என் மலர்
செய்திகள்

டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ்
வீரர்களுக்காக 150 சொகுசு அறைகள்: ஆர்சிபி-யின் டி வில்லியர்ஸ், ஸ்டெயின், மோரிஸ் துபாய் சென்றடைந்தனர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் டி வில்லியர்ஸ், டேல் ஸ்டெயின், கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது.
இதற்காக ஒவ்வொரு அணிகளும் துபாய் சென்று கொண்டிருக்கின்றன. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர்கள் அவர்கள் நாடுகளில் இருந்து நேரடியாக துபாய் வந்து விடுவார்கள்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் நேற்று துபாய் சென்றடைந்தார். அவர் புர்ஜ் கலிஃபாவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார். 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் அணியுடன் இணைவார்.
இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடும் தென்ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ், வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின், ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் ஆகியோர் இன்று அதிகாலை துபாய் சென்றடைந்தனர்.
அவர்கள் நேராக சொகுசு ஓட்டல் சென்று அங்குள்ள அறைகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் பாதுகாப்பிற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சொகுசு ஓட்டலில் 150 அறைகளை பதிவு செய்து வைத்துள்ளது.
கொரோனா தொற்றுக்கிடையே தென்ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வந்தது குறித்து டி வில்லியர்ஸ் கூறுகையில் ‘‘நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். இங்கு வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. வழக்கமானதை விட பயணம் சற்று கடினமாக இருந்தது. ஆனால், என்னுடைய தென்ஆப்பிரிக்கா நண்பர்களுடன் ஆர்சிபி அணியில் இணைய வந்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. என்னுடைய கொரோனா டெஸ்ட் பரிசோதனையை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்’’ என்றார்.
டெல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘மிகவும் வெப்பமான சூழ்நிலையில் விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கும். நாங்கள் இன்று அதிகாலை 3 மணி அளவில் வந்து சேர்ந்தார். அப்போது வெளியே மிகவும் வெப்பமாக இருந்தது. இன்னும் சில வாரங்களில் எப்படி இருக்க வேண்டும் என்று பார்க்க வேண்டும்’’ என்றார்.
கிறிஸ் மோரிஸ் இதுகுறித்து கூறுகையில் ‘‘இது மிகவும் சவாலானது. இருந்தாலும் அதை நோக்கிச் செல்ல ஆர்வமாக உள்ளோம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கொஞ்சம் பதட்டமாக உள்ளது’’ என்றார்.
And here it is RCB fans, the moment you’ve all been waiting for! 🤩@ABdeVilliers17, @DaleSteyn62 and @Tipo_Morris have joined the team in Dubai! 😎#PlayBold#TravelDay#IPL2020pic.twitter.com/l0n09ZV5Jb
— Royal Challengers Bangalore (@RCBTweets) August 22, 2020
Next Story