என் மலர்
விளையாட்டு
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய சச்சின் தெண்டுல்கர் அவுட் குறித்து பேசிய என்ன? என்பதை எம்எஸ்கே பிரசாத் வெளிப்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டில் நடுவர்கள் கொடுக்கும் சில அவுட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் அமைந்ததுதான் டேரில் ஹார்பர் சச்சின் தெண்டுல்கருக்கு கொடுத்த எல்.பி.டபிள்யூ. அவுட்.
1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் மெக்ராத் வீசிய பந்து பவுன்சராக செல்லும் என்று நினைத்து சச்சின் தெண்டுல்கர் குனிந்து பந்தை விட விரும்புவார். ஆனால் பந்து தாழ்வாக வந்து சச்சின் தெண்டுல்கரின் தோள்பட்டையை தாக்கும்.
மெக்ராத் அப்பீல் கேட்க டேரில் ஹார்பர் அவுட் கொடுத்து விடுவார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் டேரில் ஹார்பர் பேட்டி ஒன்றில், ‘‘சச்சின் தெண்டுல்கருக்கு நான் கொடுத்த அவுட் சரியான முடிவு என்று நம்புகிறேன். அந்த அவுட் கொடுத்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 2018-ல் எம்எஸ்கே பிரசாத்தை சந்தித்தேன். அப்போது சச்சின் தெண்டுல்கர் அவுட்டை ஏற்றுக் கொண்டதாக கூறியதாக ஹார்பர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டேரில் ஹார்பரிடம் நான் அப்படி கூறவில்லை என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘டேரில் இந்த முடிவைப் பற்றிய குற்ற உணர்வை மிக நீண்ட காலமாக சுமந்து கொண்டிருந்தார். 2018 இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின்போது டேரில் ஹார்பர் என்னை உணவு இடைவேளையின்போது சந்தித்தார். அப்போது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய அவுட் குறித்து சச்சின் எவ்வாறு உணர்ந்தார் என்று கேட்டார்.

சரியோ அல்லது தவறோ எதுவாக இருந்தாலும், நடுவரிடம் கேள்வி கேட்கும் நபர் சச்சின் தெண்டுல்கர் அல்ல என்று டேரில் ஹார்பரிடம் நான் கூறினேன். அதனால்தான் அவர் ரோல் மாடலாக மாறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கடவுளாக போற்றப்படுகிறார் என்றேன். தீர்ப்பு கொடுத்தபோது ஒட்டுமொத்த அணியும் அதிர்ச்சியில் உறைந்தது’’ என்றார்.
பிரெஞ்ச் கோப்பை இறுதிப்போட்டியில் கைலியன் மப்பேவை கீழே தள்ளிவிட்ட எதிரணியை பி.எஸ்.ஜி. வீரர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரான்சில், கிளப் அணிகளுக்கான பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வந்தது. கொரோனா பாதிப்பால் 4 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.)- செயின்ட் எடின்னே அணிகள் நேற்று முன்தினம் இரவு மோதின.
5 ஆயிரத்திற்கும் குறைவான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விறுவிறுப்பான இந்த மோதலில் பி.எஸ்.ஜி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் எடின்னேவை தோற்கடித்து 13-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பி.எஸ்.ஜி. அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
எடின்னே கேப்டன் லோக் பெரின் 31-வது நிமிடத்தில் எதிரணி வீரர் கைலியன் மப்பேவின் காலை முட்டியால் மிதித்து இடறி விட்டதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் வலது கணுக்காலில் வலியால் துடித்த கைலியன் பாப்பே கண்ணீர் மல்க பாதியிலேயே நடையை கட்டினார்.
இதனால் கோபம் அடைந்த பி.எஸ்.ஜி. அணி வீரர்கள் எடின்னே வீரர்களை தாக்க ஆரம்பித்தனர். அதே நேரத்தில் எடின்னே வீரர்களும் பதிலுக்கு தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நடுவர்கள் தலையிட்டு சமாதானம் படுத்தினர்.
