என் மலர்tooltip icon

    விளையாட்டு

    அர்ஜூனா விருதுக்கு தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானு ஆகியோரின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் நிராகரித்தது.
    புதுடெல்லி:

    அர்ஜூனா விருதுக்கு தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானு ஆகியோரின் பெயர்களை மத்திய விளையாட்டு அமைச்சகம் நிராகரித்தது. ரோகித் சர்மா, மாரியப்பன் உள்பட 5 பேருக்கு கேல் ரத்னா விருது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    விளையாட்டு துறையில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு ஆண்டு தோறும் தேசிய விளையாட்டு விருதுகள் மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான விளையாட்டு விருதுக்கு தகுதி படைத்தவர்களை ஓய்வு பெற்ற நீதிபதி முகுந்தம் சர்மா தலைமையிலான 12 பேர் கொண்ட தேர்வு கமிட்டி சில தினங்களுக்கு முன்பு தேர்வு செய்து மத்திய விளையாட்டு மந்திரி கிரண் ரிஜிஜூவிடம் ஒப்படைத்தது.

    ‘அர்ஜூனா’ விருதுக்கான பட்டியலில் 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், 2017-ம் ஆண்டு உலக பளுதூக்குதலில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய வீராங்கனை மீராபாய் சானு உள்பட 29 பேரின் பெயர்கள் இடம் பெற்று இருந்தது. ஏற்கனவே கேல் ரத்னா விருதை பெற்று இருக்கும் இந்த இருவரின் தேர்வு விஷயத்தில் மத்திய விளையாட்டு மந்திரி இறுதி முடிவு எடுப்பார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அர்ஜூனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டு இருந்த சாக்‌ஷி மாலிக், மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயரை மத்திய விளையாட்டு அமைச்சகம் நேற்று நிராகரித்தது. மற்றபடி எல்லா விருதுகளுக்கும் தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியலை அப்படியே மத்திய விளையாட்டு அமைச்சகம் ஏற்றுக்கொண்டு இருப்பதாக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன்படி மிக உயரிய ‘ராஜீவ் காந்தி கேல் ரத்னா’ விருதை இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி தடகள வீரர் மாரியப்பன், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், இந்திய பெண்கள் ஆக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் ஆகியோர் பெறுகிறார்கள். கேல் ரத்னா விருதை ஒரே ஆண்டில் 5 பேர் அறுவடை செய்வது இதுவே முதல்முறையாகும்.

    இதேபோல் அர்ஜூனா விருதை அதானு தாஸ் (வில்வித்தை), டுட்டீ சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி, சிராக் ஷெட்டி (இருவரும் பேட்மிண்டன்), விகேஷ் பிகுவான்ஷி (கூடைப்பந்து), மனிஷ் கவுசிக், லவ்லினா போர்கோஹைன் (இருவரும் குத்துச்சண்டை), இஷாந்த் ஷர்மா, தீப்தி ஷர்மா (இருவரும் கிரிக்கெட்), சவாந்த் அஜய் ஆனந்த் (குதிரையேற்றம்), சந்தேஷ் ஜின்கான் (கால்பந்து), அதிதி அசோக் (கோல்ப்), ஆகாஷ்தீப் சிங், தீபிகா (இருவரும் ஆக்கி), தீபக் (கபடி), காலே சரிகா சுதாகர் (கோ- கோ), தத்து பாபன் போகனல் (துடுப்பு படகு), மானு பாகெர், சவுரப் சவுத்ரி (இருவரும் துப்பாக்கி சுடுதல்), மாதுரிகா பத்கர் (டேபிள் டென்னிஸ்), திவிஜ் சரண் (டென்னிஸ்), ஷிவ கேசவன் (குளிர்கால விளையாட்டு), திவ்யா காக்ரன், ராகுல் அவாரே (இருவரும் மல்யுத்தம்), சுயாஷ் நாராயண் ஜாதவ் (பாரா நீச்சல்), சந்தீப் (பாரா தடகளம்), மனிஷ் நார்வால் (பாரா துப்பாக்கி சுடுதல்) ஆகியோர் தட்டிச் செல்கிறார்கள்.

