அக்டோபரில் ஐபிஎல் லீக்கை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

    ஐக்கிய அரபு எமிரேட்சில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என விருப்பம் தெரிவித்தது. இலங்கையும் விருப்பம் தெரிவித்திருந்தது.

    இதுகுறித்து ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் கூறியிருப்பதாவது:

    ஐபிஎல் அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும். எதுவாக இருந்தாலும் ஐபிஎல் தொடரை நடத்த மத்திய அரசின் அனுமதி தேவை.

    எனவே ஐபிஎல் தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் ஐபிஎல் நிர்வாகம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுத்துள்ளது.

    கொரோனா சூழலை கருதி செப்டம்பரில் இந்தியா அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் நடத்தப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தற்போதைய இந்திய அணி பதக்கம் வெல்ல வாய்ப்பு இருப்பதாக முன்னாள் கேப்டன் சர்தார்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி குறித்து இந்திய ஆக்கி அணியின் முன்னாள் கேப்டனான 34 வயது சர்தார்சிங் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    தற்போதைய இந்திய ஆக்கி அணி உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ளது. இது டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வரும் இந்திய அணிக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கும். நாட்டுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை வென்று கொடுக்க முடியவில்லையே? என்ற வருத்தம் எனக்கு எப்பொழுதும் உண்டு. ஆனால் தற்போதைய இந்திய அணி வளர்ந்து வரும் பாங்கு மற்றும் இந்த ஆண்டில் நடந்த புரோ லீக் போட்டியில் ஆடிய விதம் ஆகியவற்றை பார்க்கையில் நீண்ட காலமாக நமக்கு கிடைக்காமல் இருக்கும் ஒலிம்பிக் பதக்கத்தை பெற்று தருவார்கள் என்ற நம்பிக்கை பிறந்து இருக்கிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி பதக்கம் வெல்ல நம்பத்தகுந்த வாய்ப்புள்ளது.

    ஒலிம்பிக் போட்டி தள்ளிவைக்கப்பட்டு இருப்பது இளம் வீரர்களின் திறமையை மெருகேற்றுவதற்கும், அணியில் உள்ள குறைபாடுகளை சரிசெய்தவற்கும் நல்ல வாய்ப்பாகும். பெனால்டி கார்னர் வாய்ப்புகளை கோலாக மாற்றுவது நமக்கு தொடரும் ஒரு பிரச்சினையாகும். இந்த விஷயத்தில் கடந்த 2 அல்லது 3 ஆண்டுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்து நாம் நல்ல முன்னேற்றம் கண்டு இருக்கிறோம். கொரோனா பிரச்சினை காரணமாக ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவது இந்திய வீரர்களுக்கு அதிக சவாலாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் நமது ஆக்கி அணி வீரர், வீராங்கனைகள் தங்கள் இலக்கு மீது முழு கவனத்தையும் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இந்திய அணியில் தனக்கு இடம் இல்லாமல் போனதற்கு இவர்கள்தான் காரணம் என முன்னாள் வீரர் பத்ரிநாத் தெரிவித்துள்ளார்.
    பத்ரிநாத்:

    இந்திய அணிக்காக 2008 ஆம் ஆண்டு அறிமுகமானவர் சுப்ரமணியம் பத்ரிநாத். இவர் தமிழகத்திலிருந்து இந்திய அணிக்கு தேர்வான மிகச் சிறந்த பேட்ஸ்மேன். தமிழக அணிக்காக பத்தாயிரம் ரன்களுக்கு மேல் குவித்து இந்திய அணியில் இடம் பிடித்தார்.

