என் மலர்
விளையாட்டு
ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (26). ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சோன்பேட் நகரில் உள்ள தனது கிராமத்தில் பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார். தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில் போகத்துக்கு கொரோனா கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
இதுதொடர்பாக போகத் கூறுகையில், விருது வழங்கும் விழாவிற்கான ஒத்திகைக்கு முன் சோன்பேட் நகரில் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். ஆனால் எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இதுவரை இல்லை. நான் நன்றாகவே இருக்கிறேன். விரைவில் நலம் பெறுவேன் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21-ந்தேதி துபாய் சென்றது. அணி வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் தனித்தனியாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்த ஆறு நாட்களில் முதல் நாள், 3-வது நாள் மற்றும் 6-வது நாள் என மூன்று நாட்கள் கொரோனா பரிசோதனை செய்யப்படும். மூன்று பரிசோதனைகளிலும் நெகட்டிவ் முடிவு வந்தால் வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த நிலையில், இன்று பயிற்சிக்கு தயாராக இருந்தனர். இந்நிலையில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகு வீரர்களும் பயோ-செக்யூர் பப்பிள் என்ற வளையத்திற்குள் வருவார்கள். ஒரு வீரர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிற்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பலிங்குதான் பலம், பேட்டிங் இல்லை என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் மோன்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து 1-0 என தொடரைக் கைப்பற்றியது.
முதல் போட்டியில் பாகிஸ்தானின் பந்து வீச்சு அருமையான இருந்தது. ஆனால் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கில் சொதப்பியதால் வெற்றியை நழுவிட்டது. கடைசி இரண்டு போட்டிகளும் மழையால் பாதிப்பால் டிரா ஆனது.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பலமே பந்து வீச்சுதான், பேட்டிங் இல்லை என்று முன்னாள் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் மோன்டி பனேசர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பனேசர் கூறுகையில் ‘‘ஆடுகளம் ஸ்விங் மற்றும் சீமிங் ஆகியவற்றிற்கு ஒத்துழைக்கவில்லை என்றால், பேட்ஸ்மேன்களை தவறு செய்ய வைத்து விக்கெட்டுகளை எப்படி வீழ்த்த வேண்டும் என்பது பந்து வீச்சாளர்களுக்கு தெரியவில்லை. இதுபோன்ற பிரச்சினையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியவரிடம் இருந்து நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் அணியின் பலமே அவர்களுடைய பந்து வீச்சுதான். அவர்களுடைய பேட்டிங் அல்ல. பாகிஸ்தான் ஒரு அணுகுமுறையைக் கொண்டுள்ளது, இது அவர்கள் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக மாற விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
மிஸ்பா உல் ஹக், யூனிஸ்கான் மற்றும் முஷ்டாக் அகமது பயிற்சியில் இந்த புதிய அணி அவர்களுடைய அணுகுமுறையால் பாராட்டு பெற்றனர். பழைய அணிகளில் இதுபோன்று பார்க்க முடியாது’’ என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கொடுத்த ஆலோசனை பேரில்தான் சேப்பாக்கத்தில் ஒருவார முகாம் நடத்தப்பட்டது என்று காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக 8 அணிகளும் இந்தியாவில் இருந்து 20, 21 மற்றும் 23-ந்தேதிகளில் புறப்பட்டன.
சென்னை அணி துபாய் புறப்படுவதற்கு முன் ஒருவார பயிற்சி முகாம் நடத்த விரும்பியது. தமிழக அரசிடம் அனுமதி பெற்று முகாமை நடத்தியது. முகாமின்போது எம்எஸ் டோனி, ரெய்னா, அம்பதி ராயுடு போன்ற முன்னணி வீரர்கள் உள்ளூர் வீரர்களுடன் பாதுகாப்பு வளையத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.
