என் மலர்
செய்திகள்

அணி கேப்டன்கள்
கரீபியன் பிரிமீயர் லீக் - ஆசிப் அலி அதிரடியால் ஜமைக்கா அணி முதல் வெற்றி
கரீபியன் பிரிமீயர் லீக்கில் செயின்ட் லூசியா சாக்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது ஜமைக்கா அணி.
கரீபியன் பிரிமீயர் லீக் நேற்று முன்தினம் தொடங்கியது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
நேற்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் ஜமைக்க தல்லாவாஸ் - செயின்ட் லூசியா சாக்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
செயின்ட் லூசியா அணியின் முன்னணி வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை. ராஸ்டன் சேஸ் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 52 ரன்னில் அவுட்டானார். நஜிபுல்லா 25 ரன்னும், பிளெட்சர் 22 ரன்னும் எடுத்தனர். இதனால் செயின்ட் லூசியா 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜமைக்கா தல்லாவாஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் கிளென் பிலிப்ஸ் அதிரடியாக ஆடி 44 ரன்னில் அவுட்டானார். ஆசிப் அலி 27 பந்தில் 47 ரன்கள் விளாச 18.5 ஓவரில் 160 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி வெற்றி பெற்றது. ஆசிப் அலி ஆட்ட நாயகனாக தேர்வானார்.
Next Story






