என் மலர்
விளையாட்டு
கத்தாரில் 2022-ல் நடைபெற இருக்கும் உலக கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி நடைபெறும் அட்டவணையை பிபா வெளியிட்டுள்ளது.
2022 கால்பந்து உலக கோப்பை கத்தார் நாட்டில் நடைபெற இருக்கிறது. நவம்பர் 1-ந்தேதியில் போட்டி தொடங்கி டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. குரூப் இடையிலான போட்டிகள் ஒரு நாளை நான்கு போட்டிகள் நடைபெறும் உள்ளூர் நேரப்படி போட்டிகள் மதியம் 1 மணி (இந்திய நேரப்படி மதியம் 3.30 மணி), மாலை 4 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணிக்க நடைபெறும்.
நவம்பர் 1-ந்தேதி 60 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை பார்க்கும் வகையில் கட்டப்பட்டுள்ள பேய்ட் மைதானத்தில் போட்டி நடைபெறும். டிசம்பர் 18-ந்தேதி 6 மணிக்கு இறுதிப் போட்டி தொடங்கும். இந்த போட்டி லுசைல் மைதானத்தில் நடைபெறும் என அறிவித்துள்ளது.
8 மைதானங்களில் 28 நாட்கள் இந்தத் தொடர் நடைபெற இருக்கிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடருக்கான 26 பேர் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு இங்கிலாந்தில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.
அதன்பின் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் 3 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்திற்கு சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது.
இந்த தொடருக்கான அட்டவணை இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இந்த தொடருக்கான உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
26 பேர் கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. சீன் அப்போட், 2. ஆஷ்டோன் அகர், 3. அலெக்ஸ் கேரி, 4 பேட் கம்மின்ஸ், 5. ஆரோன் பிஞ்ச், 6. ஜோஷ் ஹசில்வுட், 7. டிராவிஸ் ஹெட், 8. உஸ்மான் கவாஜா, 9. மார்கஸ் லாபஸ்சேன், 10. நாதன் லயன், 11. மி்ட்செல் மார்ஷ், 12. கிளென் மேக்ஸ்வெல், 13. பென் மெக்டெர்மோட், 14. ரிலே மெரிடித், 15. மைக்கேல் நாசர், 16. ஜோஷ் பிலிப், 17. டேனியல் சாம்ஸ், 18. டிஆர்கி ஷார்ட், 19. கேன் ரிச்சர்ட்சன், 20. ஸ்டீவன் ஸ்மித், 21. மிட்செல் ஸ்டார்க், 22. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 23. அன்ட்ரூ டை, 24. மேத்யூ வடே. 25. டேவிட் வார்னர், 26. ஆடம் ஜம்பா.
கடந்த வருடம் அக்டோபரில் இருந்து அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட கவாஜா, டெஸ்ட் அணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இங்கிலாந்து வீரர்களுக்கான உயிர்-பாதுகாப்பு வளையத்தை விட்டு வெளியேறியதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 2-வது டெஸ்டில் இருந்து ஆர்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்தாகவே வீரர்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் இங்கிலாந்து உயிர்-பாதுகாப்பு வளையம் என்ற பாதுகாப்பை ஏற்படுத்தியது. இதற்கான தனி நெறிமுறைகளை வகுத்துள்ளது. இந்த நெறிமுறைகளை வீரர்கள் கடைபிடிக்காவிடில் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அவர்களுக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்த பின்னர்தான் அணியுடன் இணைய அனுமதிக்கப்படுவார்கள்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. 2-வது டெஸ்ட் போட்டி இன்று மான்செஸ்டரில் தொடங்குகிறது. சவுத்தாம்ப்டனில் இருந்து மான்செஸ்டருக்கு வரும் வழியில் ஜாஃப்ரா ஆர்சர் பிரைட்டனில் உள்ள வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.
இதனால் அவர் உடனடியாக ஐந்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் 2-வது டெஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த ஐந்து நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. அதன்பின்தான் அணியுடன் இணைவார்.
