search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெற்றிக் கோப்பையுடன் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள்
    X
    வெற்றிக் கோப்பையுடன் ரியல் மாட்ரிட் அணி வீரர்கள்

    லா லிகா கோப்பையை 34-வது முறையாக வென்றது ரியல் மாட்ரிட்: பார்சிலோனா ஏமாற்றம்

    பென்ஜிமா இரண்டு கோல்கள் அடிக்க ரியல் மாட்ரிட் வில்லாரியல் அணியை 2-1 என வீழ்த்தி 34-வது முறையாக லா லிகா சாம்பியன் பட்டம் வென்றது.
    லா லிகா கால்பந்து லீக் ஆட்டத்தில் கொரோனா வைரசால் போட்டி நிறுத்தப்பட்டபோது பார்சிலோனா முன்னிலை வகித்தது. கொரோனா தொற்று குறைந்த பின் மீண்டும் போட்டிகள் தொடங்கின. அப்போது ரியல் மாட்ரிட் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடர் வெற்றியால் பார்சிலோனா அணியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்திற்கு முன்னேறியது.

    ரியல் மாட்ரிட் அணி 35 போட்டிகளில் முடிவில் 80 புள்ளிகள் பெற்றிருந்தது. பார்சிலோனா 36 போட்டிகளில் 79 புள்ளிகள் பெற்றிருந்தது. இதனால் எந்த அணி முதல் இடம் பிடிக்கும் என்பதில் பரபரப்பு தொற்றியது.

    ஆனால் 36-வது போட்டியில் ரியல் மாட்ரிட் வெற்றி பெற்று 83 புள்ளிகள் பெற்றது. நேற்றிரவு பார்சிலோனா ஒசாசுனா அணியையும், ரியல் மாட்ரிட் வில்லாரியல் அணியையும் எதிர்த்து விளையாடின.

    ரியல் மாட்ரிட் 2-1 என வில்லாரியல் அணியை வீழ்த்தியது. பென்ஜிமா இரண்டு கோல்கள் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார். அதே சமயம் பார்சிலோனா சொந்த மைதானத்தில் ஒசாசுனா அணியிடம் 1-2 எனத் தோல்வியை தழுவியது.

    பயிற்சியாளரை தூக்கிப்போட்டு பிடிக்கும் வீரர்கள்

    இதனால் ரியல் மாட்ரிட் 37 போட்டிகளில் முடிவில் 86 புள்ளிகள் பெற்று சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது. பார்சிலோனா 37 போட்டிகளில் 79 புள்ளிகளே பெற்றுள்ளது. இன்னும் ஒருபோட்டி மீதமுள்ளது. இதில் தோல்வியடைந்தாலும் ரியல் மாட்ரிட் அணிக்கு பாதிப்பு ஏற்படாது.

    கடந்த 2017-க்குப்பின் தற்போது ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. லா லிகா கோப்பையை ரியல் மாட்ரிட் 34-வது முறையாக கைப்பற்றியுள்ளது.
    Next Story
    ×