என் மலர்tooltip icon

    விளையாட்டு

    சென்னை அணி வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. எல்லா அணிகளும் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியி்ல் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதனால் அணி வீரர்கள் அனைவரும் இன்னும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த அணி பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.

    ஐபிஎல் போட்டிக்கு இதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில் சவுரவ் கங்குலி இதுகுறித்து கூறுகையில் ‘‘சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்து என்னால் கூற இயலாது.

    போட்டி அட்டவணைப்படி ஐபிஎல் தொடர் தொடங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். மிக நீண்ட தொடர் என்பதால், எல்லாம் சிறப்பாக செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறேன்.

    ஒட்டுமொத்த உலகமும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. கள நிலவரத்ரை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.

    வழக்கமான அட்டவணைப்படி நான் எனது வேலையை தெடங்கியுள்ளேன். கட்டாயம் பாதுகாப்புடன் நம்முடைய வேலையை செய்ய வேண்டிய நேரம் இது. நான் குடும்பம், கிரிக்கெட், பிசிசிஐ, மீடியா வேலை ஆகியவற்றை சமாளித்து வருகிறேன்’’ என்றார்.
    ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும்.
    முதல் போட்டியான ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச்சும் (செர்பியா), சோபியா கெனினும் (அமெரிக்கா) பட்டம் பெற்றனர்.

    கொரோனா வைரஸ் காரணமாக மே, ஜூன் மாதங்களில் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. இந்த போட்டி செப்டம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது. ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெற இருந்த விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நாளை (31-ந்தேதி) தொடங்குகிறது.

    கொரோனா பாதிப்பில் அமெரிக்கா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. இதனால் இந்தப் போட்டி ரசிகர்கள் இல்லாமல் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறையில் நடத்தப்படுகிறது.

    நடப்பு சாம்பியனும், உலகின் 2-ம் நிலை வீரருமான ரபெல் நடால் (ஸ்பெயின்) பாதுகாப்பு காரணமாக இந்தப் போட்டியில் ஆடவில்லை. 3-ம் நிலை வீரரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) காயம் காரணமாக இந்தாண்டு இறுதிவரை ஆட மாட்டார் என்று ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

    நடால், பெடரர் இல்லாததால் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்ல நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச்சுக்கு அதிகமான வாய்ப்பு உள்ளது. 33 வயதான அவர் 18-வது கிராண்ட்சிலாம் பட்டம் வெல்லும் ஆர்வத்தில் உள்ளார். ஜோகோவிச் அமெரிக்க ஓபன் பட்டத்தை 4-வது முறையாக வெல்லும் வேட்கையில் உள்ளார்.

    ஜோகோவிச்சுக்கு டொமினிக் தீயம் (ஆஸ்திரியா), மெட்வதேவ் (ரஷியா), ஸ்டேபானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), சுவரேவ் (ஜெர்மனி) ஆகியோர் சவாலாக இருப்பார்கள்.

    பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் பினாகா (கனடா) ஆடவில்லை. கரோலினா பிளிஸ்கோவா (செக் குடியரசு) சோபியா கெனின், செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா), நமோமி ஒசாகா (ஜப்பான்) போன்ற முன்னணி வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

    38 வயதான செரீனா வில்லியம்ஸ் 24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய சாதனை படைக்கும் முயற்சியில் உள்ளார். ஆனால் அவருக்கு கடுமையான சவால்கள் இருக்கிறது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் ஆட்டத்தில் விளையாடாது எனத் தெரிகிறது.
    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.

    ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஏற்கனவே ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு சென்று விட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தவிர மற்ற அணிகள் பயிச்சியை தொடங்கி விட்டன.

    போட்டிக்கு இன்னும் 3 வாரங்கள் குறைவாக உள்ள நிலையில் போட்டி அட்டவணை வெளியிடப்படாமல் என்ற நிலை உள்ளது. ஐ.பி.எல். போட்டியில் விளையாட இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது பல்வேறு சிக்கல்களை சந்தித்து உள்ளது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ரெய்னா தனிபட்ட காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பி உள்ளார்.

    மேலும் அணியில் உள்ள தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுதவிர அணியில் உள்ள உதவியாளர்களில் 11 பேர் கொரோனாவுக்கு சிக்கி உள்ளனர்.

    கொரோனா பாதிப்பு காரணமாக சி.எஸ்.கே. அணி வீரர்களால் பயிற்சியில் ஈடுபட முடியவில்லை. மேலும் ஒரு வாரம் தனிமைக்கு பிறகே பயிற்சியில் ஈடுபட முடியும்.