என்னுடைய செயலுக்காக மிகவும் வருந்துகிறேன் என ஆர்சர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜாஃப்ரா ஆர்சர் கூறுகையில் ‘‘நான் செய்த செயலுக்காக மிகவும் வருந்துகிறேன். எனக்கு மட்டுமல்ல அணி வீரர்கள் மற்றும் நிர்வாகத்திற்கே ஆபத்தை விளைவித்து விடும். எனக்கு எதிரான நடவடிக்கையை முழுவதுமாக ஏற்றுக் கொள்கிறேன். உயிர்-பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் ஒவ்வொருவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்.
டெஸ்ட் போட்டியில் இடம் பிடிக்காமல் போனது மிகுந்த வேதனை அளிக்கிறது. குறிப்பாக தொடரை நிர்ணயிக்கும் டெஸ்டில் பங்கேற்க முடியவில்லை’’ என்றார்.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி மழைக் காரணமாக தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சவுத்தாம்ப்டனில் நடைபெற்ற முதல் டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது டெஸ்ட் மான்செஸ்டரில் இன்று இந்திய நேரப்படி 3.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. அதற்கு முன் 3 மணியளவில் டாஸ் சுண்டப்படும். மான்செஸ்டரில் லேசான மழை பெய்து வருவதால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வருகிற செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட இருந்த ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர் தள்ளிவைக்கப்படுகிறது.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் மத்தியில் இருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவில்லை. 117 நாட்கள் இடைவெளிக்கு பிறகு சவுதம்டனில் கடந்த வாரம் நடந்த இங்கிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக அமைந்தது.
விளையாட்டு போட்டிகளை மீண்டும் நடத்த பல்வேறு நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்தியாவை பொறுத்தமட்டில் கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கிரிக்கெட் உள்பட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இன்னும் வெளிப்புற மைதானங்களில் பயிற்சியை தொடங்க முடியாத நிலையில் உள்ளனர். இதன் காரணமாக இந்திய கிரிக்கெட் அணியின், இலங்கை, ஜிம்பாப்வே பயணங்கள் ஏற்கனவே தள்ளிபோடப்பட்டன. அத்துடன் செப்டம்பர் மாதம் நடக்க இருந்த 6 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியும் அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவில் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதால், அந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் காய் நகர்த்தி வருகிறது.
இதற்கிடையில், வருகிற செப்டம்பர் மாதத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு வருகை தந்து 3 ஒருநாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாட திட்டமிட்டுள்ளது. தற்போது நமது நாட்டில் நிலவும் சூழ்நிலையை பார்க்கையில் இந்த போட்டி தொடர் நடைபெற வாய்ப்பில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அத்துடன் அடுத்த மாதம் (ஆகஸ்டு) நியூசிலாந்து ‘ஏ’ அணியின் இந்திய வருகையும் திட்டமிட்டபடி நடக்க வழியில்லை என்றும் அவர் கூறினார்.
நாளை நடைபெறும் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு கூட்டத்தில் வருங்கால போட்டி அட்டவணை குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டம் முடிவில் இங்கிலாந்து அணியின் வருகை தள்ளிவைப்பு குறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி அடுத்த ஆண்டு (2021) ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அந்த நேரத்தில் தற்போதைய தொடரையும் சேர்த்து நடத்தலாமா? என்பது குறித்து இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களும் ஆலோசனை நடத்தி வருகின்றன.
ஆஸ்திரேலியாவில் டிசம்பர் முதல் பிப்ரவரி வரை பிக் பாஷ் டி20 லீக் தொடர் நடைபெறும் வகையில் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளது. டி20 உலக கோப்பையை நடத்தும் ஆர்வத்தில் ஆஸ்திரேலியா தற்போதைய சூழ்நிலையில் இல்லை. இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் தொடர், இந்தியா டெஸ்ட் தொடரை எதிர்நோக்கி இருக்கிறது.
வீரர்கள் பயிற்சி்யை மேற்கொண்டு வந்த நிலையில், மெல்போர்ன் நகர் அமைந்துள்ள விக்டோரியா மாநிலத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலியா உடனடியாக நாட்டின் எல்லையை திறக்க வாய்ப்பில்லை.
