என் மலர்
விளையாட்டு
நாங்கள் இனிமேல் மூன்று பேர், ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மா ஆகியோர் காதலித்து வந்தனர். இருவரும் கடந்த 2017-ம் ஆண்டு இத்தாலியில் திருமணம் செய்து கொண்டனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்களுக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் தற்போது அனுஷ்கா ஷர்மா கர்ப்பமாக உள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் குழந்தை பிறக்க இருக்கிறது. நாங்கள் மூன்று பேர்! என்று விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளார்.

கருப்பினத்தவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சின்சினாட்டி அரையிறுதியில் இருந்து நவோமி ஒசாகா விலகியுள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ்-க்கு பயிற்சியாக கருதப்படும் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஜப்பானைச் சேர்ந்த நவோமி ஒசாகா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
அரையிறுதியில் ஒசாகா எலிஸ் மெர்ட்டன்ஸ்-ஐ எதிர்கொள்கிறார். இந்த ஆட்டம் இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது.
இந்நிலையில் கருப்பினத்தவரான ஜேக்கப் பிளேக் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அரையிறுதியில் இருந்து விலகுவதாக நவோமி ஒசாகா தெரிவித்துள்ளார். ஒசாகாவின் முடிவு டென்னிஸ் அரங்கில் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, விஸ்கான்சின் மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் தனது காரில் ஏற முயற்சித்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் காருக்கு அருகே அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு பின்னாலிருந்து துப்பாக்கியால் பலமுறை சுட்டார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த ஜேக்கப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது நிலைமை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேக்கப் பிளேக் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலை கண்டித்து அமெரிக்க முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஜேக்கப் பிளேக் மீதான தாக்குதலை கண்டித்து விஸ்கான்சின் மாகாணத்தின் கினோஷா நகரில் நேற்று இரவும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றது. இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டு போலீசாருக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
சிலர் போலீசார் மீது கற்கலை வீசியும், அருகில் இருந்த கார்களின் கண்ணாடியை அடித்து நொறுக்கியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக கலவரத்தில் ஈடுப்பட்டனர்.
இதனால் அப்பகுதிக்கு விரைந்த போலீசார் போராட்டக்காரர்களை கலைக்கும் விதமாக கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடியும் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டங்களுக்கு நடுவே நவீன ரக துப்பாக்கியுடன் நுழைந்த ஒரு இளைஞன் போராட்டக்காரர்களை நோக்கி பல முறை துப்பாக்கியால் சுட்டான். இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத போராட்டக்காரர்கள் அப்பகுதியில் இருந்து ஒட முயற்சித்தனர்.
ஆனாலும், அந்த இளைஞன் தொடர்ந்து நடத்திய துப்பாக்கிச்சூட்டில் போராட்டக்காரர்கள் 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அதில் இரண்டு பேர் ஏற்கனவே உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயங்களுடன் ஒருவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் குறைந்தது 400 விக்கெட்டாவது வீழ்த்த வேண்டும் என யுவராஜ் சிங் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஐந்து விக்கெட் வீழ்த்தினார்.
2-வது இன்னிங்சில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார். 2-வதாக அசார் அலியை வீழ்த்தும்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ராவும் வாழ்த்து தெரிவித்திருந்தார். தனது டுவிட்டர் பக்கத்தில் ‘குறிப்பிடத்தகுந்த சாதனைக்கு வாழ்த்துக்கள். உங்களுடைய ஆர்வம், வலிமை மற்றும் இயக்கம் விதிவிலக்கானவை. உங்களுடைய எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள்’’ எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் ‘‘உங்களுடைய டார்கெட் 400, குறைந்தபட்சம்’’ என பும்ராவிற்கு அன்பு கட்டளை விடுத்துள்ளார்.
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதல் இடத்தையும், ரோகித் சர்மா 2-வது இடத்திலும் நீடிக்கின்றனர்.
