என் மலர்
விளையாட்டு
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கேரி ஸ்டீட்டின் பதவிக்காலம் 2023 உலகக்கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக அந்நாட்டின் முன்னாள் டெஸ்ட் பேட்ஸ்மேன் கேரி ஸ்டீட் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் முடிவடையும் நிலையில், 2023 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவரது தலைமையில் நியூசிலாந்து அணி வெளிநாட்டு மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், இலங்கைக்கு எதிராகவும் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது.
உலக கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்திடம் பவுண்டரி அடிப்படையில் தோல்வியை சந்தித்தது. சொந்த மண்ணில் வங்காளதேசம், இங்கிலாந்து, இந்தியா, இலங்கைக்கு எதிராக தொடரை வென்றது.
டெஸ்ட் தரவரிசையில் 2-வது இடத்திற்கும், ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் 3-வது இடத்திற்கும் முன்னேறியது. இதன்மூலம் அவரது பதவிக்காலம் 2023 உலக கோப்பை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பயிற்சிக்குப்பின் வார்ம்-அப் போட்டிகள் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என ஐபிஎல் போட்டியில் விளையாடும் பெரும்பாலான அணிகள் விரும்புகின்றன.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற அணிகள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் மாதத்திற்குப்பிறகு கிரிக்கெட் வீரர்கள் எந்தவிதமாக போட்டி விளையாட்டில் விளையாடவில்லை. தற்போது பயிற்சி முடித்த கையுடன் நேரடியாக மிகப்பெரிய தொடரில் விளையாட இருக்கிறது.
இதனால் ஒன்றிரண்டு வார்ம்-அப் போட்டிகள் நடைபெற்றால் நன்றாக இருக்கும் என்று பெரும்பாலான அணிகள் விரும்புகின்றன.
முன்னணி அணியின் நிர்வாகி ஒருவர் ‘‘சில வார்ம்-அப் மேட்ச்கள் தொடருக்கு சிறந்ததாக இருக்கும்’’ என்றார்.
மற்றொரு அணியின் சிஇஓ ‘‘வார்ம்-அப் போட்டிகளுக்கு என்னுடைய 100 சதவீதம் ஆதரவு உண்டு’’என்றார்.

மேலும் இரண்டு அணிகள் ‘‘வார்ம்-அப் போட்டிகளால் மட்டுமே தொடரின் முதல்நாளில் இருந்தே வீரர்கள் சரியான வழியில் பழைய ஆட்டத்திற்கு திரும்ப முடியும்’’ என்றார்.
போட்டியை ஒளிபரப்பும் ஸ்டார் நிறுவனமும் வார்ம்-அப் போட்டியை விரும்புகிறது. வார்ம்-அப் போட்டிகள் மூலம் எதிர்ப்பார்ப்பை தூண்ட உதவியாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
தாமஸ் மற்றும் உபேர் கோப்பை பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து விலகி உள்ளார்.
ஐதராபாத்:
தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் தொடர் டென்மார்க்கில் நாளை தொடங்க உள்ள நிலையில், இப்போட்டியில் இருந்து நடப்பு உலக சாம்பியன் பி.வி.சிந்து விலகி உள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இப்போட்டியில் இருந்து விலகியதாக அவரது தந்தை பி.வி.ரமணா கூறி உள்ளார்.
‘ஐதராபாத்தில் அக்டோபர் முதல் வாரத்தில் எங்களுக்கு முக்கியமான வேலை உள்ளது. பூஜைகள் செய்ய வேண்டியிருப்பதால், இதில் சிந்து கட்டாயம் பங்கேற்க வேண்டி உள்ளது. எனவே, அவர் தாமஸ், உபேர் கோப்பை போட்டியில் இருந்து விலகினார்’ என்று ரமணா மேலும் தெரிவித்தார்.
போட்டியில் இருந்து விலகியதற்கு கொரோனா அச்சம் ஏதேனும் காரணமா? என்று கேட்டதற்கு, சிந்துவுக்கு கொரோனா என்பது இரண்டாவது பிரச்சினைதான் என்றார் ரமணா. தாமஸ் உபேர் கோப்பை தொடருக்கு பிறகு நிலைமை முற்றிலும் சரியானால், மற்ற போட்டிகளிலும் பங்கேற்பது பற்றி சிந்து முடிவு செய்வார் என்றும் அவர் தெரிவித்தார்.
