search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேக்ஸ்வெல், கவாஜா
    X
    மேக்ஸ்வெல், கவாஜா

    இங்கிலாந்து தொடருக்கான 26 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்தது ஆஸ்திரேலியா

    இங்கிலாந்துக்கு எதிரான ஒயிட்-பால் கிரிக்கெட் தொடருக்கான 26 பேர் கொண்ட உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்றுக்குப் பிறகு இங்கிலாந்தில் மீண்டும் சர்வதேச கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்து சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது.

    அதன்பின் பாகிஸ்தான் அணி இங்கிலாந்துடன் 3 டெஸ்ட் மற்றும் 2 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்திற்கு சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட திட்டமிட்டுள்ளது.

    இந்த தொடருக்கான அட்டவணை இன்னும் உறுதியாகவில்லை. இந்நிலையில் இந்த தொடருக்கான உத்தேச அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

    26 பேர் கொண்ட ஆஸ்திரேலிய உத்தேச அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. சீன் அப்போட், 2. ஆஷ்டோன் அகர், 3. அலெக்ஸ் கேரி, 4 பேட் கம்மின்ஸ், 5. ஆரோன் பிஞ்ச், 6. ஜோஷ் ஹசில்வுட், 7. டிராவிஸ் ஹெட், 8. உஸ்மான் கவாஜா, 9. மார்கஸ் லாபஸ்சேன், 10. நாதன் லயன், 11. மி்ட்செல் மார்ஷ், 12. கிளென் மேக்ஸ்வெல், 13. பென் மெக்டெர்மோட், 14. ரிலே மெரிடித், 15. மைக்கேல் நாசர், 16. ஜோஷ் பிலிப், 17. டேனியல் சாம்ஸ், 18. டிஆர்கி ஷார்ட், 19. கேன் ரிச்சர்ட்சன், 20. ஸ்டீவன் ஸ்மித், 21. மிட்செல் ஸ்டார்க், 22. மார்கஸ் ஸ்டாய்னிஸ், 23. அன்ட்ரூ டை, 24. மேத்யூ வடே. 25. டேவிட் வார்னர், 26. ஆடம் ஜம்பா.

    கடந்த வருடம் அக்டோபரில் இருந்து அணியில் இடம்பிடிக்காமல் இருந்த மேக்ஸ்வெல், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட கவாஜா, டெஸ்ட் அணி சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
    Next Story
    ×