என் மலர்
விளையாட்டு
ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. தற்போது 8 அணி வீரர்களும் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா காலம் என்பதால் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஷார்ஜாவில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து ஷார்ஜாவுக்கும் வீரர்கள் செல்ல வேண்டியிருக்கும்.
அப்போது தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை போன்ற சிக்கல் ஏற்பட வாய்புள்ளது. ஏனென்றால் மூன்று இடங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறை வெவ்வேறானவை.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதியும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் கூறுகையில் ‘‘அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். எந்தவித தனிமைப்படுத்துதல் இல்லாமல் அணி வீரர்கள் மூன்று இடத்திற்கும் சென்ற வர அதிகாரிகளால் நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் நெறிமுறைப்படி வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார்கள். வெளியில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படலாம். ஆனால், அவர்கள் ஏற்கனவே அவர்களுடைய ஓட்டல்களில் இருந்தால் போட்டிக்கு சென்று வர எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.
மன்கட் அவுட்டின்போது பேட்ஸ்மேன்கள் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை உள்ளே இழுக்க வேண்டாம் என்று ஜவகல் ஸ்ரீநாத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியின்போது கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் பஞ்சாப் அணியின் அஸ்வின் பந்து வீசும்போது ராஜஸ்தான் அணியின் ஜோஸ் பட்லர் கிரீஸை விட்டு வெளியே நின்றிருந்தார். அஸ்வின் அவரை மன்கட் முறையில் அவுட் செய்தார். அப்போது இது மிகப்பெரிய சர்ச்சையை எழுப்பியது.
இந்த வருடத்திற்கான ஐபிஎல் தொடரில் அஸ்வின் டெல்லி அணிக்கு சென்றுள்ளார். அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மன்கட் அவுட் செய்ய அனுமதிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், மன்கட் அவுட் என்பது ஐசிசி விதிமுறையில் உள்ளதா? அது கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை அழிப்பதாக உள்ளதாகவும் விவாதம் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜவகல் ஸ்ரீநாத் கூறுகையில் ‘‘பேட்ஸ்மேன் சாதமாக எடுத்துக்கொண்டு பந்து வீசுவதற்கு முன்னதாகவே கிரீஸை விட்டு வெளியேறினால், அதன்பின் அவர் ரன்அவுட் செய்யப்பட்டால், அதில் எனக்கு எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது. அது என்னைப் பொறுத்தவரைக்கும் சரியானது’’ என்றார்.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று நடக்கிறது.
மான்செஸ்டர்:
இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்த முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் இந்த போட்டி தொடரில் ஆறுதல் வெற்றியை சுவைக்க பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி போராடும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் துணைகேப்டன் சுரேஷ் ரெய்னா விலகியது ஏன்? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
புதுடெல்லி:
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை நடக்கிறது. இதற்காக 8 அணிகளை சேர்ந்த இந்திய வீரர்களும் அங்கு சென்று தங்களை தயார்படுத்தி வருகிறார்கள். வெளிநாட்டு வீரர்களும் அணியினருடன் இணைந்த வண்ணம் உள்ளனர்.
3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டோனி தலைமையில் கடந்த 21-ந் தேதி அமீரகம் சென்றடைந்தது. தங்களது 6 நாள் தனிமைப்படுத்துதலை முடித்து பயிற்சியை தொடங்க இருந்த நிலையில் சென்னை அணியை சேர்ந்த 2 வீரர்கள் (தீபக் சாஹர், ருதுராஜ் கெய்க்வாட்) உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகின. கொரோனாவால் பாதிக்கப்பட்ட வீரர்கள், உதவியாளர்கள், வலைப்பயிற்சி பவுலர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையில் சென்னை அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக அந்த அணியின் துணை கேப்டனும், எல்லா சீசனிலும் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தவரும், ஐ.பி.