என் மலர்
விளையாட்டு
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது.
சவுதம்டன்:
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று தொடங்குகிறது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மழையால் பாதிக்கப்பட்ட 2-வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது.
இந்த டெஸ்டும் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மோசமான வானிலையால் ஆட்டம் பாதிக்கப்பட்டால் மறுநாள் ஆட்டத்தை அரைமணி நேரத்திற்கு முன்பாக தொடங்குவது என்று முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

கரீபியன் பிரிமீயர் லீக்கில் பார்படாஸ் டிரைடன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது செயின்ட் லூசியா சாக்ஸ் அணி.
கரீபியன் பிரிமீயர் லீக்கின் 5வது ஆட்டம் டிரினிடாடில் நேற்று நடந்தது. செயின்ட் லூசியா சாக்ஸ் - பார்படாஸ் டிரைடண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற பார்படாஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
பார்படாஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சார்லஸ் 35 ரன்னிலும், கேப்டன் ஹோல்டர் 27 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. பார்படாஸ் அணி 18.1 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.
இதையடுத்து, டக்வொர்த் லூயிஸ் முறைப்படி செயின்ட் லூசியா அணி 5 ஓவரில் 47 ரன்கள் எடுக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி 4.1 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் பேயர்ன் முனிச், லயன் கிளப்பை தோற்கடித்து 11-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
லிஸ்பன்:
நாளை மறுதினம் நடக்கும் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி, பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியை எதிர்கொள்கிறது.
கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான பேயர்ன் முனிச் (ஜெர்மனி) அணி 3-0 என்ற கோல் கணக்கில் லயன் கிளப்பை (பிரான்ஸ்) தோற்கடித்து 11-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
பேயர்ன் முனிச் அணியில் செர்ஜ் ஞாப்ரி (18 மற்றும் 33-வது நிமிடம்), ராபர்ட் லெவன்டவ்ஸ்கி (88-வது நிமிடம்) ஆகியோர் கோல் அடித்தனர்.முதல் 15 நிமிடங்கள் எதிரணியின் கோல் கம்பத்தை அடிக்கடி முற்றுகையிட்ட லயன் வீரர்கள், அதன் பிறகு பேயர்ன் முனிச் அணியின் ஆக்ரோஷத்துக்கு பணிந்து விட்டனர். கடைசியாக விளையாடிய 29 ஆட்டங்களில் பேயர்ன் முனிச் தோல்வியை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை மறுதினம் நடக்கும் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அணி, பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியை எதிர்கொள்கிறது.
கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பதெல்லாம் பாராட்டுதான். என்னை பாராட்டியமைக்கு பிரதமர் மோடிக்கு நன்றி என எம்.எஸ்.டோனி தெரிவித்துள்ளார்.
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கடந்த 15-ம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
டோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து அவரது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரைபலங்கள் என அனைத்துத் தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். டோனியின் சாதனைகளை பல்வேறு தரப்பினரும் புகழ்ந்தவண்ணம் உள்ளனர்.
இதற்கிடையே, இந்திய அணியின் நட்சத்திர வீரராக விளங்கிய டோனி, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், 130 கோடி மக்களின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளார் என டோனிக்கு பிரதமர் மோடி எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கலைஞர்கள், ராணுவ வீரர், விளையாட்டு வீரர் விரும்புவது உழைப்புக்கான அங்கீகரிப்பு மட்டும்தான் என்று கூறியுள்ள டோனி, தன்னை அங்கீகரித்து பாராட்டியதற்கு பிரதமருக்கு நன்றி என டோனி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். திடீரென வெளியான இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
டோனியின் இந்த முடிவு குறித்து பல்வேறு விளையாட்டு வீரர்களும், பிரபலங்களும், அரசியல் கட்சி தலைவர்களும் அதிர்ச்சியை வெளியிட்டு வருகின்றனர்
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற டோனியை வாழ்த்தி பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார்.
அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் புதிய இந்தியாவின் அடையாளங்களில் ஒருவர். சர்வதேச போட்டிகளில் இருந்து டோனி ஓய்வு பெற்ற தகவலை கேட்டதும் ஏமாற்றம் அடைந்தேன்.
இந்திய கிரிக்கெட் அணியின் மிகவும் வெற்றிகரமான கேப்டன்களில் டோனியும் ஒருவர். உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன், கேப்டன், விக்கெட் கீப்பர் என்று வரலாறு டோனியை பெருமைப்படுத்தும்.
2011 உலக கோப்பை இறுதிப்போட்டியில் சிக்சர் அடித்து இந்தியாவிற்கு கோப்பையை டோனி வென்று கொடுத்ததை மறக்கவே முடியாது. வெறும் கிரிக்கெட் வீரராக மட்டுமே டோனியை சுருக்கிவிட முடியாது, பல கோடி இளைஞர்களுக்கு டோனி உத்வேகம். இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்கி கிரிக்கெட்டில் புதிய சகாப்தம் படைத்தவர் டோனி.
