என் மலர்
விளையாட்டு
இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக், அர்ஜுனா விருதுக்கான பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
2020-ம் ஆண்டுக்கான விளையாட்டுத் துறை விருதுகள் வென்ற வீரர், வீராங்கனைகளின் பட்டியல் இரு நாட்களுக்கு முன் வெளியானது. 5 பேருக்கு கேல் ரத்னா விருதும், 27 பேருக்கு அர்ஜுனா விருதும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதில் அர்ஜுனா விருதில் மட்டும் சர்ச்சை எழுந்தது.
அர்ஜுனா விருதுக்கு 29 பேர் பரிந்துரைக்கப்பட்டு இருந்த நிலையில், ஏற்கனவே கேல் ரத்னா விருதை வென்ற மீராபாய் சானு மற்றும் சாக்சி மாலிக் பெயர்கள் மட்டும் நீக்கப்பட்டு இருந்தது. கேல் ரத்னா விருது, அர்ஜுனா விருதை விட உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மல்யுத்த வீராங்கனையான சாக்சி மாலிக் 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றார். 2017 காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்றார். 2018 காமன்வெல்த் போட்டியில் வெண்கலம் வென்றார்.
அவரது சாதனைகளை பாராட்டி அவருக்கு கேல் ரத்னா விருது மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் 2020-ம் ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டும், இறுதிப் பட்டியலில் நீக்கப்பட்டது குறித்து அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில், சாக்சி மாலிக் தனக்கு அர்ஜுனா விருது கிடைக்கவே கிடைக்காதா? என பிரதமர் நரேந்திர மோடி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு-விடம் கேள்வி எழுப்பி பரபரப்பை கிளப்பி உள்ளார்.
டுவிட்டரில், ‘‘எனக்கு கேல் ரத்னா விருது அளிக்கப்பட்டது பெருமையாக உள்ளது. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் அனைத்து விருதுகளையும் வெல்ல வேண்டும் என்று நினைப்பார்கள். அதற்காக தங்கள் வாழ்வை அவர்கள் பணயம் வைக்கிறார்கள். நான் கூட என் பெயர் அர்ஜுனா விருதுப் பட்டியலில் இடம்பெறும் என கனவு காண்கிறேன்’’ என்று கூறி உள்ளார்.
மேலும், ‘‘இன்னும் என்னென்ன பதக்கங்கள் என் நாட்டுக்காக நான் வென்றால் எனக்கு அர்ஜுனா விருது கிடைக்கும்? அல்லது இந்த மல்யுத்த வாழ்க்கையில் எனக்கு இந்த விருதை வெல்லும் அதிர்ஷ்டமே இல்லையா?’’ என அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
சவுத்தாம்ப்டன் டெஸ்ட்டின் 2 ஆம் நாள் ஆட்ட நேரமுடிவில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சில் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டாம் சிப்லி 22 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 127 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார்.
மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே கிராவ்லி மற்றும் பட்லர் ஜோடி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. அதிடியாக ஆடிய கிராவ்லி இரட்டை சதம் விளாசினார். பட்லரும் சதம் விளாசினார்.
கிராவ்லி 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷபிக் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த போப் 3 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கிரிஷ் வோக்சுடன் ஜோடி சேர்ந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்களை கடந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாம் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 267 ரன்களையும், பட்லர் 152 ரன்களையும் விளாசியிருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அலாம், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து இங்கிலாந்தை விட 583 ரன்கள் பின் தங்கிய நிலையில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. ஆனால், தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஷான் மசூத் 4 ரன்னிலும் அபித் அலி 1 ரன்னிலும் ஜேம்ஸ் ஆண்டர்சன்னின் பந்து வீச்சில் அடுத்தடுத்து அவுட் வெளியேறினர்.
பின்னர் பாகிஸ்தான் அணியின் கேப்ட அசார் அலியுடன் பாபர் அசாம் ஜோடி சேர்ந்தார். ஆனால் இந்த ஜோடியும் நீடிக்கவில்லை. பாபர் அசாம் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பந்தில் எல்பிடபுள்யூ முறையில் அவுட் ஆகி வெளியேறினார். இதனால் பாகிஸ்தான் அணி 24 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
அப்போது போட்டியின் 2 வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் இங்கிலாந்தை விட பாகிஸ்தான் அணி 559 ரன்கள் பின் தங்கியநிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணியின் அசார் அலி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் களத்தில் உள்ளார். இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
சவுத்தாம்ப்டன் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
சவுத்தாம்ப்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி சவுத்தாம்ப்டன் நகரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்து அணியின் ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் டாம் சிப்லி 22 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 127 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார்.
மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இதையடுத்து 2-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. ஆட்டம் தொடங்கியது முதலே கிராவ்லி மற்றும் பட்லர் ஜோடி தனது ஆதிக்கத்தை தொடர்ந்தது. அதிடியாக ஆடிய கிராவ்லி இரட்டை சதம் விளாசினார். பட்லரும் சதம் விளாசினார்.
கிராவ்லி 267 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஷபிக் பந்து வீச்சில் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த போப் 3 ரன்னில் வெளியேறினார். பின்னர் களமிறங்கிய கிரிஷ் வோக்சுடன் ஜோடி சேர்ந்த பட்லர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 150 ரன்களை கடந்தார். பட்லர் 152 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அலாம் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.
இறுதியாக இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 583 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கிராவ்லி 267 ரன்களையும், பட்லர் 152 ரன்களையும் விளாசியிருந்தனர்.
பாகிஸ்தான் தரப்பில் ஷாஹீன் அப்ரிடி, அலாம், யாசிர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதிகளில் மான்செஸ்டரில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான பாகிஸ்தான் 20 ஓவர் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து கழற்றி விடப்பட்ட பிறகு சர்ப்ராஸ் அகமது முதல்முறையாக 20 ஓவர் அணியில் இடம் பிடித்துள்ளார். முகமது ஹபீஸ், சோயிப் மாலிக் ஆகியோர் தங்களது இடத்தை தக்கவைத்துள்ளனர். பேட்ஸ்மேன் ஷான் மசூத்துக்கு அணியில் இடம் கிட்டவில்லை. பாகிஸ்தான் அணி வீரர்கள் வருமாறு:-
பாபர் அசாம் (கேப்டன்), பஹார் ஜமான், ஹைதர் அலி, ஹாரிஸ் ராவுப், இப்திகர் அகமது, இமாத் வாசிம், குஷ்தில் ஷா, முகமது ஹபீஸ், முகமது ஹஸ்னைன், முகமது ரிஸ்வான், முகமது அமிர், நசீம் ஷா, சர்ப்ராஸ் அகமது, ஷதாப் கான், ஷகீன் ஷா அப்ரிடி, சோயிப் மாலிக், வஹாப் ரியாஸ்.

பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜாக் கிராவ்லி இரட்டை சதம் அடித்து சாதனை படைத்தார்.
சவுதம்டன்;
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 332 ரன்கள் எடுத்து இருந்தது. முதல் சதத்தை பூர்த்தி செய்த ஜாக் கிராவ்வி 171 ரன்களுடனும், ஜோஸ் பட்லர் 87 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜாக் கிராவ்லி, ஜோஸ் பட்லர் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். மழை குறுக்கிட்டால் 2 முறை பாதிக்கப்பட்ட இந்த ஆட்டத்தில் இருவரும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள். 189 பந்துகளில் ஜோஸ் பட்லர் சதத்தை எட்டினார். முன்னதாக ஜோஸ் பட்லர் 99 ரன்னில் இருக்கையில் முகமது அப்பாஸ் வீசிய பந்தை அடித்து ஆட முயல அது விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானிடம் கேட்ச் ஆனது. பாகிஸ்தான் வீரர்கள் அப்பீல் செய்ததை தொடர்ந்து நடுவர் அவுட் வழங்கினார். இதனை எதிர்த்து ஜோஸ் பட்லர் டி.ஆர்.எஸ்.முறையில் அப்பீல் செய்தார். அதில் பந்து பேட்டில் படவில்லை என்பது தெரியவந்ததால் ‘அவுட்’ இல்லை என்று நடுவர் அறித்தார். இதனால் ஜோஸ் பட்லர் கண்டத்தில் இருந்து தப்பியதுடன் தனது 2-வது சதத்தையும் பதிவு செய்தார்.
நிலைத்து நின்று கலக்கிய ஜாக் கிராவ்லி 331 பந்துகளில் இரட்டை சதத்தை கடந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்காக இரட்டை சதம் அடித்தவர்களில் 3-வது இளம் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். ஸ்கோர் 486 ரன்னாக உயர்ந்த போது 5-வது விக்கெட் ஜோடி பிரிந்தது. நிலைத்து நின்று ஆடிய ஜாக் கிராவ்லி 267 ரன்கள் (393 பந்து, 34 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்கள் எடுத்த நிலையில் ஆசாத் ஷபிக் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி -பட்லர் ஜோடி 359 ரன்கள் திரட்டியது. இந்த விக்கெட்டுக்கு இங்கிலாந்து அணியின் அதிகபட்ச ரன் இதுவாகும்.
