என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற ஐந்தாம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருந்தன. அதன்பின் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு மீண்டும் சர்வதேச போட்டியை நடத்த ஏற்பாடு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சம்மதம் தெரிவித்தது. அதன்படி கடந்த 8-ந்தேதி இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி தொடங்கியது.
கொரோனா காலத்திற்குப்பிறகு சர்வதேச அளவில் தொடங்கிய முதல் போட்டி இதுவாகும். நேற்றுடன் முடிவடைந்த இந்த தொடரில் இங்கிலாந்து 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.
இதற்கிடையில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிறது ஐந்தாம் தேதி மான்செஸ்டரில் தொடங்குகிறது.
இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி இறுதி செய்யப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. அசார் அலி (கேப்டன்), 2. பாபர் அசாம் (துணைக் கேப்டன்), 3. அபித் அலி, 4. ஆசாத் ஷபிக், 5. பஹீம் அஷ்ரஃப், 6. பவத் அலாம், 7. இமாம் உல் ஹக், 8. இம்ரான் கான், 9. காஷிஃப் பாத்தி, 10. முகமது அப்பாஸ், 11. முகமது ரிஸ்வான், 12. நசீம் ஷா, 13. சர்பராஸ் அகமது, 14. ஷதாப் கான், 15. ஷாஹீன் ஷா அப்ரிடி, 16. ஷான் மசூட், 17. சோஹைல் கான், 18. உஸ்மான் ஷின்வாரி, 19. வஹாப் ரியாஸ், 20. யாசீர் ஷா.
இவர்களுடன் டி20 அணிக்கான 9 வீரர்கள் உள்ளனர். இவர்கள் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம் பெறமாட்டார்கள். ஆனால் பயிற்சி மேற்கொள்வார்கள்.
இந்தத் தொடருக்காக கடந்த மாதம் 28-ந்தேதி பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்றடைந்தது. 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
2-வது டெஸ்ட் ஆகஸ்ட் 13-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 21-ந்தேதியும் தொடங்குகிறது. டி20 போட்டிகள் ஆகஸ்ட் 28-ந்தேதி, 30-ந்தேதி மற்றும் செப்டம்பர் 1-ந்தேதிகள் நடக்கிறது.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்டூவர்ட் பிராட். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை வெல்ல 34 வயதான இவர் காரணமாக திகழ்ந்தார்.
முதல் டெஸ்ட்டில் நீக்கப்ப்டட ஸ்டூவர்ட் பிராட் கடைசி இரண்டு டெஸ்டிலும் ஆடினார். இந்த 2 டெஸ்டிலும் சேர்த்து அவர் மொத்தம் 16 விக்கெட் கைபற்றினார். கடைசி டெஸ்டில் மட்டும் அதாவது 3-வது டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தினார்.
ஸ்டூவர்ட் பிராட் நேற்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வைட் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
500 விக்கெட்டை (140 டெஸ்ட்) தொட்ட 2-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் பெற்றார். ஆண்டர்சன் 153 டெஸ்டில் விளையாடி 589 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.
உலக அளவில் இந்த சாதனையை தொட்ட 7-வது வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஆவார். முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
இந்த நிலையில் டெஸ்டில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய எனது சாதனையை ஸ்டூவர்ட் பிராட் முறியடிப்பார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் கூறி உள்ளார்.
இது தொடர்பாக 37 வயதான ஆண்டர்சன் கூறியதாவது:-
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தனித்துவம் பெற்று இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அவர் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி அனைவரது பாராட்டை பெற்று வருகிறார்.
500 விக்கெட்டை அவர் தொட்டது பாராட்டத்தக்கதாகும். தற்போது டெஸ்டில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து வீரராக நான் இருக்கிறேன். ஸ்டூவர்ட் என்னை கடந்து சென்று சாதனை படைப்பார் என்று நம்புகிறேன். அதிக விக்கெட் கைப்பற்றும் இங்கிலாந்து வீரர் என்ற சாதனை புரிய அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.