எல். போட்டியில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் விராட்கோலிக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருப்பவருமான 33 வயது சுரேஷ் ரெய்னா கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியில் இருந்து திடீரென விலகி நாடு திரும்பினார். தனிப்பட்ட காரணத்தினால் சுரேஷ் ரெய்னா போட்டியில் இருந்து ஒதுங்கியதாகவும், இந்த சீசனில் அவர் விளையாடமாட்டார் என்று அணி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம் 20-ந் தேதி பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டில் வீடு புகுந்து கொள்ளையர்கள் தாக்கியதில் சுரேஷ் ரெய்னாவின் மாமா அசோக் குமார் இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் 4 பேர் படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த துயர சம்பவத்தால் சுரேஷ் ரெய்னா ஐ.பி.எல். போட்டியில் இருந்து ஒதுங்கியதாக முதலில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து சுரேஷ் ரெய்னா முழுமையாக விலக காரணம் என்ன? என்பது குறித்து புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. ஓட்டலில் கேப்டன் டோனிக்கு ஒதுக்கப்பட்டது போல் தனக்கு பால்கனி வசதியுடன் கூடிய தங்கும் அறை கொடுக்கப்படவில்லை என்று அதிருப்தி அடைந்து அணி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டதால் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டாலும், கொரோனா பாதிப்பு அச்சம் மற்றும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுவதில் உள்ள நெருக்கடி ஒத்துவராததாலும் அவர் விலகல் முடிவை எடுத்ததாக தெரிகிறது. இந்த எதிர்பாராத விலகலால் சென்னை அணியுடனான சுரேஷ் ரெய்னாவின் நீண்ட கால பந்தம் முடிவுக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
சுரேஷ் ரெய்னாவின் விலகல் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை நிர்வகிக்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவரான என்.சீனிவாசன் அளித்த ஒரு பேட்டியில், ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எப்பொழுதும் ஒரு குடும்பம் போன்றதாகும். எல்லா சீனியர் வீரர்களும் அதனுடன் இணைந்து வாழ பழகிவிட்டார்கள். உங்களுக்கு தயக்கமோ, அதிருப்தியோ இருந்தால் நீங்கள் விலகி செல்லலாம். யாரையும், எதையும் செய்யச்சொல்லி நான் கட்டாயப்படுத்தமாட்டேன். சில நேரங்களில் வெற்றி தலைக்கேறிவிடும். நான் டோனியிடம் பேசினேன். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பிரச்சினை எதுவுமில்லை என்று உறுதி அளித்தார். ‘ஜூம்’ செயலி மூலம் டோனி வீரர்களுடன் பேசி பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறார். யாரால் தொற்று பரவியது என்பது தெரியவில்லை.
ரெய்னா விலகல் அணியில் தாக்கத்தை ஏற்படுத்தாது. உறுதியான மனநிலை கொண்ட கேப்டன் என்னிடம் உள்ளார். டோனி எந்த பிரச்சினையானாலும் எளிதில் குழப்பம் அடையமாட்டார். இது அணியில் உள்ள எல்லோருக்கும் நிறைய நம்பிக்கையை அளிக்கிறது. ருதுராஜ் அருமையான பேட்ஸ்மேன். இந்த முறை அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். இந்த போட்டியின் நட்சத்திரமாகவும் அவர் மாறலாம், யாருக்கு தெரியும். ஐ.பி.எல். போட்டி இன்னும் தொடங்கவில்லை. தான் என்ன தவற விடுகிறோம் என்பதை ரெய்னா நிச்சயம் உணர்வார். அதேபோல் அவர் பணத்தையும் (இந்த சீசனுக்கான ரூ.11 கோடி சம்பளம்) இழக்க போகிறார்’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடக்க சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டி அரங்கேறியது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 2016-ம் ஆண்டு சாம்பியனுமான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-4, 6-4 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிச்சை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்ற ஆட்டங்களில் வான்ட்ரோசோவா (செக்குடியரசு), கிறிஸ்டினா மாடினோவிச் (பிரான்ஸ்), கிராசெவா (ரஷியா) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து முதல்முறையாக பந்தை எதிர்கொண்ட போது, கொஞ்சம் பயமாக இருந்ததாக கேப்டன் விராட் கோலி தெரிவித்தார்.
துபாய்:
8 அணிகள் பங்கேற்கும் 13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய 3 இடங்களில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடக்கிறது. போட்டி அட்டவணை இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படவில்லை என்றாலும் தொடக்ககட்ட ஆட்டங்கள் துபாயில் நடைபெறும் என்று தெரிகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2 வீரர்கள், உதவியாளர், வலை பயிற்சி பவுலர்கள் என்று மொத்தம் 13 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்களை தவிர்த்து எஞ்சிய 7 அணி வீரர்களும் 6 நாள் தனிமைப்படுத்தும் நாட்கள் முடிந்து பயிற்சியை தொடங்கி விட்டனர்.
