search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள்
    X
    கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர்கள்

    இங்கிலாந்தில் ரசிகர்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட விளையாட்டு போட்டி

    ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடத்தப்படும் நிலையில், இங்கிலாந்தில் பரிசோதனையாக ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் காட்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் விளையாட்டு போட்டிகள் நிறுத்தப்பட்டன. இங்கிலாந்தில் கடந்த 8-ந்தேதி மீண்டும் கிரிக்கெட் போட்டி தொடங்கப்பட்டது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான டெஸ்ட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் ரசிகர்களை அனுமதிக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாக தெற்கு லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் காட்சி கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

    இந்த போட்டியை பார்க்க ஆயிரம் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்களின் பாதுகாப்பிற்காக இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டன. ஒரு குடும்பத்தில் ஆறு பேர் அனுமதிக்கப்பட்டனர். ஒரு குடும்பத்தினருக்கும் மற்ற குடும்பத்தினருக்கும் இடையில் இரண்டு இருக்கைகள் காலியாக விடப்பட்டன.

    அக்டோபர் மாதம் கவுன்ட்டி கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட இருக்கின்றன. அப்போது ரசிகர்களை அனுமதிப்பதற்காக தற்போது பரிசோதனை முறையில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    சுர்ரே அணியின் நிர்வாகத் தலைவர் ரிச்சார்ட் குட் கூறுகையில் ‘‘உறுப்பினர்களுக்கு டிக்கெட் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதும் 10 ஆயிரம் போன் கால்கள் வந்தன. சூரியன் பிரகாசிக்க தொடங்கியுள்ளது. கிரிக்கெட் விளையாடப்படுகிறதுர். ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்’’என்றார்.
    Next Story
    ×