என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சமூக வலைதளத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மீது இனவெறியுடன் சாடியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவர் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளார்.
    லண்டன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்காக மான்செஸ்டருக்கு காரில் புறப்பட்ட போது வழியில் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு சென்று வந்தது சர்ச்சையானது. கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை அவர் மீறியதால் 2-வது டெஸ்டில் இருந்து கழற்றி விடப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது. பின்னர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு பாதிப்பு இல்லை என்பது உறுதியான பிறகே அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சிலர் அவரது நடத்தையை கேலி செய்ததுடன் இனவெறியுடன் திட்டியுள்ளனர். இது குறித்து ஜோப்ரா ஆர்ச்சர் கூறுகையில், ‘கால்பந்து வீரர் வில்பிரைட் ஜாஹா, 12 வயது சிறுவனால் இனவெறியுடன் மிரட்டப்பட்டதில் இருந்து இணையத்தில் எனக்கு என்று ஒரு எல்லையை வகுத்துள்ளேன். எந்த விஷயமும் அந்த எல்லையை மீற விடமாட்டேன். இன்ஸ்டாகிராமில் என்னை பற்றிய சிலரது இனவெறி பதிவுகளை சகித்துக் கொள்ள முடியவில்லை. இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளேன். இது சரியான முறையில் செல்லும் என்று நம்புகிறேன்’ என்றார்.

    இந்த நிகழ்வால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் மேலும் கூறுகையில், ‘நான் என்ன தவறு செய்தேன் என்பதை அறிவேன். அதற்குரிய விளைவையும் அனுபவித்து விட்டேன். நான் ஒன்றும் கிரிமினல் குற்றம் செய்து விடவில்லை. மீண்டும் உற்சாகமான மனநிலைக்கு திரும்ப விரும்புகிறேன். தற்போது மனரீதியாக நான் எப்படி இருக்கிறேன் என்பதை அறிய அணியின் மருத்துவருடன் சிறிது நேரம் பேசினேன். இது போன்ற கடினமான சூழலில் இருந்து எப்படி மீள்வது என்பது பற்றி சக வீரர் பென் ஸ்டோக்சும் அறிவுரை வழங்கினார். இப்போது போட்டியில் பங்கேற்பதற்கு மனதளவில் 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும். களம் இறங்கி விட்டால் அணிக்காக முழுமையான பங்களிப்பை அளிப்பேன். அதை என்னால் செய்ய முடியாது என்பதை உணரும் போது களம் இறங்க விரும்பமாட்டேன். ஒரு வேளை களம் இறங்கி மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசாவிட்டால் அதையும் பெரிதுப்படுத்துவார்கள்’ என்றார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மான்செஸ்டரில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் ஜோப்ரா ஆர்ச்சர் ஆடுவது சந்தேகம் தான் என்பது தெளிவாகிறது.

    25 வயதான ஜோப்ரா ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ் தாயாருக்கும், இங்கிலாந்து தந்தைக்கும் பார்படோசில் பிறந்தவர் ஆவார். 2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடிய அவர் அதன் மூலம் 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்குள் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக சதமடித்த 5 இந்திய வீரர்கள் குறித்த பட்டியலை இந்த செய்தியின் மூலம் பார்க்கலாம்.
    சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பலநூறு சர்வதேச சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அப்படி அடிக்கப்பட்ட சதங்களில் அதிகபட்ச சதங்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சச்சின் மற்றும் கோலி முதல் இரு இடங்களை பெற்றுள்ளனர். இப்படி இருக்கும் இந்த பட்டியலில் அதிவேக சதமடித்த இந்தியவீரர்களை காண்போம்.

    விராட்கோலி இந்திய அணியின் கேப்டன் ஆவதற்கு முன்பு மிகவும் அதிரடியாக விளையாடி கொண்டிருந்தார். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அதிரடியாக விளையாடிய அவர் 52 பந்துகளில் சதம் விளாசினார். இந்த போட்டியில் இந்திய அணி 360 ரன்களை அடித்து வெற்றி பெற வேண்டியிருந்தது. விராட் கோலி சதத்தால் இந்திய அணி வெற்றி பெற்றது.