இந்த முகாம் நடத்துவதற்கு ஆலோசனை கூறியதே எம்எஸ் டோனிதான் என்று சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சிஎஸ்கே அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் கூறுகையில் ‘‘ஐபிஎல் தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டபோது, நான் சேப்பாக்கத்தில் முகாம் நடத்துவது குறித்து தயங்கினேன். ஏனென்றால், பயோ-பப்பிள் உருவாக்கப்படும் என்பதால்.
துபாய் செல்வதற்கு முன் ஐந்து நாள் முகாம் பயனுள்ளதாக இருக்குமா? என்று டோனியுடன் கேட்டேன். அவர் தன்னுடைய கருத்தில் மிகவும் உறுதியாக இருந்தார்.
டோனி என்னிடம், சார் நாம் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை கிரிக்கெட் விளையாடவில்லை. சென்னையில் அனைவரும் ஒன்றிணைவது அவசியம். சென்னையில் நாம் பயோ-பப்பிள் உருவாக்க வேண்டும். அப்போதுதான் துபாயில் தரையிறங்கும்போது நமக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
ஆகவே, அந்த முகாம் அவர்களை தயார் செய்து கொள்ள பயனுள்ளதாக உள்ளது. நாங்கள் தயங்கியபோதிலும், மிகவும் உதவிகரகமாக இருந்தது. இந்த முகாமை நடத்த முடிந்த காரணத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.’’ என்றார்.
அபு தாபியில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் இருப்பதால் கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ் அணிகள் பயிற்சியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகியவை 20-ந்தேதியும், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சஸ் பெங்களூர் ஆகிய அணிகள் 21-ந்தேதியும், டெல்லி கேபிடல்ஸ், சன் ரைசர்ஸ் ஐதராபாத் ஆகியவை 23-ந்தேதியும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தன.
மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் அபுதாபியில் உள்ளன. அந்த இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட முடியாததால் அதிருப்தியில் உள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் 7 நாட்களுக்கு மேலாக ஓட்டல் அறையிலேயே தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியே வருவதற்கு இன்னும் அனுமதி இல்லை.
ஐக்கிய அரபு எமிரேட்சில் 6 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிறகு வீரர்கள் பயிற்சியில் ஈடுபடலாம் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
ஆனால் தற்போது அபுதாபியில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால், வீரர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே இந்த இரு அணி வீரர்களும் ஓட்டல் அறையிலேயே முடக்கப்பட்டு உள்ளார்கள். இதனால் வீரர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஐ.பி.எல். போட்டி தொடங்க இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில் போட்டி அட்டவணை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வார இறுதியில் அட்டவணை வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அபுதாபியில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் 2-ம் கட்ட போட்டிகளை அங்கு நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட போட்டிகளை துபாய் மற்றும் சார்ஜாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள 56 போட்டியில் துபாய், அபுதாபியில் தலா 21 ஆட்டங்களும், சார்ஜாவில் 14 ஆட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் துபாயில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் இரண்டு அணிகளும் இந்த விவகாரத்தை ஐபிஎல் ஆட்சிமன்றக்குழுவிடம் எடுத்துச் சென்றனர். அவர்கள் பிசிசிஐ-யிடம் தெரிவிக்க, பிசிசிஐ எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் இரண்டு அணிகளும் பயிற்சியில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான டெல்லி அணியில் ரகானே எந்த பேட்டிங் வரிசையில் ஆடுவார் என்பதற்கான பதிலை அவரே அளித்தார்.