இந்நிலையில் 10-வது பிக் பாஷ் டி20 லீக் தொடருக்கான போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் தொடங்கும் டிசம்பர் 3-ந்தேதி பிக் பாஷ் தொடர் தொடங்குகிறது. சுமார் 60 நாட்களுக்கு மேல் நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப் போட்டி 2021 பிப்ரவரி 6-ந்தேதி முடிவடைகிறது.
முதல் ஆடடத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் - மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகளும் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் களம் இறங்குகின்றனர்.
56 போட்டிகள் மாலை நேரத்தில் நடக்கின்றன. 8 நாட்கள் இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. அப்போது போட்டி மாலை மந்து மணிக்கு முன்னதாக தொடங்குறிது.
அதேபோல் 59 நாட்கள் நடைபெறும் பெண்களுக்கான பிக் பாஷ் டி20 லீக் தொடருன்கான போட்டி அட்டவணையையும் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 17-ந்தேதி தொடங்கி நவம்பர் 29-ந்தேதி முடிவடைகிறது.
வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாராளுமன்ற உறுப்பினருமான மோர்தசா 24 நாட்களுக்குப்பிறகு கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.
வங்காள தேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா. இவர் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அவாமி லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இவருக்கு கடந்த மாதம் 20-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்றுமுன்தினம் நெகட்டிவ் வந்துள்ளது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.
இதுகுறித்து மோர்தசா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனக்கு மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் வந்தது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனைவி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் ஆரோக்கியத்துடன் உள்ளர். அவருக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள்.
நான் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நேர்மறை எண்ணத்துடன் இருங்கள். கடவுள் மீது நம்பிக்கை வைத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள். நான் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவை எதிர்த்து போரிடுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இவருடன் நஃபீஸ், நஸ்முல் இஸ்லாம் ஆகியோரும் மூன்று வாரத்திற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்களும் குணமடைந்துள்ளனர்.
இந்திய அணி கேப்டன் விராட் கோலியை விட கடினமான சூழ்நிலையில் கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கிளென் டர்னர் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இந்த காலக்கட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலிய அணி நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள்.
இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ள விராட் கோலி, 70 சதங்கள் அடித்துள்ளார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.
இவருக்கும் ஸ்மித்திற்கும் இடையில் கடும்போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடினமான சூழ்நிலையில் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் கிளென் டர்னர் தெரிவித்துள்ளார்.
விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் குறித்து டர்னர் கூறுகையில் ‘‘திறமையான பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் அவர்கள் எந்த சூழ்நிலையில் விளையாடுகிறார்கள், அவர்களுடைய ஆளுமையுடன் அவர்கள் வளர்ந்து வந்த விதம் ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன.
பந்து சீம் ஆகும் ஆடுகளத்திலும், பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆகும் நேரத்திலும் விராட் கோலி தொடக்கத்தில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவது கொஞ்சம் குறைவுதான். ஆனால், இதுபோன்ற ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் விளையாடியுள்ளதால் அவருக்கு அனுபவம் இருக்கும்.
கோலி டர்ன் ஆகும் போன்ற ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை விளையாடுவதில் சிறப்பானவர். ஸ்விங் மற்றும் சீம் குறைவாக உள்ள சூழ்நிலை அவரை அதிரடி வீரரமாக மாற்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

கேன் வி்ல்லியம்சனை காட்டிலும் விராட் கோலி இயற்கையாகவே அதிரடியாக ஆடம் பழக்கத்தை கொண்டவர். ஆனால் இருவரின் ஆட்டமும் வெற்றியை குறைப்பதாக இருக்காது. இருவரின் நோக்கமும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.
பேட்டிங் செய்ய மிகவும் கடினமான சூழ்நிலையில் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன். பேட்டிங் செய்ய சிறந்த கண்டிசனில், விராட் கோலி அதிகமாக ஆதிக்கம் செலுத்துவார். இதனால் அவருடைய அணிக்கு அதிகமான நேரங்களில் வெற்றி கிடைத்துள்ளது’’ என்றார்.
பிசிசிஐ நடுவர் அனில் சவுத்ரி செல்போன் பேசுவதற்காக சுமார் அரை கிலோமீட்டர் சென்று மரத்தில் ஏறி பேசிய சம்பவம் அறிந்து ஒரு நிறுவனம் நெட்வொர்க் அமைத்துள்ளது.
