search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விராட் கோலி, கேன்  வில்லியம்சன்
    X
    விராட் கோலி, கேன் வில்லியம்சன்

    கடினமான சூழ்நிலையில் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன் சிறந்த பேட்ஸ்மேன்: டர்னர்

    இந்திய அணி கேப்டன் விராட் கோலியை விட கடினமான சூழ்நிலையில் கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று கிளென் டர்னர் தெரிவித்துள்ளார்.
    கிரிக்கெட்டில் இந்த காலக்கட்டத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட், நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், ஆஸ்திரேலிய அணி நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஆகியோர் தலைசிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள்.

    இதில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சர்வதேச கிரிக்கெட்டில் 21 ஆயிரம் ரன்களுக்கு மேல் அடித்துள்ள விராட் கோலி, 70 சதங்கள் அடித்துள்ளார். மூன்று வகை கிரிக்கெட்டிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

    இவருக்கும் ஸ்மித்திற்கும் இடையில் கடும்போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் கடினமான சூழ்நிலையில் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் கிளென் டர்னர் தெரிவித்துள்ளார்.

    விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன் குறித்து டர்னர் கூறுகையில் ‘‘திறமையான பேட்ஸ்மேன்களுக்கு இடையிலான குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் அவர்கள் எந்த சூழ்நிலையில் விளையாடுகிறார்கள், அவர்களுடைய ஆளுமையுடன் அவர்கள் வளர்ந்து வந்த விதம் ஆகியவற்றுடன் உருவாக்கப்படுகின்றன.

    பந்து சீம் ஆகும் ஆடுகளத்திலும், பந்து நீண்ட நேரம் ஸ்விங் ஆகும் நேரத்திலும் விராட் கோலி தொடக்கத்தில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்துவது கொஞ்சம் குறைவுதான். ஆனால், இதுபோன்ற ஆடுகளத்தில் கேன் வில்லியம்சன் விளையாடியுள்ளதால் அவருக்கு அனுபவம் இருக்கும்.

    கோலி டர்ன் ஆகும் போன்ற ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சை விளையாடுவதில் சிறப்பானவர். ஸ்விங் மற்றும் சீம் குறைவாக உள்ள சூழ்நிலை அவரை அதிரடி வீரரமாக மாற்ற அதிக வாய்ப்பு அளிக்கும்.

    கிளென் டர்னர்

    கேன் வி்ல்லியம்சனை காட்டிலும் விராட் கோலி இயற்கையாகவே அதிரடியாக ஆடம் பழக்கத்தை கொண்டவர். ஆனால் இருவரின் ஆட்டமும் வெற்றியை குறைப்பதாக இருக்காது. இருவரின் நோக்கமும் வெற்றி பெற வேண்டும் என்பதுதான்.

    பேட்டிங் செய்ய மிகவும் கடினமான சூழ்நிலையில் விராட் கோலியை விட கேன் வில்லியம்சன்தான் சிறந்த பேட்ஸ்மேன். பேட்டிங் செய்ய சிறந்த கண்டிசனில், விராட் கோலி அதிகமாக ஆதிக்கம் செலுத்துவார். இதனால் அவருடைய அணிக்கு அதிகமான நேரங்களில் வெற்றி கிடைத்துள்ளது’’ என்றார்.
    Next Story
    ×