search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்
    X
    இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட்

    வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு: ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட், ஆர்சர் அவுட்- பிராட் சேர்ப்பு

    மான்செஸ்டர் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ள நிலையில், இங்கிலாந்து அணியில் மூன்று பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. மழை பெய்ததால் போட்டி தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டது.

    மழை நின்று, அவுட் பீல்டு உலர்ந்ததால் 4.30 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது, இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் மீண்டும் அணிக்குள் வந்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், மார்க் வுட், ஜாஃப்ரா ஆர்சர் ஆகியோர் நீக்கப்பட்டு, கிறிஸ் வோக்ஸ், சாம் கர்ரன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். சரியாக ஐந்து மணிக்கு போட்டி தொடங்கும்.
    Next Story
    ×