    சிறந்த வீரர்களை உருவாக்கிய பயிற்சியாளர்களுக் கான ‘துரோணாச்சார்யா’ (வழக்கமான பிரிவு, வாழ்நாள் பிரிவு) விருது ஜூட் பெலிக்ஸ் (ஆக்கி), ஜஸ்பால் ராணா (துப்பாக்கி சுடுதல்) உள்பட 13 பேருக்கும், விளையாட்டு வளர்ச்சிக்கு பங்காற்றும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ‘தயான் சந்த்’ விருது அஜித் சிங் (ஆக்கி), நந்தன் பால் (டென்னிஸ்) உள்பட 15 பேருக்கும் கிட்டுகிறது.

    தேசிய விருது வழங்கும் விழா வருகிற 29-ந் தேதி ஆன்லைனில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தானுக்கு எதிராக கடைசி டெஸ்டின் இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் கிராவ்லி 171 ரன்கள் விளாச இங்கிலாந்து 332 ரன்கள் குவித்துள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இங்கிலாந்தை சேர்ந்த ரோரி பேர்ன்ஸ், டாம் சிப்லி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோரி பேர்ன்ஸ் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந் ஜாக் கிராவ்லி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    ஆனால் டாம் சிப்லி 22 ரன்னிலும், அடுத்து வந்த ஜோ ரூட் 29 ரன்னிலும், ஒல்லி போப் 3 ரன்னிலும் வெளியேறினர். இதனால் இங்கிலாந்து 127 ரன்னுக்குள் நான்கு விக்கெட்டை இழந்தது.

    5-வது விக்கெட்டுக்கு கிராவ்லி உடன் விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கிராவ்லி 80 பந்தில் அரைசதமும், 171 பந்தில் சதமும் அடித்தார்.

    மறுமுனையில் பட்லர் 85 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த விக்கெட்டை பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களால் பிரிக்க முடியவில்லை. இதனால் இங்கிலாந்து முதல் நாள் ஆட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு 332 ரன்கள் குவித்துள்ளது. கிராவ்லி 171 ரன்களுடனும், பட்லர் 87 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டாம் சிப்லி, 2. ரோரி பேர்ன்ஸ், 3. கிராவ்லி, 4. ஜோ ரூட், 5. ஒல்லி போப், 6. ஜோஸ் பட்லர், 7. கிறிஸ் வோக்ஸ், 8. டாம் பெஸ், 9. ஜாஃப்ரா ஆர்சர், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷான் மசூத், 2. அபித் அலி, 3. அசார் அலி, 4. பாபர் அசாம், 5. ஆசாத் ஷபிக், 6. பவத் அலாம், 7. முகமது ரிஸ்வான், 8. யாசிர் ஷா, 9. ஷாஹீன் அப்ரிடி, 10. முகமது அப்பாஸ், 11. நசீம் ஷா.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி புறப்படும்போது விராட் கோலியை காணவில்லையே என்று கேட்பவர்கள் துபாய் செல்லலாம் என ஆர்சிபி தெரிவித்துள்ளது.
    ஐ.பி.எல். 13-வது போட்டித் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜா, துபாய் மற்றும் அபுதாபியில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளுவதற்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தனி விமானம் மூலம் துபாய் புறப்படடது. விமானத்தில்  வீரர்கள் உள்ளது போன்ற படத்தில் விராட் கோலி இல்லை.

    இதுகுறித்து ரசிகர்கள் விராட் கோலியை எங்கே? எனக் கேள்விகள் எழுப்பினார். இந்நிலையில் ஒரு வீட்டின் மாடியில் நின்றபடி எடுத்த படத்தை விராட் கோலி பதிவிட்டு ஹாய் துபாய் என டுவீட் செய்திருந்தார்.

    இந்த படத்தை வெளியிட்ட ஆர்சிபி, விராட் கோலியை எங்கே என கேட்பவர்கள், அங்கே செல்லலாம். கேப்டன் கோலி வீட்டில் உள்ளார் எனத் தெரிவித்துள்ளது.

