search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இன்சமாம் உல் ஹக், சுனில் கவாஸ்கர்
    X
    இன்சமாம் உல் ஹக், சுனில் கவாஸ்கர்

    கவாஸ்கரின் 10 ஆயிரம் ரன்கள் இன்றைய 15 ஆயிரத்திற்கு சமமானது: இன்சமாம் உல் ஹக் சொல்கிறார்

    கவாஸ்கர் காலத்தில் தலைசிறந்த வீரர்கள் விளையாடிய போதிலும், யாரும் 10 ஆயிரம் ரன்னை நினைத்தது கிடையாது என்று இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவர் சுனில் கவாஸ்கர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன் இவர்தான். 125 டெஸ்ட் போட்டிகளில் 214 இன்னிங்சில் பேட்டிங் செய்து 34 சதங்களுடன் 10,122 ரன்கள் அடித்துள்ளார்.

    கவாஸ்கர் காலத்திற்கு முன்னதாக பல ஜாம்பவான்கள் விளையாடியுள்ளனர். இருந்தாலும் யாரும் 10 ஆயிரம் ரன்களை நினைத்தது கிடையாது என்று பாகிஸ்தான் பேட்ஸ்மேன் இன்சமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.
     
    இதுகுறித்து இன்சமாம் உல் ஹக் கூறுகையில் ‘‘கவாஸ்கர் காலக்கட்டத்திலும், அதற்கு முன்னதாகவும் பல தலைசிறந்த வீரர்கள் இருந்தனர். ஜாவித் மியான்தத், விவ் ரிச்சர்ட்ஸ், கேரி சோபர்ஸ், டான் பிராட்மேன் போன்றோர்கள் 10 ஆயிரம் ரன்களை நினைத்தது கிடையாது. தற்போதைய காலக்கட்டத்தில் அதிக அளவில் டெஸ்ட் கிரிக்கெட் நடக்கிறது. இருந்தாலும் சில வீரர்களே 10 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை கடந்துள்ளனர்.

    என்னிடம் நீங்கள் கேட்டால், சுனில் கவாஸ்கரின் 10 ஆயிரம் ரன்கள், தற்போதைய 15 ஆயிரத்தில் இருந்து 16 ஆயிரம் ரன்களுக்கு சமமானது. அதைவிட அதிகமாகத்தான் இருக்குமே தவிர, குறைவாக இருக்காது.

    தற்போது நல்ல பார்மில் இருந்தால் ஒரு சீசனில் 1000 முதல் 1500 ரன்கள் வரை அடிக்க முடியும். கவாஸ்கர் விளையாடிய காலத்தில், சூழ்நிலை இதுபோன்று கிடையாது. தற்போது முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளம் தயார்படுத்தப்பட்டுள்ளது. ஐசிசி-யும் இதைத்தான் விரும்புகிறது. அப்போதுதான் ரசிகர்கள் வருவார்கள் என்று.

    கடந்த காலங்களில் ஆடுகங்கள் அப்படி கிடையாது. குறிப்பாக ஆசிய கண்டத்திற்கு வெளியே கடினமானதாக இருக்கும்’’ என்றார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியின்போதுதான் கவாஸ்கர் 10 ஆயிரம் ரன் என்ற மைல்கல்லை எட்டினார்.
    Next Story
    ×