என் மலர்

  செய்திகள்

  சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு
  X
  சுரேஷ் ரெய்னா, அம்பதி ராயுடு

  அம்பதி ராயுடு மட்டும் அணியில் இருந்திருந்தால் உலக கோப்பையை இந்தியா வென்றிருக்கும்: சுரேஷ் ரெய்னா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பதி ராயுடு மட்டும் உலக கோப்பைக்கான அணியில் இடம்பிடித்திருந்தால் இந்தியா கட்டாயம் சாம்பியன் பட்டம் வென்றிருக்கும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
  இங்கிலாந்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை அரையிறுதி ஆட்டத்தி்ல் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து இந்தியா வெளியேறியது.

  உலக கோப்பைக்கான இந்திய அணி தயார்படுத்தப்படும்போது அம்பதி ராயுடுவை மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்க முடிவு செய்யப்பட்டது. அவருக்கு ஏராளமான போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இறுதி நேரத்தில் அணியில் இருந்து நீக்கப்பட்டார். விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டார்.

  அந்த நேரத்தில் இந்த விவகாரம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் அம்பதி ராயுடு மட்டும் அணியில் இருந்திருந்தால் உலக கோப்பையை இந்தியா வென்றிருக்கும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

  இதுகுறி்தது ரெய்னா கூறுகையில் ‘‘இந்திய அணியில் அம்பதி ராயுடுவை 4-வது இடத்தில் களம் இறங்க வேண்டும் என்ற நான் விரும்பினேன். ஏனென்றால், அவர் அதற்காக கடுமையாக உழைத்தார். அதற்காக ஒன்றரை ஆண்டுகள் அணியில் இடம்பிடித்து விளையாடினார். சிறப்பாக விளையாடிய போதிலும் அணியில் இடம் கிடைக்கவில்லை. 2018-ம் ஆண்டு நடைபெற்ற தொடர் எனக்கு மகிழ்ச்சிகரமாக இல்லை. ஏனென்றால், அம்பதி ராயுடன் உடற்தகுதி டெஸ்டில் தோல்வியடைந்தார். நான் தேர்வாகி அவர் தோல்வியடைந்ததை சிறந்ததாக நான் உணரவில்லை.

  நம்பர் 4 இடத்திற்கு அவர் சிறந்தவர். அவர் மட்டும் அணியில் இடம்பிடித்திருந்தால், இந்திய அணி உலக கோப்பையை வென்றிருக்கும் சிஎஸ்கே அணிக்காக அவர் விளையாடிய வகையில் சிறந்த தேர்வாக இருந்திருப்பார். சென்னையில் நடைபெற்ற முகாமில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்தார்’’ என்றார்.
  Next Story
  ×