    அனைத்து வீரர்களும் அதிகாரிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தலில் இருப்பார்கள். இந்தக் காலக்கட்டத்தில் அவர்கள் அடுத்தடுத்த கட்ட சோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள். அனைத்து வீரர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் என்ற சோதனை முடிவை பெற்றபின் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, விளையாட அனுமதிக்கப்படுவார்கள்.

    கடந்த வாரம் சாஹல், உமேஷ் யாதவ், நவ்தீப் சைனி ஆகியோர் பெங்களூருவுக்கு சென்றபோது கோலி செல்லவில்லை. அவர்களை அங்கு சில நாட்கள் தனிமைப்படுத்திய பிறகு துபாயிக்கு பறந்துள்ளனர்.
    மாரியப்பன் தங்கவேலு, கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா உள்பட ஐந்து பேருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட இருக்கிறது.
    விளையாட்டுத்துறையில் சாதித்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசு ராஜீவ் கேல் ரத்னா, அர்ஜுனா விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டு சங்கங்களும் அந்தந்த துறைகளில் சிறப்பாக விளையாடிய நபர்களை மத்திய விளையாட்டுதுறைக்கு பரிந்துரை செய்யும்.

    விருதை பெறுவதற்கு இவர்கள் தகுதியான நபர்கள்தானா? என்பதை ஆராய ஒரு குழு அமைக்கப்படும். இந்த குழு கடந்த சில தினங்களுக்கு முன் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா உள்ளிட்ட ஐந்து பேர் பெயரை ராஜீவ் கேல் ரத்னா விருதுக்கு பரிந்துரை செய்தது.

    இந்நிலையில் இன்று விருதுக்கான பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ரோகித் சர்மா, பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், ஹாக்கி வீராங்கன ராணி ஆகியோருக்கு ராஜீவ் கேல் ரத்னா விருது வழங்கப்படும்.

    கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, வீராங்கனை தீப்தி சர்மா ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், அட்னானு தாஸ் (வில்வித்தை), டூட்டி சந்த் (தடகளம்), சாத்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் செட்டி (பேட்மிண்டன்), சுபேதர் மணிஷ் கவுசிக், லாவ்லினா போர்கோஹைன் (குத்துச்சண்டை) உள்ளிட்டமொத்தம் 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ சம்பளம் பிடித்தம் செய்யவில்லை.
    கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் ஒருபக்கம் பாதிக்கப்பட மறுபக்கம் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. நிறுவனங்களுக்க மட்டுமல்ல. கிரிக்கெட் போர்டுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

    இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு ஆரம்ப காலக்கட்டத்திலேயே வேலைப்பார்க்கும் அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் வேலை வாங்கி கொடுத்தது. மற்ற போர்டுகள் சம்பளம் குறைப்பை செய்தது.

    உலகின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிசிசிஐ மட்டும் சம்பளம் குறைப்பு, ஆட்கள் குறைப்பு எதையும் செய்யவில்லை. சரியான நேரத்தில் வீரர்களுக்கான சம்பளத்தொகை போன்றவற்றை ரிலீஸ் செய்தது.

    சுமார் ஐந்து மாதம் பிசிசிஐ எந்தவித சிக்கலையும் சந்திக்காமல் சென்றது. இந்நிலையில் நிலைமை இப்படியே தொடர்ந்தால் சம்பளம் பிடித்தம், ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பெயரை வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    மேலும், அந்த அதிகாரி இதுகுறித்து கூறுகையில் ‘‘சம்பளம் பிடித்தம் குறித்து நாங்கள் இதுவரை விவாதம செய்யவில்லை. ஆனால், இதுகுறித்து ஒரு கூட்டத்தில் விவாதிக்க இருக்கும். சம்பளம் பிடித்தம், வேலை நீக்கம் போன்றவற்றை செய்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை மனதில் வைத்து, முடிவு எடுக்கப்படும்.