    இவர் இந்திய அணியில் அறிமுகமானபோது சச்சின் டெண்டுல்கர், விவிஎஸ் லட்சுமணன், ராகுல் டிராவிட், விரேந்தர் செவாக் , கௌதம் கம்பீர். யுவராஜ் சிங். மகேந்திரசிங் தோனி என பேட்ஸ்மேன்கள் நிறைந்திருந்தனர். இருந்தாலும் இவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    கொடுத்த வாய்ப்பினையும் சரியாக பயன்படுத்திக் கொண்டார். ஒரே ஒரு டி20 போட்டியில் 43 ரன்கள் எடுத்தார் . டெஸ்ட் போட்டியிலும் தனது அறிமுக போட்டியில் ஆடி அரைசதம் கடந்தார். அதன்பின்னர் அணியில் இடம் கிடைக்காததற்கு என்ன காரணம் என்று கூறியுள்ளார் சுப்ரமணியம் பத்ரிநாத். அவர் கூறுகையில்..

    என்னால் என்ன செய்ய முடியுமோ அனைத்தையும் செய்தேன். ஆனால் இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலம் வாய்ந்ததாக இருந்தது. அந்த அணியில் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், லட்சுமணன், சேவாக், கௌதம் கம்பீர் யுவராஜ் சிங், மகேந்திரசிங் தோனி என பலர் இருந்தனர்.

    ஆல் ரவுண்டராக இருந்திருந்தால் 6ஆவது அல்லது 7 ஆவது பேட்ஸ்மேனாக களமிறங்க வாய்ப்பு இருந்திருக்கும், அணியின் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராகவும் இருந்திருப்பேன். என்னால் அணியில் இருந்த வரை என்னுடைய பங்களிப்பை முடிந்தளவுக்கு செய்தேன்

    அவர்களை உடைத்து விட்டு என்னால் செல்ல முடியவில்லை. சுழல் பந்து வீசும் திறமையும் கற்றேன். ஆனால் எனக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை என்று கூறியுள்ளார் சுப்ரமணியம் பத்ரிநாத்.

    தமிழக அணிக்காக 10 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்த பத்ரிநாத். ஐபிஎல் போட்டிகளுக்காக சிஎஸ்கே அணியிலும் விளையாடி இருக்கிறார். சிஎஸ்கே அணிக்காக 95 போட்டிகளில் 1441 ரன்களை குவித்த பத்ரிநாத்தின் சராசரி 30.65. டி20 போட்டிகளுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என நிராகரிக்கப்பட்ட பத்ரிநாத், ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கேவுக்காக விளாசியது குறிப்பிடத்தக்கது.

    2008ஆம் ஆண்டு இவருக்கு பதிலாக தான் விராட் கோலி அணியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
    மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி பெற்றது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து, முதலில் பேட் செய்த இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ரன்கள் குவித்தார்.

    வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. 
    3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது. 4-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 
    பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோரின் அரைசதங்களால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் கிரிஷ் ஒக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து, 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். 3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில்
    அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. 

    219 ரன்கள் முன்னிலையுடன் டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக ஸ்டோக்ஸ் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்து வீச்சை விளாசி எடுத்தார்.

    3 விக்கெட்டுகள் இழப்புக்கு அணியின் ஸ்கோர் 129 ரன்கள் என்ற நிலையில் இருந்த போது இங்கிலாந்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் ஸ்டோக்ஸ் 57 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் உள்பட 78 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

    இதையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் என்பதால் ஆட்டம் டிராவில் முடியும் என அனைவரும் கருதினர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வெற்றி, தோல்வி என முடிவு தெரியும் போட்டியாக அது மாறியது.

    2-வது இன்னிங்சில் பிராத்வேட் மற்றும் ஜான் கேம்பால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜான் 4 ரன்களிலும், பிராத்வேட் 12 ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

    பின்னர் வந்த வீரர்களும் இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சாள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். தோல்வியை தவிர்க்க போராடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் புரோக்ஸ் 62 ரன்களுடனும்,பிளாக்வுட் 55 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

    இறுதியில் சற்று தாக்கு பிடித்த ஹோல்டர் 35 ரன்கள் எடுத்தார். எஞ்சிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 198 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக பிராட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

    இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் தொடரை இங்கிலாந்து சமன் செய்துள்ளது.