துபாய்:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் வந்து கொண்டிருக்கிறார்கள். போட்டிக்கான அதிகாரபூர்வ அட்டவணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஆடிய 32 வயதான அஜிங்யா ரகானே, இந்த சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். ராஜஸ்தான் அணியில் ரகானே தொடக்க வீரராக இறங்கினார். ஆனால் டெல்லி அணியில் தொடக்க வரிசை இடத்துக்கு ஷிகர் தவான், பிரித்வி ஷா உள்ளனர். அதற்கு அடுத்த வரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஹெட்மயர், ரிஷாப் பண்ட் ஆகியோர் ஆடுவார்கள். இதனால் ரகானே எந்த வரிசையில் ஆடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
‘வெப் கான்பரன்ஸ்’ மூலம் பேட்டி அளித்த ரகானே இது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-
டெல்லி அணியில் நான் எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவேன் என்பது தெரியாது. எங்களது அணியின் பயிற்சிகளை எல்லாம் முடித்த பிறகே அது பற்றி விவாதிப்போம். எனவே பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். எனது கிரிக்கெட் வாழ்க்கையில் பெரும்பாலும் தொடக்க வீரராக களம் இறங்கி உற்சாகமாக ரசித்து விளையாடி இருக்கிறேன். ஆனால் நான் எந்த வரிசையில் ஆட வேண்டும் என்பது அணி நிர்வாகத்தின் முடிவை பொறுத்தது. எந்த வரிசையில் ஆட சொன்னாலும் 100 சதவீதம் பங்களிப்பை அளிக்க தயாராக இருக்கிறேன். 5 அல்லது 6-வது வரிசையில் விளையாடுவதை அவர்கள் விரும்பினால், அதையும் ஏற்றுக்கொள்வேன். ஆனால் இந்த வரிசையில் ஆடுவது புதிய அனுபவமாக இருக்கும். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் 2 பீல்டர்கள் மட்டுமே வெளிவட்டத்திற்குள் நிற்கும் போது தான் (முதல் 6 ஓவர்) நாம் ஷாட்டுகளை அச்சமின்றி சுதந்திரமாக அடிக்க முடியும்.
எந்த ஒரு வீரருக்கும் முன்னேற்றம் ரொம்ப முக்கியம். ரிக்கிபாண்டிங் பயிற்சியின் கீழ் விளையாட இருப்பது பரவசமூட்டுகிறது. ஒரு வீரராக ஆட்டத்திறனை மேம்படுத்தவும், கற்றுக்கொள்ளவும் விரும்புகிறேன். எனது ஆட்டத்திறனை மேலும் முன்னெடுத்துச் செல்ல இது எனக்கு அருமையான வாய்ப்பாகும்.
2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு, உலக கோப்பை அணியில் இடம் கிடைக்கும், 4-வது வரிசையில் ஆடுவேன் என்று நம்பிக்கையுடன் காத்திருந்தேன். ஆனால் உலக கோப்பை அணிக்கு தேர்வு செய்யப்படாததால் மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளானேன். இப்போது அது முடிந்து போன விஷயம். எனவே அது பற்றி அதிகமாக சிந்திக்கக்கூடாது. மீண்டும் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்ப வேண்டும் என்பதே எனது லட்சியம். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் என்னால் நன்றாக ஆட முடியும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறேன். பேட்டிங் சராசரி மற்றும் ‘ஸ்டிரைக்ரேட்’ குறித்து மக்கள் பேசிக் கொண்டு இருக்கிறார்கள். 2 ஆண்டுக்கு முன்பு அணியில் இருந்து நீக்குவதற்கு முன்பாக ஒரு நாள் போட்டியில் எனது செயல்பாடு நன்றாகத் தான் இருந்தது. மற்றவர்கள் சொல்வதை பற்றி கவலைப்படாமல் என் மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் போட்டி அணிக்கு திரும்புவேன்.
இவ்வாறு ரகானே கூறினார்.
இதற்கிடையே ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும், டெல்லி அணியின் பயிற்சியாளருமான ரிக்கிபாண்டிங் நேற்று துபாய் வந்து சேர்ந்தார். ஓட்டலில் அவர் 6 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையை முடித்த பிறகு வீரர்களுக்குரிய பயிற்சியை நேரில் அளிப்பார்.

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், அஸரென்கா அரைஇறுதிக்கு முன்னேறினர்.
நியூயார்க்:
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், அஸரென்கா அரைஇறுதிக்கு முன்னேறினர். இனவெறி எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நேற்றைய ஆட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 6-1 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் லெனார்ட் ஸ்ருப்பை ஊதித் தள்ளினார். நடப்பு சீசனில் தொடர்ச்சியாக 21-வது வெற்றியை ருசித்த ஜோகோவிச் 8-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதன் மூலம் இந்த தொடரில் அதிக முறை அரைஇறுதியை எட்டிய வீரர்களின் சாதனையை அவர் சமன் செய்தார்.
