search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மோர்தசா"

    வங்காள தேச பிரிமீயர் டி20 லீக்கில் மோர்தசாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் 63 ரன்னில் சுருண்டது. #BPL
    வங்காள தேசத்தில் வங்காள தேச பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் நடைபெற்று வருகிறது. இன்று டாக்காவில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் ஸ்மித் தலைமையிலான கொமிலா விக்டோரியன்ஸ் - மோர்தசா தலைமையிலான ரங்க்பூர் ரைடர்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ரங்க்பூர் ரைடர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி கொமிலா விக்டோரியன்ஸ் அணியின் தமிம் இக்பால், லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். மோர்தசாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கொமிலா அணியின் விக்கெட்டுக்கள் மளமளவென சரிந்தது.

    தமிம் இக்பால் 4 ரன்னிலும், லெவிஸ் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த இம்ருல் கெய்ஸ் 2 ரன்னிலும், ஸ்மித் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். இதனால் 18 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுக்களை இழந்தது கொமிலா அணி தத்தளித்தது.

    அதன்பின் நஸ்முல் இஸ்லாம் சிறப்பாக பந்து வீச கொமிலா விக்டோரியன்ஸ் அணி 16.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 63 ரன்னில் சுருண்டது. மோர்தசா நான்கு ஒவரில் 11 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் சாய்த்தார். நஸ்முல் இஸ்லாம் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 63 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ரங்க்பூர் ரைடர்ஸ் 12 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா வருகின்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் போட்டியிட உள்ளார்.
    வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவர் மோர்தசா. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற மோர்தசா, ஒருநாள் போட்டியில் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் வங்காள தேசத்தில் நடைபெறும் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

    வங்காளதேசத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதில் மோர்தசாவை களம் இறக்க பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி ‘லீக்’ முடிவு செய்துள்ளது. தேர்தலில் போட்டியிட மோர்தசாவும் சம்மதித்துவிட்டார் என்று அந்த கட்சி தெரிவித்துள்ளது.

    அவரது சொந்த தொகுதியான நரேலில் போட்டியிடுகிறார். ஆனால் இதுகுறித்து மோர்தசா வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. 2009-ல் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டியில் 252 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

    தற்போது வங்காள தேச அணிக்காக விளையாடி வரும் வீரர் அரசியலில் போட்டியிட எந்தவித தடையும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இதனால் மோர்தசா அரசியலில் களம் இறங்க எந்த சிக்கலும் இருக்காது.
    ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார். #AsiaCup2018 #INDvBAN
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று மாலை 5 மணிக்கு துபாயில் தொடங்குகிறது. இதில் இந்தியா - வங்காள தேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதற்கான டாஸ் சரியாக மாலை 4.30 மணிக்கு சுண்டப்பட்டது. வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா ‘ஹெட்’ என அழைத்தார். ஆனால் ‘டெய்ல்’ விழ ரோகித் சர்மா டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தார்.
    ஆப்கானிஸ்தானுக்கு எதிராக கடைசி ஓவரை அபாரமாக வீசய முஷ்டாபிஜூர் ரஹ்மானுக்கு கேப்டன் மோர்தசா பாராட்டு தெரிவித்துள்ளார். #AsiaCup2018
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் அபு தாபியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காள தேச அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் 249 ரன்கள் குவித்தது. பின்னர் 250 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் களம் இறங்கியது. முதலில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆப்கானிஸ்தான் ஓவர் செல்ல செல்ல இலக்கை நோக்கி பயணம் செய்தது.

    ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அந்த ஓவரை முஷ்டாபிஜூர் ரஹ்மான வீசினார். போட்டியில் மிகவும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரை நேர்த்தியாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மான் நான்கு ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    முஷ்டாபிஜூர் ரஹ்மானின் அபார பந்து வீச்சால் 3 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காள தேசம், பாகிஸ்தானை எதிர்த்து விளையாட இருக்கிறது. அந்த போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும்.



    கடைசி ஓவரை அபாரமாக வீசிய முஷ்டாபிஜூர் ரஹ்மானை கேப்டன் மோர்தசா வெகுவாக பாராட்டியுள்ளார். முஷ்டாபிஜூர் ரஹ்மான் பந்து வீச்சு குறித்து மோர்தசா கூறுகையில் ‘‘போட்டியின் முடிவில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் மாயாஜாலம் காட்டியவர் போன்று காட்சியளித்தார். கடைசி ஓவரில் 8 ரன்னுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்பது மிகவும் கடினமானது. அனைத்து புகழும் முஷ்டாபிஜூர் ரஹ்மானையே சாரும்.

    போட்டியின் மத்தியில் முஷ்டாபிஜூர் ரஹ்மான் தசைப்பிடிப்பால் சற்று அவதிப்பட்டார். அவர் 10 ஓவர் முழுவதும் வீச வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், அவரால் 10 ஓவரை நிறைவு செய்ய முடியவில்லை. அவர் பந்து வீசியது மிகவும் கடினமானது’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மோர்தசா பங்கேற்பது கடினம் என வங்காள தேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. #WIvBAN
    வெஸ்ட் இண்டீஸ் - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நாளை 2-வது மற்றும் கடைசி போட்டி தொடங்குகிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் (ஜூலை 22, 25 மற்றும் 28)  நடக்கிறது.

    இதற்கான வங்காள தேச அணியில் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளரும் ஆன மோர்தசா இடம்பிடித்துள்ளார். இதற்கான வங்காள தேச அணி டாக்காவில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்படுகிறது.

    மோர்தசாவின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், அவர் அருகில் இருந்து கவனிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில விளையாடுவது சந்தேசம் எனக்கூறப்படுகிறது.



    இதுகுறித்து வங்காள தேச கிரிக்கெட் வாரியத்தின் தலைமைத் தேர்வாளர் மின்ஹாஜுல் அபெடின் கூறுகையில் ‘‘வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மோர்தசா விளையாடுவது சந்தேகம்தான். நான் அவரிடம் நேற்றிரவு பேசினேன். அவருடைய மனைவில் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக கூறினார். இதனால் அவர் அணியில் இடம்பெறுவார் என்று தெரியவில்லை’’ என்றார்.

    ஒருவேளை மோர்தசா வெஸ்ட் இண்டீஸ் செல்லவில்லை சாஹிப் அல் ஹசன் கேப்டனாக செயல்படுவார்.
    ×