இந்த சீசனில் மொத்தம் 29 கோல்கள் அடித்தவரான மப்பே அடுத்த மாதம் நடக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
Very difficult to maintain social distancing when you are fighting. Ligue 1 was cancelled due to #Covid_19 and now this fight after horrible tackle with #Mbappe#PSGASSEpic.twitter.com/TFlcGQSKij
— Indian Chaplin (@ventdeInde) July 25, 2020
பார்முலா 1 கார்பந்தய போட்டியில் அமெரிக்கா, பிரேசில், கனடா, மெக்சிகோ, கிராண்ட் பிரி-க்கள் கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. ஸ்பில்பேர்க்கில் நடந்த முதலாவது சுற்றான ஆஸ்திரியா கிராண்ட்பிரியில் பின்லாந்து வீரர் வால்டெரி போட்டோஸ் (மெர்சிடஸ் அணி) வெற்றி பெற்றார். 6 முறை சாம்பியனான இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஸ்டிரியா கிராண்ட் பிரி பந்தயமும் ஸ்பில்பேர்க் ஓடுதளத்திலேயே நடைபெற்றது. இதில் ஹாமில்டன் வெற்றி பெற்றார். ஹங்கேரியன் கிராண்ட் பிரி 19-ந்தேதி நடைபெற்றது. இதிலும் ஹாமில்டன்தான் வெற்றி பெற்றார். பிரிட்டிஸ் கிராண்ட் பிரி ஆகஸ்ட் 2-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரேசில், கனடா, மெக்சிகோ, அமெரிக்கா கிரண்ட் பிரி பந்தயங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகள் கிராண்ட் பிரியை நடத்த முன்வந்துள்ள நிலையில், அமெரிக்க கண்ட நாடுகள் மறுத்துள்ளன. வியட்நாம் முதன்முறையாக இந்த பந்தயத்தை நடத்த இருக்கிறது.
ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட் வீழ்த்த மான்செஸ்டர் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. ஜேசன் ஹோல்டர் 24 ரன்னுடனும், டவ்ரிச் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோசன் ஹோல்டர் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். டவ்ரிச் 37 ரன்னில் வெளியே வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார்.
பின்னர் 172 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
மான்செஸ்டரில் 3-வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில், உயிர்-பாதுகாப்பு வளையத்தில் இருந்து ஐந்து வீரர்களை ரிலீஸ் செய்துள்ளது இங்கிலாந்து.
கொரோனா பாதிப்பிற்குப் பிறகு முதன்முறையாக இங்கிலாந்தில் கடந்த 8-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் தொடங்கியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது.
கொரோனா வைரஸ் தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக உயிர்-பாதுகாப்பு வளையம் (Bio-Secure Bubble) உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்திற்குள் இருக்கும் வீரர்கள், ஸ்டாஃப்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வெண்டும்.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாஃப்ரா ஆர்சர் இந்த வளையத்தை விட்டு வெளியேறியதால் 2-வது போட்டியில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
தற்போது 3-வது போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணியில் டான் லாரன்ஸ், கிரேக் ஓவர்ட்ன், ஒல்லி ராபன்சன், ஒல்லி ஸ்டோன் ஆகியோர் இடம் பெறவில்லை. இதனால் அவர்களை ரிலீஸ் செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு.
அதேபோல் ஜோ டென்லியை அயர்லாந்து தொடருக்கான ஒருநாள் கிரிக்கெட் முகாமிற்கு செல்ல ரிலீஸ் செய்துள்ளது.
