என் மலர்

  செய்திகள்

  ஸ்டூவர்ட் பிராட்
  X
  ஸ்டூவர்ட் பிராட்

  மான்செஸ்டர் டெஸ்ட்: ஸ்டூவர்ட் பிராட் அபாரம்- வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட் வீழ்த்த மான்செஸ்டர் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது.
  இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் மான்செஸ்டர் எமிரேட்ஸ் ஓல்டு டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது.

  முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 369 ரன்கள் குவித்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 6 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. ஜேசன் ஹோல்டர் 24 ரன்னுடனும், டவ்ரிச் 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

  பவன்சர் பந்தை எதிர்கொள்ள திணறிய டவ்ரிச்

  இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோசன் ஹோல்டர் 46 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டூவர்ட் பிராட் பந்தில் ஆட்டமிழந்தார். டவ்ரிச் 37 ரன்னில் வெளியே வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 197 ரன்னில் சுருண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஸ்டூவர்ட் பிராட் 6 விக்கெட்டுகள் அள்ளினார்.

  பின்னர் 172 ரன்கள் முன்னிலைப் பெற்ற நிலையில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.
  Next Story
  ×