இவ்வாறு ஆண்டர்சன் கூறியுள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெற்ற 3-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸை 269 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 2-1 எனக் கைப்பற்றியது இங்கிலாந்து.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வந்தது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றிருந்ததால் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என களம் இறங்கின.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 369 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 172 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் விளையாடியது. அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்திருக்குமபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ரோரி பேர்ன்ஸ் 90 ரன்களும், சிப்லி 56 ரன்களும, ஜோ ரூட் 68 ரன்களும் (அவுட் இல்லை) எடுத்தனர்.
பின்னர் 399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களம் இறங்கியது. நேற்று முன்தினம் 3-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்திருந்தது.
நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்து செய்யப்பட்டது. இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஸ்டூவர்ட் பிராட் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோரின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் 2-வது இன்னிங்சில் 37.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 129 ரன்னில் சுருண்டது. இதனால் இஙகிலாந்து 269 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து தொடரை 2-1 எனக் கைப்பற்றியது. 2-வது இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் 4 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் ஐந்து விக்கெட்டும் வீழ்த்தினர்.
மான்செஸ்டர் டெஸ்டின் 2-வது இன்னிங்சில் பிராத்வைட்டை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500-வது விக்கெட்டுகள் வீழ்த்தி ஸ்டூவர்ட் பிராட் சாதனைப் படைத்துள்ளார்.
இங்கிலாந்தின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக ஜேம்ஸ் ஆண்டர்கன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் திகழ்ந்து வருகின்றனர். வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டார். இதனால் கடும் விமர்சனம் எழும்பியது. இங்கிலாந்து அணியும் தோல்வியடைந்தது.
இதனால் 2-வது போட்டியில் சேர்க்கப்பட்டார். ஸ்டூவர்ட் பிராட் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். இவரின் சிறப்பான பந்து வீச்சு மற்றும் பென் ஸ்டோக்ஸ்-ன் பேட்டிங்காலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் ஸ்டூவர்ட் பிராட் ஆறு விக்கெட் வீழ்த்தினார். 2-வது இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். நேற்றைய 4-வது நாள் ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டது.
இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் கிரேக் பிராத்வைட் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார்.
இந்த விக்கெட் மூலம் ஸ்டூவர்ட் பிராட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனைப் படைத்தார். ஏற்கனவே ஜேம்ஸ் ஆண்டர்சன் 500 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றிருந்தார். தற்போது ஸ்டூவர்ட் பிராட் 2-வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் 129 டெஸ்டில் இந்த சாதனையை எட்டிய நிலையில் ஸ்டூவர்ட் பிராட் 140 போட்டியில் எட்டியுள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவேன் அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவேன் என்று டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டி அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் அனில் கும்ப்ளே. அவருக்குப்பின் ஹர்பஜன் சிங் சிறந்த ஸ்பின்னராக விளங்கினார். அவரை பின்னுக்குத் தள்ளி அஸ்வின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார்.
அதிவேகமாக விக்கெட்டுக்கள் வீழ்த்தி பல சாதனைகள் படைத்துள்ளார். இந்திய மண்ணில் ஜாம்பவானாக திகழும் அஸ்வின், வெளிநாட்டு மண்ணில் சற்று தடுமாகிறார்.
இந்நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரைக்கும் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவேன் அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவேன். இந்த இரண்டில் ஒன்றுதான் நடந்துள்ளது என்று டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு குறித்து அஸ்வின் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘அணியில் இருந்து நீக்கப்படும்போது மனச்சோர்வும், ஏமாற்றமும் ஏற்படும். ஆனால், விளையாட்டில் இது ஒரு அங்கம். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு தற்போது ஸ்டூவர்ட் பிராட் அணியில் இருந்து நீக்கப்பட்டது. முதல் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு 2-வது போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
நானும் இதேபோன்ற சூழ்நிலைக்குள் சிக்கியுள்ளேன். ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்துவேன், அல்லது அணியில் இருந்து நீக்கப்படுவேன். ஆனால் எதிர்மறை எண்ணம் என் மனதிற்குள் காலூன்ற நான் அனுமதிக்கவில்லை’’ என்றார்.