ஐசிசி நேற்று அணிகள் மற்றும் வீரர்களுக்கான தரவரிசையை வெளியிட்டது. ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலிடம் வகிக்கிறார். ரோகித் சர்மா 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் முதல் இடத்தையும், கேஎல் ராகுல் 2-வது இடத்திலும் உள்ளனர். ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் முதல் இடத்திலும், விராட் கோலி 2-வது இடத்திலும், மற்றொரு ஆஸ்திரேலிய வீரர்கள் மார்னஸ் லாபஸ்சேனே 3-வது இடத்திலும் உள்ளனர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் டிரென்ட் போல்ட் முதல் இடத்தையும், பும்ரா 2-வது இடத்திலும், டெஸ்ட் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் பேட் கம்மின்ஸ் முதல் இடத்திலும், டி20-க்கான பந்து வீச்சு தரவரிசையில் ரஷித் கான் முதல் இடத்திலும் உள்ளனர்.
அணிகளுக்கான தரவரிசையில் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கான தரவரிசையில் 3-வது இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 2-வது இடத்திலும் உள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஏழு விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சு தரவரிசையில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங் ‘மாஸ்க் போடு’ என தமிழில் பேசி விழப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங். இவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறது. ஐபிஎல் போட்டியின் போது அடிக்கடி தமிழில் டுவீட் செய்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்.
கொரோனாவால் இந்தியாவில் போட்டியை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் இந்த முறை ஐபிஎல் போட்டிகள் ஐக்கி்ய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது.
இதற்காக ஹர்பஜன் சிங் அங்கு சென்றுள்ளார். தற்போது கொரோனாக் காலம் என்பதால் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். இதனை வலியுறுத்தும் வகையில் வெளியில் செல்லும்போது மாஸ்க் போடு என தமிழில் பேசிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.
அதில் ‘‘வண்ணக்கம் சென்னை, தற்போது இது மிக மிக அவசியம். வெளியில் செல்லும்போது மாஸ்க் போடு’’ எனத் தெரிவித்துள்ளார். தனது வீடியோவுடன் சென்னை போலீஸ் பக்கத்தை டேக் செய்துள்ளார்.
Mask podu @ChennaiIPL 😷😷 @chennaipolice_pic.twitter.com/qZBIRVt74g
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 26, 2020
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச் கால்இறுதிக்கு முன்னேறினார். செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுடன் வெளியேறினார்.
நியூயார்க்:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-2, 6-4 என்ற நேர்செட்டில் டெனிஸ் சான்ட்கிரினை (அமெரிக்கா) தோற்கடித்து கால்இறுதியை எட்டினார். ஜோகோவிச் இந்த சீசனில் தொடர்ச்சியாக பெற்ற 20-வது வெற்றி இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 30-வது இடத்தில் இருக்கும் மிலோஸ் ராவ்னிக் (கனடா) 6-2, 6-2 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஆன்டி முர்ரேவை (இங்கிலாந்து) வெளியேற்றி 5-வது முறையாக கால்இறுதிக்குள் நுழைந்தார். முர்ரேவிடம் இதற்கு முன்பு 8 முறை தோல்வி அடைந்த ராவ்னிக் அவருக்கு எதிராக பதிவு செய்த முதல் வெற்றி இதுவாகும். சிட்சிபாஸ் (கிரீஸ்), டேனில் மெட்விடேவ் (ரஷியா), கிராஜினோவிச் (செர்பியா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோரும் கால்இறுதியை உறுதி செய்தனர்.