    வீரேந்தர் சேவாக் 2009ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக ஹாமில்டன் மைதானத்தில் அடித்து பட்டையை கிளப்பினார். இந்த போட்டியில் இவர் 60 பந்துகளில் சதம் விளாசி இருந்தார். இதன்மூலம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

    இந்த பட்டியலில் மேலும் ஒரு சதத்தை தனக்குள் வைத்திருக்கிறார் விராட்கோலி .52 பந்துகளில் சதமடித்து 14 நாட்கள் தான் ஆகியிருக்கிறது. ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 6 ஆவது போட்டியில் இந்த சதம் வந்தது. இந்த போட்டியிலும் இந்திய அணி 300 ரன்களுக்கும் மேலாக அடித்து வெற்றி பெற வேண்டியிருந்தது இதன் காரணமாக 61 பந்துகளில் சதம் விளாசினார் விராட் கோலி.

    யுவராஜ் சிங் ராஜ்கோட் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 61 பந்துகளில் ருத்ர தாண்டவம் ஆடினார். இதன்மூலம் இந்த பட்டியலில் 61 பந்துகளில் 100 ரன் அடித்து 4- வது இடத்தை பிடித்துள்ளார்.

    முகமது அசாருதீன் 1997ஆம் ஆண்டு பரோடா மைதானத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 62 பந்துகளில் சதம் விளாசினார். இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ஆகவும் இருந்தார்.
    கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே சர்வதேச கிரிக்கெட் போட்டி 117 நாட்களுக்கு பிறகு கடந்த 8-ந்தேதி இங்கிலாந்தில் தொடங்கியது.
    ஜேசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. 

    ரசிகர்கள் இல்லாமல், கொரோனா தடுப்பு பாதுகாப்புடன் நடந்த இந்த தொடரின் முதல் டெஸ்டில் வெஸ்ட்இண்டீஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது டெஸ்டில் இங்கிலாந்து 113 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராபோர்ட் மைதானத்தில் நாளை (24-ந்தேதி ) தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடரை வெல்லப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்திற்கு தொடரை வெல்ல அதிகமான வாய்ப்பு உள்ளது. கடந்த டெஸ்டில் 3-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து ஆகியிருந்தாலும் அந்த அணி வீரர்கள் சிறப்பாக ஆடி வெற்றியைப் பெற்றனர்.

     ஒருவேளை போட்டி டிராவில் முடிந்தால் டெஸ்ட் தொடர் சமநிலையில் முடியும்.

    இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் மிகவும் நல்ல நிலையில் இருக்கிறது. குறிப்பாக ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு முதுகெலும்பாக உள்ளார். இந்த டெஸ்டிலும் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது.

    கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதாக கடந்த டெஸ்டில் நீக்கப்பட்ட ஆர்ச்சர் அணிக்கு திரும்பி இருக்கிறார். இதனால் வீரர்கள் தேர்வு  இங்கிலாந்துக்கு சவாலானது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் வென்று 32 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது.

     அந்த அணியில் பேட்டிங்கில் பிளாக்வுட், புரூக்ஸ், பிராத்வெயிட் ஆகியோரும், பந்துவீச்சில் கேப்ரியல், கேப்டன் ஹோல்டர், அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச் ஆகியோரும், ஆல் ரவுண்டரில் ராஸ்டன் சேஸு நல்ல நிலையில் உள்ளனர்.

    இந்த டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30  மணிக்கு தொடங்கியது. சோனி சிக்ஸ் டெலிவிஷனில் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
    பிசிசிஐ-யில் கங்குலியின் தலைவர் பதவிக்காலம் ஜூலை 27-ந்தேதி முடிவடையும் நிலையில், ஜெய் ஷாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்துள்ளது.
    லோதா கமிட்டி தலைமையிலான குழு பிசிசிஐ-யில் பல்வேறு மாற்றங்கள் செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. அதில் பெரும்பாலானவற்றை உச்சநீதிமன்றம் அமல்படுத்தியது.

    அதில் ஒன்று மாநில கிரிக்கெட் சங்கம் அல்லது பி்சிசிஐ-யில் ஆறு ஆண்டுகள் பதவி வகித்தால் மூன்று ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் பதவி வகிக்க முடியும். அதன்படி பார்த்தால் பிசிசிஐ பொருளாளராக இருக்கும் ஜெய் ஷாவின் ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் மே 7-ந்தேதியுடன் முடிவடைந்தது. கங்குலியின் பதவிக்காலம் ஜூலை 27-ந்தேதியுடன் முடிவடைகிறது.