சிறப்பாக ஆடிய ஜோஸ் பட்லர் 152 ரன்னில் (311 பந்து, 13 பவுண்டரி, 2 சிக்சர்) பவாத் ஆலம் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து கிறிஸ் வோக்ஸ் 40 ரன்னிலும், ஸ்டூவர்ட் பிராட் 15 ரன்னிலும் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 154.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 583 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் பெஸ் 27 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். பின்னர் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்சைஆடியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இதற்காக ஒவ்வொரு அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் வந்து விடுவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவர் புர்ஜ் கலிஃபாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் அணியுடன் இணைவார்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர்.
அவர்கள் நேராக சொகுசு ஓட்டல் சென்று அங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் பாதுகாப்பிற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொகுசு ஓட்டலில் 150 அறைகளை பதிவு செய்து வைத்துள்ளது.
கொரோனா தொற்றுக்கிடையே தென்ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வந்தது குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இங்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வழக்கமானதை விட பயணம் சற்று கடினமாக இருந்தது. ஆனால், என்னுடைய தென்ஆப்பிரிக்கா நண்பர்களுடன் ஆர்சிபி அணியில் இணைய வந்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய கொரோனா டெஸ்ட் பரிசோதனையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
டெல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘மிகவும் வெப்பமான சூழ்நிலையில் விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தார். அப்போது வெளியே மிகவும் வெப்பமாக இருந்தது. இன்னும் சில வாரங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும்’’ என்றார்.
கிறிஸ் மோரிஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘இது மிகவும் சவாலானது. இருந்தாலும் அதை நோக்கிச் செல்ல ஆர்வமாக உள்ளோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கொஞ்சம் பதட்டமாக உள்ளது’’ என்றார்.
And here it is RCB fans, the moment you’ve all been waiting for! 🤩@ABdeVilliers17, @DaleSteyn62 and @Tipo_Morris have joined the team in Dubai! 😎#PlayBold#TravelDay#IPL2020pic.twitter.com/l0n09ZV5Jb
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 22, 2020
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுவதற்காக துபாய் சென்றுள்ள வாட்சன் புர்ஜ் கலிஃபா ஓட்டலில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இதற்காக ஒவ்வொரு அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் வந்து விடுவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்கள். துபாய் சென்றதும் அவர்கள் கட்டாயம் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பின் அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை மேற்கொள்ளப்படும். நெகட்டிவ் முடிவு வந்தபின் அணியாக ஒன்று சேர்ந்து பயிற்சி மேற்கொள்வார்கள்.
சென்னை அணியின் ஆல்-ரவுண்டரான ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்துள்ளார். அங்குள்ள புகழ்பெற்ற புர்ஜ் கலிஃபாயில் உள்ள அறை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதுகுறித்து வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில் ‘‘நான் சில உடற்பயிற்சிகளை செய்ய இருக்கிறேன். அறைகளில் மேலும் கீழும் இறங்கி பயிற்சி மேற்கொண்டு சிஎஸ்கே பயிற்சிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஐபிஎல் தொடருக்காக மீண்டும் ஒருமுறை வந்துள்ளது மூலம் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
ஷேன் வாட்சன் வெளியிட்டுள்ள வீடியோவை ரீ-டுவீட் செய்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் ‘‘வாட்சன் 7-உடன் இன்னிங்சை தொடங்குவார்’’ என்று அதில் தெரிவித்துள்ளது.
My 7-Day room bound quarantine here in Dubai has just started. It’s so cool to be here to get into the preparation for another exciting season of @IPL for @ChennaiIPL. #SafetyFirst#WhistlePodu#superexcitedpic.twitter.com/0cdrkv0oCK
— Shane Watson (@ShaneRWatson33) August 21, 2020
இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் என சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் உள்ளன. உள்ளூர் போட்டிகளும் நடைபெறவில்லை.
உள்ளூர் போட்டிகள் எப்போது நடைபெறும், சர்வதேச போட்டிகள் இந்தியாவில் எப்போது ஆரம்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இந்தியாவில் தற்போது கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் நவம்பர் மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் ஆஸ்திரேலியா சென்று நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடுகிறது. டிசம்பர் மாதம் இந்தத் தொடர் நடக்கிறது. இதுதான் இந்தியா கொரோனா வைரஸ் காலத்திற்குப் பிறகு விளையாடும் முதல் சர்வதேச கிரிக்கெட் தொடர் ஆகும். அதன்பின் இந்திய அணி சொந்த நாடு திரும்புகிறது.
