என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மான்செஸ்டர் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார்.
பின்னர் 172 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிப்லி 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோரி பேர்ன்ஸ் 90 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 56 பந்தில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் இன்னிங்சில் 172 ரன்களுடன் மொத்தமாக இங்கிலாந்து 398 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 3-வது நாள் ஆட்ட 10 ரன்கள் அடிப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஷாய் ஹோப் 4 ரன்னுடனும், கிரேக் பிராத்வைட் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. இன்றைக்குள் 8 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றி விடலாம் என்று இங்கிலாந்து எண்ணியிருந்தது.
ஆனால் இன்று காலையில் இருந்தே மழை பெய்தது. இதனால் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் போனது. இதனால் நடுவர்கள் 4-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
நாளையும் இதுபோன்று மழை பெய்தால் இங்கிலாந்தின் வெற்றிக் கனவு தகர்ந்துவிடும்.
இலங்கை கிரிக்கெட் போர்டின் அறிமுக டி20 லீக்கான லங்கா பிரிமீயர் லீக் அடுத்த மாதம் 28-ந்தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் வாரியம் ஐபிஎல் தொடரை நடத்துவது போல் வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், பாகிஸ்தான், ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுகளும் டி20 லீக்கை நடத்தி வருகின்றன.
அந்த வகையில் இலங்கை கிரிக்கெட் வாரியம் ஐந்து அணிகள் கலந்து கொள்ளும் லங்கா கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தத் தொடர் ஆகஸ்ட் 28-ந்தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 30-ந்தேதியில் இருந்து செப்டம்பர் 20-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
கொழும்பு, கண்டி, காலே, தம்புல்லா மற்றும் ஜாஃப்னா ஆகிய ஐந்து நகரங்களின் பெயரில் அணிகள் களம் இறங்குகின்றன. 70-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் மற்றும் பிரபல பயிற்சியாளர்கள் இடம்பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகள் பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானம், ராங்கிரி தம்புல்லா சர்வதேச கிரிக்கெட் மைதானம், பலேகலே சர்வதேச கிரிக்கெட் மைதானம், சூரியவேவா மகிந்த ராஜபக்சே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். ஸ்பான்சர் குறித்த ஏலம் வருகிற 30-ந்தேதி நடைபெற இருக்கிறது.
சரியான நேரத்தில் போட்டி அட்டவணை வெளியடப்படும் என்று இலங்கை கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க வாய்ப்பில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2020 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அனுமதி வழங்கியதும், அதிகாரப்பூர்வ போட்டி அட்டவணை வெளியிடப்படும்.
இங்கிலாந்து பாகிஸ்தானுடன் டெஸ்ட் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. இந்தத் தொடர் முடிந்த உடன் இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடருக்கு திரும்ப இருந்தனர்.
இந்நிலையில்தான் இங்கிலாந்துடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. இந்தத் தொடர் செப்டம்பர் 16-ந்தேதி முடிவடைகிறது.
ஐபிஎல் 19-ந்தேதி தொடங்குகிறது. மூன்று நாட்களுக்குள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வீரர்கள் வந்து விடுவார்கள். தற்போது கொரோனா வைரஸ் காலம் என்பதால் ஐக்கிய அரபு அமீரகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
அவர்கள் ஐக்கிய அரபு அமீரகம் வந்த உடன் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். நெகட்டிவ் என வந்தால் தனிமைப்படுத்தப்பட்டு பின்னர் அந்தந்த அணியில் இணைவார்கள். இதற்கு குறைந்தது 10 நாட்கள் ஆகும்.
இதனால் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர், ஸ்மித், கம்மின்ஸ் போன்ற வீரர்களும், இங்கிலாந்தின் பட்லர், பேர்ஸ்டோவ், ஆர்சர் போன்ற வீரர்களும் முதல் வார போட்டிகளில் இடம் பெற வாய்ப்பில்லை எனக் கூறப்படுகிறது.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கில் 3-வது மற்றும் 4-வது இடம் பிடித்ததால் மான்செஸ்டர் யுனைடெட், செல்சி அணிகள் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாட தகுதி பெற்றன.