பெண்கள் ஒற்றையர் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-5, 6-7 (5-7), 1-6 என்ற செட் கணக்கில் கிரீஸ் மங்கை மரியா சக்காரியிடம் அதிர்ச்சிகரமாக தோற்று நடையை கட்டினார். 2 மணி 17 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் முதல் செட்டை வென்று 2-வது செட்டில் 5-3 என்ற கணக்கில் முன்னிலை வகித்த செரீனா தனது தவறான ஷாட்களால் சரிவை சந்தித்ததுடன், டைபிரேக்கரில் 4-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றும் செட்டை கைப்பற்றும் வாய்ப்பை கோட்டை விட்டார். கடைசி செட்டில் கால் வலியை சமாளித்து ஆடிய செரீனா எதிராளிக்கு ஈடுகொடுக்க முடியாமல் சரண் அடைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் 11-ம் நிலை வீராங்கனை சபலென்கா (பெலாரஸ்) 2-6, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த அமெரிக்க வீராங்கனை ஜெசிகா பெகுலாவிடம் தோல்வி அடைந்து ஏமாற்றத்திற்கு உள்ளானார். அதே சமயம் நவோமி ஒசாகா (ஜப்பான்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து), அஸரென்கா (பெலாரஸ்), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னால் 700 விக்கெட் வீழ்த்த முடியும் என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் கூறியுள்ளார்.
லண்டன்:
சவுதம்டனில் நடந்த இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிந்தது. இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த போதிலும் மழை புகுந்து கெடுத்து விட்டது. தொடரை 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
இந்த டெஸ்டின் கடைசி நாளில் பாகிஸ்தான் கேப்டன் அசார் அலியின் விக்கெட்டை இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் சாய்த்தார். இது ஆண்டர்சனின் 600-வது (156 டெஸ்ட்) விக்கெட்டாகும். இதன் மூலம் இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோருக்கு பிறகு 600 விக்கெட் மைல்கல்லை எட்டிய 4-வது பவுலர், வேகப்பந்து வீச்சாளர்களில் இச்சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற சிறப்பை ஆண்டர்சன் பெற்றார்.
அவருக்கு பல வீரர்கள் சமூக வலைதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘600 விக்கெட் என்ற அற்புதமான சாதனை படைத்த ஆண்டர்சனுக்கு வாழ்த்துகள். நான் எதிர்கொண்ட சிறந்த பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர்’ என்றார். ‘600 விக்கெட் பட்டியலில் உங்களை வரவேற்கிறேன். ஒரு வேகப்பந்து வீச்சாளரிடம் இருந்து வெளிப்பட்ட மிகப்பெரிய முயற்சி இது’ என்று இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் கும்பிளே பாராட்டியுள்ளார்.
தெண்டுல்கர், மெக்ராத் பாராட்டு
ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளைன் மெக்ராத் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கர் எப்படி பேட்டிங்கில் உச்சத்தை தொட்டாரோ அதே போல் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன். டெஸ்டில் தெண்டுல்கர் குவித்துள்ள ரன்களையோ (15,921 ரன்), அவர் பங்கேற்ற ஆட்டங்களின் எண்ணிக்கையையோ (200 டெஸ்ட்) யாராலும் எட்டிப்பிடிக்க முடியாது. இதே போல் வேகப்பந்து வீச்சில் ஆண்டர்சன் உயரிய தரத்தை நிர்ணயித்து இருக்கிறார். ஆண்டர்சனுக்கு நிகரான திறமை என்னிடம் கிடையாது. இரு புறமும் பந்தை கட்டுக்கோப்புடன் ஸ்விங் செய்வதில் அவரை மிஞ்ச முடியாது’ என்று புகழாரம் சூட்டியிருக்கிறார்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை அதிகமுறை அவுட் செய்தவர், ஆண்டர்சன். தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘வியப்புக்குரிய சாதனை இது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 17 ஆண்டுகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் என்றால் அது அவரது மனஉறுதி, விடா முயற்சி, துல்லியமான பந்து வீச்சுக்கு சான்று’ என்றார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ‘இந்த மைல்கல் தனித்துவமானது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் 156 டெஸ்டுகளில் ஆடுவது நினைத்து பார்க்க முடியாதது. உங்கள் சாதனை, ஒவ்வொரு இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை கொடுக்கும்’ என்றார்.