பிசிசிஐ-யின் கிரிக்கெட் போட்டி நடுவராக இருப்பவர் அனில் சவுத்ரி. தற்போது ஐசிசி-யின் எலைட் குரூப்பில் இடம்பிடித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 23-ந்தேதி நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது அனில் சவுத்ரி உத்தர பிரதேசத்தில் உள்ள தனது பூர்விக கிராமமான டாங்க்ரோல் சென்றிருந்தார். டெல்லியில் உள்ள குடும்பத்தினரிடம் பேசுவதற்கு செல்போனை எடுத்தபோதுதான், அந்த கிராமத்தில் செல்போன் நெட்வொர்க் கிடைக்காது என்பது அவருக்கு தெரியவந்தது. மேலும், நெட்வொர்க் கிடைக்க சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும் எனத் தெரிவித்தனர்.
விவசாய நிலத்திற்குள் சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று அங்குள்ள ஒரு மரத்தில் ஏறினார். அப்போது செல்போனில் டவர் கிடைத்தது. அதன்பின் தனது குடும்பத்தினரிடம் பேசினார்.
இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஒரு நெட்வொர்க் நிறுவனம் அந்த கிராமத்தில் செல்போன் டவர் அமைத்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் விவசாய நிலத்திற்குச் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே இருந்து செல்போனில் பேச முடிகிறது.
தற்போது ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுவதால் மாணவர்கள் எளிதாக பாடம் கற்றுக்கொள்ள முடிகிறது. இதனால் கிராம மக்கள் அனில் சவுத்ரியை ஹீரோவா பார்க்கிறார்கள்.
இந்த முயற்சி என்னுடைய கிராமத்திற்கு பயனளிக்கும் என்று நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஜலந்தரில் உள்ள பேராசிரியர் ஒருவரால் தற்போது பாடங்கள் நடத்த முடிகிறது. மாணவர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். ஏனென்றால், அவர்கள் இனிமேல் விவசாய நிலங்களில் கொசுக்கடிக்கிடையே ஆன்லைன் வகுப்புகளில் ஈடுபட தேவையில்லை. வீட்டில் இருந்து ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கலாம்’’ என்றார்.
அந்த கிராமத்தின் அருகில் வசித்து வரும் ராம்குமார் என்பவர் பணம் பரிமாற்றம் செய்யும் மையம் ஒன்று வைத்துள்ளார். பணம் அனுப்ப மிகவும் கடினமாக இருக்கும். தற்போது எளிதாக பணம் அனுப்ப முடிகிறது. முன்னதாக மூன்று அல்லது நான்கு மணி நேரம் ஆகும். தற்போது சில மணி நேரங்களில் அனுப்ப முடிகிறது.

அவருடைய முயற்சிக்கு நான் அனில் சவுத்ரி அவர்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். எங்களுக்கு அவர் ஹீரோ. பொது முடக்கத்தின்போது இது சின்ன விஷயம். ஆனால், எங்களுக்கு நீண்ட கால உதவியாக அமைந்துள்ளது. எங்களுடைய பஞ்சாயத் உறுப்பினர் மணிஷ் சவுகான், உள்ளூர் எம்எல்ஏ தெஜிந்தர் நார்வால் ஆகியோர் ஜியோ நெட்வொர் நிறுவனத்திடம் பேசு டவரை கொண்டுவந்துள்ளனர். வாழ்க்கையை எளிதாக்கிய அனைவரும் நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’’ என்றார்.
‘‘தற்போது அங்குள்ள மக்கள் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து வைக்க கேட்கிறார்கள். ஆனால் நான் அவர்களிடம் நான் வெறும் நடுவர் மட்டுமே’’ என்று தெரிவித்துவிட்டேன் என்று அனில் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு பிறகு போட்டிகளை தொடங்குவது குறித்து மாநில விளையாட்டு அமைச்சர்களுடன் மத்திய மந்திரி ஆலோசனை நடத்துகிறார்.