தாமஸ், உபேர் கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்குமா? என்பது பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்காக விளையாட்டு ஆணையம் மற்றும் பேட்மிண்டன் சங்க அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கொரோனா அச்சம் காரணமாக சீனா, தைபே உள்ளிட்ட நாடுகள் இப்போட்டியில் இருந்து விலகி உள்ளன.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் ஆல் இங்கிலாந்து போட்டிக்கு பிறகு எந்த போட்டி தொடரும் நடைபெறவில்லை. 7 மாத இடைவெளிக்கு பிறகு தாமஸ், உபேர் கோப்பை தொடர் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் டோனிக்கும் தனக்கும் எந்த மோதலும் இல்லை என்றும், விரைவில் அணிக்கு திரும்புவேன் என்றும் ரெய்னா கூறினார்.
புதுடெல்லி:
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா திடீரென நாடு திரும்பினார். ரெய்னா விலகியது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. பஞ்சாப் மாநிலத்தில் உறவினர் ஒருவர் கொல்லப்பட்டதால் ரெய்னா ஊர் திரும்பியதாக முதலில் தகவல் வெளியானது. பின்னர் அணியின் கேப்டன் டோனி, துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா இடையே மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
கேப்டன் டோனிக்கு தந்ததை போல் பால்கனியுடன் கூடிய அறை தனக்கு தரப்படாததால் ரெய்னா அதிருப்தியில் இருந்ததாகவும், கொரோனா விதிமுறைகள் காரணமாக அறையை உடனே மாற்ற முடியாது என சென்னை அணி நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் பற்றி சிஎஸ்கே அணி உரிமையாளரும் பிசிசிஐ முன்னாள் தலைவருமான சீனிவாசன் கூறும்போது, சில நேரங்களில் வெற்றி தலைக்கேறும்போது இப்படி நிகழும் என கடுமையாக விமர்சித்தார். அதேசமயம், யாருக்கு பிடிக்கவில்லையோ, யாருக்கு மகிழ்ச்சியில்லையோ அவர்கள் தாராளமாக திரும்பி செல்லலாம் என்றும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கேப்டன் டோனியுடன் தனக்கு எந்த மோதலும் இல்லை என சுரேஷ் ரெய்னா கூறியிருக்கிறார்.
‘இது ஒரு தனிப்பட்ட முடிவு, நான் எனது குடும்பத்திற்காக திரும்பி வர வேண்டியிருந்தது. அணியின் உரிமையாளர் சீனிவாசன் கூறியதை, தந்தை திட்டியதுபோன்று உணர்கிறேன். சென்னை அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் வரை விளையாட விரும்புகிறேன்’ என்று ரெய்னா கூறி உள்ளார்.

தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன், விரைவில் சிஎஸ்கே அணிக்கு திரும்புவேன் என்றும் ரெய்னா கூறினார்.
இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் தொடரை 1-1 என சமன் செய்தது.
இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
3-வது மற்றும் கடைசி போட்டி நேற்றிரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்று இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்கள் பாபர் அசாம் (21), பஹர் ஜமான் (1) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களம் இறங்கிய இளம் வீரர் ஹைதர் அலி 33 பந்தில் 54 ரன்கள் விளாசினார். அனுபவ வீரர் முகமது ஹபீஸ் 52 பந்தில் 86 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் குவித்தது.
பின்னர் 191 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டாம் பான்டன் 31 பந்தில் 46 ரன்கள் அடித்தார். மற்றொரு வீரர் பேர்ஸ்டோவ் ரன்ஏதும் அடிக்காமல் டக்வுட் ஆனார். தாவித் மலன் 7 ரன்னிலும், மோர்கன் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
மொயீன் அலி அதிரடியாக விளையாட இங்கிலாந்து வெற்றி நோக்கி சென்றது. கடைசி 2 ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. 19-வது ஓவரை வஹாப் ரியாஸ் வீசினார். முதல் பந்தில் ஜோர்டான் ரன்அவுட் ஆனார்.
5-வது பந்தில் மொயீன் அலி ஆட்டமிழந்தார். அவர் 33 பந்தில் 61 ரன்கள் விளாசினார். ஒரே ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 3 ரன்கள் மட்டுமே இங்கிலாந்தால் அடிக்க முடிந்தது. இது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.

கடைசி ஓவரை ஹரிஸ் ரஃப் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ரன்கள் அடிக்கப்பட்டது. 5-வது பந்தை டாம் கர்ரன் சிக்சருக்கு தூக்கினார். கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி பந்தில் கர்ரனால் ரன் அடிக்க முடியவில்லை.