சக வீரர்களுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு பயிற்சியில் ஈடுபட்ட அனுபவம் குறித்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘5 மாதங்களுக்கு பிறகு இப்போது தான் பேட்டை எடுத்துள்ளேன். வலை பயிற்சியில் பேட்டைப்பிடித்து முதல்முறையாக பந்தை எதிர்கொண்ட போது, கொஞ்சம் பயமாகத் தான் இருந்தது. ஆனாலும் எதிர்பார்த்ததை விட முதலாவது வலைபயிற்சி சிறப்பாகவே இருந்தது. ஊரடங்கு காலத்திலும் தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட்டதால் வலுவான உடல்தகுதியுடன் இருப்பதாகவே உணர்கிறேன். இதனால் இன்றைய பயிற்சியின் போது பெரிய அளவில் சிரமம் ஏதும் இல்லை. நீண்ட நேரம் பயிற்சியில் ஈடுபட முடிந்தது. முறையான உடற்பயிற்சி இல்லாமல் வந்திருந்தால் உடலை எளிதாக அசைத்து ஆடுவது கடினமாக இருந்திருக்கும். யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் முதல் நாளில் நன்றாக பந்து வீசினர். பந்தை சரியான பகுதியில் ‘பிட்ச்’ செய்து நீண்ட நேரம் சிறப்பாக செயல்பட்டனர். ஒட்டுமொத்தத்தில் எங்களது பயிற்சி முகாம் நன்றாக தொடங்கியிருக்கிறது’ என்றார்.

கொரோனா தாக்கத்துக்கு மத்தியில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் இன்று தொடங்குகிறது.
நியூயார்க்:
‘கிராண்ட்ஸ்லாம்’ என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவலால் விம்பிள்டன் உள்பட பல தொடர் ரத்தான நிலையில் நடக்கும் முதல் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டி இதுவாகும்.
கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடக்கும் இந்த போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது. வீரர், வீராங்கனைகள் தங்கியிருக்கும் ஓட்டல், விடுதி மற்றும் ஸ்டேடியம் தவிர்த்து வேறு எங்கும் செல்லக்கூடாது, விளையாடும் போது, சாப்பிடும் போது தவிர எப்போதும் முககவசம் அணிந்திருக்க வேண்டும், ஸ்டேடியம் பகுதியில் நுழையும் போது உடல் வெப்பநிலை சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும், எழுத்துப்பூர்வ ஒப்புதல் இன்றி வெளியே சென்றால் போட்டியை விட்டு நீக்கப்படுவார்கள் உள்ளிட்ட கடும் பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
இந்த போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ள ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) பட்டம் வெல்வதற்கே பிரகாசமான வாய்ப்புள்ளது. காயத்தால் சுவிட்சர்லாந்து ஜாம்பவான் ரோஜர் பெடரரும், கொரோனா அச்சத்தால் நடப்பு சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், முன்னாள் சாம்பியன் சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா ஆகியோரும் விலகியிருப்பது ஜோகோவிச்சுக்கு நிச்சயம் அனுகூலமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காமல் தொடர்ந்து 23 ஆட்டங்களில் வெற்றி பெற்று வீறுநடை போட்டு வரும் அவர் முதல் சுற்றில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) சந்திக்கிறார். இந்த பட்டத்தை ஜோகோவிச் வசப்படுத்தினால், அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்களின் வரிசை யில் முதல் 2 இடங் களில் உள்ள பெடரர் (20 கிராண்ட்ஸ்லாம்), நடால் (19 கிராண்ட்ஸ்லாம்) ஆகியோரை 18 கிராண்ட்ஸ்லாமுடன் வெகுவாக நெருங்கி விடுவார். அவருக்கு 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் (ஆஸ்திரியா), அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேனில் மெட்விடேவ் (ரஷியா), சிட்சிபாஸ் (கிரீஸ்), பெரேட்டினி (இத்தாலி), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்), மிலோஸ் ராவ்னிக் (கனடா) ஆகியோர் கடும் சவாலாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒற்றையரில் களம் காணும் ஒரே இந்தியரான சுமித் நாகல் முதல் சுற்றில் உள்ளூர் வீரர் பிராட்லி கிளானை எதிர்கொள்கிறார்.