2019 சிட்னியில் நடைபெற்ற முக்கியமான ஆட்டத்தில் அஸ்வினுக்கு இடம் கிடைக்கவில்லை. அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் தொடரின்போது வெளியில் இருந்தார். ஆனால் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய மணணில் சிறப்பாக விளையாடி விசாகப்பட்டினத்தில் ஏழு விக்கெட்டுகள் அள்ளினார்.
71 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அஸ்வின் 365 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
கங்குலியின் பிசிசிஐ தலைவர் பதவி 2023 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனும், முன்னாள் கேப்டனும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவருமான கங்குலி பிசிசிஐ தலைவராக உள்ளார். இவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஐசிசி-யின் விதிமுறைப்படி அவரது பதவிக்காலம் 9 மாதங்களே. இதனால் நேற்றுடன் அவரது பதவிகாலம் முடிவடைகிறது. அதன்பின் மீண்டும் பதவி பொறுப்பில் வருவதற்கு மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
இதனால், கங்குலி 2023 வரை பிசிசிஐ தலைவர் பதவியில் நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்று பிசிசிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதை விசாரணைக்கு கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது.
இந்நிலையில் பிசிசிஐ தலைவராக கங்குலி 2023 உலக கோப்பை வரை நீடிக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘பி.சி.சி.ஐ மற்றும் சில மாநில சங்கங்களின் பல வழக்குகளின் விசாரணையை ஒத்திவைப்பதாக எடுத்துள்ள உச்சநீதிமன்றத்தின் முடிவு இந்திய கிரிக்கெட்டை தடுமாறச் செய்துள்ளது. உறுதியாக கிரிக்கெட்டை விட முக்கியமான வழக்குகள் கோர்ட்டில் இருக்கும். ஆனால், இந்திய கிரிக்கெட் பிரியர்கள் இந்த முடிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
தனிப்பட்ட முறையில் கங்குலி மற்றும் அவரது அணியைச் சேர்ந்தவர்கள் 2023 உலக கோப்பை வரை பதவியில் இருப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆனால் கோர்ட் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பார்க்க வேண்டும்.
இந்திய அணியை இக்கட்டான நிலையில் இருந்தபோது, நல்ல நிலைக்கு கொண்டு வந்து கிரிக்கெட் ரசிகர்களிடம் நம்பிக்கையை மீண்டும் கொண்டு வந்தவர் கங்குலி. அதேபோல் கிரிக்கெட் நிர்வாகத்தையும் நல்ல நிலைமைக்கு கொண்டு வரும் திறமை அவரது அணியிடம் உள்ளது’’ என்றார்.
ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஆகஸ்ட் 2-ல் நடைபெற இருப்பதாக தகவல் வெளியான நிலையில், போட்டி அட்டவணை இறுதி வடிவம் பெற இருக்கிறது.
ஐபிஎல் 2020 சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விருப்ப கடிதத்தையும் இந்திய கிரிக்கெட் போர்டு எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டுக்கு அனுப்பி விட்டது. எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டும் அதை பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் ஆட்சி மன்றக்குழு கூட்டம் ஆகஸ்ட் 2-ந்தேதி நடைபெறும் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தக் கூட்டத்தில் ஐபிஎல் போட்டி அட்டவணை இறுதி செய்யப்படும் என்றும், அணிகள் எழுப்பியுள்ள சில கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிசிசிஐ வட்டார தகவல்களில் ‘‘அணியின் அனைத்து உரிமையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களிடம் எல்லா விசயங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படும். இதுகுறித்து தற்போது கருத்து கூற இயலாது. ஆனால், கூட்டத்தில் தொடர் குறித்து அதிகமான தெளிவு கிடைக்கும். ஐபிஎல் அணிகள் சில விசயங்கள் குறித்து கேள்விகள் எழுப்பியுளு்ளன. அது குறித்து விவாதிப்போம். அதில் இருந்து முன்னோக்கிச் செல்ல கவனம் செலுத்துவோம்’’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலையான இயக்க நடைமுறைகளுடன் தனிமைப்படுத்துதல் நடவடிக்கை குறித்து முக்கியமாக விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை பெற்றோம் என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இந்திய பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20-யின் இந்த வருடத்திற்கான தொடர் கொரோனா வைரஸ் தொற்றால் ஒத்திவைக்கப்பட்டது. அப்போதிலிருந்தே ஐக்கிய அரபு அமீரகம் ஐபிஎல் தொடரை நாங்கள் நடத்த தயாராக இருக்கிறோம் என்று கூறி வந்தது.