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் கடைசி லீக் ஆட்டங்கள் நேற்றிரவு நடைபெற்றன. மான்செஸ்டர் யுனைடெட், லெய்செஸ்டர் அணியை எதிர்கொண்டது. இதில் வெற்றி பெற்றால் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெறலாம் என்பதால் இரண்டு அணிகளும் வெற்றிக்காக போராடின.
ஆனால் மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என வெற்றி வெற்றி பெற்றது. ப்ரூனோ பெர்னாண்டஸ் 71-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டில் வாய்ப்பை கோலாக்கினார். இன்ஜுரிக்கான நேரத்தில் (90+8) லிங்கார்டு ஒரு கோல் அடிக்க மான்செஸ்டர் யுனைடெட் 2-0 என வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் யுனைடெ் 38 போட்டிகளில் முடிவில் 18 வெற்றி, 12 டிரா, 8 தோல்விகளுடன் 66 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தை பிடித்தது.

செல்சி வோல்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் செல்சி 2-0 என வெற்றி பெற்றது. மாசன் மவுன்ட் (45+1), ஆலிவர் ஜிராட் (45+4) கோல் அடித்தனர். செல்சி 38 ஆட்டங்களில் 20 வெற்றி, 6 டிரா, 12 தோல்விகள் மூலம் 66 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தை பிடித்துள்ளது. 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்த மான்செஸ்டர் யுனைடெட், செல்சி அணிகள் சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றன.
லெய்செஸ்டர் வெற்றி பெற்றிருந்தால் 4-வது இடத்தை பிடித்து சாம்பியன்ஸ் லீக் தொடருக்கு தகுதி பெற்றிருக்கும். அந்த வாய்ப்பை இழந்தது.
லிவர்பூல் 38 ஆட்டங்களில் 32 வெற்றி, தலா மூன்று டிரா மற்றும் தோல்வியுடன் 99 புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. மான்செஸ்டர் சிட்டி 26 வெற்றி, 3 டிரா, 9 தோல்விகளுடன் 81 புள்ளிகளை பெற்றி 2-வது இடத்தை பிடித்தது.
ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படும் நிலையில், இங்கிலாந்தில் பரிசோதனையாக ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் காட்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன. இங்கிலாந்தில் கடந்த 8-ந்தேதி மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் ரசிகர்களை அனுமதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக தெற்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் காட்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
இந்த போட்டியை பார்க்க ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்களின் பாதுகாப்பிற்காக இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஒரு குடும்பத்தில் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டனர். ஒரு குடும்பத்தினருக்கும் மற்ற குடும்பத்தினருக்கும் இடையில் இரண்டு இருக்கைகள் காலியாக விடப்பட்டன.
அக்டோபர் மாதம் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. அப்போது ரசிகர்களை அனுமதிப்பதற்காக தற்போது பரிசோதனை முறையில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுர்ரே அணியின் நிர்வாகத் தலைவர் ரிச்சார்ட் குட் கூறுகையில் ‘‘உறுப்பினர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் 10 ஆயிரம் போன் கால்கள் வந்தன. சூரியன் பிரகாசிக்க தொடங்கியுள்ளது. கிரிக்கெட் விளையாடப்படுகிறதுர். ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’’என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியம் என்னை தொழில்முறை வீரராக நடத்தவில்லை என்று ஆல்-ரவுண்டர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். ஒயிட் பால் கிரிக்கெட்டில் தனக்கென்று ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர்.
டி20 கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்ஸ் விளாசியவர். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்வதற்கும், 2011-ல் 50 ஓவர் உலக கோப்பையை வெல்வதற்கும் முக்கிய காரணமாக இருந்தார்.
இவர் திடீரென சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். பிசிசிஐ இவருக்கு பிரிவு உபசார தொடரைக் கூட நடத்தவில்லை. இந்நிலையில் பிசிசிஐ தன்னை தொழில்முறை வீரராக நடத்தவில்லை என்று யுவராஜ் சிங் தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘சிலருக்கு பிரிவு உபசாரம் கொடுக்கப்படும்போது, எனக்கு அது குறித்து முடிவு கூட எடுக்கப்படவில்லை. அந்த முடிவு பிசிசிஐ-யிடம்தான் உள்ளது. எனது கிரிக்கெட் வாழ்க்கையின் இறுதி காலத்தில் அவர்கள் என்னை தொழில்முறை கிரிக்கெட்டராக நடத்தவில்லை என்று உணர்ந்தேன்.