புதுடெல்லி:
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் வீரர்கள் மட்டும் அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றி பயிற்சியை தொடங்கலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?. விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச விளையாட்டு அமைச்சர்களுடன், மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வீடியோ கான்பரன்ஸ் மூலம் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.
இதில் முதல் நாளான நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்பட 18 மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘விளையாட்டு துறை மேம்பாட்டு விஷயத்தில் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கொரோனாவினால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பில் இருந்து விளையாட்டை மீட்டு நல்ல நிலைக்கு மேம்படுத்த சரியான செயல்திட்டம் இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மாநிலமும் ஒன்று அல்லது இரண்டு விளையாட்டை தத்தெடுத்து அதனை முன்னேற்ற எடுக்கும் முயற்சிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் போதிய நிதியுதவி அளிக்கும்’ என்று தெரிவித்தார்
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த 4 மாதங்களாக நாடு முழுவதும் விளையாட்டு போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கும் வீரர்கள் மட்டும் அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகளை பின்பற்றி பயிற்சியை தொடங்கலாம் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் என்ன?. விளையாட்டு போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? என்பது குறித்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச விளையாட்டு அமைச்சர்களுடன், மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ வீடியோ கான்பரன்ஸ் மூலம் 2 நாட்கள் ஆலோசனை நடத்துகிறார்.
இதில் முதல் நாளான நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் உள்பட 18 மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ கலந்துரையாடினார். அப்போது அவர் பேசுகையில், ‘விளையாட்டு துறை மேம்பாட்டு விஷயத்தில் மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கொரோனாவினால் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பில் இருந்து விளையாட்டை மீட்டு நல்ல நிலைக்கு மேம்படுத்த சரியான செயல்திட்டம் இந்த ஆலோசனை கூட்டம் முடிவில் கிடைக்கும் என்று உறுதியாக நம்புகிறேன். ஒவ்வொரு மாநிலமும் ஒன்று அல்லது இரண்டு விளையாட்டை தத்தெடுத்து அதனை முன்னேற்ற எடுக்கும் முயற்சிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் போதிய நிதியுதவி அளிக்கும்’ என்று தெரிவித்தார்
20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.
துபாய்:
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முடிவு எடுப்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அனேகமாக அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூட்டம் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் முடிவு எடுப்பதில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியின் தலைவிதி குறித்து அடுத்த ஐ.சி.சி. கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக ஐ.சி.சி. நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். கூட்டத்திற்கான தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும், அனேகமாக அடுத்த ஒரு வாரத்திற்குள் இந்த கூட்டம் நடக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூப்பர் ஓவருக்கு மத்தியில் வென்ற 2019-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை இப்போது பார்த்தாலும் பதற்றம் தொற்றிக்கொள்கிறது என்று இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறியுள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்தில் 2019-ம் ஆண்டு நடந்த 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிஆட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்து விட முடியாது. கடந்த ஆண்டு ஜூலை 14-ந்தேதி லண்டன் லார்ட்சில் அரங்கேறிய இறுதிசுற்றில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் மோதின. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுக்கு 241 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியும் 50 ஓவர்களில் 241 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பரபரப்பான இந்த ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட போது, அந்த அணி 14 ரன்களே எடுத்தது.
வெற்றியை தீர்மானிக்க கொண்டு வரப்பட்ட சூப்பர் ஓவரில் இரு அணிகளும் தலா 15 ரன்கள் எடுத்ததால் மறுபடியும் சமநிலை ஏற்பட்டது. இதையடுத்து அதிக பவுண்டரி விளாசிய அணி என்ற வகையில் இங்கிலாந்து முதல்முறையாக உலக கோப்பையை உச்சிமுகர்ந்தது. பவுண்டரி எண்ணிக்கையின்படி வெற்றியாளரை முடிவு செய்யும் விதிமுறை கடும் விமர்சனத்திற்கு உள்ளானதால் அந்த விதிமுறையை சில மாதங்களில் ஐ.சி.சி. நீக்கி விட்டது.
கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் திரில்லிங்காக அமைந்த அந்த இறுதிப்போட்டி நடந்து நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று விட்டது. இதை நினைவு கூர்ந்த இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா பரவல் மற்றும் கட்டுப்பாடு காரணமாக கடந்த 4 மாதங்கள் கொஞ்சம் சவாலாக இருக்கிறது. அதே நேரத்தில் வீட்டில் ஓய்வில் இருந்தபடி 2019-ம் ஆண்டு உலக கோப்பை இறுதிப்போட்டியை பார்க்கும் வாய்ப்பையும் இது உருவாக்கி தந்திருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் டி.வி.டி. மூலம் மூன்று முறை உலக கோப்பை இறுதிப்போட்டியை முழுமையாக பார்த்து விட்டேன். இறுதி ஆட்டத்தை முதல்முறையாக ரசித்து கண்டுகளித்தேன். இதுவும் வியப்புக்குரிய ஒரு அனுபவம் தான். ஆனாலும் இந்த போட்டியை ஒவ்வொரு தடவையும் நாள் முழுவதும் உட்கார்ந்து முழுமையாக பார்க்கும்போது இன்னும் எனக்குள் பதற்றம் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு இந்த ஆட்டம் இடைவிடாது ‘நீயா-நானா’ என்று பரபரப்பும், நெருக்கடியும் நிறைந்ததாக நகர்ந்தது. இத்தகைய ஆட்டத்தில் நானும் பங்கெடுத்தது பெருமை அளிக்கிறது.
இந்த இறுதிப்போட்டியை கிரிக்கெட்டை விட பெரியது என்று சொல்வேன். இங்கிலாந்து விளையாட்டு வரலாற்றில் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. இந்த வெற்றி நீண்ட நாட்கள் மனதில் நிலைத்து நிற்கும்.
இந்த ஆட்டத்தை பொறுத்தவரை ஒரே ஒரு கட்டத்தில் மட்டுமே உலக கோப்பையை நம்மால் வெல்ல முடியுமா? என்ற சந்தேகம் வந்தது. அது ஆட்டத்தின் 49-வது ஓவர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் நீஷம் ஒரு பந்தை வேகம் குறைத்து வீசினார். அப்போது களத்தில் நின்ற எங்கள் அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் (மொத்தம் 84 ரன் குவித்து ஆட்டநாயகன் விருது பெற்றார்) பந்தை ‘லாங் ஆன்’ திசையில் தூக்கியடித்தார்.
பந்து மேல்வாக்கில் பறந்ததே தவிர அதிக தூரத்துக்கு செல்லவில்லை. ஒரு வினாடி, ஸ்டோக்ஸ் அவுட் ஆகப்போகிறார், இத்துடன் நமது கதை முற்றிலும் முடிந்து விட்டது என்று தான் நினைத்தேன். ஏனெனில் அப்போது வெற்றிக்கு 22 ரன்கள் தேவையாக இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பந்து (எல்லைக்கோடு அருகே நின்ற டிரென்ட் பவுல்ட் பந்தை பிடித்து உள்ளே தூக்கிப்போட்டாலும் எல்லைக்கோட்டை மிதித்ததால் சிக்சரானது) சிக்சராக மாறியது.
எந்த ஒரு அணியும் 50 ஓவர் உலக கோப்பையை வென்ற பின்னர் தொடர்ச்சியாக 20 ஓவர் உலக கோப்பையை வென்றதில்லை. அந்த சாதனையை படைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அடுத்த இரண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டிகளில் ஏதாவது ஒன்றை வென்றாலும் நம்ப முடியாத ஒன்றாக இருக்கும். இரண்டு 20 ஓவர் உலக கோப்பையையும் கைப்பற்றினால் அது 50 ஓவர் உலக கோப்பையை வென்றதை விட மகத்தான சாதனையாக இருக்கும்.
ஏனெனில் இவ்விரண்டு உலக கோப்பை போட்டிகளும் வெளிநாட்டில் அதாவது ஒன்று ஆஸ்திரேலியாவிலும், மற்றொன்று இந்தியாவிலும் நடக்க இருக்கிறது. எனவே வெளிநாட்டில் இவ்விரு உலக கோப்பையையும் வென்றால், நிச்சயம் அது 50 ஓவர் உலக கோப்பையை விட பெரிது தான்.
இவ்வாறு மோர்கன் கூறினார்.