ஆனால் ஐபிஎல் போட்டியை இந்தியாவில் நடத்த விரும்புகிறோம், கடைசி முயற்சிதான் வெளிநாட்டு மண்ணில் நடத்துவது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்திருந்தார்.
இருந்தாலும் ஐபிஎல் தொடரை நடத்துவதற்காக தாங்களாகவே தயார்படுத்திக் கொண்டு தயார் நிலையில் இருக்கிறோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்திருந்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டதும், செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து நவம்பர் 8-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 சீசன் நடைபெறும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்திருந்தார்.
ஆனால், இந்தியாவிடம் இருந்து போட்டியை நடத்துவதற்கான அதிகாரப்பூர்வ தகவலை நாங்கள் இன்னும் பெறவில்லை என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்திருந்தது. இதனால் உடனடியாக பிசிசிஐ அதற்கான வேலைகளை துரிதப்படுத்தியது.
இந்நிலையில் இந்தியாவிடம் இருந்து ஐபிஎல் போட்டியை நடத்துவதற்கான விருப்பக் கடிதத்தை பெற்றுள்ளோம் என்று எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுவது இதன்மூலம் உறுதியாகிவிட்டதால், அதற்கான வேலைகளை செய்ய எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு தயாராகி உள்ளது.
போட்டிக்கான ஏற்பாடு குறித்து ஐக்கிய அரபு எமீரேட்ஸ் கிரிக்கெட் போர்டின் பொது செயலாளர் உஸ்மானி கூறுகையில் ‘‘உலகின் மிக உற்சாகமான, பிரபலமான மற்றும் பணக்கார போட்டியை நடத்துவதற்கான செயல்பாடுகள் மற்றும் தளவாடங்களை பாதிக்கும் பல காரணிகள் உள்ளன.
மக்களை நகர்த்துவது, பொருட்களை கொண்டு செல்வது போன்ற முக்கியமான வேலைகள் உள்ளன. நாங்கள் வல்லுனர்களை கொண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியுள்ளது.
அபுதாபி, துபாய், சார்ஜா ஸ்போர்ட்ஸ் கவுன்சில், சுற்றுலாத்துறை, சுகாதாரத்துறை, போலீஸ் என அனைத்து துறைகளுடனும் ஒருங்கிணைந்து வேலை செய்து, சிறப்பாக போட்டியை நடத்த வேண்டும்’’ என்றார்.
கரீபியன் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல், பிக் பாஷ் டி20 லீக்கை போன்று வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு கரீபியர் பிரிமீயர் லீக் என்ற பெயரில் ஆண்டுதோறும் டி20 லீக் தொடரை நடத்தி வருகிறது.
இந்த வருடத்திற்கான டி20 லீக் தொடர் ஆகஸ்ட் 18-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 10-ந்தேதி வரை நடைபெறும் என வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஆறு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் 33 போட்டிகள் நடைபெற இருக்கிறது. தாராபோவில் உள்ள பிரையன் லாரா கிரிக்கெட் அகாடமி, போர்ட் ஆஃப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் ஆகிய இரண்டு மைதானங்களில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
அரையிறுதி போட்டிகள், இறுதி போட்டி லாரா கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடைபெறும். முதல் ஆட்டத்தில் கடந்த ஆண்டு 2-வது இடம் பிடித்தது கயானா அமேசான் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 2-வது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - செயின் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதுகின்றன.
போட்டிகள் அனைத்தும் ரசிகர்கள் இன்று பயோ-செக்யூரிட்டி சூழ்நிலையில் நடத்தப்பட இருக்கிறது. கொரோன வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கை வழிகாட்டு நெறிமுறைகள் கடுமையான வகயைில் பின்பற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குப்பின் நடைபெறும் முதல் டி20 லீக் இதுவாகும்.
