என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரியான் ஹாரிஸ்
    X
    ரியான் ஹாரிஸ்

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக ரியான் ஹாரிஸ் நியமனம்

    ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
    ஐபில் டி20 லீக்கில் விளையாடும் அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிட்டல்ஸ். இந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் உள்ளார். பந்து வீச்சு பயிற்சியாளராக ஜேம்ஸ் ஹோப்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அவர் சொந்த வேலைக்காரணமாக விலகியுள்ளார்.

    இதனால் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ரியான் ஹாரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். ரியான்  ஹாரிஸ்க்கு பயிற்சியாளராக நல்ல அனுபவம் உள்ளது.

    பிரிஸ்பேனில் உள்ள தேசிய கிரிக்கெட் மையத்தில் பயிற்சியளராக இருந்துள்ளார். அதன்பின் தேசிய அணிக்கும் பயிற்சியாளராக இருந்துள்ளார். டி20-யில் பிரிஸ்பேன் ஹீட் அணியில் பந்து வீச்சு பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார். கடந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ரிக்கி பாண்டிங்கிக்கு துணையாக முகமது கைஃப், சாமுவேல் பத்ரி, விஜய் தாஹியா ஆகியோர் உள்ளனர்.
    Next Story
    ×