ஆனால், இந்தியாவுக்காக சிறப்பாக விளையாடி ஹர்பஜன் சிங், சேவாக், ஜாகீர் கான் போன்ற வீரர்களும் தவறாக நிர்வகிக்கப்பட்டார்கள். இது இந்திய கிரிக்கெட்டின் ஒரு பகுதி. நான் இதை இதற்கு முன் பார்த்துள்ளேன். அதனால் உண்மையிலேயே ஆச்சர்யப்படவில்லை.
வருங்காலத்தில் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடியவர்கள், குறிப்பான கடினமான காலத்தில் அணிக்கு கைக்கொடுத்தவர்களுக்கு, நீங்கள் கவுரவம் அளிக்கப்பட வேண்டும். கவுதம் கம்பிர் போன்ற இரண்டு உலககோப்பையை வாங்கிக் கொடுத்தவர்களுக்கு கொடுக்க வேண்டும். சுனில் கவாஸ்கருக்குப்பின் சேவாக் டெஸ்ட் போட்டியில் மிகப்பெரிய மேட்ச் வின்னராக இருந்தார். ஜாகீர் கான் 350 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். லட்சுமண்.... இதுபோன்று வீரர்கள்....’’ என்றார்.
இத்தாலியில் நடைபெற்று வரும் ‘சீரி ஏ’ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
இத்தாலி ‘சீரி ஏ’ கால்பந்து லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான யுவென்டஸ் சம்ப்டோரியா அணியை எதிர்கொண்டது. இதில் யுவென்டஸ் 2-0 என வெற்றி பெற்று ‘சீரி ஏ’ கோப்பையை 9-வது முறையாக தொடர்ச்சியாக வென்றுள்ளது.
முதல் 45-வது நிமிடம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. காயத்திற்கான நேரம் வழங்கப்பட்டது. அதன் 7-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். சீரி ஏ-வில் ரொனால்டா 32 போட்டிகளில் 31-வது கோல் அடித்துள்ளார்.
இதனால் யுவென்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் பெடரிகோ ஒரு கோல் அடிக்க 2-0 என யுவென்டஸ் வெற்றி பெற்றது.
இந்த கோப்பையை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்க அர்ப்பணிப்பதாக ரொனால்டோவும், யுவென்டஸ் அணியும் தெரிவித்துள்ளது.
யுவென்டஸ் 36 ஆட்டத்தில் 83 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. இன்டர் மிலன் 36 ஆட்டங்களில் 76 புள்ளிகளும், அட்லாண்டா 36 போட்டிகளில் 75 புள்ளிகள் பெற்றுள்ளது.
2012-ம் ஆண்டில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது என இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய பேட்மிண்டன் வீராங்கனையும், உலக சாம்பியனுமான பி.வி.சிந்து ‘ஆன்-லைன்’ கலந்துரையாடலில் பங்கேற்று பேசியதாவது:-
நான் விளையாடத் தொடங்கிய போது நன்றாகத் தான் ஆடினேன். ஆனால் சர்வதேச தரத்துக்கு இணையாக இல்லை. முதல் சுற்றில் தோற்பதும், தகுதி சுற்றுடன் வெளியேறுவதும் தொடர்ந்தது. அதன் பிறகு இன்னும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். 2012-ம் ஆண்டு சீனா மாஸ்டர்ஸ் போட்டியின் கால்இறுதி சுற்றில் அப்போதைய ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லீ சூய்ருயை வீழ்த்தினேன். அது தான் எனது பேட்மிண்டன் வாழ்க்கையில் திருப்புமுனை என்று சொல்வேன். அதன் பிறகு மேலும் கூடுதலாக பயிற்சிகளில் ஈடுபட்டு ஆட்டத்திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறேன்.
2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கை முடித்துக் கொண்டு ஐதராபாத் திரும்பிய போது ரசிகர் ஒருவர் தனது ஒரு மாத சம்பளத்தை பரிசாக வழங்கினார். அந்த நிகழ்வு மனதை ஆழமாக தொட்டு விட்டது. இப்போது கூட அதை நினைத்து பார்ப்பேன். அதன் பிறகு அந்த ரசிகருக்கு கடிதம் எழுதியதுடன், கொஞ்சம் பணமும் அனுப்பி வைத்தேன்.