இங்கிலாந்து தொடரில் இருந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விலகியது தொடர்பாக வாரிய உயர் கமிட்டி உறுப்பினருமான சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவித்தார்
புதுடெல்லி:
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இந்த மாதம் மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணியுடன் விளையாட திட்டமிட்டு இருந்தது. அத்துடன் அங்கு இந்தியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் இடையிலான பெண்கள் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் காரணமாக இங்கிலாந்து போட்டி தொடரில் இருந்து இந்திய பெண்கள் அணி விலகியது. இதனால் 3 நாடுகள் போட்டியும் ரத்து செய்யப்பட்டது.
இதனால் இந்திய பெண்கள் அணியின் விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் அலட்சியமாக நடந்து கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நியூசிலாந்தில் பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இந்திய பெண்கள் அணி அந்த போட்டிக்கு தயாராகுவதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உரிய கவனம் செலுத்தாமல் இருப்பதாக கிளம்பி இருக்கும் புகார் குறித்து இந்திய பெண்கள் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய உயர் கமிட்டி உறுப்பினருமான சாந்தா ரங்கசாமி கருத்து தெரிவிக்கையில், ‘இங்கிலாந்து தொடரில் இருந்து இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி விலகியதற்கு அலட்சியம் காரணம் கிடையாது. வீராங்கனைகள் போட்டிக்கான உடல் தகுதியை எட்ட குறைந்தபட்சம் 6 வார காலமாவது பயிற்சி பெற வேண்டியது அவசியமானதாகும். நமது நாட்டின் பெரும் பகுதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் தற்போது கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம் நடத்துவது என்பது முடியாத காரியம். அத்துடன் இங்கிலாந்தில் 14 நாட்கள் வீராங்கனைகள் தனிமைப்படுத்தப்பட வேண்டும். கொரோனா தாக்கத்தால் உலக கிரிக்கெட் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அதிலும் பெண்கள் கிரிக்கெட் மிகவும் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
இயற்கை கூட பெண்கள் கிரிக்கெட்டுக்கு எதிராக சதி செய்வது போல் தான் தெரிகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு இருக்கிறது. அத்துடன் ஐ.பி.எல். போட்டி நடைபெறும் சமயத்தில் தான் பிக்பாஷ் பெண்கள் கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அரங்கேறுகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியின் போது பெண்கள் கண்காட்சி போட்டி நடைபெறுமா? என்பது தெரியவில்லை.
ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பார்க்க வேண்டும். அடுத்த ஆண்டு நடைபெறும் பெண்கள் உலக கோப்பை போட்டிக்கு தயாராக இங்கிலாந்து தொடர் முக்கியமானதாகும். கொரோனா பாதிப்பால் தற்போது நிலவும் சூழ்நிலையில் பெண்கள் கிரிக்கெட் மீதான இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஈடுபாடு குறித்து சந்தேகம் கொள்ளக்கூடாது. தற்போது எந்த முடிவுக்கும் வராமல் நிலைமை சீராகும் வரை காத்து இருக்க வேண்டும்’ என்று கூறினார்.

2023-ம் ஆண்டு உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று ஐ.சி.சி. அறிவித்தது.
துபாய்:
13-வது ஒருநாள் (50 ஓவர்) உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2023-ம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒருநாள் சூப்பர் லீக் என்ற பெயரில் கணக்கிடப்படும் தொடரில் முதல் 8 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக தகுதி பெறும். இந்த போட்டி தொடரில் முழு உறுப்பினர்களான இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், ஜிம்பாப்வே மற்றும் 2015-17ம் ஆண்டில் நடந்த உலக சூப்பர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற நெதர்லாந்து ஆகிய 13 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் தலா 4 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட வேண்டும். ஒவ்வொரு தொடரிலும் 3 ஒருநாள் ஆட்டங்கள் இடம் பெறும். இதன்படி ஒரு அணி மொத்தம் 24 ஒருநாள் போட்டியில் விளையாடும். ஒவ்வொரு வெற்றிக்கும் 10 புள்ளியும், கைவிடப்பட்ட ஆட்டம், முடிவு இல்லை மற்றும் ‘டை‘யில் முடிந்த ஆட்டத்துக்கு தலா 5 புள்ளியும் வழங்கப்படும். இந்த போட்டி தொடரின் முடிவில் முதல் 7 இடங்களை பிடிக்கும் அணிகள் மற்றும் போட்டியை நடத்தும் இந்தியா ஆகியவை நேரடியாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெறும். சூப்பர் லீக் போட்டியில் தகுதி இலக்கை எட்டாத 5 அணிகள், 5 அசோசியேட் நாட்டு அணிகளுடன் இணைந்து உலக கோப்பை தகுதி சுற்று போட்டியில் மோத வேண்டும். இதில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் உலக கோப்பை போட்டியின் எஞ்சிய 2 தகுதிக்கான இடங்களை தனதாக்கும்.