    சம்பளம் பிடித்தம், வேலை நீக்கம் ஆகியவற்றிற்கு மிகமிக வாய்ப்பு உள்ளது’’ என்றார்.
    கிரீஸ் நாட்டின் மைகோனோஸ் தீவில் பாருக்கு வெளியே போலீஸ்காரருடன் தகராறு செய்த விவகாரத்தில் மான்செஸ்டர் யுனைடெட் கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி மாகுயர் கைது செய்யப்பட்டுள்ளார்.
    இங்கிலாந்து பிரிமீயர் லீக்கில் முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்று மான்செஸ்டர் யுனைடெட். இந்த அணியின் கேப்டனாக ஹாரி மாகுயர் இருந்து வருகிறார்.

    கிரீஸ் நாட்டின் மைகோனோஸ் தீவில் போலீஸ்காரர்களுக்கு சில இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஹாரி மாகுயர் தகராறில ஈடுபட்டுள்ளார். இதனால் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஹாரியுடன் மேலும் இரண்டு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதுகுறித்து மான்செஸ்டர் யுனெடெட் அணி கூறுகையில் ‘‘மைகோனோசில் நடைபெற்ற சம்பவம் குறித்து அறிந்தோம். ஹாரியுடன்  தொடர்பு கொண்டபோது, கிரீஸ் போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக தெரிவித்தார்’’ என்று தெரிவித்துள்ளது.
    சவுத்தாம்ப்டனில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 2-வது போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று சவுத்தாம்ப்டனில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங் தேர்வு செய்தார்.

    இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. டாம் சிப்லி, 2. ரோரி பேர்ன்ஸ், 3. கிராவ்லி, 4. ஜோ ரூட், 5. ஒல்லி போப், 6. ஜோஸ் பட்லர், 7. கிறிஸ் வோக்ஸ், 8. டாம் பெஸ், 9. ஜாஃப்ரா ஆர்சர், 10. ஸ்டூவர்ட் பிராட், 11. ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    பாகிஸ்தான் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. ஷான் மசூத், 2. அபித் அலி, 3. அசார் அலி, 4. பாபர் அசாம், 5. ஆசாத் ஷபிக், 6. பவத் அலாம், 7. முகமது ரிஸ்வான், 8. யாசிர் ஷா, 9. ஷாஹீன் அப்ரிடி, 10. முகமது அப்பாஸ், 11. நசீம் ஷா.

    கடந்த போட்டியை காட்டிலும் இந்த போட்டிகான ஆடுகளம் சற்று ட்ரையாக உள்ளது. ஆகவே, முதலில் பேட்டிங் செய்து எவ்வளவு ரன்கள் குவிக்க முடியுமோ, அதனை எடுக்க விரும்புகிறோம்’’ என்று  இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் தெரிவித்துள்ளார்.
    ஏழு முறை ஆர்சிபி அணியின் கேப்டனாக இருந்துள்ள விராட் கோலியால் இரண்டு முறை மட்டுமே அணியை பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட்டில் விளையாடும் எட்டு அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் ஒன்று. தற்போது இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளார்.

    கடந்த ஏழு சீசனில விராட் கோலி கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் ஆர்சிபி 5, 7, 3, 2-வது இடம், 8-வது இடம், 6-வது இடம், 8-வது இடம் பிடித்துள்ளது.

    இதனால் ஆர்சிபி அணியின் கேப்டனாக விராட் கோலி நீடிப்பாரா? என்ற கேள்வி கூட எழுந்தது. இந்த நிலையில் ஆர்சிபி அணியின் சேர்மன் சஞ்சீவ் சுரிவாலா கூறுகையில் ‘‘விராட் கோலி இந்திய அணி கேப்டன். மிகவும் அதிக ரசிகர்களை கொண்டவர். நாங்கள் விராட் கோலியை விரும்புகிறோம். விராட் கோலியுட் இணைந்து செயல்பட விரும்புகிறோம்.

    சஞ்சய் சுரிவாலா

    விளைாட்டை  பொறுத்த வரைக்கும் சில நேரங்களில் தோல்வியடையலாம், சில நேரம் வெற்றி பெறலாம், ஆனால் தனிப்பட்ட முறையில் விராட் கோலியின் சாதனையை மறந்துவிட முடியாது.

