என் மலர்
விளையாட்டு
தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே 100 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 49) அடித்துள்ளார். அவரது அந்த சாதனையை மற்றவர்கள் எட்டுவது கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், ‘சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 100 சதங்கள் அடிக்க வேண்டும் என்று விராட்கோலி வெளிப்படையாக பேசாவிட்டாலும், அந்த சாதனை குறித்து அவர் மனதில் நினைத்து இருக்கலாம் என்று நான் நம்புகிறேன். தெண்டுல்கரை அடுத்து அந்த சாதனையை எட்டக்கூடியவர் யார்? என்று கேட்டால் விராட்கோலியாயாக தான் இருக்க முடியும். விராட்கோலி குறுகிய காலத்தில் நிறைய சாதனைகள் படைத்து இருக்கிறார். தெண்டுல்கரின் இந்த சாதனையை இந்திய வீரர் ஒருவரால் தான் முறியடிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
தெண்டுல்கரின் சாதனைய முறியடிக்கும் அளவுக்கு திறமையும், உடல் தகுதியும் விராட்கோலிக்கு நிறைவாக இருக்கிறது. விராட்கோலி ஓய்வு பெறும் முன்பு தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி 70 சதங்களுடன் (டெஸ்டில் 27, ஒருநாள் போட்டியில் 43) 3-வது இடத்தில் இருக்கிறார். 71 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் மட்டுமே 100 சதங்கள் (டெஸ்டில் 51, ஒருநாள் போட்டியில் 49) அடித்துள்ளார். அவரது அந்த சாதனையை மற்றவர்கள் எட்டுவது கடினமான காரியமாக பார்க்கப்படுகிறது. ஆனால் தெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையை விராட்கோலியால் முறியடிக்க முடியும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தெண்டுல்கரின் சாதனைய முறியடிக்கும் அளவுக்கு திறமையும், உடல் தகுதியும் விராட்கோலிக்கு நிறைவாக இருக்கிறது. விராட்கோலி ஓய்வு பெறும் முன்பு தெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் விராட்கோலி 70 சதங்களுடன் (டெஸ்டில் 27, ஒருநாள் போட்டியில் 43) 3-வது இடத்தில் இருக்கிறார். 71 சதங்களுடன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
பிரபல ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜமைக்கா:
உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உசைன் போல்டு தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடினார் . அப்போது அவருடன் இங்கிலாந்து கால்பந்து வீரர் ரஹீம் ஸ்டெர்லிங் மற்றும் நெருங்கிய நண்பர்கள் பல்வேறு விளையாட்டு பிரபலங்களும் பங்கேற்றனர்.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து உசைன் போல்டு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சமூகவலைதளத்தில் கொரோனா தொற்றால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மின்னல் வேக வீரராக வலம் வந்த ஜமைக்காவின் உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் 8 தங்கப்பதக்கமும், உலக தடகளத்தில் 11 தங்கப்பதக்கமும் அறுவடை செய்த மகத்தான சாதனையாளர் ஆவார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் அதிவேகமாக ஓடிய உலக சாதனையும் இவரது வசமே உள்ளது.
ஒலிம்பிக் போட்டிகளில் 8 முறை தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். 2008, 2012, 2016 என மூன்று ஒலிம்பிக்ஸ் போட்டிகளிலும் 100 மீ. ஓட்டம், 200 மீ. ஓட்டம் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்று சாதனைகள் படைத்தவர். 2017 உலக சாம்பியன்ஷிப் போட்டிக்குப் பிறகு ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார்.
இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து உசைன் போல்டு நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து சமூகவலைதளத்தில் கொரோனா தொற்றால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Stay Safe my ppl 🙏🏿 pic.twitter.com/ebwJFF5Ka9
— Usain St. Leo Bolt (@usainbolt) August 24, 2020
டோனியின் வலுவான சிக்சர் அடிக்கும் திறன் அரிதான ஒன்று என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா:
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணி முன்னாள் கேப்டன் டோனி சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
இந்நிலையில் டோனியின் வலுவான சிக்சர் அடிக்கும் திறன் அரிதான ஒன்று என்று முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
“டோனி, அதிக ஓவர்களை சந்திக்க வாய்ப்பு கிடைத்த ஆட்டங்களில் எல்லாம் பெரிய ஸ்கோர் குவித்து இருக்கிறார். அதனால் தான் அவர் முன்வரிசையில் ஆட வேண்டும் என்று நான் அடிக்கடி சொல்வது உண்டு. அவரிடம் இருந்த வலுவான சிக்சர் அடிக்கும் திறன் அரிதான ஒன்று. விசாகப்பட்டனத்தில் டோனிக்கு மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பு தரப்பட்டது. இதில் சதம் அடித்து அசத்தினார். சச்சின் தொடர்ந்து 6வது இடத்தில் பேட்டிங் செய்திருந்தால் இந்தளவுக்கு வியக்கத்தக்க பேட்ஸ்மேனாக உயர்ந்திருக்க மாட்டார். ஏனெனில் பின் வரிசையில் அதிக பந்துகள் எதிர்கொள்ள வாய்ப்பு கிடைக்காது. ஒரு சிறந்த வீரர் உருவாக வேண்டும் என்றால் அவரை பேட்டிங் ஆர்டரில் முன்வரிசையில் களமிறக்க வேண்டும். பின் வரிசையில் விளையாடினால் இது முடியாது” என்று தெரிவித்தார்.
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் வீனஸ் வில்லியம்ஸ், மரின் சிலிச் அதிர்ச்சி தோல்வியடைந்தனர்.
நியூயார்க்:
சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ரசிகர்கள் இன்றி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் 25-ம் நிலை வீராங்கனையான டயானா யாஸ்ட்ரிம்ஸ்கா (உக்ரைன்) 5-7, 6-2, 7-5 என்ற செட் கணக்கில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை வீனஸ் வில்லியம்சுக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அடைந்தார்.
ஆட்டத்தின் போது வலது கணுக்கால் வலியால் யாஸ்ட்ரிம்ஸ்கா அவதிப்பட்ட போதிலும் சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடி 2 மணி 36 நிமிடங்களில் வெற்றிக்கனியை பறித்தார். மற்றொரு முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்) 6-2, 6-3 என்ற நேர் செட்டில் டோனா வெகிச்சை (குரோஷியா) பந்தாடினார். இதே போல் மரியா சக்காரி (கிரீஸ்) 6-1, 6-3 என்ற நேர் செட்டில் உள்ளூர் நட்சத்திரம் 16 வயதான கோரி காப்பை விரட்டினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் ஆன்டி முர்ரே (இங்கிலாந்து) 7-6 (6), 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் பிரான்சிஸ் டியாபோவை போராடி தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். காயத்தால் ஓராண்டுக்கு பிறகு களம் திரும்பிய முர்ரே அடுத்து அலெக்சாண்டர் ஸ்வெரேவை (ஜெர்மனி) எதிர்கொள்கிறார். அதே சமயம் முன்னாள் சாம்பியனான மரின் சிலிச் (குரோஷியா) 3-6, 3-6 என்ற நேர் செட்டில் டெனிஸ் ஷபோவலாவிடம் (கனடா) வீழ்ந்தார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் பி.எஸ்.ஜி. அணியை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தி பேயர்ன் முனிச் அணி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
லிஸ்பன்:
கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் போர்ச்சுகலில் நடைபெற்றது. இந்த போட்டியின் பேயர்ன் முனிச் (ஜெர்மனி) மற்றும் பி.எஸ்.ஜி. பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அரைஇறுதி ஆட்டங்களில் வெற்றிபெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தன.
இதையடுத்து போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் இறுதி போட்டி நடைபெற்றது. இதில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பேயர்ன் முனிச் அணியை எதிர்த்து முதல்முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்த பி.எஸ்.ஜி. அணி மோதியது.
போர்ச்சுகல் நேரப்படி நேற்று இரவு 8 மணிக்கு போட்டி நடைபெற்றது. போட்டி தொடங்கியது முதலே இரு அணிகளும் கோல் அடிக்க தீவிர முயற்சி மேற்கொண்டனர்.
இரு அணிகளுக்கும் கோல் அடிக்க அதிக வாய்ப்புகள் கிடைத்தபோதும் அவற்றை தவறவிட்டன. இதனால் ஆட்டத்தின் முதல் பாதியில் (45 நிமிடங்கள்) இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற கணக்கிலேயே இருந்தது.