ஐந்து பேரை வெளியேற்றி நிலையில் இன்னும் 6 வீரர்களை தயாராக வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலாம் ஏராளமான மாற்று வீரர்களை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு தயாராக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் 2020 ஐபிஎல் டி20 லீக் இதற்கு முன்பு நடைபெற்றதைவிட முக்கியமானது என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றால் ஐபிஎல் தொடர் நடக்குமா? என்ற சந்தேகம் இருந்த நிலையில், டி20 உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்பட்டதால் செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் இந்தியாவில் போட்டியை நடத்த சாத்தியமில்லை என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவின் ஒவ்வொரு மக்களும் கொரோனாவை பற்றிதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். வீட்டிற்குள்ளேயே முடங்கி மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் மிகப்பெரிய விளையாட்டுத் தொடர் நடத்தப்படுவது மக்களின் மனநிலையை மாற்றும் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘விளைாயட்டு போட்டி எங்கே நடக்கிறது என்பது முக்கியமல்ல. ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ளது. எந்தவொரு வடிவிலான போட்டிற்கும் சிறந்த இடம். முக்கியமான இது நாட்டு மக்களும் மனநிலையை மாற்றக் கூடியதாக இருக்கும். இது எந்த அணி வெற்றி பெறும், எந்த வீரர் அதிக ரன் அடிப்பபார், யார் அதிக விக்கெட் வீழ்த்துவார் என்பது பற்றி அல்ல. நாட்டு மக்களின் மனநிலையை மாற்றக் கூடியதாக இருக்கும்.
இதனால் இந்த ஐபிஎல் மற்ற ஐபிஎல் தொடர்களை விட முக்கியமானது. ஏனென்றால், இது தேசத்திற்காக இருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களுக்கு அதிக அளவில் பயிற்சியாளர்கள் வாய்ப்பை ஐபிஎல் அணிகள் வழங்க வேண்டும் என முகமது அசாருதீன் வலியுறுத்தியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் லீக் 2008-ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. இதில் வெளிநாட்டு வீரர்களை அதிக அளவில் ஏலம் எடுக்க விரும்பும் ஐபிஎல் அணிகள், பயிற்சியாளர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்களையும் வெளிநாட்டில் இருந்து ஒப்பந்தம் செய்கிறது.
இந்நிலையில் இந்திய நாட்டைச் சேர்ந்த முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று அசாருதீன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து முகமது அசாருதீன் கூறுகையில் ‘‘ஐபிஎல் அணிகள் கட்டாயம் இந்தியாவின் முன்னாள் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். அவர்களுடைய அணிகளை வழிநடத்த போதுமான அனுபவங்கள் இருக்கிறது. மொத்தத்தில் இந்திய பிரிமீயர் லீக்கில் அதிகமான பயிற்சியாளர்கள் இடம்பெற வேண்டும்.
நம்முடைய பயிற்சியாளர்கள் பிக் பாஷ் அல்லது ஆஸ்திரேலியாவுக்கு அல்லது இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராக முடியாது. இங்கே யாரையும் பயிற்சியாளர்களாக்குவது அணிகளின் தனிச்சிறப்பு. ஆனால், முன்னாள் வீரர்கள் அவர்களுடைய காலத்தில் ஏராளமான சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர் என்பதை ஞாபகத்தில் கொள்ள வேண்டும்’’ என்றார்.
எனக்கு நடந்ததில் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு வருட தடையில் இருக்கும் ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
மேட்ச்-பிக்சிங் தொடர்பாக சூதாட்டக்காரர்கள் அணுகியதை மறைத்ததாக ஐசிசி வங்காளதேச அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டராக ஷாகிப்-அல்-ஹசனுக்கு இரண்டாடுகள் தடைவிதிக்கப்பட்டது.
2018-ல் இருந்து தடைக்காலம் அமலுக்கு வந்ததால் வரும் அக்டோபர் மாதத்துடன் அவரது தடைக்காமல் முடிவுடைய இருக்கிறது.
இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் இதுகுறித்து கூறுகையில் ‘‘நீங்கள் மக்களிடம் பொய் சொல்ல முடியாது. மாறுபட்ட விசயமாக நடிக்கவும் முடியாது. நடந்தது நடந்து விட்டது. மக்கள் தவறுகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள். 100 சதவீதம் சரியாக இருக்க முடியாது. ஆனால், அந்த தவறுகளில் இருந்து எப்படி வெளியே வருகிறோம் என்பது முக்கியமான விசயம். இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்ல முடியும். அவர்கள் ஒருபோதும் தவறான பாதையை தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதை சொல்ல வேண்டும்.
