search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆண்டர்சன், விராட் கோலி
    X
    ஆண்டர்சன், விராட் கோலி

    600 விக்கெட் வீழ்த்திய முதல் வேகப்பந்து வீச்சாளர்: ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு விராட் கோலி புகழாரம்

    பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி டெஸ்டின்போது 600 விக்கெட் வீழ்த்தி சாதனைப் படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு விராட் கோலி புகழாரம் சூட்டியுள்ளார்.
    இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. மழையால் ஆட்டம் அடிக்கடி பாதிக்கப்பட்டதால் ஆட்டம் டிராவில் முடிந்தது.

    இந்த போட்டிக்கு முன் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 593 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். முதல் இன்னி்ங்சில் ஐந்து விக்கெட் வீழ்த்தியதால் 598 விக்கெட் ஆனது.

    2-வது இன்னிங்சில் அபித் அலியை வீழ்த்தி 599-ஐ எட்டினார். நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தின்போது பாகிஸ்தான் அணியின் அசார் அலியை அவுட்டாக்கி 600 விக்கெட் வீழ்த்தி சாதனைப்படைத்தார்.

    இதன்மூலம் 500 விக்கெட் வீழ்த்திய முதல் இங்கிலாந்து வீரரும், முதல் வேகப்பந்து வீச்சாளரும் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத் 563 விக்கெட்டும், வெஸ்ட் இண்டீசின் வால்ஷ் 519 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர்.

    சுழற்பந்து வீச்சாளர்களில் முத்தையா முரளீரதன் 800 விக்கெட்டும், வார்னே 708 விக்கெட்டும், கும்ப்ளே 619 வி்க்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.

    ஆண்டர்சன், விராட் கோலி

    வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் முதன்முறையாக 600 விக்கெட் என்ற சாதனையை படைத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனைக் குறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘600 விக்கெட் என்ற நம்பமுடியாத சாதனையை எட்டிய ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வாழ்த்துக்கள. நான் சந்தித்ததில் மிகவும் சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன்’’ எனத் தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×