என் மலர்
விளையாட்டு
தலைமை பயிற்சியாளர் அனில் கும்ப்ளே எனது கேப்டன் பணியை எளிமையாக்கிவிடுவார் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் உள்ளார். முதன்முறையாக அவர் கேப்டன் பதவியை ஏற்றுள்ளார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக அனில் கும்ப்ளே உள்ளார்.
அனில் கும்ப்ளே எனது கேப்டன் பணியை எளிமையாக்கிவிடுவார் என்று கேஎல் ராகுல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கேஎல் ராகுல் கூறுகையில் ‘‘அனில் கும்ப்ளே போன்ற ஒருவர் அருகில் இருந்து எனக்கு உதவும்போது இந்த சீசன் மகத்தானதாக இருக்கும். நாங்கள் இருவரும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவருடன் கிரிக்கெட்டிற்கு வெளியேயும் சிறந்த அளவில் நட்பு வைத்துள்ளேன்.
அனில் கும்ப்ளே எனது கேப்டன் பதவியை மிகவும் எளிமையாக்கிவிடுவார் என்று நினைக்கிறேன். பெரும்பாலான திட்டங்கனை அவர் வகுத்து விடுவார். நான் மைதானம் சென்று அந்த திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவ்வளவுதான்.
இதற்கு முன்பும் மேக்ஸ்வெல் பஞ்சாப் அணிக்காக அதிக அளவில் ரன்கள் குவித்துள்ளார். அவர் எங்கள் அணிக்கு தேவை என்பதால் ஆக்சனில் மிகவும் தெளிவாக இருந்தோம். அவருடைய நாட்களில் எந்தவொரு பந்து வீச்சாளரையும் துவம்சம் செய்துவிடுவார். கடந்த சில சீசனில் மிடில் ஆர்டர் வரிசையில் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மேன்களை இழந்து விட்டோம்’’ என்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது 600 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. மழையால் ஆட்டம் அடிக்கடி பாதிக்கப்பட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.
இந்த போட்டிக்கு முன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 593 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். முதல் இன்னி்ங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்தியதால் 598 விக்கெட் ஆனது.
2-வது இன்னிங்சில் அபித் அலியை வீழ்த்தி 599-ஐ எட்டினார். நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியின் அசார் அலியை அவுட்டாக்கி 600 விக்கெட் வீழ்த்தி சாதனைப்படைத்தார்.
இதன்மூலம் 500 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரரும், முதல் வேகப்பந்து வீச்சாளரும் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 563 விக்கெட்டும், வெஸ்ட் இண்டீசின் வால்ஷ் 519 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.
சுழற்பந்து வீச்சாளர்களில் முத்தையா முரளீரதன் 800 விக்கெட்டும், வார்னே 708 விக்கெட்டும், கும்ப்ளே 619 வி்க்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதன்முறையாக 600 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைக் குறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘600 விக்கெட் என்ற நம்பமுடியாத சாதனையை எட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்துக்கள. நான் சந்தித்ததில் மிகவும் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
சவுத்தாம்ப்டன் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து தொடரை கைப்பற்றியது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 583 ரன்கள் ஏடுத்திருந்த நிலையில் தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி இரட்டை சதம் அடித்து 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்ன்ங்சை ஆடத்தொடங்கியது. ஆனால் இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 273 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
அந்த அணியின் அசார் அலி அதிகபட்சமாக 141 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இங்கிலாந்தை விட 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த பாகிஸ்தான் பாலோ ஆன் ஆனது.
இதனால், பாகிஸ்தான் அணி போட்டியின் 4-வது நாளான நேற்று முன்தினம் தனது 2-வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது. 56 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழந்து 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அந்த அணியின் அசார் அலி 29 ரன்களுடனும் பாபர் அசாம் 4 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. பாகிஸ்தான் வீரர்கள் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினர். அவர்களது விக்கெட்டுகளை வீழ்த்த இங்கிலாந்து கடுமையான முயற்சி மேற்கொண்டது.
ஆனால் பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்திருந்த நிலையில் போட்டியின் கடைசி நாளான 5-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் 3-வது டெஸ்ட் போட்டி டிரா ஆனதாக அறிவிக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியில் பாப அசாம் 63 ரன்களுடனும் பவாத் ஆலம் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து வீரர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி டெஸ்ட் வரலாற்றில் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த போட்டி சமனி முடிந்தாலும் முதல் போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் 1-0 என்ற புள்ளிகள் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது.
