என் மலர்
விளையாட்டு
நல்ல உடல் தகுதியுடன் இருந்தால் டோனி இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாட வேண்டும் என்று முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வயது என்பது வெறும் நம்பர் தான். நீங்கள் நல்ல பார்முடன் இருந்தாலோ, உண்மையிலே பந்தை நன்றாக அடித்து ஆடினாலோ தொடர்ந்து விளையாடலாம். இதே போல் டோனி பந்தை நன்கு அடித்து ஆடினாலோ, சிறப்பான பார்மில் இருந்தாலோ, ஆட்டத்தை அனுபவித்து ஆடினாலோ மற்றும் தன்னுடைய பேட்டிங் வரிசையில் களமிறங்கி இன்னும் தன்னால் இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்று நினைத்தாலோ அவர் தொடந்து இந்திய அணிக்காக விளையாடலாம்.
வலுவான உடல் தகுதியுடனும், நல்ல ஆட்டத்திறனுடனும் இருந்தால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனெனில் யாரும், யாரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. வயதை காரணம் காட்டி டோனி போன்றவர்களுக்கு பல நிபுணர்கள் நிறைய நெருக்கடி அளிக்கலாம். ஆனாலும் ஓய்வு என்பது தனிப்பட்டவர்களின் முடிவாகும். கிரிக்கெட்டை எப்போது விளையாட தொடங்குகிறீர்கள் என்பதும், அதில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் என்பதும் உங்களுடைய தனிப்பட்ட முடிவாகும்.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி முந்தைய எல்லா போட்டிகளையும் விட பெரியதாகும். ஏனெனில் இந்த போட்டி தேசத்துக்கானது என்று கருதுகிறேன். போட்டி எங்கு நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறப்போகிறது. யார் அதிக ரன்கள் குவிக்கிறார். யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பது பெரிய விஷயமல்ல.
ஐக்கிய அரபு அமீரகம் எந்த வடிவிலான போட்டியையும் நடத்துவதற்கு சிறப்பானதொரு இடமாகும். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த ஐ.பி.எல். போட்டி தேசத்தின் மனநிலையை மாற்றப் போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானதாகும்.
இவ்வாறு கம்பீர் கூறினார்.
39 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த விதமான போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க உள்ள டோனி இதில் அசத்தினால் மட்டுமே இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பு உருவாகும்.
இந்த முறை ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருப்பதால் அடுத்த மாதம் 2-வது வாரத்திலேயே டோனி தலைமையிலான சென்னை அணி அங்கு சென்று பயிற்சியை தொடங்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வயது என்பது வெறும் நம்பர் தான். நீங்கள் நல்ல பார்முடன் இருந்தாலோ, உண்மையிலே பந்தை நன்றாக அடித்து ஆடினாலோ தொடர்ந்து விளையாடலாம். இதே போல் டோனி பந்தை நன்கு அடித்து ஆடினாலோ, சிறப்பான பார்மில் இருந்தாலோ, ஆட்டத்தை அனுபவித்து ஆடினாலோ மற்றும் தன்னுடைய பேட்டிங் வரிசையில் களமிறங்கி இன்னும் தன்னால் இந்திய அணிக்கு வெற்றி தேடிக்கொடுக்க முடியும் என்று நினைத்தாலோ அவர் தொடந்து இந்திய அணிக்காக விளையாடலாம்.
வலுவான உடல் தகுதியுடனும், நல்ல ஆட்டத்திறனுடனும் இருந்தால் அவர் தொடர்ந்து விளையாட வேண்டும். ஏனெனில் யாரும், யாரையும் ஓய்வு பெறச் சொல்லி கட்டாயப்படுத்த முடியாது. வயதை காரணம் காட்டி டோனி போன்றவர்களுக்கு பல நிபுணர்கள் நிறைய நெருக்கடி அளிக்கலாம். ஆனாலும் ஓய்வு என்பது தனிப்பட்டவர்களின் முடிவாகும். கிரிக்கெட்டை எப்போது விளையாட தொடங்குகிறீர்கள் என்பதும், அதில் இருந்து எப்போது விலகப் போகிறீர்கள் என்பதும் உங்களுடைய தனிப்பட்ட முடிவாகும்.