தொடர்ந்து ஆடுவேன்
சாதனைக்கு பிறகு பேட்டி அளித்த 38 வயதான ஆண்டர்சன் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டிடம் சிறிது நேரம் விவாதித்தேன். ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டியின் போது (2021-22-ம் ஆண்டு ஆஷஸ் தொடர்) நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக கூறினார். அதில் என்னால் ஏன் விளையாட முடியாது? உடல்தகுதியை சீரியமுறையில் பராமரிக்கவும், ஆட்டத்திறனை மேம்படுத்தவும் கடினமாக உழைக்கிறேன். தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு அணித்தேர்வுக்கு தயாராக இருப்பேன்.
இங்கிலாந்து அணிக்கு இன்னும் என்னால் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நம்புகிறேன். இங்கிலாந்து அணிக்காக எனது கடைசி டெஸ்ட் போட்டி வெற்றியை பெற்று விட்டதாக நினைக்கவில்லை. என்னால் 700 விக்கெட் இலக்கை எட்ட முடியுமா? என்றால் ஏன் முடியாது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பில் நாங்கள் நீடிக்கிறோம். எங்களுக்கு நிறைய டெஸ்ட் போட்டிகள் வர உள்ளன. அதில் நாங்கள் வெற்றி பெற வேண்டும். அதுவே எனது ஆர்வமாக இருக்கிறது. இப்போதும் ஒவ்வொரு நாளும் பயிற்சியில் ஈடுபடுவதை விரும்புகிறேன்’ என்றார்.

டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை டுவெய்ன் பிராவோ பெற்றார்.
டிரிண்டட்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 36 வயதான டுவெய்ன் பிராவோ. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார்.
தற்போது வெஸ்ட் இண்டீசின் கரிபியன் தீவுகளில் நடந்து வரும் கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக டுவெய்ன் பிராவோ விளையாடி வருகிறார்.
இந்நிலையில், போர்ட் ஆஃப் ஸ்பெயின் நகரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி செயிண்ட் லூக்கா சோகஸ் அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் டிரின்பாகோ வீரர் டுவெய்ன் பிராவோ வீசிய பந்தில் லூக்கா அணியின் கார்ன்வெல் போல்ட் ஆகி வெளியேறினார்.
அவரது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பிராவோ பெற்றார். மேலும் கரிபியன் பிரிமீயர் லீக்கில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் பெருமையையும் பிராவோ தட்டிச்சென்றார்.
டி20 கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனைபடைத்துள்ள போதும் டி20 போட்டியில் 400 விக்கெட்டுகளை கடந்த ஒரே வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரும் பிராவோவே
ஆவார்.
டி20 போட்டியில் அவருக்கு அடுத்த படியாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளவர் இலங்கை அணியின் லசித் மலிங்கா ஆகும். மலிங்கா டி20 கிரிக்கெட்டில் இதுவரை 390 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே டி20-யில் 400 விக்கெட்டுகளை கடந்த ஒரே வீரர் என்ற பெருமையில் இருந்து தற்போது 500 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையும் பிராவோவை சேர்ந்துள்ளது.
பார்சிலோனா அணிக்காக விளையாடி வரும் மெஸ்சி, தனது ஒப்பந்தத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி. இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மெஸ்சி ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என பேயர்ன் முனிச் அணி துவம்சம் செய்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
மேலும், மெஸ்சிக்கான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா அணி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது.
முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா அணிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
மெஸ்சியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன் டிரான்ஸ்பர் வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான டிரான்ஸ்பர் தொகையாக 700 மில்லியன் யூரோ பார்சிலோனா நிர்ணயிக்கும் எனத் தெரிகிறது.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் திறமையை வெளிக்கொண்டு வர விரும்புகிறேன் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் சுரேஷ் ரெய்னா. இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் கடந்த 15-ந்தேதி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
சுரேஷ் ரெய்னா உத்தர பிரதேச மாநிலத்தில் வசித்து வருகிறார். இவர் ஜம்மு-காஷ்மீரில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள சிறுவர்களுக்கு பயிற்சி அளித்து திறமைகளை வெளிக்கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதற்காக அம்மாநில போலீஸ் டிஜிபி-யிடம் அனுமதி கோரியுள்ளார்.