    ஒரு சிறப்பான லெவன் அணியை உருவாக்க முடியும் என்ற எண்ணத்தில் 21 வீரர்களை பெற்றுள்ளோம். ஒவ்வொரு வீரர்களும் ஆடும் லெவன் அணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அர்த்தமுள்ள பங்கை அளிப்பார்கள்’’ என்றார்.
    ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் இன்று துபாய்க்கு புறப்பட்டுச் சென்றனர்.
    சென்னை:

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மதியம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து மதியம் டோனி உள்ளிட்ட வீரர்கள் விமான நிலையம் புறப்பட்டனர். அங்கிருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர்.


    இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
    சென்னை:

    2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம்பெற்றவர் விஜய் சங்கர். தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கர் இந்திய அணிக்காக 12 ஒருநாள், 9 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.

    இந்நிலையில் வைஷாலி விஸ்வேஸ்வரனுடன் தனக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளதைச் சமூகவலைத்தளங்கள் வழியாக விஜய் சங்கர் அறிவித்துள்ளார். நிச்சயதார்த்த புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்ட விஜய் சங்கருக்கு கே.எல்.ராகுல், யுஸ்வேந்திர சாஹல், ஸ்ரேயாஸ் ஐயர், அபினவ் முகுந்த் மற்றும் ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட கிரிக்கெட்  வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    ஐபிஎல் 2020 போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விஜய் சங்கர் விளையாடவுள்ளார்.



    பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து மடல் அனுப்பியதற்கு சுரேஷ் ரெய்னா நன்றி தெரிவித்து டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    டோனியும் ரெய்னாவும் ஆகஸ்ட் 15ம் தேதியன்று, சுதந்திர தினத்தில் அடுத்தடுத்து தடலாடியாக ஓய்வை அறிவித்தனர், இருவருக்கும் கிரிக்கெட் உலகம் அல்லாமல் பலதரப்பட்ட துறைகளிலிருந்தும் பிரியாவிடை வாழ்த்துக்கள் குவிந்தன.

    இதில் டோனியாவது 39 வயதில் ஓய்வு அறிவித்தார், ஆனால் ரெய்னா 33 வயதில் ஓய்வு அறிவித்தது ரசிகர்களுக்கு பேரிடியாக இருந்தது. இந்நிலையில் டோனியை பாராட்டி கடிதம் எழுதிய பிரதமர் மோடி, அவரை புதிய இந்தியாவின் உத்வேகத்தின் எடுத்துக்காட்டு என்று பாராட்டினார்.

    அதே போல் ரெய்னாவுக்கும் பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில் கிரிக்கெட் விளையாட்டுக்காவே வாழ்ந்தீர்கள், அதையே உயிர் மூச்சாகக் கொண்டுள்ளீர்கள். நீங்கள் உங்கள் வாழ்வில் கடினமான முடிவை எடுத்துள்ளீர்கள்,அதை நான் ஓய்வு என்று சொல்லமாட்டேன்.

    இளைஞர்களுக்கு உற்சாகம் ஊட்டியதற்கும், விளையாட்டில் இந்தியாவில் முன்னணிப்படுத்த முயன்றதற்கும் நான் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்ற மோடி என்று எழுதியுள்ளார்.

    இது குறித்து சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பக்கத்தில்,

    நாங்கள் ஆடும் போது நாட்டுக்காக ரத்தத்தையும் வியர்வையையும் சிந்துகிறோம். இந்த நாட்டு மக்களின் அன்பு போல் சிறந்த பாராட்டு வேறொன்றும் இல்லை.

    அதிலும் நாட்டின் பிரதமரே அன்பு காட்டும்போது வேறேன்ன வேண்டும் என்ற தோனியில் பிரதமருக்கு நன்றி தெரிவித்து உங்கள் பாராட்டை நன்றியுடன் ஏற்று கொள்கிறேன். ஜெய் ஹிந்த்' என்று பதிவிட்டுள்ளார்.

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.
    சவுதம்டன்:

    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.

    இந்த டெஸ்டும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாள் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
    ×