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டி முந்தைய எல்லா போட்டிகளையும் விட பெரியதாகும். ஏனெனில் இந்த போட்டி தேசத்துக்கானது என்று கருதுகிறேன். போட்டி எங்கு நடக்கிறது. எந்த அணி வெற்றி பெறப்போகிறது. யார் அதிக ரன்கள் குவிக்கிறார். யார் அதிக விக்கெட்டுகள் வீழ்த்துகிறார் என்பது பெரிய விஷயமல்ல.
ஐக்கிய அரபு அமீரகம் எந்த வடிவிலான போட்டியையும் நடத்துவதற்கு சிறப்பானதொரு இடமாகும். கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் நடக்க உள்ள இந்த ஐ.பி.எல். போட்டி தேசத்தின் மனநிலையை மாற்றப் போகிறது என்பது தான் மிகவும் முக்கியமானதாகும்.
இவ்வாறு கம்பீர் கூறினார்.
39 வயதான டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் நிறைவடைந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த விதமான போட்டிகளிலும் விளையாடவில்லை. ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக களம் இறங்க உள்ள டோனி இதில் அசத்தினால் மட்டுமே இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவதற்கு வாய்ப்பு உருவாகும்.
இந்த முறை ஐ.பி.எல். தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருப்பதால் அடுத்த மாதம் 2-வது வாரத்திலேயே டோனி தலைமையிலான சென்னை அணி அங்கு சென்று பயிற்சியை தொடங்க திட்டமிட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
மான்செஸ்டரில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்துள்ளது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இங்கிலாந்து சார்பில் டொமினிக் சிப்லி, ரோரி பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிப்லி ரன்ஏதும் எடுக்காமலும், கேப்டன் ஜோ ரூட் 17 ரன்கள் எடுத்த நிலையிலும் பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னிலும் அவுட்டாகினர்.
மறுபக்கம் விளையாடிய ரோரி பேர்ன்ஸ் அரைசதம் அடித்து 57 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 122 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு ஒல்லி போப் உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜேடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒல்லி போப் மற்றும் ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தனர்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 85.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருந்தது. ஒல்லி போப் 91 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 56 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாவது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. ஒல்லி போப் 91 ரன்னில் வெளியேறி சதத்தை தவறவிட்டார். ஜோஸ் பட்லர் 67 ரன்னில் அவுட்டானார். இறுதியில் அதிரடியாக ஆடி அரை சதமடித்த பிராட் 62 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் குவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேமர் ரோச் 4 விக்கெட்டும், கேப்ரியல், சேஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. இங்கிலாந்து பந்து வீச்சாளர்களின் அபார பந்துவீச்சில் சிக்கியது வெஸ்ட் இண்டீஸ் அணி.
ஆட்டம் தொடங்கியது முதல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. ஹோல்டர் 24 ரன்னுடனும், டவ்ரிச் 10 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் தலா 2 விக்கெட்டும், ஆர்ச்சர், வோக்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் புகைப்படங்களும், பிடிஎஃப் ஃபைல்களும் வைரலாகி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்தியாவில் வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் கசிந்த வண்ணம் இருந்தன.
இதை உறுதி செய்யும் விதமாக ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்திருந்தார். ஆனால் போட்டி அட்டவணை வெளியிடப்படாமல் இருந்தது.
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதில் இருந்தே வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற சமூக வலைதள பக்கங்களில் ஐபிஎல் போட்டி அட்டவணை என்று பிடிஎஃப் ஃபைல்கள் வலம்வந்து கொண்டிருக்கின்றன.
அதில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் தேதிகள், மோதும் அணிகள், இடம் என போட்டி அட்டவனை விவரங்கள் அனைத்தும் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்த அட்டவணை பிடிஎஃப் ஃபைல்கள் சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளத்தில் வைரலாகிவரும் இந்த போட்டி அட்டவணை போலியானது என்பது தெரியவந்துள்ளது.