    இரு அணிகளும் சமமாக உள்ள நிலையில் டெஸ்ட் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3-வது டெஸ்ட் போட்டி இதே மான்செஸ்ட்ர் மைதானத்தில் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற இரு அணிகளும் தீவிர முயற்சி மேற்கொள்ளும் என்பதால் 3-வது டெஸ்ட் போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.

    கொரோனா வைரஸ் தொற்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 ஆண்கள் உலக கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அக்டோபர் - நவம்பரில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு வெளிப்படையாக கடந்த மாதமே தெரிவித்தது.

    ஆனால் ஐசிசி அதன்பின் இரண்டு முறை கூடியது. அப்போது டி20 உலக கோப்பை குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை. இந்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அதிகாரப்பூர்வமாக இன்று அறிவித்தது.

    ஐசிசி டி20 உலக கோப்பை 2021-ல் அக்டோபர் - நவம்பர் மாதம் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 14-ல் நடக்கும் என்றும், 2022-ம் ஆண்டு டி20 உலக கோப்பை அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் எனவும், இறுதிப் போட்டி நவம்பர் 13-ந்தேதி நடக்கும் எனவும் தெரிவித்துள்ளது.

    மேலும் 2023 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை இந்தியாவில் அக்டோபர் - நவம்பரில் நடைபெறும் என்றும், இறுதிப் போட்டி நவம்பர் 26-ந்தேதி நடைபெறும் எனவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
    கடைசி நாளில் வெஸ்ட் இண்டீஸ்க்கு 312 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், பந்து வீச்சாளர்கள் அற்புதம் நிகழ்த்தினால் இங்கிலாந்து 2-வது டெஸ்டில் வெற்றி பெற வாய்ப்புள்ளது.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ், சிப்லி ஆகியோரின் சதங்களால் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 469 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 3-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது.

    நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிராத்வைட் (75), ப்ரூக்ஸ் (68), ராஸ்டன் சேஸ் (51) ஆகியோரின் அரைசதங்களால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 287 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. என்றாலும் பாலோ-ஆன் தவிர்த்தது.

    182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-இன்னிங்சை தொடங்கியது. அதிரடியாக விளையாடி 300 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்க விரும்பிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரை தொடக்க வீரராக களம் இறக்கிறது.

    பட்லர் டக் அவுட்ஆனார். நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 37 ரன்கள் எடுத்திருந்தது. பென் ஸ்டோக்ஸ் 16 ரன்னுடனும், ஜோ ரூட் 8 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 57 பந்தில் 78 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 19 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.

    பென் ஸ்டோக்ஸ்

    இன்று 11 ஓவர்கள் மட்டுமே இங்கிலாந்து விளையாடியது. இதனால் 79 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 312 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. 3-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் 6 ஓவர்களில் அதிகமாக விளையாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    இதனால் 85 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸை ஆல்-அவுட் ஆக்கினால் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய வாய்ப்புள்ளது.

    2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் வெஸ்ட் இண்டீஸ் 11 ஓவர் முடிவில் 25 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்துள்ளது.
    ஹங்கேரி பார்முலா 1 காரபந்தயத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து வீரர் ஹாமில்டர், ஷூமாக்கரின் சாதனையை சமன்செய்துள்ளார்.
    பார்முலா 1 கார்பந்தயத்தின் 3-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட் பிரி அங்குள்ள மொக்யோராட் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 306.63 கிலோ மீட்டர் இலக்கை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் மின்னல் வேகத்தில் காரில் சீறிப்பாய்ந்தனர். முதல் வரிசையில் இருந்து புறப்பட்ட 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார்.