இடைவேளைக்கு பின் போட்டியின் இரண்டாவது பாதி தொடங்கியது. இந்த பாதியில் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என இரு அணிகளும் தீவிரமாக விளையாடியது.
போட்டியின் 59-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் வீரர் கிங்ஸ்லி கமன் முதல் கோல் அடித்து அணியினரை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.
இதையடுத்து 1-0 என்ற கோல் கணக்கில் பேயர்ன் முனிச் அணி முன்னிலை பெற்றது. இதனால் ஆட்டம் சூடுபிடிக்கத்தொடங்கியது.
பி.எஸ்.ஜி. அணி வீரர்கள் தாங்களும் எப்படியாவது கோல் அடித்துவிட வேண்டும் என தீவிர முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர்களால் வரை கோல் அடிக்கமுடியவில்லை. ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடிவடைந்த பின்னரும் பி.எஸ்.ஜி. வீரர்களால் கோல் அடிக்கமுடியவில்லை.
90 நிமிடங்கள் முடிவடைந்து போட்டியில் கூடுதலாக கடைசி 5 நிமிடங்கள் கொடுக்கப்பட்டன. இந்த கடைசி 5 நிமிடங்களிலும் பி.எஸ்.ஜி.யால் கோல் அடிக்கமுடியவில்லை.
இதனால் பி.எஸ்.ஜி. பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 6-வது முறையாக ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டத்தை வெற்று கோப்பையை தட்டிச்சென்றது. இந்த வெற்றியை பேயர்ன் முனிச் வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஓய்வு விஷயத்தில் டோனியை நல்லவிதமாக நடத்தவில்லை என இந்திய கிரிக்கெட் வாரியம் மீது சக்லைன் முஷ்டாக் குற்றம் சாட்டுயுள்ளார்.
லாகூர்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனியின் திடீர் ஓய்வு குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சக்லைன் முஷ்டாக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
டோனி போன்ற வீரரை இந்திய கிரிக்கெட் வாரியம் சரியான முறையில் நடத்தவில்லை. அவரது ஓய்வு இந்த மாதிரி முடிந்திருக்கக்கூடாது. இதை என்னுடைய இதயத்தில் இருந்து சொல்கிறேன்.
நான் நினைப்பதையே அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும் நினைக்கிறார்கள். நான் இவ்வாறு சொல்வதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் மன்னிக்க வேண்டும். ஆனால் அவர்கள் (கிரிக்கெட் வாரியம்) டோனியை நல்லவிதமாக நடத்தவில்லை என்பதே உண்மை. இது எனக்கு வருத்தமளிக்கிறது. இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் தோல்வி அடைந்து விட்டது.
இந்திய அணிக்காக கடைசியாக ஒரு சர்வதேச போட்டியில் அவர் விளையாடி இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் உயர்ந்த நிலையில் விடைபெறவேண்டும் என்றே விரும்புவார்கள். நிச்சயம் டோனிக்கும் இந்த கனவு இருந்திருக்கும். வழியனுப்பும் போட்டி நடத்தப்படாததால் அவரது ரசிகர்களும் வருத்தத்தில் இருப்பார்கள்.
டோனி கிரிக்கெட்டில் ஒரு மாணிக்கம். உண்மையான ஹீரோ. அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் ஐ.பி.எல். போட்டியில் களம் காண இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு சக்லைன் முஷ்டாக் கூறினார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி தலைமையிலான நடப்பு அணியே சிறந்தது என்று முன்னாள் வீரர் கவாஸ்கர் கூறியுள்ளார்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரருமான சுனில் கவாஸ்கர் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
விராட் கோலி தலைமையிலான தற்போதைய அணியே இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த அணி என்று நம்புகிறேன். வீரர்களின் திறமை, அதை வெளிப்படுத்தும் விதம், சரியான கலவை, மனஉறுதி ஆகியவற்றின் அடிப்படையில் இதை சொல்கிறேன். உலகின் எந்த ஆடுகளத்திலும் வெற்றியை தேடித்தரக்கூடிய பந்து வீச்சு தாக்குதல் (பும்ரா, முகமது ஷமி, புவனேஷ்வர்குமார், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், அஸ்வின் உள்ளிட்டோர்) தற்போதைய அணியிடம் உள்ளது. சீதோஷ்ண நிலை உதவிகரமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்களால் எந்த இடத்திலும் சாதிக்க முடியும். பேட்டிங்கை பொறுத்தவரை 1980-களில் உள்ளது போன்றே அபாரமாக இருக்கிறது. ஆனால் இன்று விராட் கோலிக்கு கிடைத்த பவுலர்கள் அப்போதைய இந்திய அணியில் இல்லை. பந்து வீச்சில் நிறைய வித்தியாசங்களை இந்திய அணி கொண்டிருக்கிறது. அது தான் முக்கியமான அம்சம். எந்த ஆடுகளத்திலும் இவர்களால் 20 விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாவிட்டால் டெஸ்டில் வெற்றி காண முடியாது.
