என் மலர்

  செய்திகள்

  ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்
  X
  ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட்

  எனது சாதனையை பிராட் முறியடிப்பார்: ஜேம்ஸ் ஆண்டர்சன் சொல்கிறார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இங்கிலாந்து அணியின் முன்னணி வேகபந்து வீச்சாளர்களில் ஒருவர் ஸ்டூவர்ட் பிராட். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை வெல்ல 34 வயதான இவர் காரணமாக திகழ்ந்தார்.
  முதல் டெஸ்ட்டில் நீக்கப்ப்டட ஸ்டூவர்ட் பிராட் கடைசி இரண்டு டெஸ்டிலும் ஆடினார். இந்த 2 டெஸ்டிலும் சேர்த்து அவர் மொத்தம் 16 விக்கெட் கைபற்றினார். கடைசி டெஸ்டில் மட்டும் அதாவது 3-வது டெஸ்டில் 10 விக்கெட் வீழ்த்தினார்.

  ஸ்டூவர்ட் பிராட் நேற்று வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராத்வைட் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்தார்.
   500 விக்கெட்டை (140 டெஸ்ட்) தொட்ட 2-வது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஸ்டூவர்ட் பிராட் பெற்றார்.  ஆண்டர்சன் 153 டெஸ்டில் விளையாடி 589 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.
   உலக அளவில் இந்த சாதனையை தொட்ட 7-வது வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஆவார். முரளீதரன் (இலங்கை) 800 விக்கெட் வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.

  இந்த நிலையில் டெஸ்டில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய எனது சாதனையை ஸ்டூவர்ட் பிராட் முறியடிப்பார் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் கூறி உள்ளார்.

  இது தொடர்பாக 37 வயதான ஆண்டர்சன் கூறியதாவது:-

  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் ஸ்டூவர்ட் பிராட்டின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. தனித்துவம் பெற்று இருந்தது. கடந்த சில ஆண்டுகளாக அவர் மிகவும் நேர்த்தியாக பந்து வீசி அனைவரது பாராட்டை பெற்று வருகிறார்.

  500 விக்கெட்டை அவர் தொட்டது பாராட்டத்தக்கதாகும். தற்போது டெஸ்டில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய இங்கிலாந்து வீரராக நான் இருக்கிறேன். ஸ்டூவர்ட் என்னை கடந்து சென்று சாதனை படைப்பார் என்று  நம்புகிறேன். அதிக விக்கெட் கைப்பற்றும் இங்கிலாந்து வீரர் என்ற சாதனை புரிய அவருக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

  இவ்வாறு ஆண்டர்சன் கூறியுள்ளார்.
  Next Story
  ×