யாராவது ஒருவருக்கு அப்படி நடந்திருந்தால், அவரிடம் இருந்து நான் பாடம் கற்றுக் கொள்ளனும். ஆனால், எனக்கு நடந்துள்ளது. என்னிடம் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே நேர்மையாக இருக்க விரும்பினேன். என்னிடம் கேள்விகள் கேட்கும்போது அவர்களிடம் இருந்து நான் எதையும் மறைக்கவில்லை.
நான் தவறை உருவாக்கிவிட்டேன். என்னைப் போன்ற வீரர்களுக்கு நடக்கக்கூடாது. இதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதில் இருந்து கடந்து செல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவரும் இதில் இருந்த பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகள் செய்யக்கூடாது என்று விரும்பிறேன’’ என்றார்.
சிட்னி டெஸ்டில் இரண்டு தவறுகள் அல்ல, ஏழு தவறுகள்? என்னிடம் விளையாடுகிறீர்களா? என ஸ்டீவ் பக்னரை இர்பான் பதான் விமர்சனம் செய்துள்ளார்.
2008-ம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் நான் செய்த இரண்டு தவறுகளால் இந்தியா தோல்வியை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று நடுவர் ஸ்டீவ் பக்னர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஏழு தவறுகள்? என்னிடம் விளையாடுகிறீர்களா? என்று இர்பான் பதான் ஸ்டீவ் பக்னரை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து இர்பான் பதான் கூறுகையில ‘‘உங்களது எவ்வளவு தவறுகளை ஒத்துக் கொள்கிறீர்கள் என்பது பெரிய விஷயம் அல்ல. ஏனெனில் என்ன நடந்ததோ, அது நடந்த விட்டது. நாங்கள் அந்த டெஸ்டை இழந்து விட்டோம்.
நான் ஆஸ்திரேலியாவில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டி எனக்கு ஞாபகம் இருக்கிறது. 2003-ல் என்னுடைய அறிமுக டெஸ்ட். 21 வருடத்திற்குப்பிறகு அடிலெய்டில் இந்தியா வெற்றி பெற்றது. நடுவர் தவறால் ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வி? தற்போது அதுகுறித்து நடுவர் என்ன சொன்னாலும் எந்த வித்தியாசமும் ஏற்படப்போவது இல்லை.
ஒரு கிரிக்கெட்டராக பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சில தவறான முடிவுகள் கிடைத்திருக்கும். அப்போது விரக்தி அடைந்தாலும் பின்னர் அது மறக்கப்பட்டு விடும். ஆனால் சிட்னி டெஸ்டில் ஒரு தவறு அல்ல. ஏழு தவறுகள் நடந்தன. இதனால் நாம் போட்டியை இழந்தோம். எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. சைமண்ட்ஸ் மூன்று முறை ஆட்டமிழந்தார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை.
சைமண்ட்ஸ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். நாங்கள் 122 ரன்னில் தோல்விடைந்தோம். ஒரு தவறு அவருக்கு எதிராக சரிசெய்யப்பட்டிருந்தால் கூட, நாங்கள் அந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்போம். இது வெறும் விரக்தியல்ல. முதல் முறையாக இந்திய வீரர்கள் கோபப்பட்டதை நான் பார்த்திக்கிறேன். நடுவர்கள் ஒரு காரணத்திற்காக வேண்டுமேன்றே செய்கிறாரகள் என்று ரசிகர்கள் நினைக்கத் தொடங்கினர்.
சரி, கிரிக்கெட்டில் ஒரு தவறு நடக்கும். அதை கடந்த விட தோன்றும். ஆனால் ஏழு தவறுகள்? என்னிடம் விளையாடுகிறீர்களா?. அது எங்களுக்கு நம்பமுடியாததாக இருந்தது’’ என்றார்.
இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுக்கு 134 ரன்களுடன் தத்தளித்தது. அப்போது சைமன்ட்ஸ் 30 ரன்னில் இஷாந்த் ஷர்மாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் டோனியிடம் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் பக்னர், பந்து பேட்டில் உரசவில்லை என்று கூறி விரலை உயர்த்த மறுத்தார். டி.வி. ரீப்ளேயில் பந்து பேட்டின் விளிம்பில் உரசியது தெரிந்தது. அந்த சமயம் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. நடுவரின் கருணையால் கண்டம் தப்பிய சைமண்ட்ஸ் 162 ரன்கள் குவித்ததோடு தங்கள் அணி 463 ரன்களை எட்டுவதற்கும் வழிவகுத்தார். இந்திய அணியும் முதல் இன்னிங்சில் 532 ரன்கள் குவித்தது.
பிறகு 5-வது நாளில் இந்திய அணிக்கு 72 ஓவர்களில் 333 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. டிரா செய்யும் முனைப்புடன் ஆடிய இந்திய அணி 33 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 115 ரன்கள் எடுத்திருந்தபோது, ராகுல் டிராவிட்டுக்கு (36 ரன்) தவறான தீர்ப்பை பக்னர் வழங்கினார். அதாவது பேட்டில் படாமல் காலுறையில் பட்டு பிடிக்கப்பட்ட பந்துக்கு கேட்ச் என்று அறிவித்தார். கடைசி வரை போராடிய இந்திய அணி 6 நிமிடம் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் 210 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி அந்த டெஸ்டில் தோல்வியை தழுவியது.
இங்கிலாந்துக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் வீழ்த்திய கேமர் ரோச் 200 விக்கெட்டுக்களை பதிவு செய்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் சிறந்த பந்து வீச்சாளர்களாக திகழ்ந்தவர்கள் அம்ப்ரோஸ், வால்ஷ். இருவரும் இணைந்து எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக திகழ்ந்தனர். இருவரும் ஓய்வு பெற்ற பின் வெஸ்ட் இண்டீஸ் அணிகளில் பல வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்து விளையாடினர். அவர்களால் நீண்ட காலம் விளையாட முடியவில்லை.
குறைந்தபட்சம் டெஸ்டில் 200 விக்கெட்டுக்கள் கூட வீழ்த்த முடியாதவர்களாக இருந்தனர். அம்ப்ரோஸ் 1994-ம் ஆண்டு 200-வது விக்கெட்டை பதிவு செய்தார்.
அதன்பின் மான்செஸ்டரில் நேற்றைய போட்டியின்போது கிறிஸ் வோக்ஸ் விக்கெட்டை வீழ்த்தியபோது கேமர் ரூச் 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார்.
அம்ப்ரோஸ்-க்குப்பின் 26 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர் ஒருவர் 200 விக்கெட்டை கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும். ரோச் முதல் இன்னிங்சில் 72 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார்.

32 வயதாகும் கேமர் ரோச் 2009-ல் வங்காளதேசத்திற்கு எதிராக டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். இதுவரை 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 201 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
வால்ஷ் 132 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 519 விக்கெட்டுக்களுடன் வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சாளர்களில் முதல் இடத்தில் உள்ளார்.
பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டியில் பி.எஸ்.ஜி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் எடின்னேவை தோற்கடித்து 13-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது.
பாரீஸ்:
பிரான்சில், கிளப் அணிகளுக்கான பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வந்தது. கொரோனா பாதிப்பால் 4 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.)- செயின்ட் எடின்னே அணிகள் நேற்று முன்தினம் இரவு மோதின. 5 ஆயிரத்திற்கும் குறைவான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விறுவிறுப்பான இந்த மோதலில் பி.எஸ்.ஜி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் எடின்னேவை தோற்கடித்து 13-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பி.எஸ்.ஜி. அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
எடின்னே கேப்டன் லோக் பெரின் 31-வது நிமிடத்தில் எதிரணி வீரர் கைலியன் பாப்பேவின் காலை முட்டியால் மிதித்து இடறி விட்டதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் வலது கணுக்காலில் வலியால் துடித்த கைலியன் பாப்பே கண்ணீர் மல்க பாதியிலேயே நடையை கட்டினார். இந்த சீசனில் மொத்தம் 29 கோல்கள் அடித்தவரான பாப்பே அடுத்த மாதம் நடக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
பிரான்சில், கிளப் அணிகளுக்கான பிரெஞ்ச் கோப்பை கால்பந்து போட்டி நடந்து வந்தது. கொரோனா பாதிப்பால் 4 மாதங்களாக தடைப்பட்டிருந்த இந்த போட்டியின் இறுதி சுற்றில் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பி.எஸ்.ஜி.)- செயின்ட் எடின்னே அணிகள் நேற்று முன்தினம் இரவு மோதின. 5 ஆயிரத்திற்கும் குறைவான ரசிகர்கள் ஸ்டேடியத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். விறுவிறுப்பான இந்த மோதலில் பி.எஸ்.ஜி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் எடின்னேவை தோற்கடித்து 13-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. பி.எஸ்.ஜி. அணியில் நட்சத்திர வீரர் நெய்மார் 14-வது நிமிடத்தில் கோல் அடித்தார்.