அதன்பின் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணி இந்தியா வந்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியாவில் நடைபெறும் முதல் சர்வதேச போட்டி இதுவாகும்.
அதன்பின் ஐபிஎல் போட்டி நடக்கும். 2023 உலக கோப்பை இந்தியாவில் நடைபெறும் என பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருடத்திற்குள் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை நடத்த வாய்ப்புள்ளது என கிரிக்கெட் சங்கங்களுக்கு பிசிசிஐ கடிதம் அனுப்பி உள்ளது.
அந்தக் கடிதத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலி‘‘உள்ளூர் கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் நடைபெற்று வருகிறது. சூழ்நிலை சரியாக வரும்போது போட்டி நடத்தப்படும். வீரர்களின் உடல்நிலை, பாதுகாப்பு, மேலும் சில விஷயங்கள் உள்ளூர் கிரிக்கெட் போட்டியின் போது முக்கியமானது. தொடர்ச்சியாக நாங்கள் அதை கண்காணித்து வருகிறோம்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும்முன் எதிர்கால திட்டம் குறித்து முறையாக அறிவிக்கப்படும். அடுத்த சில மாதங்களில் கொரோனாவில் இருந்து விடுபடுவோம், உள்ளூர் கிரிக்கெட் சிறந்த பாதுகாப்பு, சுகாதாரச் சூழ்நிலையில் நடைபெறும் என்று நம்புவோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு மட்டும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா கட்டாயம் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தி்ல் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது.
உலக கோப்பைக்கான இந்திய அணி தயார்படுத்தப்படும்போது அம்பதி ராயுடுவை மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்க முடிவு செய்யப்பட்டது. அவருக்கு ஏராளமான போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.
அந்த நேரத்தில் இந்த விவகாரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் அம்பதி ராயுடு மட்டும் அணியில் இருந்திருந்தால் உலக கோப்பையை இந்தியா வென்றிருக்கும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இதுகுறி்தது ரெய்னா கூறுகையில் ‘‘இந்திய அணியில் அம்பதி ராயுடுவை 4-வது இடத்தில் களம் இறங்க வேண்டும் என்ற நான் விரும்பினேன். ஏனென்றால், அவர் அதற்காக கடுமையாக உழைத்தார். அதற்காக ஒன்றரை ஆண்டுகள் அணியில் இடம்பிடித்து விளையாடினார். சிறப்பாக விளையாடிய போதிலும் அணியில் இடம் கிடைக்கவில்லை. 2018-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் எனக்கு மகிழ்ச்சிகரமாக இல்லை. ஏனென்றால், அம்பதி ராயுடன் உடற்தகுதி டெஸ்டில் தோல்வியடைந்தார். நான் தேர்வாகி அவர் தோல்வியடைந்ததை சிறந்ததாக நான் உணரவில்லை.
நம்பர் 4 இடத்திற்கு அவர் சிறந்தவர். அவர் மட்டும் அணியில் இடம்பிடித்திருந்தால், இந்திய அணி உலக கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடிய வகையில் சிறந்த தேர்வாக இருந்திருப்பார். சென்னையில் நடைபெற்ற முகாமில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்’’ என்றார்.
அர்ஜூனா விருதுக்கு தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சாக்ஷி மாலிக், மீராபாய் சானு ஆகியோரின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் நிராகரித்தது.
புதுடெல்லி:
அர்ஜூனா விருதுக்கு தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சாக்ஷி மாலிக், மீராபாய் சானு ஆகியோரின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் நிராகரித்தது. ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் தேசிய விளையாட்டு விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுக்கு தகுதி படைத்தவர்களை ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தம் சர்மா தலைமையிலான 12 பேர் கொண்ட தேர்வு கமிட்டி சில தினங்களுக்கு முன்பு தேர்வு செய்து மத்திய விளையாட்டு மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் ஒப்படைத்தது.
‘அர்ஜூனா’ விருதுக்கான பட்டியலில் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், 2017-ம் ஆண்டு உலக பளுதூக்குதலில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வீராங்கனை மீராபாய் சானு உள்பட 29 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. ஏற்கனவே கேல் ரத்னா விருதை பெற்று இருக்கும் இந்த இருவரின் தேர்வு விஷயத்தில் மத்திய விளையாட்டு மந்திரி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்த சாக்ஷி மாலிக், மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று நிராகரித்தது. மற்றபடி எல்லா விருதுகளுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அப்படியே மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு இருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மிக உயரிய ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் மாரியப்பன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் பெறுகிறார்கள். கேல் ரத்னா விருதை ஒரே ஆண்டில் 5 பேர் அறுவடை செய்வது இதுவே முதல்முறையாகும்.