நான் 15 ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் துறையில் ஒரு அடையாளத்தை பதித்துள்ளேன், இதனால் நான் பல ஆண்டுகளாக கற்றுக்கொண்ட அறிவு மற்றும் திறன்களைப் பயன்படுத்திக்கொண்டு அடுத்த தலைமுறைக்கு அதை கொண்டு செல்ல விரும்புகிறேன்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள இளைஞர்களை திறமைகளை வெளிக்கொண்டு வருவதுதான் என்னுடைய நோக்கம். ஏற்கனவே நான் காஷ்மீர் பண்டிட்தான். எனது அப்பா திரிலோக் சந்த் அங்கிருந்து வந்தவர்தான். அம்மா தரம்சாலா மாநிலத்தைச் சேர்ந்தவர்’’ எனத் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியின் போது 50 வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:
8 அணிகள் இடையிலான 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமை அதிகாரிகள், ஊழியர்கள் 9 பேர் அமீரகம் செல்ல உள்ளனர்.
அவசியம் எனில், அமீரகத்தின் தேசிய ஊக்கமருந்து தடுப்பு முகமையின் உதவியையும் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் போட்டி இல்லாத காலங்களிலும், ஐ.பி.எல். போட்டியின் போதும் வீரர்களிடம் சிறுநீர் மாதிரியையும், தேவைப்பட்டால் ரத்த மாதிரியையும் சேகரித்து பரிசோதனை செய்வார்கள்.
குறைந்தது 50 வீரர்களிடம் ஊக்கமருந்து சோதனை நடத்த திட்டமிட்டு உள்ளதாக ஊக்கமருந்து தடுப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. எளிதில் மாதிரிகளை எடுத்து சோதிக்க வசதியாக மூன்று மைதானங்களிலும், இரண்டு பயிற்சி இடங்களிலும் ஊக்கமருந்து தடுப்பு கட்டுப்பாடு மையங்கள் அமைக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்தை ஊக்கமருந்து தடுப்பு முகமை கேட்டுக் கொண்டுள்ளது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வெய்ன் பிராவோ பதில் அளித்தார்.
சென்னை:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் 36 வயதான வெய்ன் பிராவோ ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீசில் நடந்து வரும் கரிபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட்டில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக களம் கண்டுள்ள வெய்ன் பிராவோ ‘தினத்தந்தி’க்கு சிறப்பு பேட்டி அளித்தார். இ-மெயில் மூலம் அவரிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: டோனியின் ஓய்வு பற்றி உங்கள் கருத்து? அவரிடம் உங்களுக்கு பிடித்தமான அம்சங்கள் என்ன?
பதில்: டோனியின் ஓய்வு உண்மையில் ஒரு பெரிய விஷயமல்ல. அவர் மிகச்சிறந்த கிரிக்கெட் வாழ்க்கையை பெற்றிருந்தார். நிறைய சாதித்து காட்டினார், ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே அவரை நேசித்தது. அது தான் முக்கியம். திறமையான பல இளம் வீரர்களுக்கு அவர் உதவியிருக்கிறார். அதன் மூலம் அவர்கள் இன்று நல்ல நிலையை எட்டியிருக்கிறார்கள். அவரிடம் எனக்கு பிடித்தமான விஷயம் எது வென்றால், தன்னடக்கமிக்க மனிதர்களில் ஒருவர். மிகவும் நேர்மையானவர். இந்த விளையாட்டை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறார். விளையாடும் போது மற்றவர்களையும் சிறப்பாக செயல்பட ஊக்கப்படுத்துகிறார்.
கேள்வி: சி.பி.எல். போட்டியில் உங்களது செயல்பாடு எப்படி இருக்கிறது? சென்னை அணியுடன் எப்போது இணைகிறீர்கள்?