    இருவரும் இனிமேல் மூன்று ஆண்டு கழித்துதான் பதவி வகிக்க முடியும். அதனால் கட்டாயம் இடைவெளி விட வேண்டும் (cooling-off period) என்ற விதியை மாற்றும்படி ஏப்ரல் 21-ந்தேதி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இன்று தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்தே தலைமையிலான இரண்டு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் மீது விசாரணைக்கு வந்தது. மனுவை இன்று இந்த அமர்வு விசாரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மனுரை விசாரிக்க சம்மதம் தெரிவித்து தலைமை நீதிபதி இரண்டு வார காலத்திற்கு ஒத்திவைத்துள்ளார்.

    இருவரும் பிசிசிஐ-யில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பதவி ஏற்றனர். 2025 வரை பதவிக்காலத்தை நீட்டிக்க மனு செய்துள்ளனர்.
    ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடங்குவதற்கு முன் ஐக்கிய அரபு எமிரேட்சில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரில் விளையாட வாய்ப்புள்ளது.
    தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் வந்து ஒருநாள் கிரிக்கெட்டில் தொடரில் விளையாடும்போது கொரோனா தொற்றால் போட்டி ரத்து செய்யப்பட்டது. தரம்சாலா போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்த இரண்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் இரு அணிகளும் இன்னும் கிரிக்கெட் போட்டியில் விளையாடாமல் உள்ளது. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் ஐபிஎல் தொடரை செப்டம்பர் 26-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதி வரை முழுத்தொடரையும் நடத்த பிசிசிஐ தயாராகி வருகிறது.

    போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெறும் என ஐபிஎல் தலைவர் தெரிவித்துள்ளார். போட்டி நடைபெறும் காலம் தீபாவளி நேரம் என்பதால் ஒளிபரப்பு உரிமம் பெற்றுள்ள ஸ்டார் வருத்தத்தில் உள்ளதாக தெரிகிறது.

    இதனால் ஒளிபரப்பு உரிமத்தில் ஸ்டார் நிறுவனத்தை சந்தோசப்படுத்தும் வகையில் ஐபிஎல் தொடருக்கு முன் தென்ஆப்பிரிக்காவுடன் ஒயிட்-பால் கிரிக்கெட் தொடரை நடத்த பிசிசிஐ விரும்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ஸ்டார் தென்ஆப்பிரிக்காவின் உள்நாட்டு உரிமத்தையும் பெற முயற்சி மேற்கொள்ள வாய்ப்பாக இருக்கும் எனக் கருதுகிறது.

    ஒருவேளை இந்தத் தொடர் நடைபெற்றால் இந்திய அணி வீரர்கள் முன்னதாகவே ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடும். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தொடரில் விளையாட செல்ல வேண்டும்.

    இதனால் வீரர்களின் ஒர்க்லோடு அதிகமாகும் என்பதையும் பிசிசிஐ கருத்தில் கொள்ளும். இதனால் உறுதியாக தொடர் நடத்தப்படுமா? என்பது குறித்து பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தால்தான் உறுதியாகும்.
    14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கடைபிடிக்கப்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடரில் விளையாடுகிறது.

    இந்த தொடரின்போது இந்திய அணி வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துவது என்பது அதிகமானதாகும். இதனை சற்று குறைக்க வேண்டும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்துக்கு, இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய இடைக்கால தலைமை செயல் அதிகாரி நிக் ஹாக்லி அளித்த ஒரு பேட்டியில், ‘‘வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது ஆஸ்திரேலிய அரசின் விதிமுறையாகும்.

    அதனை இந்திய கிரிக்கெட் அணியும் கடைப்பிடித்தாக வேண்டும். அதேநேரத்தில் தனிமைப்படுத்துதல் காலத்திலும் பயிற்சி பெறும் வகையில் இந்திய அணியினருக்கு அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்து கொடுக்கப்படும். அடிலெய்டு மைதானத்தில் உள்ள ஓட்டலில் தனிமைப்படுத்துதலுக்கு தேவையான வசதிகள் உள்ளது’’ என்றார்.
    ஒருநாள் போட்டியில் ஸ்டம்பிங் மூலம் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதல் 5 இடத்தை பிடித்த கீப்பர்கள் பற்றி இந்த செய்தி மூலம் பார்க்கலாம்.
    கிரிக்கெட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருப்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. எப்போதும் விழிப்பாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். பேட்ஸ்மேன் பந்தை ஒரு நொடிதான் தவிர விடுவார் தவறவிட்ட உடன் உடனடியாக பந்தை பிடித்து ஸ்டம்பில் அடித்து ஸ்டம்பிங் செய்ய வேண்டும். அப்படி அதிகமாக ஸ்டம்பிங் செய்துள்ள விக்கெட் கீப்பர்கள் பற்றி தற்போது பார்ப்போம்.