    ஐ.பி.எல். போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத திட்டமிடபட்டு இருந்தது.

    தற்போது எழுந்துள்ள சிக்கல்கள் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடக்க ஆட்டத்தில் விளையாடாது என்று தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பையுடன் வேறு ஒரு அணி தொடக்க போட்டியில் விளையாடும். இதற்கு ஏற்ற வகையில் ஐ.பி.எல். போட்டி அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரெய்னா விலகியது பின்னடைவாக கருதப்படுகிறது. ரூ.11 கோடி ஊதியம் பெறும் அவருக்கு பதிலாக மாற்று வீரரை சி.எஸ்.கே. அணி நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யூசுப் பதான், ஹனுமா விகாரி, மனோஜ் திவாரி மற்றும் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த இவின் லீவிஸ் ஆகியோரது பெயர் அடிபடுகிறது.
    600 விக்கெட் வீழ்த்திய ஜேம்ஸ் ஆண்டர்சனின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் சங்ககரா கூறியுள்ளார்.

    மான்செஸ்டர்:

    இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன். 38 வயதான அவர் சமீபத்தில் டெஸ்டில் 600 விக்கெட் கைப்பற்றி சாதனை புரிந்தார்.

    டெஸ்டில் 600 விக்கெட் கைப்பற்றிய முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்று சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.

    ஒட்டு மொத்தத்தில் இந்த மைல் கல்லை தொட்ட 4-வது வீரர் ஆவார். சுழற்பந்து வீரர்களான முரளிதரன், வார்னே, கும்ப்ளே ஆகியோர் 600 விக்கெட்டை கைப்பற்றி இருந்தனர்.

    இந்த நிலையில் ஆண்டர்சனின் 600 விக்கெட் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என்று இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், எம்.சி.சி. தலைவருமான சங்ககரா தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    தற்போது மட்டுமல்ல எதிர் காலத்திலும் வேகப்பந்து வீரர்கள் யாரும் ஆண்டர்சனின் 600 விக்கெட் சாதனையை முறியடிக்க முடியாது. அவர் ஒரு கடினமான இலக்கை நிர்ணயித்துள்ளார். அவரது இந்த சாதனையை யாராலும் நெருங்க முடியாது. இதனால் இந்த சாதனைக்கு சொந்தக்காரராக அவர் மட்டுமே இருப்பார் என்று கருதுகிறேன்.

    இவ்வாறு சங்ககரா கூறி உள்ளார்.

    தற்போது விளையாடும் வீரர்களில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மற்றொரு வேகப்பந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 514 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய வேகப்பந்து வீரர்களில் 4-வது இடத்தில் உள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் மாமா கொள்ளைக்காரர்கள் தாக்கியதில் உயிரிழந்து உள்ளார்.
    சண்டிகர்:

    இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் அறிவிப்பினை சமீபத்தில் வெளியிட்டார். எனினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பரில் நடைபெறும் ஐ.பி.எல். போட்டிகளில் கலந்து கொள்வதற்காக சக வீரர்களுடன் புறப்பட்டுச் சென்றார்.

    கொரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக அணி வீரர்கள், ஐ.பி.எல். ஊழியர்கள், பி.சி.சி.ஐ. ஊழியர்கள் மற்றும் துணை பணியாளர்கள் என மொத்தம் 1,988 பேருக்கு ஆகஸ்ட் 20-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பி.சி.சி.ஐ. நிர்வாகம் கொரோனா பரிசோதனைகளை செய்தது.

    இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர், அணி நிர்வாகிகள் உள்ளிட்ட 13 பேருக்கு  கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

    இதற்கிடையே, அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா போட்டி தொடரில் இருந்து விலகியுள்ளதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சொந்த காரணங்களுக்காக சுரேஷ் ரெய்னா நாடு திரும்பி விட்டதாகவும் அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் பதன்கோட் மாவட்டத்தில் தரியல் கிராமத்தில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் வசித்து வந்துள்ளனர். அசோக் அரசு ஒப்பந்ததாரராக இருந்துள்ளார். அவரது வீட்டுக்குள் புகுந்து கொள்ளைக்காரர்கள் தாக்கியுள்ளனர். இதில் ரெய்னாவின் மாமா உயிரிழந்துள்ளார். மேலும் 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், கடந்த 19-ம் தேதி இரவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ரெய்னாவின் மூத்த சகோதரர் சியாம் லால் கொல்லப்பட்டவர் ரெய்னாவின் மாமா என உறுதிப்படுத்தி உள்ளார். சம்பவம் நடந்த பொழுது வீட்டில் அனைவரும் தூங்கிக்கொண்டு இருந்துள்ளனர். கொள்ளையர்கள் தாக்குதல் நடத்திவிட்டு பணம் மற்றும் தங்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பியோடி உள்ளனர் என தெரிவித்தனர்.