அதே சமயம் போதுமான ரன்கள் குவிக்க வேண்டியது முக்கியம். 2018-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் அதை கண்கூடாக பார்த்தோம். ஒவ்வொரு முறையும் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் சாய்த்தோம். ஆனால் போதிய ரன்கள் சேர்க்க தவறி (இரு தொடரிலும் தோல்வி) விட்டோம். இந்த ஆண்டு இறுதியில் நடக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் அவர்களை விட அதிக ரன்கள் எடுக்கக்கூடிய பேட்டிங் வரிசை நம்மிடம் உள்ளதாக கருதுகிறேன்.
இந்திய வீரர் ரோகித் சர்மா, ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களம் இறங்கி முதல் ஓவரில் இருந்தே பந்தை அடித்து நொறுக்கும் விதத்தை பார்க்கும் போது, எனக்கும் அந்த மாதிரி விளையாட வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் அப்போதைய சூழல், எனது திறமை மீது இருந்த நம்பிக்கையின்மை காரணமாக அந்த மாதிரி வேகமாக ஆட முடியாமல் போய் விட்டது. ஆனால் அடுத்த தலைமுறை வீரர்கள் இதை செய்யும் போது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு கவாஸ்கர் கூறினார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிஸ்சில் பாகிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி டாம் சிப்லி மற்றும் ரோரி பேர்ன்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ரோரி 6 ரன்களிலும் சிப்லி 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த கிராவ்லி சிறப்பாக விளையாடினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தபோது இறுதியாக ஜோஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த கிராவ்லி அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
இரு வீரர்களும் சதம் கடந்தனர். கிராவ்லி இரட்டை சதம் அடித்தார். அவர் 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
இறுதியாக 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, பாகிஸ்தான் அணி தனது முதல் இன்ன்ங்சை ஆடத்தொடங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷாம் மசூத் 4 ரன்னிலும் அபித் அலி 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்துவந்த பாபர் அசாம் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டியின் 3 ஆம் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது களத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டர் அசார் அலி
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்து வீரர்கள் சிறப்பாக பந்து வீசி பாகிஸ்தான் வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்திய போதும் அசார் அலி தனித்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
சிறப்பாக விளையாடிய அசார் அலி சதம் கடந்தார். ஆனால் இங்கிலாந்து அணி வீரர்களின் பந்துவீச்சை மற்ற வீரர்களால் சமாளிக்க முடியவில்லை. இதனால் பாகிஸ்தான் வீரர்கள் இங்கிலாந்தின் பந்து வீச்சில் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினர்.
இறுதியாக பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் மட்டுமே எடுத்தது. அசார் அலி 141 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதையடுத்து 3 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை விட 310 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இதையடுத்து 310 ரன்கள் முன்னிலையில் உள்ள இங்கிலாந்து அணி நாளை தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்க உள்ளது.
இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதமிருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி 310 ரன்கள் முன்னிலையில் உள்ளதால் அந்த அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.
‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் ஆல் ரவுண்டரான ஜாக் காலிசை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஜோகனஸ்பர்க்:
சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ‘ஹால் ஆப் பேம்’ என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கவுரவிக்கிறது.
அந்த பட்டியலில் புதிதாக தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் ஜாக் காலிசை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் 13,289 ரன்னும், ஒரு நாள் போட்டியில் 11,579 ரன்னும், 250 விக்கெட்டுகளையும் கைப்பற்றி சிறந்த ஆல ரவுண்டராக விளங்கினார். தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிக ரன்கள் குவித்தவர் என்ற சிறப்புக்குரியவர் ஜாக் காலிஸ்.