    இந்திய அணிக்காக கிட்டத்தட்ட 13 வருடங்கள் ஒருநாள் போட்டிகளில் விக்கெட் கீப்பராக இருந்துள்ள எம்எஸ் டோனி 350 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 123 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

    இலங்கை அணியின் விக்கெட் கீப்பராக இருந்தவர் குமார் சங்ககாரா. இவர் இடதுகை ஆட்டக்காரர் மொத்தம் 404 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள இவர் 99 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

    கழுவிரதனா 1990-களில் இலங்கை அணிக்காக ஆடிய விக்கெட் கீப்பர் ஆவார். இவர் 189 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி 75 ஸ்டம்பிங் செய்துள்ளார் அந்த அளவிற்கு திறமைக்காரர்.

    பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பரான மொயின் கான் 1990 முதல் 2004 வரை பாகிஸ்தான் அணிக்காக ஆடியவர் 219 போட்டிகளில் ஆடியுள்ள இவர் 73 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

    ஆஸ்திரேலியா அணியை சேர்ந்த ஆடம் கில்கிறிஸ்ட் 287 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 55 ஸ்டம்பிங் மட்டுமே செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
    இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் என்று அந்த அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
    3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 5-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ‘ஆன்-லைன்’ மூலம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இங்கிலாந்து- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான கடைசி டெஸ்ட் போட்டியிலும் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம். ஆனால் இங்கிலாந்தில் தற்போது ஆடுகளத்தின் தன்மை மாறி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதை இவ்வளவு முன்கூட்டியே சொல்ல முடியாது. வெஸ்ட்இண்டீஸ்-இங்கிலாந்து தொடரை பார்க்கையில் எங்களுக்கு சில யோசனைகள் கிடைத்து இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் எந்த வீரர்களால் நன்றாக செயல்பட முடியும் என்பதற்கு ஏற்ப நாங்கள் தயாராகுவோம். அப்போதைய தட்பவெப்பநிலை உள்பட எல்லா விஷயங்களையும் கவனிப்போம். 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் வாய்ப்பு குறித்தும் சிந்திப்போம். எச்சிலை தேய்த்து பந்தை பளபளப்பாக்க தடை விதிக்கப்பட்டு இருப்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் சிரமத்தை சந்திப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் வியர்வையை பயன்படுத்தி பந்து வீச்சில் குறை சொல்ல முடியாத வகையில் செயல்பட்டனர்.

    இந்த தொடரில் நிச்சயம் எங்கள் அணியின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கமாட்டோம். எங்கள் திறமையை பயன்படுத்தி பெருமைப்படும் வகையில் செயல்பட முயற்சிப்போம். உடல் தகுதியை பொறுத்தமட்டில் விராட்கோலி உயர்தரமான வீரர். இந்த விஷயத்தில் எங்கள் அணியினரும் ரொம்ப பின்தங்கியவர்கள் கிடையாது. பாபர் அசாம் நல்ல உடல் தகுதியை உடையவர். அத்துடன் அவர் சிறப்பாகவும் செயல்பட்டு வருகிறார். உடல் தகுதியை மேம்படுத்த எங்கள் அணி வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக், லா லிகா, சீரி ஏ என மூன்று லீக்குகளிலும் 50 கோல்களுக்கு மேல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டா சாதனை படைத்துள்ளார்.
    இத்தாலியில் நடந்து வரும் ‘சீரி ஏ’ கிளப் கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஒரு லீக் ஆட்டத்தில் யுவென்டஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் லாஜியோவை வீழ்த்தியது. யுவென்டஸ் அணியில் இரண்டு கோல்களையும் 51 மற்றும் 54-வது நிமிடங்களில் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடித்தார். இதுவரை 34 ஆட்டங்களில் ஆடியுள்ள யுவென்டஸ் அணி 25 வெற்றி, 5 டிரா,4 தோல்வி என்று 80 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

    ‘சீரி ஏ’ போட்டியில் ரொனால்டோ ஒட்டுமொத்தமாக இதுவரை 51 கோல்கள் (61 ஆட்டம்) அடித்துள்ளார். இதன் மூலம் ‘சீரி ஏ’, ‘லா லிகா’, இங்கிலாந்து பிரிமீயர் லீக் ஆகிய மூன்று போட்டிகளில் குறைந்தது 50 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை போர்ச்சுகலை சேர்ந்த ரொனால்டோ படைத்தார்.
    இங்கிலாந்து தொடருக்கான பாகிஸ்தான் அணியில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர் இணைவார் என்று அந்நாட்டு கிரிக்கெட் போர்டு உறுதிப்படுத்தியுள்ளது.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஒயிட்-பால் கிரிக்கெட்டுக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். பாகிஸ்தான் அணி மூன்று டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.