    இந்த சம்பவத்தில் அசோக் குமாரின் தாயார் சத்யா தேவி (80), மனைவி ஆஷா தேவி, மகன்கள் அபின் மற்றும் குஷால் ஆகியோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் சத்யா தேவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பி விட்டார் என்று போலீசார் கூறியுள்ளனர்.
    சின்சினாட்டி ஓபன் டென்னிசின் இறுதிப்போட்டியில் கனடா வீரர் ராவ்னிக்கை வீழ்த்திய செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்று அசத்தினார்.
    நியூயார்க்:
     
    சின்சினாட்டி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்றது. 

    ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில் உலகின் ‘நம்பர் ஒன்’ வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், கனடாவை சேர்ந்த மிலோஸ் ராவ்னிக்கை எதிர்கொண்டார்.

    இதில் முதல் செட்டை 1-6 என ராவ்னிக் கைப்பற்றினார். அதன்பின் அதிரடியாக ஆடிய ஜோகோவிச் அடுத்த 2 செட்களையும் கைப்பற்றி அசத்தினார்.

    இறுதியில், ஜோகோவிச் 1-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் ராவ்னிக்கை வீழ்த்தியதுடன், சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி அசத்தினார். 
    சென்னை அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளைச் சேர்ந்த இந்திய வீரர்கள் அங்கு சென்று விட்டனர். வெளிநாட்டு வீரர்களும் அமீரகம் வந்த வண்ணம் உள்ளனர்.

    ‘அமீரகம் சென்றதும் ஓட்டலில் கட்டாயம் 6 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும், அப்போது 1, 3, 6-வது நாட்களில் என்று மொத்தம் 3 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். எப்போதும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மூன்று சோதனையிலும் தொற்று இல்லை என்பதை குறிக்கும் ‘நெகட்டிவ்’ முடிவு வந்த பிறகே ஒன்றாக பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.’ என்பது இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் ஆகும். அது மட்டுமின்றி விமான நிலையத்திலும் தனியாக பரிசோதனை செய்யப்படுகிறது.

    டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் கடந்த 21-ந்தேதி துபாய் சென்றனர். 6 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை முடிந்து சென்னை அணியினர் நேற்று பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிர்ச்சி அளிக்கும் தகவலாக அந்த அணியில் சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.

    கடைசிகட்ட பரிசோதனையில் இந்திய அணிக்காக சமீபத்தில் விளையாடிய வலதுகை மிதவேகப்பந்து வீச்சாளர் ஒருவருக்கும், அணியின் உதவியாளர்கள், வலை பயிற்சி பவுலர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த எண்ணிக்கை 12 வரை இருக்கும் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில், சென்னை அணியில் மேலும் ஒரு வீரருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இருந்து சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகி உள்ளார்.
    சென்னை:

    கொரோனா அச்சம் காரணமாக இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக அணி வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

    வரும் 19ம் தேதி போட்டி தொடங்க உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளார். அவர் தனது சொந்த காரணங்களுக்காக இந்தியா திரும்பியிருப்பதாக அணியின் சிஇஓ விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

    சுரேஷ் ரெய்னா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியா திரும்பியிருப்பதால், ஐபிஎல் சீசனில் அவர் விளையாட மாட்டார் என்றும், இந்த நேரத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முழுமையான ஆதரவை வழங்குவதாகவும் அணியின் டுவிட்டர் பக்கத்தில் சிஇஓ விஸ்வநாதன் குறிப்பிட்டுள்ளார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு வீரர் உள்ளிட்ட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், முன்னணி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா விலகியிருப்பது அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
    தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, தேசிய விளையாட்டு விருதுகளை காணொலி காட்சி மூலம் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்கி கவுரவித்தார்.
    புதுடெல்லி:

    ஹாக்கி ஜாம்பவான் தயான் சந்தின் பிறந்தநாள் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்- வீராங்கனைகளுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த விருதுகளை ஜனாதிபதி வழங்குவார்.