முன்பு எந்த நேரமும் பேட்மிண்டனிலேயே கவனம் இருந்ததால் நேரம் கிடைப்பதில்லை. இப்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே இருப்பதால் சில புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு வருகிறேன். சமையல் செய்கிறேன். அடிக்கடி ஓவியமும் வரைகிறேன்.
இவ்வாறு சிந்து கூறினார்.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்சுக்கு நிகர் யாரும் இல்லை என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆல்-ரவுண்டராக பிரமாதப்படுத்தி வருகிறார். அவருடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு இப்போது எந்த வீரரும் இந்தியாவில் இல்லை. ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் தனித்துவமாக திகழ்கிறார். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே எந்த வீரரும் அவருக்கு நெருக்கமாக கூட வரவில்லை. அவரை போன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் எந்த அணிக்கும் தேவையாகும்.
பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறையிலும் அசத்துகிறார். ஸ்டோக்ஸ் போன்ற வீரர் அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கேப்டனின் கனவாக இருக்கும். நிறைய வீரர்கள் அவரை போன்று விளையாட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலக கிரிக்கெட் அரங்கில் இப்போது யாரும் இல்லை.
இவ்வாறு கம்பீர் கூறினார்.
ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கரா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் கவுன்லின் (ஐ.சி.சி.) தலைவராக கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றிய இந்தியாவைச் சேர்ந்த ஷசாங் மனோகரின் பதவி காலம் சமீபத்தில் முடிவடைந்ததால், அந்த பொறுப்பில் இருந்து விலகினார். புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை துணைத்தலைவர் இம்ரான் கவாஜா (ஹாங்காங்) இடைக்கால தலைவராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஐ.சி.சி.யின் தலைவர் பதவிக்கான போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய சேர்மன் காலின் கிராவ்ஸ் முன்னணியில் இருக்கிறார்.
அதே சமயம் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலியை ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு நிறுத்தினால் நன்றாக இருக்கும் என்று தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய இயக்குனர் கிரேமி சுமித் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கராவும் கங்குலிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக சங்கக்கரா அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு கங்குலி பொருத்தமானவராக இருப்பார் என்று கருதுகிறேன். நான் கங்குலியின் தீவிரமான ரசிகர். ஒரு கிரிக்கெட் வீரர் என்பதற்காக மட்டுமல்ல. அவர் கிரிக்கெட் அறிவு மிக்கவர். புத்திசாலித்தனமானவர். கிரிக்கெட் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் எண்ணம் அவரது மனதில் உண்டு.
ஐ.சி.சி. தலைவர் பொறுப்புக்கு வரும் போது சர்வதேச அளவில் முற்றிலும் பரந்த மனப்பான்மை கொண்டவராக இருக்க வேண்டும். நாம் எங்கிருந்து வந்திருக்கிறோம், இந்தியரா, இலங்கை நாட்டவரா, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவரா என்ற எண்ணம் இல்லாமல் பாரபட்சமின்றி செயல்பட வேண்டியது மிகவும் முக்கியம். நான் ஒரு கிரிக்கெட் வீரர். கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கும், கிரிக்கெட் விளையாடும் அணிகளின் நலனுக்கும் என்ன தேவையோ அதை செய்வேன் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அது எந்த நிலையிலும் மாறக்கூடாது.
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பே கங்குலியின் செயல்பாட்டை நான் பார்த்து இருக்கிறேன். உலக அளவில் கிரிக்கெட் வீரர்களுடன் உறவை எப்படி வலுப்படுத்தினார் என்பதை அவர் எம்.சி.சி. கமிட்டி உறுப்பினராக இருந்த போது கவனித்துள்ளேன். எனவே ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு அவர் மிகவும் கச்சிதமாக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. அவர் ஐ.சி.சி. தலைவராக பதவி ஏற்றால், நிச்சயம் ஆரோக்கியமான மாற்றங்கள் நிகழும் என்று நம்புகிறேன்’ என்றார்.