இந்த வைரல் அட்டவணையில் போட்டிகள் நடைபெறும் மைதானத்தின் விவரங்கள் அரபு அமீரகம் என உள்ளதே தவிர மைதானத்தின் பெயர் இடம்பெறவே இல்லை. மேலும், அமீரகத்தின் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் மைதானத்தின் பெயரும் இடம்பெறாமல் உள்ளது.

போட்டி அமீரகத்தில் நடைபெறும் என பிசிசிஐ தெரிவித்திருந்தாலும், மத்திய அரசிடம் வெளிநாட்டில் போட்டி நடத்துவது குறித்து அனுமதி கேட்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு தரப்பில் இருந்ஹ்டு அதிகாரப்பூர்வ அனுமதி இன்னும் கிடைக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
வைரல் செய்தியில் பதிவான மற்றொரு தகவல் போட்டி நடைபெறும் நேரம் அனைத்து 4 அல்லது 8 மணி என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் 3.30 மணி அல்லது 7.30 மணியளவில் தொடங்களாம் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தகவல்களின் மூலம் வாட்ஸ் அப் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் வைரலாகிவரும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை போலி என்பது உறுதியாகியுள்ளது.
ஐபிஎல் வீரர்களுக்கு தினசரி கொரோனா பரிசோதனை நடத்த வேண்டும் என கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா வலியுறுத்தி உள்ளார்.
புதுடெல்லி:
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது குறித்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளரான நெஸ் வாடியா நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி பாதுகாப்பாகவும், வெற்றிகரமாகவும் நடைபெற களத்திலும், களத்துக்கு வெளியேயும் பாதுகாப்பு நடைமுறைகள் கண்டிப்பான முறையில் பின்பற்றப்பட வேண்டும். பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்து கொள்ளக்கூடாது. முடிந்த அளவுக்கு அதிக அளவிலும், தினசரியும் கொரோனா மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நான் கிரிக்கெட் வீரராக இருந்தால் தினசரி மருத்துவ பரிசோதனை செய்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். அதனால் எந்த தீங்கும் வராது. உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறை என்பது மிகவும் தீவிரமாக கவனத்தில் கொள்ளக்கூடிய ஒன்றாகும். அதனை 8 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். போட்டியில் அமல்படுத்த முடியுமா? என்பது தெரியவில்லை. இந்த தொடரில் அணிகள் நிலையாக கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்த இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அறிவுறுத்தலை எதிர்நோக்கி இருக்கிறோம்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் அதிகபட்சமாக கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அதற்குரிய அனைத்து தொழில்நுட்ப வசதிகளும் அவர்களிடம் உள்ளது. போதுமான பரிசோதனைகள் செய்ய உள்ளூர் அரசாங்கத்தின் உதவி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு தேவைப்படும். இதற்கு முன்பாக நாம் ஐ.பி.எல். போட்டியை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தி இருந்தாலும், இந்த முறை நாம் நிறைய நடைமுறைகளை கூடுதலாக பின்பற்ற வேண்டியது இருக்கிறது.
இந்த சீசனில் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் முன்பை விட அதிகமானோர் பார்த்து ரசிக்கும் போட்டியாக ஐ.பி.எல். இருக்கும் என்று நம்புகிறேன். அந்த நிலையை எட்டவில்லை என்றால் ஆச்சரியப்படுவேன். அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதன் மூலம் ஸ்பான்சர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். ரசிகர்களுக்கு அனுமதி இல்லாததால் அணிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை இந்திய கிரிக்கெட் வாரியம் ஈடுகட்டும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மான்செஸ்டரில் நேற்று தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் இங்கிலாந்து முதல் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி டொமினிக் சிப்லி, ரோரி பேர்ன்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிப்லி ரன்ஏதும் எடுக்காமல் கேமர் ரோச் பந்தில் டக்அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் ஜோ ரூட் 17 ரன்கள் எடுத்த நிலையில் ரன்அவுட் ஆனார். 2-வது டெஸ்டில் சதம் விளாசிய பென் ஸ்டோக்ஸ் 20 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். மறுபக்கம் விளையாடிய ரோரி பேர்ன்ஸ் அரைசதம் அடித்தார். என்றாலும் 57 ரன்னில் வெளியேறினார். இதனால் இங்கிலாந்து 122 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு ஒல்லி போப் உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜேடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஒல்லி போப் அரைசதம் அடித்து சதத்தை நோக்கிச் சென்றார். கடும் விமர்சனத்திற்குள்ளான ஜோஸ் பட்லர் அரைசதம் அடித்தார்.