ஆட்டநாயகன் விருது இங்கிலாந்து வீரர் கிராவ்லிக்கு வழங்கப்பட்டது. தொடர்நாயகன் விருது இங்கிலாந்து வீரர் பட்லருக்கும், பாகிஸ்தான் வீரர் முகமது ரிஷ்வானுக்கும் வழங்கப்பட்டது.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் நோவக் ஜோகோவிச், செரீனா வில்லியம்ஸ் 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
நியூயார்க்:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் கழுத்து வலிக்கு சிகிச்சை பெற்று ஆடிய நம்பர் ஒன் வீரரான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 7-6 (7-2), 6-4 என்ற நேர்செட்டில் ரிச்சர்ட்ஸ் பெரான்கிஸ்சை (லிதுவேனியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். ஒலிம்பிக் சாம்பியனான ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 6-3, 3-6, 7-5 என்ற செட் கணக்கில் 7-ம் நிலை வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) வெளியேற்றினார். மற்ற ஆட்டங்களில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 2-6, 1-6 என்ற நேர்செட்டில் செர்பியா வீரர் கிராஜினோவிச்சிடமும், பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 5-7, 6-4, 2-6 என்ற செட் கணக்கில் தகுதி சுற்று மூலம் பிரதான சுற்றுக்கு வந்த மார்டோன் புசோவிக்கிடமும் (ஹங்கேரி) அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.
பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (8-6), 3-6, 7-6 (7-0) என்ற செட் கணக்கில் நெதர்லாந்தின் அரன்ட்சா ருஸ்சை 2 மணி 48 நிமிடங்கள் போராடி தோற்கடித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார். நவோமி ஒசாகா (ஜப்பான்), சபலென்கா (பெலாரஸ்), ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) ஆகியோரும் 3-வது சுற்றை எட்டினர்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் 600 விக்கெட்டுகள் வீழ்த்தி வேகப்பந்து வீச்சாளர்களில் முதலாமானவர் என்ற பெருமையை 38 வயதான ஆண்டர்சன் பெற்றார்.
சவுதம்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து 8 விக்கெட்டுக்கு 583 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 273 ரன்களுக்கு ஆட்டம் இழந்து பாலோ-ஆன் ஆனது.
இங்கிலாந்து ‘பாலோ-ஆன்’ வழங்கியதால் 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 4-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 100 ரன்கள் எடுத்திருந்தது. கேப்டன் அசார் அலி (29 ரன்), துணை கேப்டன் பாபர் அசாம் (4 ரன்) களத்தில் இருந்தனர். 4-வது நாளில் மழையால் ஆட்டம் வெகுவாக பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாளான நேற்றும் மழை குறுக்கிட்டது. முந்தைய நாள் இரவு மற்றும் காலையில் பெய்த மழையால் ஆடுகளம் ஈரப்பதமானது. இதனால் 4 மணி நேரம் ஆட்டம் பாதிக்கப்பட்டது. ஆடுகளம் நன்கு காய்ந்து தேனீர் இடைவேளைக்கு பிறகே ஆட்டம் தொடங்கியது. ‘டிரா’ செய்யும் நோக்குடன் பாகிஸ்தான் வீரர்கள் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் அசார் அலி (31 ரன்), இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட்டிடம் கேட்ச் ஆனார். இது ஆண்டர்சனின் 600-வது டெஸ்ட் விக்கெட் (156 ஆட்டம்) ஆகும். இந்த மைல்கல்லை எட்டிய 4-வது பவுலர், வேகப்பந்து வீச்சாளர்களில் முதலாமானவர் என்ற பெருமையை 38 வயதான ஆண்டர்சன் பெற்றார். இச்சாதனை பட்டியலில் முதல் 3 இடங்களில் சுழற்பந்து வீச்சு சூறாவளிகளான இலங்கையின் முரளிதரன் (800 விக்கெட்), ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (708 விக்கெட்), இந்தியாவின் கும்பிளே (619 விக்கெட்) ஆகியோர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 83.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 187 ரன்கள் எடுத்திருந்த போது, இந்த டெஸ்ட் டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வெல்வது 2010-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐபில் டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிட்டல்ஸ். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ளார். பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சொந்த வேலைக்காரணமாக விலகியுள்ளார்.
இதனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரியான் ஹாரிஸ்க்கு பயிற்சியாளராக நல்ல அனுபவம் உள்ளது.
பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் பயிற்சியளராக இருந்துள்ளார். அதன்பின் தேசிய அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். டி20-யில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக்கி பாண்டிங்கிக்கு துணையாக முகமது கைஃப், சாமுவேல் பத்ரி, விஜய் தாஹியா ஆகியோர் உள்ளனர்.
இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு மூலம் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ஊக்கமருந்து சோதனை நடைபெற இருக்கிறது.
ஐபிஎல் கிரிக்கெட் டி20 லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்காக 8 அணி வீரர்களும் துபாய், அபு தாபி, சார்ஜா சென்றுள்ளனர். வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் தற்போது ஒரு வாரக்கால தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.
இந்நிலையில் விளையாடும் வீரர்களுக்கு ஊக்க மருந்து சோதனை மேற்கொள்வதற்காக தேசிய ஊக்கமருத்து எதிர்ப்பு அமைப்பின் மூன்று உயர் அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரகம் செல்ல இருக்கின்றனர். அவர்களுடன் ஆறு ஊக்கமருந்து கட்டுப்பாடு அதிகாரிகள் செல்கின்றனர்.
விளையாட்டு போட்டியின்போதும், விளையாட்டு போட்டி இல்லாத நிலையிலும் 50 மாதிரிகளை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் அதிகாரிகள் தேவைப்படும் பட்சத்தில் ஐக்கிய அரசு அமீரகத்தின் ஊக்கமருத்து தடுப்பு அமைப்பிடம் இருந்து அழைத்துக் கொள்வார்கள்.
பரிசோதனைக்காக செல்லும் அதிகாரிகளும் ஐபிஎல் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார்கள் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆகும் செலவை தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு ஏற்குமா? அல்லது பிசிசிஐ ஏற்குமா? என்பது தெரியவில்லை.
பிசிசிஐ-யின் ஐந்து ஊக்கமருந்து தடுப்பு நிலையத்தை அமைக்கும்படி தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
ஒரு தவறு செய்தால் கூட ஒட்டுமொத்த தொடரையும் பாழாக்கிவிடும் என விராட் கோலி ஆர்சிபி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீகரம் சென்றுள்ளனர். தற்போது ஒருவார தனிமைப்படுத்துதலில் உள்ளனர். இந்த நேரத்தில் முதன்முறையாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி அணியின் சக வீரர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
அப்போது ஒரு தவறு செய்தால் கூட ஒட்டுமொத்த தொடரையும் பாழாக்கிவிடும் என விராட் கோலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘அவர்கள் என்ன சொன்னார்களோ அதை நான் பின்பற்ற வேண்டும். பாதுபாப்பு வளையம் என்பதில் நான் அனைவரும் ஒரே சிந்தனையுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன். எந்த நேரத்திலும் இதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். இதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஏனென்றால், ஒரு தவறு செய்தால், நம்முடன் உள்ள ஒருவரால் ஒட்டுமொத்த தொடரும் பாழாகிவிடும் என்று நினைக்கிறேன். ஒருவர் கூட இதை விரும்பக்கூடாது’’ என்றார்.
ஒயிட்-பால் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடி வரும் ரோகித் சர்மா போன்று விளையாட விரும்பினேன், சூழ்நிலை அனுதிக்கவில்லை என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளர்.
இந்திய கிரிக்கெட்டில் சாதனை பேட்ஸ்மேன்களில ஒருவர் கவாஸ்கர். டெஸ்ட் போட்டியில் முதன்முதலில் 10 ஆயிரம் ரன்களை கடந்த நபர் என்ற சாதனையைப் படைத்தார். இவர் அதிக பந்துகளை சந்தித்து குறைவான ரன்கள் எடுப்பார். தடுப்பாட்டத்தில் வல்லவர்.
இந்நிலையிலும் நானும் ரோகித் சர்மா போன்று அதிரடியாக விளையாட விரும்பினேன் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடும் ஸ்டைலை பார்க்கும்போது, முதல் ஓவரில் இருந்தே டெஸ்ட் போட்டியிலும் அதிரடியாக விளையாட முடியும். நானும் அதுபோன்று விளையாட விரும்பினேன்.