எடின்னே கேப்டன் லோக் பெரின் 31-வது நிமிடத்தில் எதிரணி வீரர் கைலியன் பாப்பேவின் காலை முட்டியால் மிதித்து இடறி விட்டதால் சிவப்பு அட்டை காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதனால் வலது கணுக்காலில் வலியால் துடித்த கைலியன் பாப்பே கண்ணீர் மல்க பாதியிலேயே நடையை கட்டினார். இந்த சீசனில் மொத்தம் 29 கோல்கள் அடித்தவரான பாப்பே அடுத்த மாதம் நடக்கும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்இறுதி ஆட்டத்தில் ஆடுவது சந்தேகமாகியுள்ளது.
கிரிக்கெட் வாழ்க்கையில் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒரு மைல்கல் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சக வீரர் மயங்க் அகர்வாலுடன் நடந்த கலந்துரையாடலின் போது கூறியதாவது:-
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரை (10 இன்னிங்சில் வெறும் 134 ரன்) ஒரு மைல்கல் என்று சொல்வேன். எல்லோரும் சிறப்பாக அமையும் தொடரைத் தான் அவ்வாறு குறிப்பிடுவார்கள். ஆனால் எனக்கு மோசமாக அமைந்தாலும் அது தான் திருப்பம் தந்த தொடராகும். அதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரராக தொடர்ந்து பொறுமையுடன் விளையாடுவது மிகவும் கடினம் என்பதை புரிந்து கொண்டேன். அதைத் தான் நான் முதலில் சரி செய்ய வேண்டி இருந்தது. அதன் பிறகு எனது ஆட்டஅணுகுமுறையில் சில விஷயங்களை மாற்றிக் கொண்டேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது, இடுப்பு பகுதி சரியான நிலையில் இல்லை என்பதை உணர்ந்தேன். இங்கிலாந்து தொடருக்கு பிறகு சச்சின் தெண்டுல்கர், ரவிசாஸ்திரி ஆகியோர் எனக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கினர்.
வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது முன்னால் சென்று ஆடுவதன் முக்கியத்துவத்தை தெண்டுல்கர் உணர்த்தினார். இதே போல் ரவிசாஸ்திரி, களத்தில் கிரீசுக்கு வெளியே நின்றபடி பேட்டிங் செய்யும்படி யோசனை கூறினார். அதன் மூலம் வேகப்பந்து வீச்சை திறம்பட சமாளிக்க முடியும். அவுட் ஆவதில் பந்து வீச்சாளர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்காமல் தடுக்க முடியும் என்று தெரிவித்தார். அவர் கூறியபடி தொடர்ந்து செயல்பட்டேன். அதற்கு நம்ப முடியாத முடிவுகள் கிடைத்தது. அது தான் அந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் (4 டெஸ்டில் 4 சதத்துடன் 692 ரன்) எதிரொலித்தது. இங்கிலாந்து தொடர் மட்டும் இல்லை என்றால் அனேகமாக நான் ஒரே மாதிரியே விளையாடிக் கொண்டு இருந்திருப்பேன். டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு சூழ்நிலையிலும் முடிவை அறிய வேண்டும் என்று தான் விரும்புவேன்.
இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். கடைசி நாளில் 300 ரன்கள் தேவை என்றால் கூட, அந்த இலக்கை அடையும் நோக்கில் அடித்து ஆடலாம் என்று தான் வீரர்களிடம் சொல்வேன். ஒவ்வொரு பகுதியிலும் தலா 100 ரன் எடுக்கும் வியூகத்துடன் பேட்டிங்கை தொடருவோம். விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றாலோ அல்லது இனி சாத்தியமில்லை என்ற நிலை வந்தாலோ மட்டுமே டிராவுக்காக ஆடுவேன்.
இவ்வாறு கோலி கூறினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சக வீரர் மயங்க் அகர்வாலுடன் நடந்த கலந்துரையாடலின் போது கூறியதாவது:-
எனது கிரிக்கெட் வாழ்க்கையில் 2014-ம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடரை (10 இன்னிங்சில் வெறும் 134 ரன்) ஒரு மைல்கல் என்று சொல்வேன். எல்லோரும் சிறப்பாக அமையும் தொடரைத் தான் அவ்வாறு குறிப்பிடுவார்கள். ஆனால் எனக்கு மோசமாக அமைந்தாலும் அது தான் திருப்பம் தந்த தொடராகும். அதன் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு வீரராக தொடர்ந்து பொறுமையுடன் விளையாடுவது மிகவும் கடினம் என்பதை புரிந்து கொண்டேன். அதைத் தான் நான் முதலில் சரி செய்ய வேண்டி இருந்தது. அதன் பிறகு எனது ஆட்டஅணுகுமுறையில் சில விஷயங்களை மாற்றிக் கொண்டேன். குறிப்பாக பேட்டிங் செய்யும் போது, இடுப்பு பகுதி சரியான நிலையில் இல்லை என்பதை உணர்ந்தேன். இங்கிலாந்து தொடருக்கு பிறகு சச்சின் தெண்டுல்கர், ரவிசாஸ்திரி ஆகியோர் எனக்கு பயனுள்ள ஆலோசனைகள் வழங்கினர்.
வேகப்பந்து வீச்சை எதிர்கொள்ளும் போது முன்னால் சென்று ஆடுவதன் முக்கியத்துவத்தை தெண்டுல்கர் உணர்த்தினார். இதே போல் ரவிசாஸ்திரி, களத்தில் கிரீசுக்கு வெளியே நின்றபடி பேட்டிங் செய்யும்படி யோசனை கூறினார். அதன் மூலம் வேகப்பந்து வீச்சை திறம்பட சமாளிக்க முடியும். அவுட் ஆவதில் பந்து வீச்சாளர்களுக்கு நிறைய வாய்ப்புகளை கொடுக்காமல் தடுக்க முடியும் என்று தெரிவித்தார். அவர் கூறியபடி தொடர்ந்து செயல்பட்டேன். அதற்கு நம்ப முடியாத முடிவுகள் கிடைத்தது. அது தான் அந்த ஆண்டின் இறுதியில் நடந்த ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் (4 டெஸ்டில் 4 சதத்துடன் 692 ரன்) எதிரொலித்தது. இங்கிலாந்து தொடர் மட்டும் இல்லை என்றால் அனேகமாக நான் ஒரே மாதிரியே விளையாடிக் கொண்டு இருந்திருப்பேன். டெஸ்ட் போட்டியில் எந்த ஒரு சூழ்நிலையிலும் முடிவை அறிய வேண்டும் என்று தான் விரும்புவேன்.
இதில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டேன். கடைசி நாளில் 300 ரன்கள் தேவை என்றால் கூட, அந்த இலக்கை அடையும் நோக்கில் அடித்து ஆடலாம் என்று தான் வீரர்களிடம் சொல்வேன். ஒவ்வொரு பகுதியிலும் தலா 100 ரன் எடுக்கும் வியூகத்துடன் பேட்டிங்கை தொடருவோம். விக்கெட்டுகளை இழந்து மோசமான நிலைக்கு சென்றாலோ அல்லது இனி சாத்தியமில்லை என்ற நிலை வந்தாலோ மட்டுமே டிராவுக்காக ஆடுவேன்.
இவ்வாறு கோலி கூறினார்.