அரைஇறுதியில் ஜோகோவிச், 12-ம் நிலை வீரரான பாவ்டிஸ்டா அகுட்டை (ஸ்பெயின்) சந்திக்கிறார். கால்இறுதியில் பாவ்டிஸ்டா அகுட் முதல் செட்டை இழந்தாலும் சரிவில் இருந்து சாதுர்யமாக மீண்டு வந்து 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியன் டேனில் மெட்விடேவை (ரஷியா) வெளியேற்றினார். மிலோஸ் ராவ்னிக் (கனடா), சிட்சிபாஸ் (கிரீஸ்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர்.
பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில், இரண்டு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான ஜப்பான் நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா 4-6, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் கோன்டாவிட்டை (எஸ்தோனியா) தோற்கடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அரைஇறுதியில் பெல்ஜியம் வீராங்கனை எலிசி மெர்டென்சை சந்திக்க இருந்த நவோமி ஒசாகா கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் கருப்பின இளைஞர் ஜேக்கப் பிளேக்கை போலீசார் துப்பாக்கியால் சுட்ட இனவெறி சம்பவத்தை கண்டித்து சின்சினாட்டி தொடரில் இருந்து அதிரடியாக விலகினார். ஒரு கருப்பின பெண் என்ற வகையில் தனது எதிர்ப்பை காட்டுவதாக அவர் கூறினார்.
மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 7-6 (11-9), 6-2 என்ற நேர்செட்டில் துனிசியாவின் ஒன்ஸ் ஜாபிரை விரட்டியடித்து அரைஇறுதி சுற்றை அடைந்தார்.
அமெரிக்காவில் அரங்கேறும் இன பாகுபாடு மற்றும் சமூக அநீதிக்கு எதிராக நடத்தப்படும் போராட்டத்துக்கு ஒட்டு மொத்த டென்னிஸ் உலகமும் ஆதரவு அளிப்பதை உணர்த்தும் வகையில் அமெரிக்க டென்னிஸ் சங்கம் மற்றும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனங்கள் (ஏ.டி.பி., டபிள்யூ.டி.ஏ.) சார்பில் சின்சினாட்டி டென்னிஸ் போட்டியில் நேற்று நடக்க இருந்த அனைத்து ஆட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. போட்டி இன்று தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் இரட்டை சகோதரர்கள் டென்னிஸ் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
நியூயார்க்:
சர்வதேச டென்னிஸ் அரங்கில் இரட்டையர் பிரிவில் வெற்றிகரமான ஜோடியாக உருவெடுத்து எண்ணற்ற சாதனைகளை படைத்து இருக்கும் அமெரிக்காவின் பாப் பிரையன்-மைக் பிரையன் இரட்டை சகோதரர்கள் டென்னிஸ் போட்டியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
42 வயதான இருவரும் கூட்டாக 16 கிராண்ட்ஸ்லாம், 4 ஆண்கள் சாம்பியன்ஷிப் உள்பட 119 பட்டங்களை வாரி குவித்துள்ளனர். ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கமும் வென்று இருக்கிறார்கள். 438 வாரங்கள் இரட்டையர் தரவரிசையில் முதலிடத்தை அலங்கரித்த பெருமையும் இவர்களுக்கு உண்டு. ‘இன்னும் டென்னிஸ் விளையாட ஆசை தான். ஆனால் உடலை கஷ்டப்படுத்த விரும்பவில்லை. விலகுவதற்கு இதுவே சரியான தருணம்’ என்று அவர்கள் தெரிவித்தனர்.