    அவ்வகையில், இந்த ஆண்டுக்கான விளையாட்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் காணொலி மூலமாக தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருதுகளை வழங்கினார். விக்யான் பவனில் நடைபெற்ற விருது நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் நரேந்திர துருவ் பாத்ரா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    விளையாட்டு விருதுகள்

    இதேபோல் நாட்டின் பல்வேறு விளையாட்டு ஆணைய மையங்களில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விளையாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்று விருதுகளை பெற்றுக்கொண்டனர்.

    நிகழ்ச்சி நடைபெற்ற அனைத்து இடங்களிலும் சுகாதார அமைச்சத்தின் அனைத்து பின்பற்றப்பட்டன. 

    ரோகித் சர்மா (கிரிக்கெட்), மாரியப்பன் (பாரா உயரம் தாண்டுதல்), மணிகா பத்ரா (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), ராணி (ஹாக்கி) ஆகியோருக்கு இந்த ஆண்டின் மிக உயரிய விளையாட்டு விருதான கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதுவரை இல்லாத வகையில், 5 பேர் கேல் ரத்னா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இவர்களில் ரோகித், வினேஷ் போகத் தவிர தவிர மற்ற மூவருக்கும் இன்று விருது வழங்கப்பட்டது. இஷாந்த் சர்மா, தீப்தி சர்மா, அடானு தாஸ், திவிஜ் சரண் உள்ளிட்ட 27 பேருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.

    தேசிய விளையாட்டு விருது வழங்கும் நிகழ்ச்சியானது கொரோனா அச்சம் காரணமாக முதல் முறையாக காணொலி வாயிலாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
    விளையாட்டு விருதுகளுக்காக பரிசுத்தொகை அதிகரிக்கப்பட்டிருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    மேஜர் தயான் சந்தின் பிறந்தநாளையொட்டி டெல்லி மேஜர் தயான் சந்த் தேசிய விளையாட்டரங்கில் உள்ள அவரது சிலைக்கு மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண்  ரிஜிஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

    பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தபொது, விளையாட்டு மற்றும் சாகச விருதுகளுக்கான பரிசுத் தொகையை அதிகரிக்க முடிவு செய்திருப்பதாக கூறினார்.

    அர்ஜுனா விருதுக்கான பரிசுத் தொகை ரூ .15 லட்சமாகவும், கேல் ரத்னா விருதுக்கான பரிசுத்தொகை ரூ.25 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது என விளையாட்டுத்துறை மந்திரி தெரிவித்தார்.

    தேசிய விளையாட்டு தினத்தையொட்டி தேசிய விளையாட்டு மற்றும் சாகசங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி இன்று காணொலி வாயிலாக நடைபெற உள்ளது. விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.
    ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று நாட்டுக்கு பெருமை சேர்த்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் கொரோனா பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (26). ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் தங்கப்பதக்கம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற இருக்கிற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.

    இந்த ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், சோன்பேட் நகரில் உள்ள தனது கிராமத்தில் பயிற்சியாளர் ஓம் பிரகாஷ் தலைமையில் பயிற்சி மேற்கொண்டு வந்துள்ளார்.  தேசிய விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்கு முன் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  அதன் முடிவுகள் நேற்று வெளிவந்தன. இதில் போகத்துக்கு கொரோனா கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    இதுதொடர்பாக போகத் கூறுகையில், விருது வழங்கும் விழாவிற்கான ஒத்திகைக்கு முன் சோன்பேட் நகரில் கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.  நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். ஆனால் எனக்கு கொரோனா பாதிப்புக்கான அறிகுறிகள் இதுவரை இல்லை.  நான் நன்றாகவே இருக்கிறேன்.  விரைவில் நலம் பெறுவேன் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
    ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப்பந்து வீச்சாளர் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 21-ந்தேதி துபாய் சென்றது. அணி வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்கள் தனித்தனியாக ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

    இந்த ஆறு நாட்களில் முதல் நாள், 3-வது நாள் மற்றும் 6-வது நாள் என மூன்று நாட்கள் கொரோனா பரிசோதனை செய்யப்படும். மூன்று பரிசோதனைகளிலும் நெகட்டிவ் முடிவு வந்தால் வீரர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் முடிந்த நிலையில், இன்று பயிற்சிக்கு தயாராக இருந்தனர். இந்நிலையில் ஒரு வேகப்பந்து வீச்சாளர் உள்பட 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மீண்டும் பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த பிறகு வீரர்களும் பயோ-செக்யூர் பப்பிள் என்ற வளையத்திற்குள் வருவார்கள்.  ஒரு வீரர் உள்பட 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் பயிற்சி பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
    ×