பெண்கள் பிரிவிலும் நடப்பு சாம்பியன் பியான்கா (கனடா), ‘நம்பர் ஒன்’ வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா), 2-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ருமேனியா), உக்ரைனின் ஸ்விடோலினா உள்ளிட்டோர் கொரோனா பீதியால் ‘ஜகா’ வாங்கி விட்டனர். இருப்பினும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), நவோமி ஒசாகா (ஜப்பான்), பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா), ஜோஹகன்னா கோன்டா (இங்கிலாந்து), சபலென்கா, அஸரென்கா (பெலாரஸ்) உள்ளிட்டோர் வரிந்து கட்டி நிற்பார்கள். இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள 38 வயதான செரீனா வில்லியம்ஸ் இங்கு வாகை சூடினால், அதிக கிராண்ட்ஸ்லாம் ருசித்தவரான ஆஸ்திரேலியாவின் மார்க்கரேட் கோர்ட்டின் (24 கிராண்ட்ஸ்லாம்) சாதனையை சமன் செய்து விடுவார். ஆனால் குழந்தை பெற்றுக்கொண்டு மறுபிரவேசம் செய்த செரீனாவிடம் ஆக்ரோஷம் இருக்கிறதே தவிர, அதை வெற்றியாக மாற்றக்கூடிய சாமர்த்தியம் இப்போது குறைந்து விட்டது. 4 முறை கிராண்ட்ஸ்லாம் இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறார். முன்னணி நட்சத்திரங்கள் விலகியுள்ள நிலையில் செரீனா அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். செரீனா முதல் சுற்றில் சக நாட்டவர் கிறிஸ்டி அன்னை சந்திக்கிறார்.
இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.390 கோடியாகும். இதில் ஒற்றையர் பிரிவில் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைகள் தலா ரூ.22 கோடியுடன் 2 ஆயிரம் தரவரிசை புள்ளிகளையும் பெறுவார்கள். இறுதி சுற்றில் தோல்வி அடைபவருக்கு ரூ.11 கோடி கிடைக்கும்.
இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட்1, செலக்ட்2 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்ட இந்தியா-ரஷியாவுக்கு இணைந்து வழங்கப்பட்டது. பட்டம் வென்ற இருநாட்டு வீரர்களுக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷியா அணிகள் மோதின. கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது.
முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சனை காரணமாக விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இன்டர்நெட் பிரச்சனை காரணமாக இரண்டு இந்திய வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காய்களை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்த முடிவை எதிர்த்து இந்தியா முறையிட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போட்டி நடத்தும் அமைப்பு இந்தியாவும், ரஷியாவும் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவித்தது.
இந்நிலையில், ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய-ரஷிய வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்வெளியிட்டுள்ள பதிவில்,’ ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நமது வீரரக்ளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
வீரர்களின் கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் போற்றத்தக்கது. அவர்களின் வெற்றி மற்ற செஸ் வீரர்களுக்கு நிச்சயம் ஊக்கத்தை அளிக்கும். ரஷிய அணியினருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
2-வது டி20 போட்டியில் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அந்நாட்டு அணியுடனும் 3 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 1- 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையேயான டி20 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. 3 போட்டிகளை கொண்ட டி20-யில் முதல் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.
இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி மான்செஸ்டர் நகரில் நேற்று நடைபெற்றது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து, பாகிஸ்தான் தரப்பில் பாபர் ஆசம், பகர் சமான் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
இரு வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பாபர் ஆசாம் 56 ரன்களிலும், பகர் சமான் 36 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ஹபீஸ் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
36 பந்துகளை சந்தித்த ஹபீஸ் 5 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 69 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்தது.
இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டாம் பெண்டன் மற்றும் ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர்.
ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்தனர்.
டாம் பெண்டன் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஜானி பிரிஸ்டோ 22 பந்துகளில் 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த டேவிட் மலன் மற்றும் கேப்டன் இயன் மோர்கன் ஜோடி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இயன் மோர்கன் 33 பந்துகளில் 6 பவுண்டரிகள் 4 சிக்சர்கள் உள்பட 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் இழந்திருந்த நிலையில் 19.1 ஓவரில் 199 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணியை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணியின் டேவிட் 36 பந்துகளில் 54 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார். பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது.
மெஸ்சிக்கான டிரான்ஸ்பர் பீஸ் 6,100 கோடி ரூபாய் கட்டினால் மட்டுமே பார்சிலோனா அணியில் இருந்து வெளியேற முடியும் என லா லிகா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்சி. இந்த தலைமுறையின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே மெஸ்சி ஸ்பெயின் நாட்டின் லா லிகா புகழ் பார்சிலோனா அணிக்காக விளையாடி வருகிறார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் காலிறுதியில் பார்சிலோனாவை 8-2 என பேயர்ன் முனிச் அணி துவம்சம் செய்தது. இதனால் கடும் விமர்சனம் எழுந்தது. அந்த அணியின் பயிற்சியாளர் அதிரடியாக நீக்கப்பட்டார்.