இங்கிலாந்து அணி 85.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் எடுத்திருக்கும்போது முதல் நாள் ஆட்டம் முடிவிற்கு வந்தது. ஒல்லி போப் 91 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 56 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் கேமர் ரோச் 2 விக்கெட்டும், சேஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ரத்தானதால் அந்த நேரத்தை பயன்படுத்தி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை - வங்காளதேசம் அணிகள் விளையாடுகின்றன.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் - நவம்பரில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்த ஐசிசி ஏற்பாடு செய்திருந்தது. இதற்கான போட்டி அட்டவணை தயார் செய்யப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா தொற்றால் தற்போது தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதனால் அந்த நேரத்தில் பிசிசிஐ ஐபிஎல் தொடரை நடத்த திட்டமிட்டுள்ளது. செப்டம்பர் - அக்டோபர் - நவம்பரில் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமீரேட்சில் நடைபெற இருக்கிறது. ஐசிசி தொடர் என்பதால் அனைத்து அணிகளுக்கும் மற்ற விளையாட்டு போட்டிகள் இருக்காது. இதனால் ஐபிஎல் போட்டியை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.
ஐபிஎல் போட்டியில் இலங்கை மற்றும் வங்காளதேச அணி வீரர்கள் அதிக அளவில் இடம்பெறவில்லை. மேலும், ஜூலை மாதம் வங்காளதேசம் இலங்கை சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருந்தது.
கொரோனாவால் இந்தத் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் தொடரை நடத்த வங்காளதேசம் விரும்புகிறது. அக்டோபர் மாதத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகளை நடத்த வங்காளதேசம் இலங்கையுடன பேசி வருகிறது.
கொரோனா பாதிப்பு மிகவும் குறைவான நாடுகளில் ஒன்று இலங்கை. இதனால் இலங்கை சென்று விளையாடுவதில் எந்த பிரச்சினையும் இருக்காது. இதைவிட சிறந்த ஆசியக் கண்டத்தில் மீண்டும் கிரிக்கெட்டை தொடங்க வேறு எந்த நாடும் சாதகமாக இருக்காது என்று வங்காளதேசம் தெரிவித்துள்ளது.
இந்த மூன்று போட்டிகளும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி அட்டவணைக்குள் அடங்கும்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம் பிடித்துள்ள யுவென்டஸ் அணி, உடினிஸ் அணிக்கெதிரான போட்டியில் தோல்வியடைந்ததால் ‘சீரி ஏ’ சாம்பியன் இன்னும் உறுதிபடுத்தாமல் உள்ளது.
இத்தாலியில் நடைபெறும் முதன்மை கால்பந்து லீக்கான சீரி ஏ-யில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கிறிஸ்டியோனோ ரொனால்டோ, டை பாலா விளையாடும் யுவென்டஸ் யுடினிஸ் அணியை எதிர்கொண்டது. இதில் யுவென்டஸ் 1-2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.
ஆட்டத்தின் 42-வது நிமிடத்தில் யுவென்டஸ் அணியின் மேத்திஜ்ஸ் டி லிக்ட் முதல் கோலை பதிவு செய்தார். இதனால் முதல் பாதி நேரத்தில் யுவென்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதன்பின் 52-வது நமிடத்தில் யடினிஸ் அணியின் நெஸ்டோரோவ்ஸ்கி கோல் அடித்தார். 90 நிமிட ஆட்ட முடிவில் 1-1 என ஆட்டம் சமநிலையில் இருந்து. இன்ஜுரிக்கான நேரத்தில் (90+2) சீகோ போஃபனா கோல் அடிக்க யுடினிஸ் 2-1 என வெற்றி பெற்றது.