    1 மணி 36 நிமிடம் 12.473 வினாடிகளில் இலக்கை முதலாவதாக கடந்து 26 புள்ளிகளை அவர் தட்டிச் சென்றார். இந்த சீசனில் ஹாமில்டனின் 2-வது வெற்றி இதுவாகும். அவரை விட 8.7 வினாடி பின்தங்கிய நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 2-வது இடத்தையும், பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 3-வது இடத்தையும் (மெர்சிடஸ் அணி) பிடித்தனர். முன்னாள் சாம்பியனான ஜெர்மனியின் செபாஸ்டியன் வெட்டல் 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

    ஹாமில்டன்

    ஹங்கேரி கிராண்ட்பிரியில் ஹாமில்டன் வெற்றியை ருசிப்பது இது 8-வது முறையாகும். ஏற்கனவே 2007, 2009, 2012, 2013, 2016, 2018, 2019 ஆகிய ஆண்டுகளிலும் இங்கு அவர் வெற்றியை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு கிராண்ட்பிரி பந்தயத்தில் அதிக வெற்றி பெற்றவரான ஜெர்மனி ஜாம்பவான் மைக்கேல் ஷூமாக்கரின் (பிரெஞ்ச் கிராண்ட்பிரியில் 8 வெற்றி) சாதனையை சமன் செய்தார்.

    4-வது சுற்று போட்டி ஆகஸ்டு 2-ந்தேதி இங்கிலாந்தில் நடக்கிறது.
    2008-ம் ஆண்டு சிட்னியில் நடந்த டெஸ்டில் இந்தியாவுக்கு இரண்டு தவறான தீர்ப்பு வழங்கியதாக முன்னாள் நடுவர் பக்னர் ஒப்புக் கொண்டுள்ளார்.
    இந்திய அணி 2008-ம் ஆண்டு சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடிய டெஸ்ட் போட்டியை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. அந்த டெஸ்டில்தான் ஹர்பஜன்சிங், ஆஸ்திரேலிய வீரர் சைமன்ட்சை குரங்கு என்று திட்டியதாக சர்ச்சை வெடித்தது. அத்துடன் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு நடுவர்களின் ஒருதலைபட்சமான பல முடிவுகளால் தடுக்கப்பட்டது.

    இந்த டெஸ்டில் நடுவராக பணியாற்றியவர்களில் ஒருவரான அனுபவம் வாய்ந்த ஸ்டீவ் பக்னர் (வெஸ்ட் இண்டீஸ்) இந்தியாவுக்கு இரண்டு தவறான தீர்ப்பு வழங்கியதாக இப்போது ஒப்புக் கொண்டுள்ளார்.

    பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    2008-ம் ஆண்டு சிட்னி டெஸ்டில் இந்திய அணிக்கு இரண்டு தவறான தீர்ப்புகளை வழங்கினேன். ஒன்று, இந்திய அணி சிறப்பாக பந்து வீசிக்கொண்டிருந்தபோது எதிரணி பேட்ஸ்மேனை சதம் அடிக்க அனுமதிக்கும் வகையில் வழங்கிய தவறான தீர்ப்பு. மற்றொரு தவறு 5-வது நாளில் நிகழ்ந்தது. இதனால் ஆட்டமே இந்தியாவின் கையை விட்டு பறிபோனது. 5 நாட்களில் 2 தவறுதான். ஒரே டெஸ்டில் இரண்டு தவறான தீர்ப்பு வழங்கிய முதல் நடுவர் நானா?. ஆனாலும் அவ்விரு மோசமான முடிவுகளும் அடிக்கடி எனது மனதில் தோன்றி அச்சுறுத்தும்.

    நான் ஏன் தவறிழைத்தேன் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இதை சாக்குபோக்காக சொல்லவில்லை. ஆனால் அந்த சமயத்தில் தரையை நோக்கி காற்று பலமாக வீசியது. காற்றின் இரைச்சலோடு பந்து பேட்டில் பட்டதா? இல்லையா? என்பது தெளிவாக உணர முடியவில்லை. வர்ணனையாளர்கள் ஸ்டம்பு மீது உள்ள மைக் மூலம் சத்தத்தை கேட்பார்கள். ஆனால் நடுவரின் நிலைமை அப்படி இல்லை. இத்தகைய விஷயங்கள் பார்வையாளர்களுக்கு தெரியாது.