மேலும், மெஸ்சிக்கான டிரான்ஸ்பர் தொகையை பார்சிலோனா அணி வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதனால் பார்சிலோனா அவரை வெளியிட தயாராகிவிட்டது எனக் கருதப்படுகிறது. முடித்துக் கொள்ளுங்கள் என்று மெஸ்சி பார்சிலோனா அணிக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
மெஸ்சியுடன் பார்சிலோனா செய்துள்ள ஒப்பந்தம் 2021 சீசன் வரை உள்ளது. ஜூன் மாதத்துடன் டிரான்ஸ்பர் வேலைகள் முடிந்துவிடும். ஆனால் கொரோனா தொற்றால் காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை வெளியேற விரும்பினால் அவருக்கான டிரான்ஸ்பர் தொகையாக 700 மில்லியன் யூரோ (இந்திய பணமதிப்பில் ரூ. 6094.93 கோடி) பார்சிலோனா நிர்ணயிக்கும் எனத் தெரிகிறது.
ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது எனக்கூறி மெஸ்சி ப்ரீ டிரான்ஸ்பர் மூலம் வேறு அணிக்கு செல்லலாம் என நினைத்தார்.
ஆனால், மெஸ்சியை தங்கள் கிளப்பில் ஒப்பந்தம் செய்ய விரும்பும் கால்பந்தாட்ட அணி 6094.93 கோடி ரூபாய் பார்சிலோனாவுக்கு டிரான்ஸ்பர் பீஸ் ஆக செலுத்த வேண்டும்.
6094.93 கோடி ரூபாய் செலுத்தி வெளியீட்டு விதியை பூர்த்தி செய்தால் மட்டுமே மெஸ்சி பார்சிலோனாவை விட்டு வெளியேற முடியும் என லா லிகா கால்பந்து தொடரின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்டர்நெட் தடையால் ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் சாம்பியன் பட்டம் இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இணைந்து வழங்கப்பட்டது.
ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் இறுதிப் போட்டியில் இந்தியா - ரஷியா அணிகள் மோதின. முதல் சுற்று 3-3 என டிராவில் முடிந்தது. அதன்பின் நடைபெற்ற அனைத்து சுற்றுகளும் இன்டர்நெட் பிரச்சினையில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இரண்டு இந்திய வீரர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் காய்களை நகர்த்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா இதனை எதிர்த்து முறையிட்டது. அதன்பின் இந்தியாவும், ரஷியாவும் இணைந்து சாம்பியன் பட்டம் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய செஸ் ஜாம்வான் விஸ்வநான் ஆனந்த் ‘‘நாம் சாம்பியன்ஸ், ரஷியாவுக்கு வாழ்த்துக்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக போட்டி ஆன்-லைன் மூலம் நடத்தப்பட்டது.
சென்னை அணி வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டாலும், ஐபிஎல் தொடர் சிறப்பாக நடத்தி முடிக்கப்படும் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணிகள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளது. எல்லா அணிகளும் பயிற்சியை தொடங்கியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியி்ல் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால் அணி வீரர்கள் அனைவரும் இன்னும் ஒரு வாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த அணி பயிற்சியை மேற்கொள்ள முடியாமல் உள்ளது.
ஐபிஎல் போட்டிக்கு இதனால் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறப்படும் நிலையில் சவுரவ் கங்குலி இதுகுறித்து கூறுகையில் ‘‘சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய நிலை குறித்து என்னால் கூற இயலாது.
போட்டி அட்டவணைப்படி ஐபிஎல் தொடர் தொடங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். ஐபிஎல் தொடர் சிறப்பாக நடைபெறும் என்று நம்புகிறேன். மிக நீண்ட தொடர் என்பதால், எல்லாம் சிறப்பாக செல்லும் என்பதை உண்மையாக நம்புகிறேன்.
ஒட்டுமொத்த உலகமும் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. கால்பந்து மற்றும் கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்று வருகின்றன. கள நிலவரத்ரை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
வழக்கமான அட்டவணைப்படி நான் எனது வேலையை தெடங்கியுள்ளேன். கட்டாயம் பாதுகாப்புடன் நம்முடைய வேலையை செய்ய வேண்டிய நேரம் இது. நான் குடும்பம், கிரிக்கெட், பிசிசிஐ, மீடியா வேலை ஆகியவற்றை சமாளித்து வருகிறேன்’’ என்றார்.