இதேபோல் அர்ஜூனா விருதை அதானு தாஸ் (வில்வித்தை), டுட்டீ சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி (இருவரும் பேட்மிண்டன்), விகேஷ் பிகுவான்ஷி (கூடைப்பந்து), மனிஷ் கவுசிக், லவ்லினா போர்கோஹைன் (இருவரும் குத்துச்சண்டை), இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா (இருவரும் கிரிக்கெட்), சவாந்த் அஜய் ஆனந்த் (குதிரையேற்றம்), சந்தேஷ் ஜின்கான் (கால்பந்து), அதிதி அசோக் (கோல்ப்), ஆகாஷ்தீப் சிங், தீபிகா (இருவரும் ஆக்கி), தீபக் (கபடி), காலே சரிகா சுதாகர் (கோ- கோ), தத்து பாபன் போகனல் (துடுப்பு படகு), மானு பாகெர், சவுரப் சவுத்ரி (இருவரும் துப்பாக்கி சுடுதல்), மாதுரிகா பத்கர் (டேபிள் டென்னிஸ்), திவிஜ் சரண் (டென்னிஸ்), ஷிவ கேசவன் (குளிர்கால விளையாட்டு), திவ்யா காக்ரன், ராகுல் அவாரே (இருவரும் மல்யுத்தம்), சுயாஷ் நாராயண் ஜாதவ் (பாரா நீச்சல்), சந்தீப் (பாரா தடகளம்), மனிஷ் நார்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் தட்டிச் செல்கிறார்கள்.
சிறந்த வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளர்களுக் கான ‘துரோணாச்சார்யா’ (வழக்கமான பிரிவு, வாழ்நாள் பிரிவு) விருது ஜூட் பெலிக்ஸ் (ஆக்கி), ஜஸ்பால் ராணா (துப்பாக்கி சுடுதல்) உள்பட 13 பேருக்கும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்காற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ‘தயான் சந்த்’ விருது அஜித் சிங் (ஆக்கி), நந்தன் பால் (டென்னிஸ்) உள்பட 15 பேருக்கும் கிட்டுகிறது.
தேசிய விருது வழங்கும் விழா வருகிற 29-ந் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி டெஸ்டின் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் கிராவ்லி 171 ரன்கள் விளாச இங்கிலாந்து 332 ரன்கள் குவித்துள்ளது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந் ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஆனால் டாம் சிப்லி 22 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 127 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார்.
மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த விக்கெட்டை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. டாம் சிப்லி, 2. ரோரி பேர்ன்ஸ், 3. கிராவ்லி, 4. ஜோ ரூட், 5. ஒல்லி போப், 6. ஜோஸ் பட்லர், 7. கிறிஸ் வோக்ஸ், 8. டாம் பெஸ், 9. ஜாஃப்ரா ஆர்சர், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.
பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷான் மசூத், 2. அபித் அலி, 3. அசார் அலி, 4. பாபர் அசாம், 5. ஆசாத் ஷபிக், 6. பவத் அலாம், 7. முகமது ரிஸ்வான், 8. யாசிர் ஷா, 9. ஷாஹீன் அப்ரிடி, 10. முகமது அப்பாஸ், 11. நசீம் ஷா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புறப்படும்போது விராட் கோலியை காணவில்லையே என்று கேட்பவர்கள் துபாய் செல்லலாம் என ஆர்சிபி தெரிவித்துள்ளது.
ஐ.பி.எல். 13-வது போட்டித் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனி விமானம் மூலம் துபாய் புறப்படடது. விமானத்தில் வீரர்கள் உள்ளது போன்ற படத்தில் விராட் கோலி இல்லை.
இதுகுறித்து ரசிகர்கள் விராட் கோலியை எங்கே? எனக் கேள்விகள் எழுப்பினார். இந்நிலையில் ஒரு வீட்டின் மாடியில் நின்றபடி எடுத்த படத்தை விராட் கோலி பதிவிட்டு ஹாய் துபாய் என டுவீட் செய்திருந்தார்.
இந்த படத்தை வெளியிட்ட ஆர்சிபி, விராட் கோலியை எங்கே என கேட்பவர்கள், அங்கே செல்லலாம். கேப்டன் கோலி வீட்டில் உள்ளார் எனத் தெரிவித்துள்ளது.
அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் அடுத்தடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற சோதனை முடிவை பெற்றபின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.
கடந்த வாரம் சாஹல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் பெங்களூருவுக்கு சென்றபோது கோலி செல்லவில்லை. அவர்களை அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்திய பிறகு துபாயிக்கு பறந்துள்ளனர்.