சக வீரர்கள் வெற்றியை கொண்டாடி கொண்டிருந்தபோது டோனி தனது குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த புகைப்படம் என் மனம் கவர்ந்தது என கூறி உள்ளார்.

உலகக்கோபபை இறுதி போட்டியில் சிக்சர் விளாசி உலகக் கோப்பையை வென்று தந்த தருணம் இந்தியர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும் என டோனிக்கு பிரதமர் புகழாரம் சூட்டி உள்ளார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கடந்த 15 ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
டோனியின் ஓய்வு அறிவிப்பை அடுத்து அவரது எதிர்கால வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரைபலங்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டோனியின் சாதனைகளை பல்வேறு தரப்பினரும் புகழ்ந்தவண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் டோனியை புகழ்ந்து பிரதமர் மோடி கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
சிறிய நகரத்தில் பிறந்து தேசிய அடையாளமாக மாறியவர் டோனி. வெற்றியோ தோல்வியோ எந்த நேரத்திலும் அமைதியை கடைப்பிடித்து சிறந்து விளங்கியவர் டோனி.
தாங்கள் 15 ஆண்டுகளில் இந்திய அணிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கி உள்ளீர்கள். 2011 உலக கோப்பையை வென்று கொடுத்த தருணம் இந்திய மக்களால் என்றும் மறுக்கப்படாது. இறுதி போட்டியில் சிக்சர் விளாசி உலகக் கோப்பையை வென்று தந்த தருணம் இந்தியர்களின் மனதில் எப்போதும் நிலைத்திருக்கும். ராணுவத்தின் கவுரவ பதவியில் பணியாற்றியபோது டோனி மகிழ்ச்சிகரமாக இருந்தார்.
தங்களின் ஓய்வு 130 கோடி இந்திய மக்களையும் வருத்தத்தில் ஆழ்த்தி உள்ளது. தங்களின் எதிர்கால வாழ்க்கை சிறப்பானதாக அமைய எனது வாழ்த்துக்கள்.
இவ்வாறு பிரதமர் கூறி உள்ளார்.
பிரதமர் எழுதிய கடிதத்தை டோனி தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்து, பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை துபாய் செல்கிறது. ஹர்பஜன் சிங் தாமதமாக செல்ல உள்ளார்.
சென்னை:
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 19ம் தேதி தொடங்கும் இந்த தொடர், நவம்பர் 10ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதற்காக அணி வீரர்கள் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்ல ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நாளை மதியம் துபாய்க்கு புறப்பட்டு செல்கிறது என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் ராமசாமி தெரிவித்துள்ளார். 180 பேர் செல்லக்கூடிய விமானத்தில் 60 பேர் மட்டுமே பயணம் செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார்.
நாளை துபாய்க்கு புறப்பட்டுச் செல்லும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருடன், அணியின் முன்னணி வீரரான ஹர்பஜன் சிங் செல்ல மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது தாயாருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால், ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் கழித்து அவர் துபாய் செல்வார் என தெரிகிறது.
‘மன்கட்’ முறையில் எந்த காரணத்தை கொண்டு ரன்-அவுட் செய்யக்கூடாது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார்.
புதுடெல்லி:
2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தது சர்ச்சையை கிளப்பியது.
2019-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ஜோஸ் பட்லரை, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் மன்கட் முறையில் ரன்-அவுட் செய்தது சர்ச்சையை கிளப்பியது.
பந்து வீசும் முன்பே, பவுலர் முனையில் உள்ள பேட்ஸ்மேன் கிரீசை விட்டு நகர்ந்தால் மீண்டும் இது போன்று ரன்-அவுட் செய்வேன், விதிமுறைப்படி இந்த அவுட் சரியே என்றும் கூறியிருந்தார். அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்கும் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அஸ்வின் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக களம் இறங்க உள்ளார்.
இந்த நிலையில் ‘மன்கட்’ முறையில் எந்த காரணத்தை கொண்டு ரன்-அவுட் செய்யக்கூடாது என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் எச்சரித்துள்ளார். பாண்டிங் கூறுகையில், ‘எங்களது கிரிக்கெட் அணுகுமுறையில் இந்த மாதிரி அவுட் செய்வதற்கு இடமில்லை. அதை நாங்கள் செய்யமாட்டோம். அஸ்வின் அணியுடன் இணைந்ததும் முதல் விஷயமாக இது பற்றி தான் பேசப்போகிறேன். அது கடினமான விவாதமாக இருக்கும். ‘மன்கட்’ முறைப்படி அவுட் செய்வது விதிமுறைக்குட்பட்டது என்று அவர் வாதிடலாம்.