இதற்கிடையே, சவுரவ் கங்குலி 2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டி வரை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நீடிக்க வேண்டும் என்று இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
‘கங்குலியும், அவரது சகாக்களும் இந்திய கிரிக்கெட் வாரிய பொறுப்பில் 2023-ம் ஆண்டு வரை தொடர வேண்டும் என்பது எனது தனிப்பட்ட விருப்பமாகும். ஆனால் இந்த விஷயத்தில் சுப்ரீம் கோர்ட்டு என்ன முடிவு செய்கிறது என்பதை பார்க்கலாம். இந்திய கிரிக்கெட் மோசமான நிலையில் தத்தளித்த போது அதை தூக்கி நிறுத்தி, ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொண்டு வந்தவர் கங்குலி. இதே போல் கிரிக்கெட் வாரிய நிர்வாகத்திலும் திறம்பட பணியாற்றுவார் என்று நம்புகிறேன்’ என்றும் கவாஸ்கர் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் விளாசி டிக்ளேர் செய்ய, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. ஜேசன் ஹோல்டர் 24 ரன்னுடனும், டவ்ரிச் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜேசன் ஹோல்டர் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். டவ்ரிச் 37 ரன்னில் வெளியே வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார்.
பின்னர் 172 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிப்லி 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ரோரி பேர்ன்ஸ் 90 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 56 பந்தில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் இன்னிங்சில் 172 ரன்களுடன் மொத்தமாக இங்கிலாந்து 398 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
இரண்டு நாட்களுக்கு மேல் மீதம் இருந்தாலும் வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்டுகளை பாதுகாப்பது மிகமிக கடினம்.
399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 10 ரன்கள் அடிப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் சர்ச்சைக்குரிய சச்சின் தெண்டுல்கர் அவுட் குறித்து பேசிய என்ன? என்பதை எம்எஸ்கே பிரசாத் வெளிப்படுத்தியுள்ளார்.
கிரிக்கெட்டில் நடுவர்கள் கொடுக்கும் சில அவுட் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தும். அந்த வகையில் அமைந்ததுதான் டேரில் ஹார்பர் சச்சின் தெண்டுல்கருக்கு கொடுத்த எல்.பி.டபிள்யூ. அவுட்.
1999-ம் ஆண்டு ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடைபெற்றது. இதில் மெக்ராத் வீசிய பந்து பவுன்சராக செல்லும் என்று நினைத்து சச்சின் தெண்டுல்கர் குனிந்து பந்தை விட விரும்புவார். ஆனால் பந்து தாழ்வாக வந்து சச்சின் தெண்டுல்கரின் தோள்பட்டையை தாக்கும்.
மெக்ராத் அப்பீல் கேட்க டேரில் ஹார்பர் அவுட் கொடுத்து விடுவார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமீபத்தில் டேரில் ஹார்பர் பேட்டி ஒன்றில், ‘‘சச்சின் தெண்டுல்கருக்கு நான் கொடுத்த அவுட் சரியான முடிவு என்று நம்புகிறேன். அந்த அவுட் கொடுத்ததை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். 2018-ல் எம்எஸ்கே பிரசாத்தை சந்தித்தேன். அப்போது சச்சின் தெண்டுல்கர் அவுட்டை ஏற்றுக் கொண்டதாக கூறியதாக ஹார்பர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் டேரில் ஹார்பரிடம் நான் அப்படி கூறவில்லை என்று எம்எஸ்கே பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ்கே பிரசாத் கூறுகையில் ‘‘டேரில் இந்த முடிவைப் பற்றிய குற்ற உணர்வை மிக நீண்ட காலமாக சுமந்து கொண்டிருந்தார். 2018 இந்தியா - ஆஸ்திரேலியா தொடரின்போது டேரில் ஹார்பர் என்னை உணவு இடைவேளையின்போது சந்தித்தார். அப்போது மிகப்பெரிய சர்ச்சைக்குரிய அவுட் குறித்து சச்சின் எவ்வாறு உணர்ந்தார் என்று கேட்டார்.

சரியோ அல்லது தவறோ எதுவாக இருந்தாலும், நடுவரிடம் கேள்வி கேட்கும் நபர் சச்சின் தெண்டுல்கர் அல்ல என்று டேரில் ஹார்பரிடம் நான் கூறினேன். அதனால்தான் அவர் ரோல் மாடலாக மாறியுள்ளார். இந்திய கிரிக்கெட் கடவுளாக போற்றப்படுகிறார் என்றேன். தீர்ப்பு கொடுத்தபோது ஒட்டுமொத்த அணியும் அதிர்ச்சியில் உறைந்தது’’ என்றார்.