நான் பந்து வீசியதிலேயே மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்றால் அவர் பிரையன் லாராதான் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
முத்தையா முரளீதரன், ஷேன் வார்னேவுக்கு பின் அதிக டெஸ்ட் விக்கெட்கள் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்ப்ளே. டெஸ்ட் போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுக்களையும் வீழ்த்திய 2-வது வீரர் என்ற அரிய சாதனைப்படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 619 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார்.
18 ஆண்டுகள் கிரிக்கெட் களத்தை கலங்கடித்தவர் அனில் கும்ப்ளே. அவர் பந்து வீசிய காலத்தில் பல தலைசிறந்த பேட்ஸ்மேன்கள் ஆடி வந்தனர். ரிக்கி பாண்டிங், கல்லீஸ், குமார் சங்ககாரா, இன்சமாம் உல் ஹக், சயீத் அன்வர், பிரையன் லாரா என பலருக்கு எதிராக பந்து வீசி உள்ளார்.
பல சமயங்களில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்கு திருப்பம் அளித்து இருக்கிறார் அனில் கும்ப்ளே. அவரது அனுபவத்தின் காரணமாக 2007-08 காலகட்டத்தில் இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். அந்த சமயத்தில் பல முக்கிய வெற்றிகளை பதிவு செய்து இருந்தது இந்திய அணி.
அனில் கும்ப்ளே தான் பந்து வீசியதில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் யார் என்பது பற்றி கூறி உள்ளார். அந்த குறிப்பிட்ட பேட்ஸ்மேன் ஒவ்வொரு பந்துக்கும் நான்கு வகையான ஷாட் வைத்திருப்பார் என்றும் கூறி தன் வியப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில், ‘‘பல பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசுவது கடினமாக இருந்துள்ளது. அதில் உச்சகட்டம் பிரையன் லாராதான்றார். லாரா நீங்கள் பந்துவீசும் ஒவ்வொரு பந்துக்கும் நான்கு வகையான ஷாட் வைத்திருப்பார். அதுதான் மிகப்பெரிய சவால். அவரை வீழ்த்த முடியும், அவுட் ஆக்க முடியும் என நினைப்போம். ஆனால், அவர் தன் ஷாட்டை மாற்றி ‘3rd man’ திசையில் பந்தை தட்டி விடுவார்’’ என்றார்.
அனில் கும்ப்ளே பிரையன் லாராவிற்கு எதிராக 14 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் ஐந்து முறை அவரை வீழ்த்தி உள்ளார். 2002 டெஸ்ட் போட்டி ஒன்றில் தன் தாடையில் காயம் ஏற்பட்டபோது கட்டு போட்டுக்கொண்டு வந்து அவரது விக்கெட்டை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், விவிஎஸ் லக்ஸ்மன், சேவாக் போன்றோர் தன் அணியை சேர்ந்தவர்கள் என்பதால் நல்ல வேளையாக அவர்களுக்கு பந்து வீசும் நிலை தனக்கு வரவில்லை என்றார்.
அவர்களுக்கு வலைப்பயிற்சியில் மட்டுமே பந்து வீசுவேன். போட்டிக்கு முந்தைய தினம் மாலை அவர்களுக்கு எப்படி பந்து வீசுவது என சிந்திக்கும் நிலை தனக்கு வரவில்லை எனவும் குறிப்பிட்டார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணிகள் பதக்கம் வெல்லும் என்று கேப்டன்கள் மன்பிரீத் சிங், ராணி ராம்பால் ஆகியோர் நம்பிக்கை தெரிவித்தனர்.
புதுடெல்லி:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்த ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டு தள்ளிவைக்கப்பட்டு அடுத்த ஆண்டு (2021) ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை அரங்கேறுகிறது. ஒலிம்பிக் போட்டிக்கான ஒரு வருட கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இதையொட்டி இந்திய ஆண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத் சிங், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் கருத்து தெரிவிக்கையில் இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணிகள் பதக்க மேடையை அலங்கரிக்க பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கூறினார்கள்.