    இவ்வாறு பக்னர் கூறினார்.

    இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்களுடன் தத்தளித்தது. அப்போது சைமன்ட்ஸ் 30 ரன்னில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் பக்னர், பந்து பேட்டில் உரசவில்லை என்று கூறி விரலை உயர்த்த மறுத்தார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்டின் விளிம்பில் உரசியது தெரிந்தது. அந்த சமயம் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நடுவரின் கருணையால் கண்டம் தப்பிய சைமண்ட்ஸ் 162 ரன்கள் குவித்ததோடு தங்கள் அணி 463 ரன்களை எட்டுவதற்கும் வழிவகுத்தார். இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 532 ரன்கள் குவித்தது.

    சைமன்ட்ஸ் கேட்ச்-ஐ பிடித்த டோனி

    பிறகு 5-வது நாளில் இந்திய அணிக்கு 72 ஓவர்களில் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டிரா செய்யும் முனைப்புடன் ஆடிய இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தபோது, ராகுல் டிராவிட்டுக்கு (36 ரன்) தவறான தீர்ப்பை பக்னர் வழங்கினார். அதாவது பேட்டில் படாமல் காலுறையில் பட்டு பிடிக்கப்பட்ட பந்துக்கு கேட்ச் என்று அறிவித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணி 6 நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அந்த டெஸ்டில் தோல்வியை தழுவியது.
    மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின் 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் 2-வது டெஸ்ட் ’டிரா’வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

    இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.  2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாள் ஆட்டம் மழை குறுக்கீட்டின் காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

    தொடர்ந்து 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே இங்கிலாந்து வீரர்கள் சிறப்பான பந்து வீச்சில் ஈடுபட்டனர். 

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். இறுதியாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 எடுத்தது.

    இதையடுத்து, 182 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து அணி தனது 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் களமிறங்கினர். 

    3 பந்துகளை மட்டுமே சந்தித்த பட்லர் ரன் எதுவும் எடுக்காமல் ரோச் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த சக் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து ரூட் உடன் ஜோடி சேர்ந்த ஸ்டோக்ஸ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 37 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ்
    அணியை விட 219 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி மிகவும் வலுவான நிலையில் உள்ளது. 

    ஆனால், டெஸ்ட் போட்டியில் நாளை ஒரு நாள் மட்டுமே மீதம் இருப்பதால் இப்போட்டி டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

    3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 ரன்கள் எடுத்தது.
    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுக்கு 469 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.
     
    முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ் அதிகபட்சமாக 176 ரன்கள் குவித்தார். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் அதிகபட்சமாக
    5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    இதனையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.  2-வது நாள் முடிவில் 14 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 32 ரன்கள் எடுத்திருந்தது.

    3-வது நாளான நேற்றைய ஆட்டம் மழை காரணமாக முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

    இந்நிலையில், போட்டியின் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராத்வேட் மற்றும் ஜோசப் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

    ஜோசப் 32 ரன்கள் எடுத்திருந்த போது டோம் பீஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த புரோக்ஸ் உடன் ஜோடி சேர்ந்த பிராத்வேட் நிதானமாக ஆடினார்.

    இருவீரர்களும் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர். பிரேத்வேட் 75 ரன்கள் எடுத்த நிலையிலும், புரோக்ஸ் 68 ரன்கள் எடுத்த நிலையிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் வந்த வீரர் ரோஸ்டன் 51 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். 

    அடுத்து வந்த பிளாக் வுட், டவ்ரிஷ், கேப்ரியல் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சில் ரன் எதுவும் எடுக்காமேலே அவுட் ஆகி 
    வெளியேறினர். 

    இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 287 மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தை விட 182 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

    இங்கிலாந்து தரப்பில் பிராட் மற்றும் கிரீஸ் ஓக்ஸ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து தனது 2-வது இன்னிங்சை விளையாடி வருகிறது.

    ×