search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஷாகிப் அல் ஹசன்
    X
    ஷாகிப் அல் ஹசன்

    எனக்கு நடந்ததில் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்: ஷாகிப் அல் ஹசன் சொல்கிறார்

    எனக்கு நடந்ததில் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஒரு வருட தடையில் இருக்கும் ஆல்-ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
    மேட்ச்-பிக்சிங் தொடர்பாக சூதாட்டக்காரர்கள் அணுகியதை மறைத்ததாக ஐசிசி வங்காளதேச அணியின் நட்சத்திர  ஆல்-ரவுண்டராக ஷாகிப்-அல்-ஹசனுக்கு இரண்டாடுகள் தடைவிதிக்கப்பட்டது.

    2018-ல் இருந்து தடைக்காலம் அமலுக்கு வந்ததால் வரும் அக்டோபர் மாதத்துடன் அவரது தடைக்காமல் முடிவுடைய இருக்கிறது.

    இந்நிலையில் ஷாகிப் அல் ஹசன் இதுகுறித்து கூறுகையில் ‘‘நீங்கள் மக்களிடம் பொய் சொல்ல முடியாது. மாறுபட்ட விசயமாக நடிக்கவும் முடியாது. நடந்தது நடந்து விட்டது. மக்கள் தவறுகளுக்கு உள்ளாக்கப்படுவார்கள். 100 சதவீதம் சரியாக இருக்க முடியாது. ஆனால், அந்த தவறுகளில் இருந்து எப்படி வெளியே வருகிறோம் என்பது முக்கியமான விசயம். இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள் என்று மற்றவர்களிடம் சொல்ல முடியும். அவர்கள் ஒருபோதும் தவறான பாதையை தேர்ந்தெடுக்கக்கூடாது என்பதை சொல்ல வேண்டும்.

    யாராவது ஒருவருக்கு அப்படி நடந்திருந்தால், அவரிடம் இருந்து நான் பாடம் கற்றுக் கொள்ளனும். ஆனால், எனக்கு நடந்துள்ளது. என்னிடம் இருந்து மற்றவர்கள் பாடம் கற்றுக்கொள்ள முடியும். முதல் நாளில் இருந்தே நேர்மையாக இருக்க விரும்பினேன். என்னிடம் கேள்விகள் கேட்கும்போது அவர்களிடம் இருந்து நான் எதையும் மறைக்கவில்லை. 

    நான் தவறை உருவாக்கிவிட்டேன். என்னைப் போன்ற வீரர்களுக்கு நடக்கக்கூடாது. இதற்கான நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதில் இருந்து கடந்து செல்ல விரும்புகிறேன். ஒவ்வொருவரும் இதில் இருந்த பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். தவறுகள் செய்யக்கூடாது என்று விரும்பிறேன’’ என்றார்.
    Next Story
    ×