மன்பீரித் சிங் கூறுகையில் கடந்த ஆண்டில் எங்கள் அணி செயல்பட்ட விதத்தை பார்க்கும் போது டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல நிச்சயமாக நல்ல வாய்ப்பு இருக்கிறது. ஒரு அணியாக நாங்கள் நல்ல வளர்ச்சியை எட்ட போதிய காலஅவகாசம் இருக்கிறது. நாங்கள் செய்ய வேண்டிய பணிகளை சரியாக செய்வதில் கவனம் செலுத்தினால் முடிவுகள் தானாகவே நல்லபடியாக அமையும்.
நான் இதுவரை இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று இருக்கிறேன். எனவே பெரிய போட்டிகளில் ஆடிய அனுபவம் எனக்கு இருக்கிறது. இருப்பினும் ஒலிம்பிக் போட்டி என்றாலே எப்பொழுதும் வீரர்கள் மத்தியில் ஒருவிதமான பதற்றம் இருக்கத் தான் செய்யும். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி எங்களுக்கு மோசமானதாக அமைந்தது. ஆனால் என்னை பொறுத்த மட்டில் அது சிறப்பான ஒன்றாகும். ஏனெனில் அது தான் எனக்கு முதலாவது ஒலிம்பிக் போட்டியாகும். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்கு நாங்கள் முன்பை விட சிறந்த அணியாக சென்று நல்ல திறனை வெளிப்படுத்தினோம். ஆனாலும் விரும்பிய முடிவு கிடைக்கவில்லை. முன்பை விட சிறந்ததொரு நிலையை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் எட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றார்.
பெண்கள் அணியின் கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில் சமீப காலங்களில் முன்னணி அணிகளுக்கு எதிரான போட்டிகளில் விளையாடுகையில் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்கும் திறன் எங்கள் அணிக்கு இருக்கிறது என்பதை காட்டி இருக்கிறோம். நம்முடைய அணி விளையாடிய ஒவ்வொரு போட்டிகளிலும் ஏற்றம் கண்டு வருகிறது. அடுத்த ஒரு ஆண்டில் நமது ஆட்டத்தில் நிச்சயம் மேலும் மேம்பாடு அடைவோம். 36 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்று சரித்திரம் படைத்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் அங்கம் வகித்ததை சிறப்பு வாய்ந்ததாக கருதுகிறேன். அந்த போட்டியில் நாங்கள் சிறந்த முடிவை பதிவு செய்யாவிட்டாலும், அந்த ஒலிம்பிக்கில் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். 2016-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாடிய வீராங்கனைகள் அனைவரும் அந்த அனுபவத்தின் அடிப்படையில் டோக்கியோ ஒலிம்பிக் களத்தில் சாதுர்யமாக செயல்பட்டு அசத்துவார்கள் என நம்புகிறேன் என்றார்.
ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 தொடங்கி நவம்பர் 8 ந்தேதிவரை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை எங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது. மேலும் ஐ.பி.எல். போட்டியை இலங்கையில் நடத்த இலங்கை அரசும் விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் தற்போது ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
துபாய், அபுதாபி, ஷார்ஜா நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் போட்டி அட்டவணை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 8 ஆம் தேதி முடிவடையும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டி செப்டம்பர் 19 (சனிக்கிழமை) தொடங்கி இறுதிப் போட்டி நவம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். மொத்தம் போட்டிகள் 51 நாட்கள் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அறிவித்துள்ளார்.
2018-ம் ஆண்டு ஆசிய போட்டியில் இந்திய கலப்பு 4x400மீட்டர் ஓட்ட பந்தய அணி வென்ற வெள்ளிப் பதக்கம் தற்போது தங்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
ஜகர்த்தாவில் 2018-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த முகமது அனாஸ், எம்.ஆர். பூவம்மா, ஹிமா தாஸ், ஆரோக்கிய ராஜிவ் ஆகியோர் 4x400மீ கலப்பு ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றனர். பஹ்ரைன் அணி தங்கப்பதக்கம் வென்றது.