ஆனால் அது விளையாட்டின் உண்மையான உத்வேகத்துக்கு அழகல்ல. குறைந்தது டெல்லி அணியினர் இந்த வழியை கடைபிடிக்கக்கூடாது என்று விரும்புகிறேன்’ என்றார். அஸ்வின் அருமையான ஒரு பவுலர். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நீண்ட காலமாக சிறப்பாக பந்து வீசி வருவதாகவும் பாண்டிங் கூறினார்.
டோனிக்கு வழியனுப்பும் போட்டியை நடத்துவதில் ஆர்வமுடன் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், மூன்று வகையான ஐ.சி.சி. கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டனுமான மகேந்திர சிங் டோனி கடந்த சனிக்கிழமை திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அடுத்த ஆண்டு நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டி வரை தொடர்ந்து விளையாடுவார் என்ற எதிர்பார்த்த வேளையில் அவரது ஓய்வு முடிவு சக வீரர்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
‘சாதனை நாயகன்’ 39 வயதான டோனிக்கு வழியனுப்பும் போட்டி ஒன்றை நடத்த வேண்டும், அதை சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடத்த வேண்டும் என்று ஜார்கண்ட் மாநில முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு கோரிக்கை விடுத்தார்.
இந்த நிலையில் இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி நேற்று கூறுகையில், ‘டோனிக்கு பிரியாவிடை ஆட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்களது விருப்பம். இப்போதைக்கு இந்திய அணிக்கு எந்த சர்வதேச போட்டிகளும் இல்லை. ஐ.பி.எல். முடிந்த பிறகு என்ன செய்யலாம் என்று பார்ப்போம். இந்திய கிரிக்கெட்டுக்காக டோனி அளப்பரிய பங்களிப்பு அளித்துள்ளார். எல்லாவிதமான மரியாதைகளுக்கும் அவர் தகுதியானவர். ஆனால் டோனி வித்தியாசமான ஒரு வீரர். யாரும் நினைக்காத நேரத்தில் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு விட்டார். ஐ.பி.எல். போட்டியின் போது அவரிடம் இது பற்றி பேசுவோம். ஒரு ஆட்டத்திலோ அல்லது ஒரு தொடரிலோ பங்கேற்பது குறித்து அவரது கருத்தை அறிய சரியான இடம் அது தான். அவர் ஒப்புக்கொள்கிறாரோ இல்லையோ? நிச்சயம் அவருக்கு முறைப்படி ஒரு பாராட்டு விழா நடத்தப்படும். அவரை நாங்கள் கவுரவப்படுத்துவோம்’ என்றார்.
இந்திய முன்னாள் வீரர் மதன்லால் கூறுகையில், ‘டோனிக்காக, இந்திய கிரிக்கெட் வாரியம் வழியனுப்பும் போட்டி நடத்தினால் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைவேன். அவர் ஒரு ஜாம்பவான். இது போன்று சாதாரணமாக போக விடக் கூடாது. அவரை மீண்டும் களத்தில் காண ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. அதன் மூலம் ஒவ்வொருவரும் அவரது ஆட்டத்தை டி.வி., செல்போனில் பார்ப்பார்கள். அதுவே அவருக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் தொடர் ஒன்றை உள்நாட்டில் நடத்தும் போது, ரசிகர்கள் ஸ்டேடியத்தில் அமர்ந்து அவரது ஆட்டத்தை நேரில் கண்டுகளிக்க முடியும்’ என்றார்.
இதற்கிடையே, பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவிக்கும் போது, ‘2021-ம் ஆண்டு 20 ஓவர் உலககோப்பை போட்டி வரை டோனி விளையாடி இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்தியாவில் அவருக்கு உள்ள ஆதரவையும், ரசிகர்கள் காட்டும் அன்பையும், அங்கீகாரத்தையும் வைத்து தான் இவ்வாறு சொல்கிறேன். இருப்பினும் ஓய்வு அவரது தனிப்பட்ட விருப்பம். ஒருவேளை 20 ஓவர் உலக கோப்பையில் டோனி பங்கேற்க வேண்டும் என்று அவரை அழைத்து இந்திய பிரதமர் மோடி வேண்டுகோள் விடுக்கலாம். இவ்வாறு நடக்க வாய்ப்புண்டு. 1987-ம் ஆண்டு கிரிக்கெட்டை விட்டு விலக இம்ரான்கான் முடிவெடுத்த போது, அப்போதைய பாகிஸ்தான் அதிபர் ஜியா உல்-ஹக் அவரை தொடர்ந்து விளையாடும்படி கேட்டுக் கொண்டார். அவரும் அதை ஏற்று விளையாடினார். பிரதமர் கோரிக்கை விடுத்தால், முடியாது என்று டோனியால் மறுக்க முடியாது’ என்றார்.