தனிப்பட்ட சாதனைகளை விட கோப்பையை வெல்வதே முக்கியமானது என பிராவோ கூறியுள்ளார்
போர்ட் ஆப் ஸ்பெயின்:
கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் பொல்லார்ட் தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணியை தோற்கடித்து 4-வது வெற்றியை பதிவு செய்தது. இந்த ஆட்டத்தில் 2 விக்கெட் வீழ்த்திய டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆல்-ரவுண்டர் வெய்ன் பிராவோ ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விக்கெட்டையும் சேர்த்து ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டிகளில் பிராவோவின் விக்கெட் எண்ணிக்கை 501 ஆக (459 ஆட்டம்) உயர்ந்தது. இதன் மூலம் 20 ஓவர் போட்டிகளில் 500 விக்கெட் மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். இந்த பட்டியலில் இலங்கையின் மலிங்கா (390 விக்கெட்) 2-வது இடத்தில் உள்ளார்.
பின்னர் 36 வயதான பிராவோ கூறுகையில், ‘எந்த ஒரு தொடரில் விளையாடினாலும் விக்கெட் எடுப்பதை தவிர கோப்பையை வெல்லும் போதே மிகவும் மகிழ்ச்சியும், உற்சாகமும் அடைகிறேன். என்னை பொறுத்தவரை இது போன்ற தனிப்பட்ட சாதனைகளை விட கோப்பையை வெல்வதே முக்கியமானது. நான், பொல்லார்ட், ரஸ்செல் ஆகியோர் இணைந்து உலகம் முழுவதும் அதிகமான 20 ஓவர் போட்டித் தொடர்களை வென்று இருப்பதாக நினைக்கிறேன். அதற்காகத்தான் நாங்கள் விளையாடுகிறோம்’ என்றார்.

தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பராக பணியாற்ற வாய்ப்புள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். அவர் தென்ஆப்பிரிக்கா அணியில் அறிமுகம் ஆனபோது விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக செயல்பட்டார். அதன்பின் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி விக்கெட் கீப்பர் பணியை தவிர்த்தார்.
ஐபிஎல் தொடரில் டி வில்லியர்ஸ் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த முறை சாதித்தே ஆக வேண்டும் என்ற நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி உள்ளது.
இதனால் தொடக்கத்தில் இருந்தே பேலன்ஸ் அணியை களம் இறக்க விரும்புகிறது. இதனால் டி வில்லியர்ஸை விக்கெட் கீப்பராக பணியாற்ற வைக்க அந்த அணி ஆர்வம் காட்டி வருகிறது.
இதுகுறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் கூறுகையில் ‘‘தரமான அணியை உருவாக்க ஏராளமான ஆலோசனைகள் நடத்தியுள்ளோம். டி வில்லியர்ஸ் ஏற்கனவே தென்ஆப்பிரிக்கா அணிக்காக விக்கெட் கீப்பராக செயல்பட்டவர். ஆகவே, இதுகுறித்து விவாதிக்கப்படும் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்.
இருந்தாலும் சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப சரியான பேலன்ஸ் கொண்ட அணியை கொண்டு விளையாடுவோம். எங்கள் அணியின் மிகப்பெரிய பகுதியாக அவர் உள்ளார். பல ஆண்டுகளாக சிறந்த ஆட்டத்தை கொடுத்துள்ளார்’’ என்றார்.
ஏபி டி வில்லியர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியிலும் விக்கெட் கீப்பராக பணியாற்றியுள்ளார்.
நாங்கள் இனிமேல் மூன்று பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. நாங்கள் மூன்று பேர்! என்று விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்-க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதியில் ஒசாகா எலிஸ் மெர்ட்டன்ஸ்-ஐ எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார். ஒசாகாவின் முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜேக்கப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சிலர் போலீசார் மீது கற்கலை வீசியும், அருகில் இருந்த கார்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கலவரத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைக்கும் விதமாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டங்களுக்கு நடுவே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு இளைஞன் போராட்டக்காரர்களை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டான். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து ஒட முயற்சித்தனர்.
ஆனாலும், அந்த இளைஞன் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அதில் இரண்டு பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயங்களுடன் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.