2023-ம் ஆண்டு உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் ஒருநாள் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த மே மாதம் தொடங்க முடிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த போட்டியை தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் உலக கோப்பை தகுதிக்கான ஒருநாள் சூப்பர் லீக் போட்டி வருகிற 30-ந் தேதி தொடங்கும் என்று (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் சவுதம்டனில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் இருந்து சூப்பர் லீக் போட்டி ஆரம்பமாகிறது என்றும் எஞ்சிய போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என்றும் ஐ.சி.சி. தெரிவித்துள்ளது. இந்த ஒருநாள் போட்டி தொடரில் இருந்து நோ-பாலை 3-வது நடுவர் கண்காணிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி வரும் ஒருநாள் ஆட்டங்களின் முடிவுகள் உலக கோப்பை போட்டிக்கு தகுதியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும் என்பதால் வரும் ஒருநாள் போட்டி தொடர்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
உலக கோப்பை தகுதிக்கான சூப்பர் லீக் போட்டி தொடரில் அயர்லாந்துக்கு எதிராக விளையாட போகும் இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த முறை உள்ளூரில் நடந்த உலக கோப்பை போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை சொந்தமாக்கினோம். அடுத்த உலக கோப்பை போட்டிக்கான பயணத்தை சொந்த மண்ணில் தொடங்குவது அருமையானதாகும். ஒயிட்பால் (ஒருநாள் மற்றும் 20 ஓவர்) கிரிக்கெட் போட்டி தொடங்குவதை கண்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன். நாங்கள் சவாலை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம். அயர்லாந்து அணி தனக்குரிய நாளில் எந்த அணியையும் வீழ்த்தக்கூடியதாகும்’ என்றார்.
அயர்லாந்து அணியின் கேப்டன் ஆண்ட்ரூ பால்பிர்னி கூறுகையில், ‘உலக கோப்பையை வென்ற ஒரு ஆண்டு காலத்தில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது என்பது பெரிய சவாலாகும். இந்த போட்டிக்கு நன்றாகவே தயாராகி இருக்கிறோம். சவாலான இந்த தருணத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டி நிலையாக திரும்பும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மான்செஸ்டர் டெஸ்டின் 4-வது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் தடைபட்டது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார்.
பின்னர் 172 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களான ரோரி பேர்ன்ஸ், டொமினிக் சிப்லி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சிப்லி 56 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து கேப்டன் ஜோ ரூட் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ரோரி பேர்ன்ஸ் 90 ரன்னில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்த நிலையில் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஜோ ரூட் 56 பந்தில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் இன்னிங்சில் 172 ரன்களுடன் மொத்தமாக இங்கிலாந்து 398 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
399 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் நேற்றைய 3-வது நாள் ஆட்ட 10 ரன்கள் அடிப்பதற்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. ஷாய் ஹோப் 4 ரன்னுடனும், கிரேக் பிராத்வைட் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது. இன்றைக்குள் 8 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை 2-1 எனக் கைப்பற்றி விடலாம் என்று இங்கிலாந்து எண்ணியிருந்தது.
ஆனால் இன்று காலையில் இருந்தே மழை பெய்தது. இதனால் போட்டியை தொடங்குவதற்கான சாத்தியக்கூறு இல்லாமல் போனது. இதனால் நடுவர்கள் 4-வது நாள் ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தனர்.
நாளையும் இதுபோன்று மழை பெய்தால் இங்கிலாந்தின் வெற்றிக் கனவு தகர்ந்துவிடும்.