பதில்: எப்போதுமே நான் எனது தனிப்பட்ட சாதனைகள், செயல்பாட்டை உற்றுநோக்குவதில்லை. ஒரு அணியாக எப்படி விளையாடுகிறோம் என்பதைத் தான் பார்ப்பேன். எந்த ஒரு தொடரில் பங்கேற்றாலும் வெற்றிக்காக மட்டுமே ஆடுவேன். சி.பி.எல். கிரிக்கெட்டில் இந்த சீசனில் இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி 3-லிலும் வெற்று பெற்று முதலிடம் வகிக்கும் நாங்கள் அதை தொடர்ந்து தக்கவைக்கும் முனைப்புடன் உள்ளோம். கடந்த சீசனில் தோல்வியை தழுவியதால் வெற்றிக்கு உதவிட வேண்டும் என்ற உத்வேகத்துடன் இருக்கிறேன். சி.பி.எல். போட்டி செப்டம்பர் 10-ந்தேதி நிறைவு பெறுகிறது. அனேகமாக செப்.11 அல்லது 12-ந்தேதி டிரினிடாட்டில் இருந்து அமீரகம் புறப்பட்டு சென்னை அணியுடன் இணைவேன்.
கேள்வி: இந்த ஐ.பி.எல்.-ல் மகுடம் சூடும் வாய்ப்பு எந்த அணிக்கு இருக்கிறது. சென்னை சூப்பர் கிங்சுக்கு சவாலாக திகழும் அணி எது?
பதில்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் எல்லா அணிகளுமே சென்னை சூப்பர் கிங்சுக்கு சவாலானவை தான். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ் தான் சென்னை அணிக்கு எப்போதும் கடினமான அணியாக இருந்து வருகிறது. ஐ.பி.எல். வரலாற்றை புரட்டிப்பார்த்தால் மும்பை இந்தியன்ஸ் எப்படிப்பட்ட கடினமான எதிரணி என்பது தெரியும். ஆனால் ஐ.பி.எல்.-ல் எல்லா அணிகளும் சிறந்தவை தான். அனைத்து அணிகளையும் சென்னை சூப்பர் கிங்ஸ் மதிக்கிறது. இதே போல் மற்ற அணிகளும் சென்னை அணி மீது மதிப்பும், மரியாதையும் வைத்து உள்ளன. இது கடும் போட்டியும், சவாலும் நிறைந்த தொடர். எந்த அணியாலும் ஜெயிக்க முடியும்.
கேள்வி: மைதானத்தில் ரசிகர்கள் இன்றி விளையாடுவது குறித்து....?
பதில்: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 50-60 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவோம். ஆனால் இப்போது அதற்கு சாத்தியமில்லை. ரசிகர்கள் இல்லாவிட்டாலும் தீவிரத்தன்மையும், கிரிக்கெட் ஆட்டத்தின் தரமும் உயர்ந்த நிலையிலேயே இருக்கும் என்று நினைக்கிறேன். உலகம் முழுவதும் டி.வி. மூலம் இந்த போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கப்போகிறார்கள். அதனால் ரசிகர்கள் இல்லாதது கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு பிரச்சினையாக இருக்காது.
கேள்வி: உங்களது வருங்காலத் திட்டம் என்ன?
பதில்: எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பது யாருக்குமே தெரியாது. 2019-ம் ஆண்டில், 2020-ல் குறிப்பிட்ட இலக்குகளை அடைய திட்டமிட்டோம். ஆனால் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது (கொரோனா பாதிப்பு) என்பதை பாருங்கள். என்னை பொறுத்தவரை இப்போது எந்த பாதிப்பும் இன்றி இருக்க வேண்டும். அது தான் முக்கியம். ஒவ்வொரு நாளும் என்னையும், குடும்பத்தினரையும் பாதுகாப்பான சூழலில் வைத்திருப்பதில் கவனம் செலுத்துகிறேன். அதன் பிறகு தான் மற்றது எல்லாம். உலக அளவில் கொரோனாவின் தாக்கமும், பயணக்கட்டுப்பாடுகளும் இன்னும் நீடிப்பதால் எதையும் திட்டமிட முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு நாளாக விளையாடுவது மட்டுமே இப்போது நிஜம்.
இவ்வாறு பிராவோ கூறினார்.