    2-வது குழந்தை பிறப்பதாக எதிர்பார்த்த தேதியும், இங்கிலாந்து தொடருக்கான தேதியும் ஒன்றாக வந்ததால் முகமது அமிர் இங்கிலாந்து தொடரில் இருந்து விலகினார். அதேவேளையில் பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்திருந்த ஹாரிஸ் ராஃப் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆறு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் ஐந்து முறை பாசிட்டிவ் என வந்துள்ளது.

    2-வது குழந்தை பிறந்ததாக ஜூலை 17-ந்தேதி முகமது அமிர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டிருந்தார். இதனால் இங்கிலாந்து சென்று தனிமைப்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் அணியில் இணைய காலஅவகாசம் உள்ளது. இதனால் பாகிஸ்தான் அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இதை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு உறுதி செய்துள்ளது. இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். இரண்டு முறையும் நெகட்டிவ் ரிசல்ட் வந்தால் அமிர் இங்கிலாந்து செல்வார்.

    இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 28-ந்தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

    இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. இலங்கையும் விருப்பம் தெரிவித்திருந்தது. இந்தியாவில்தான் ஐபிஎல் போட்டியை நடத்த முன்னுரிமை. கடைசி கட்ட முயற்சிதான் வெளிநாட்டில் நடத்துவது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார். என்றாலும், எங்களை நாங்களாகவே ஐபிஎல் தொடருக்கு தயார்படுத்திக் கொள்வோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது.

    நேற்று நடைபெற்ற ஐசிசி கூட்டத்தில் டி20 உலக கோப்பை ஒத்திவைக்கப்பட்டதற்கான அதிகாரப்பூரவ முடிவு எடுக்கப்பட்டது. இதனால் செப்டம்பர்-அக்டோபர்-நவம்பரில் ஐபிஎல் தொடரை முழுவதுமாக நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது.

    இதுகுறித்து ஐ.பி.எல். தலைவர் பிரிஜேஷ் படேல், ஐ.பி.எல். அட்டவணையை இறுதி செய்வது பற்றி 10 நாளில் ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். ஐ.பி.எல். தொடரை நடத்துவது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    இந்நிலையில் தற்போது ‘‘இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடைபெறும். மத்திய அரசின் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளோம். மற்ற முடிவுகள் ஐபிஎல் கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும்’’ என்றார்.
    கடைசியாக ஆட்ட நாயகன் விருது பெற்று விட்டு அதன் பின்னர் இந்திய அணிக்காக ஆட முடியாமல் போன வீரர்கள் குறித்த தகவலை பார்க்கலாம்.
    ஒரு சில வீரர்கள் திறமை இருந்தும் இந்திய அணிக்காக ஆட முடியாமல் கடைசிவரை இருந்துள்ளனர். அதிலும் ஒரு சில வீரர்கள் இந்திய அணிக்காக ஆடி விட்டு கடைசியாக ஆட்ட நாயகன் விருது பெற்று விட்டு அதன் பின்னர் இந்திய அணிக்காக ஆட முடியாமல் இருந்துள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களை தற்போது பார்ப்போம்

    தமிழக வீரரான பத்ரிநாத் 2007ஆம் ஆண்டு இந்திய அணிக்கு அறிமுகமானார். மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு கடைசியாக இந்திய அணிக்காக டி20 போட்டியில் ஆடினார். அப்போது 37 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் நாயகன் விருது பெற்று இருந்தார். அதன் பின்னர் இவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதானுக்கு தற்போது 35 வயதாகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். கடைசியாக 2012 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடிய போது இலங்கை அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளும் 29 ரன்களும் எடுத்து இருந்தார். அப்போது ஆட்டநாயகன் விருது இவருக்குக் கிடைத்தது. அதன் பின்னர் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக இவர் ஆடவே இல்லை.

    இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளரான அமித் மிஸ்ரா 2008ஆம் ஆண்டு அறிமுகமானவர். 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார் . அப்போது 18 ரன்களை கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். அதன் பின்னர் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    ஓஜா இடதுகை சுழற்பந்துவீச்சாளரான இவர் 2008 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். 2013ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 10 விக்கெட் வீழ்த்தி இருந்தார். இதன் காரணமாக இவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது அதன் பின்னர் இவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.
    ×