என் மலர்tooltip icon

    செய்திகள்

    பென் ஸ்டோக்ஸ், டொமினிக் சிப்லி
    X
    பென் ஸ்டோக்ஸ், டொமினிக் சிப்லி

    மான்செஸ்டர் டெஸ்ட்: டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ் அபார சதம்

    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான மான்செஸ்டர் 2-வது டெஸ்டில் இங்கிலாந்து வீரர்கள் டொமினிக் சிப்லி, பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசினர்.
    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் பீல்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 82 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்திருந்தது. டொமினிக் சிப்லி 86 ரன்களுடனும், பென் ஸ்டோக்ஸ் 59 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் டொமினிக் சிப்லி சதம் அடித்தார். அதனைத் தொடர்ந்து பென் ஸ்டோக்ஸும் சதம் விளாசினார். இங்கிலாந்து அணி 341 ரன்கள் எடுத்திருக்கும்போது இந்த ஜோடி பிரிந்தது. டொமினிக் சிப்லி 120 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 260 ரன்கள் குவித்தது.

    பென் ஸ்டோக்ஸ், டொமினிக் சிப்லி

    அடுத்து வந்த ஒல்லி போப் 7 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். ஒரு பக்கம் இரண்டு விக்கெட் வீழ்ந்தாலும் மறுமுனையில் பென் ஸ்டோக்ஸ் 150 ரன்னைக் கடந்தார். 6-வது விக்கெட்டுக்கு ஸ்டோக்ஸ் உடன் இணைந்து பட்லர் விளையாடி வருகிறார்.

    141 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் இங்கிலாந்து 5 விக்கெட் இழப்பிற்கு 382 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
    Next Story
    ×