பி.எஸ்.ஜி. அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது.
லிஸ்பன்:
கிளப் அணிகளுக்கான ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் பி.எஸ்.ஜி. எனப்படும் பாரீஸ் செயின்ட் ஜெர்மைன் (பிரான்ஸ்) அணியும், ஆர்.பி.லெப்ஜிக் (ஜெர்மனி) அணியும் மோதின. பந்தை கட்டுப்பாட்டில் (58 சதவீதம்) வைத்திருப்பதிலும், பந்தை கடத்திச்சென்று கோல் நோக்கி துல்லியமாக அடிப்பதிலும் பி.எஸ்.ஜி. அணி வெகுவாக ஆதிக்கம் செலுத்தியது.
6-வது நிமிடத்தில் பி.எஸ்.ஜி. வீரர் நெய்மார் நெருக்கமாக வந்து அடித்த பந்து கம்பத்தில் பட்டு மயிரிழையில் நழுவியது. அதைத் தொடர்ந்து 13-வது நிமிடத்தில் கிடைத்த பிரிகிக் வாய்ப்பில் உதைக்கப்பட்ட பந்தை பி.எஸ்.ஜி. வீரர் மர்கியூனோஸ் தலையால் முட்டி வலைக்குள் தள்ளினார். தொடர்ந்து பி.எஸ்.ஜி. வீரர்கள் ஏஞ்சல் டி மரியா (42-வது நிமிடம்), ஜூவான் பெர்னட் வெலஸ்கோ (56-வது நிமிடம்) ஆகியோரும் கோல் போட்டு அசத்தினர். லெப்ஜிக் அணியால் கடைசி வரை ஒரு கோல் கூட திருப்ப முடியவில்லை. இறுதியில் பி.எஸ்.ஜி. அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன்ஸ் லீக்கில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்தது. பி.எஸ்.ஜி. அணி வருகிற 23-ந்தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் பேயர்ன் முனிச் அல்லது லயன் ஆகிய அணிகளில் ஒன்றை சந்திக்கும்.

கரீபியன் பிரிமீயர் லீக்கில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஜமைக்கா அணி.
கரீபியன் பிரிமீயர் லீக் நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் ஜமைக்க தல்லாவாஸ் - செயின்ட் லூசியா சாக்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
செயின்ட் லூசியா அணியின் முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ராஸ்டன் சேஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா 25 ரன்னும், பிளெட்சர் 22 ரன்னும் எடுத்தனர். இதனால் செயின்ட் லூசியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா தல்லாவாஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 44 ரன்னில் அவுட்டானார். ஆசிப் அலி 27 பந்தில் 47 ரன்கள் விளாச 18.5 ஓவரில் 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி வெற்றி பெற்றது. ஆசிப் அலி ஆட்ட நாயகனாக தேர்வானார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும் என தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்தில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையை வென்ற போது ஷுப்மான் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அவரை ஏலம் எடுத்தது.
தற்போது 20 வயதாகும் ஷுப்மான் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கவுதம் கம்பிர் கேப்டன் பதவியில் இருந்து விலகியதும் தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ளார். கடந்த முறை முதல் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்ற பெற்ற போதிலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.
இதனால் தினேஷ் கார்த்திக்கின் கேப்டன் பதவி பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்தான் கேப்டனாக நீடிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இளம் வீரரான ஷுப்மான் கில்லுக்கு தலைமை பொறுப்புக்கான சில பணி வழங்கப்படும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரெண்டன் மெக்கல்லம் கூறுகையில் ‘‘ஷுப்மான் கில் திறமையான, சிறந்த வீரர். அவர் குறைந்த பட்சம் சில திறன்களில் தலைமை பொறுப்பில் ஒரு பகுதியாக இருக்கப் போகிறார். அவர் இளம் வீரராக இருந்தாலும் கூட, நீண்ட நாட்களாக விளையாடினால்தான் சிறந்த கேப்டனாக முடியும் என்பதை நான் நம்புகிறவன் அல்ல. இது ஒரு தலைவரின் நடத்தைகளை வெளிப்படுத்துவதாகும். இந்த தொடர் முழுவதும் அவருக்கு தலைமை பொறுப்புகளில் சிலவற்றை வழங்க இருக்கிறோம்.
தினேஷ் கார்த்திக்கை சற்று மாறுபட்ட பகுதியாக பிரித்து பார்க்க வேண்டும். நான் முதன்மையாக விக்கெட் கீப்பிங் பணியை நினைக்கிறேன். இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர்களில் அவரும் ஒருவர்’’ என்றார்.