தடைதாண்டும் ஓட்டப்பந்தயத்தில் அனு ராகவன் 56.92 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து 4-வது இடம் பிடித்தார்.
பஹ்ரைன் அணியில் கலந்து கொண்ட வீரர்களி்ல் ஒருவர் ஊக்கமருந்து உட்கொண்டதாக தெரியவந்துள்ளது. கெமி அடெகோயா என்ற அந்த வீராங்கனைக்கு நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டள்ளது.
இதனால் 4x400மீ ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி வென்ற வெள்ளிப் பதக்கம் தங்க பதக்கமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெண்களுக்கான தடைதாண்டி ஓடும் போட்டியில் 4-வது இடம் பிடித்த அனு ராகவன் வெண்கல பதக்கம் பெறுகிறார். இதில் கெமி தங்க பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் போட்டியில் விளையாட தடையில்லாத சான்றிதழ் வழங்க தயாராக இருக்கிறோம், அதேவேளையில் வீரர்களின் விடாமுயற்சியுடன் செய்ய வேண்டியது என நியூசிலாந்து தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஐபில் போட்டியை செப்டம்பர்- அக்டோபர்- நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
மத்திய அரசிடம் அனுமதி கேட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி கொடுத்ததும் அதற்கான வேலைகளை துரிதமாக செயல்படுத்தும். இன்னும் 10 நாட்களுக்குள் அட்டவணையை தயாரிக்க ஐபிஎல் நிர்வாகம் தயாராகி வருகிறது.
வெளிநாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். வீரர்களின் பாதுகாப்பு மிகமிக முக்கியமானது என்பதால் அதற்கான வழிகாட்டு முறைகளை வகுக்கு வேண்டும்.
ஒவ்வொரு நாட்டில் இருந்து வரும் வீரர்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கும். ஒருவேளை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் பொறுப்பு ஏற்றுக் கொள்வது யார்? என்ற கேள்விகள் எல்லாம் உள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு வீரர்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்க தயாராக இருக்கிறோம் என்று நியூசிலாந்து கிரிக்கெட் போர்டின் செய்தி தொடர்பாளர் ரிச்சார்ட் ப்ரூக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரிச்சார்ட் ப்ரூக் கூறுகையில் ‘‘ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு நாங்கள் தடையில்லா சான்றிதழ் வழங்க வேண்டும். அவர்கள்தான் இதுகுறித்து முடிவு செய்ய வேண்டும்.
தடையில்லாத சான்றிதழ் ஒவ்வொரு நடைமுறையையும் கருத்தில் கொண்டுதன் வழங்க ஆலோசிக்கப்படும். ஆனால், வீரர்கள் மறுப்பது அபூர்வம். எனினும், சில விசயங்களில் அந்தந்த வீரர்கள்தான் பொறுப்பு ஏற்றுக்கொள்ள கடும் முயற்சி எடுக்க வேண்டியது கடமை. சில தகவல்களை அளிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த விவகாரத்தில் தொடர்ந்து எங்களால் உதவி செய்ய முடியும்’’ என்றார்.

நியூசிலாந்தை சேர்ந்த ஜிம்மி நீசம் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்), லூக்கி பெர்குசன் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), மிட்செல் மெக்கிளேனகன் மற்றும் போல்ட் (மும்பை இந்தியன்ஸ்), கேன் வில்லியம்சன் (சன்ரைசர்ஸ் ஐதராபாத்), மிட்செல் சான்ட்னெர் (சென்னை சூப்பர் கிங்ஸ்) ஆகியோர் முக்கிய வீரர்கள்.
அதேபோல் ஸ்டீப் பிளமிங் (சிஎஸ்கே தலைமை பயிற்சியாளர்), ஷேன் பான்ட் (மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சு பயிற்சியாளர்), மைக் ஹெசன் (ஆர்.சி.பி. தலைமை பயிற்சியாளர்) போன்ற சப்பார்ட் ஸ்டாஃப்களும் உள்ளனர்.






