என் மலர்

  செய்திகள்

  யுவென்டஸ் அணி வீரர்கள்
  X
  யுவென்டஸ் அணி வீரர்கள்

  தொடர்ச்சியாக 9-வது முறை ‘சீரி ஏ’ கோப்பையை வென்றது யுவென்ட்ஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இத்தாலியில் நடைபெற்று வரும் ‘சீரி ஏ’ கால்பந்து லீக்கில் யுவென்டஸ் அணி 9-வது முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
  இத்தாலி ‘சீரி ஏ’ கால்பந்து லீக்கில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான யுவென்டஸ் சம்ப்டோரியா அணியை எதிர்கொண்டது. இதில் யுவென்டஸ் 2-0 என வெற்றி பெற்று ‘சீரி ஏ’ கோப்பையை 9-வது முறையாக தொடர்ச்சியாக வென்றுள்ளது.

  முதல் 45-வது நிமிடம் முடியும் வரை இரு அணி வீரர்களும் கோல் அடிக்கவில்லை. காயத்திற்கான நேரம் வழங்கப்பட்டது. அதன் 7-வது நிமிடத்தில் ரொனால்டோ கோல் அடித்தார். சீரி ஏ-வில் ரொனால்டா 32 போட்டிகளில் 31-வது கோல் அடித்துள்ளார்.

  இதனால் யுவென்டஸ் 1-0 என முன்னிலைப் பெற்றிருந்தது. 2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் பெடரிகோ ஒரு கோல் அடிக்க 2-0 என யுவென்டஸ் வெற்றி பெற்றது.

  இந்த கோப்பையை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்க அர்ப்பணிப்பதாக ரொனால்டோவும், யுவென்டஸ் அணியும் தெரிவித்துள்ளது.

  யுவென்டஸ் 36 ஆட்டத்தில் 83 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது. இன்டர் மிலன் 36 ஆட்டங்களில் 76 புள்ளிகளும், அட்லாண்டா 36 போட்டிகளில் 75 புள்ளிகள் பெற்றுள்ளது.
  Next Story
  ×