ஆஸ்திரேலிய வீராங்கனை லிசா தாலேகர் மற்றும் பாகிஸ்தானின் முன்னாள் வீரர் ஜாகிர் அப்பாஸ் ஆகியோரும் இந்த பட்டியலில் சேர்க்கப்படுகிறார்கள்.
ராஜீவ் கேல் ரத்னா விருது பெற இருக்கும் ரோகித் சர்மா, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
‘ஹிட்மேன்’ என கிரிக்கெட் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா.
நேற்று முன்தினம் சர்வதேச அளவில் சிறப்பாக விளையாடி இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்து கொடுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகளுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டன.
ரோஹித் ஷர்மாவுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு வீடியோவை அவரது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த வீடியோவில் ‘‘வணக்கம் தோழர்களே. இத்தனை ஆண்டுகளாக நீங்கள் எல்லோரும் என் மீது காட்டிய அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி. இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிலேயே சிறந்த விளையாட்டு வீரருக்காக கொடுக்கப்படும் விருதை நான் பெறுவது மிகப்பெரிய பாக்கியம். அதை நினைந்து நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்.
இதன் மூலம் உங்கள் அனைவருக்கும் நான் கடமைப்பட்டிருக்கிறேன். உங்கள் ஆதரவு இல்லாமல் இது சாத்தியமில்லை. இந்தியாவுக்காக நான் மேலும் பல பல பெருமைகளை தேடி தருவேன் என உறுதியளிக்கிறேன். நாம் எல்லோரும் சமூக விலகலை கடைப்பிடித்து வருவதால், உங்கள் அனைவரையும் வெர்ச்சுவலாக ஹக் செய்து கொள்கிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
2020-ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறை விருதுகள் வென்ற வீரர், வீராங்கனைகளின் பட்டியல் இரு நாட்களுக்கு முன் வெளியானது. 5 பேருக்கு கேல் ரத்னா விருதும், 27 பேருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் அர்ஜுனா விருதில் மட்டும் சர்ச்சை எழுந்தது.
அர்ஜுனா விருதுக்கு 29 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே கேல் ரத்னா விருதை வென்ற மீராபாய் சானு மற்றும் சாக்சி மாலிக் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டு இருந்தது. கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதை விட உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2017 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார்.
அவரது சாதனைகளை பாராட்டி அவருக்கு கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டும், இறுதிப் பட்டியலில் நீக்கப்பட்டது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், சாக்சி மாலிக் தனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-விடம் கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
டுவிட்டரில், ‘‘எனக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அனைத்து விருதுகளையும் வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக தங்கள் வாழ்வை அவர்கள் பணயம் வைக்கிறார்கள். நான் கூட என் பெயர் அர்ஜுனா விருதுப் பட்டியலில் இடம்பெறும் என கனவு காண்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.
மேலும், ‘‘இன்னும் என்னென்ன பதக்கங்கள் என் நாட்டுக்காக நான் வென்றால் எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கும்? அல்லது இந்த மல்யுத்த வாழ்க்கையில் எனக்கு இந்த விருதை வெல்லும் அதிர்ஷ்டமே இல்லையா?’’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சவுத்தாம்ப்டன் டெஸ்ட்டின் 2 ஆம் நாள் ஆட்ட நேரமுடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டாம் சிப்லி 22 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 127 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார்.
மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே கிராவ்லி மற்றும் பட்லர் ஜோடி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. அதிடியாக ஆடிய கிராவ்லி இரட்டை சதம் விளாசினார். பட்லரும் சதம் விளாசினார்.
கிராவ்லி 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷபிக் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த போப் 3 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கிரிஷ் வோக்சுடன் ஜோடி சேர்ந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்களை கடந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாம் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 267 ரன்களையும், பட்லர் 152 ரன்களையும் விளாசியிருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அலாம், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இங்கிலாந்தை விட 583 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் 4 ரன்னிலும் அபித் அலி 1 ரன்னிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னின் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் வெளியேறினர்.
பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்ட அசார் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடியும் நீடிக்கவில்லை. பாபர் அசாம் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 24 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அப்போது போட்டியின் 2 வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி 559 ரன்கள் பின் தங்கியநிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணியின் அசார் அலி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.