சூழ்நிலை மற்றும் என்னுடைய திறமையின் மீதான நம்பிக்கை குறைவு என்னை அப்படி விளைாயட அனுமதிக்கவில்லை. ஆனால், அடுத்த தலைமுறை பேட்ஸ்மேன்கள் அதை செய்வதை நான் பார்க்கும்போது, நான் அந்த ஆட்டத்தை மிகவும் ரசிக்கிறேன்.’’ என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான இறுதி டெஸ்டில் பாலோ ஆன் ஆனது பாகிஸ்தான். 4 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 100 ரன்கள் எடுத்துள்ளது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டாம் சிப்லி மற்றும் ரோரி பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோரி 6 ரன்களிலும் சிப்லி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் களமிறங்கிய கிராவ்லி மற்றும் பட்லர் ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.
கிராவ்லி இரட்டை சதம் அடித்து 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்ன்ங்சை ஆடத்தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாம் மசூத் 4 ரன்னிலும் அபித் அலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த பாபர் அசாம் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
3 ஆம் நாள் ஆட்டத்தில் களத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டர் அசார் அலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய போதும் அசார் அலி தனித்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
இறுதியாக பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. அசார் அலி 141 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இதையடுத்து 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், இங்கிலாந்தை விட 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்த பாகிஸ்தான் பாலோ ஆன் ஆனது. இதனால், பாகிஸ்தான் அணி நேற்று தனது 2-வது இன்னிங்சை ஆடத்தொடங்கியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் மற்றும் அபித் அலி ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் ஷான் மசூத் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பிராட் பந்து வீச்சிலும் அபித் அலி 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் பந்துவீச்சிலும் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினர்.
அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் அசார் அலி மற்றும் பாபர் அசாம் ஜோடி நிதின ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் அணி 56 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகள் இழந்து 100 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 4-ம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அசார் அலி 29 ரன்களுடனும் பாபர் அசாம் 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இன்னும் 8 விக்கெட்டுகள் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்தை விட 210 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது. போட்டியில் இன்னும் 1 நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் 8 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றிபெற இங்கிலாந்து முயற்சிக்கும். பாகிஸ்தான் அணி இப்போட்டியை டிரா செய்ய முயற்சிக்கும் என்பதால் நாளைய ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம்
இருக்காது.
தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே 100 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 49) அடித்துள்ளார். அவரது அந்த சாதனையை மற்றவர்கள் எட்டுவது கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடிக்க வேண்டும் என்று விராட்கோலி வெளிப்படையாக பேசாவிட்டாலும், அந்த சாதனை குறித்து அவர் மனதில் நினைத்து இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். தெண்டுல்கரை அடுத்து அந்த சாதனையை எட்டக்கூடியவர் யார்? என்று கேட்டால் விராட்கோலியாயாக தான் இருக்க முடியும். விராட்கோலி குறுகிய காலத்தில் நிறைய சாதனைகள் படைத்து இருக்கிறார். தெண்டுல்கரின் இந்த சாதனையை இந்திய வீரர் ஒருவரால் தான் முறியடிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
தெண்டுல்கரின் சாதனைய முறியடிக்கும் அளவுக்கு திறமையும், உடல் தகுதியும் விராட்கோலிக்கு நிறைவாக இருக்கிறது. விராட்கோலி ஓய்வு பெறும் முன்பு தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி 70 சதங்களுடன் (டெஸ்டில் 27, ஒருநாள் போட்டியில் 43) 3-வது இடத்தில் இருக்கிறார். 71 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே 100 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 49) அடித்துள்ளார். அவரது அந்த சாதனையை மற்றவர்கள் எட்டுவது கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெண்டுல்கரின் சாதனைய முறியடிக்கும் அளவுக்கு திறமையும், உடல் தகுதியும் விராட்கோலிக்கு நிறைவாக இருக்கிறது. விராட்கோலி ஓய்வு பெறும் முன்பு தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி 70 சதங்களுடன் (டெஸ்டில் 27, ஒருநாள் போட்டியில் 43) 3-வது இடத்தில் இருக்கிறார். 71 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜமைக்கா:
உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உசைன் போல்டு தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார் . அப்போது அவருடன் இங்கிலாந்து கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பல்வேறு விளையாட்டு பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து உசைன் போல்டு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சமூகவலைதளத்தில் கொரோனா தொற்றால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து உசைன் போல்டு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சமூகவலைதளத்தில் கொரோனா தொற்றால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020