இங்கிலாந்து அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்து 5 ரன்னில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றி மூலம் தொடரை பாகிஸ்தான் 1-1 என சமன் செய்தது. முகமது ஹபீஸ் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜோகோவிச், நவோமி ஒசாகா முதல் சுற்றில் வெற்றி பெற்றனர்.
நியூயார்க்:
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-4, 6-1 என்ற நேர் செட்டில் டாமிர் ஜூம்ஹரை (போஸ்னியா) பந்தாடினார். இந்த ஆண்டில் தோல்வியே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக ருசித்த 24-வது வெற்றி இதுவாகும். ஜோகோவிச் அடுத்து கைல் எட்மன்டை (இங்கிலாந்து) சந்திக்கிறார்.
64-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஸ்டீவ் ஜான்சன், தன்னை எதிர்த்து ஆடிய தரவரிசையில் 22-வது இடம் வகிக்கும் ஜான் இஸ்னருக்கு (அமெரிக்கா) அதிர்ச்சி அளித்தார். 3 மணி 50 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஸ்டீவ் ஜான்சன் 6-7 (5-7), 6-3, 6-7 (5-7), 6-3, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்றார். இஸ்னர் 52 ஏஸ் சர்வீஸ்கள் போட்டும் பலன் இல்லாமல் போனது. 1991-ம் ஆண்டுக்கு பிறகு ஆட்டம் ஒன்றில் ஒரு வீரர் விளாசிய 2-வது அதிகபட்ச ஏஸ் சர்வீஸ் இதுவாகும்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாஸ் (கிரீஸ்) 6-2, 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ரமோஸ் வினோலசை (ஸ்பெயின்) விரட்டியடித்தார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஜான் லினர்ட் ஸ்ரப் (ஜெர்மனி), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா) ஆகியோரும் முதல்தடையை வெற்றிகரமாக கடந்தனர்.
பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் முன்னாள் சாம்பியன் ஜப்பானின் நவோமி ஒசாகா சக நாட்டவர் மிசாகி டோயை 6-2, 5-7, 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி 2 நிமிடங்கள் போராடி தோற்கடித்தார்.
‘தொடரில் முதல் சுற்று என்றாலே பதற்றம் இருக்கும். அதுவும் மிசாகி டோய், கடினமான எதிராளி. எனவே இந்த ஆட்டம் அதிக நேரம் நீடிக்க வாய்ப்பு உண்டு என்பதை அறிந்திருந்தேன். அதன்படியே ஆட்டம் கடினமாக இருந்தது’ என்று வெற்றிக்கு பிறகு ஒசாகா குறிப்பிட்டார்.
வளர்ந்து வரும் உள்ளூர் நட்சத்திரமான 16 வயதான கோரி காப்பின் கனவு முதல் சுற்றுடன் சிதைந்தது. அவரை லாத்வியா வீராங்கனை அனஸ்டசிஜா செவஸ்தோவா 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். 7-ம் நிலை வீராங்கனை பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-2 என்ற நேர் செட்டில் கமிலியா பெகுவை (ருமேனியா) எளிதில் வென்றார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), அலிசன் ரிஸ்க் (அமெரிக்கா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), முகுருஜா(ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது முதல் சுற்றில் வெற்றி கண்டனர்.

ஐ.பி.எல். போட்டி சிறப்பாக நடைபெற நாம் அனைவரும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை மதித்து செயல்பட வேண்டும் என கேப்டன் விராட்கோலி கூறியுள்ளார்.
துபாய்:
ஐ.பி.எல். போட்டிக்கான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட்கோலி அணியின் ‘யூடியூப்’ நிகழ்ச்சியில் பேசுகையில், ‘கொரோனா பிரச்சினைக்கு மத்தியிலும் நமக்கு மீண்டும் கிரிக்கெட் விளையாட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு களம் காண இருக்கிறோம். ஐ.பி.எல். போட்டி சிறப்பாக நடைபெற நாம் அனைவரும் மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறைகளை எல்லா நேரங்களிலும் மதித்து செயல்பட வேண்டும்.
நாம் இங்கு ஜாலிக்காகவோ, ஊர் சுற்றிப் பார்க்கவோ வரவில்லை என்பதை உணர்ந்து எல்லோரும் நடக்க வேண்டியது அவசியமானதாகும். தற்போது நிலவும் கடினமான சூழ்நிலையையும், நமக்கு வழங்கப்பட்டு இருக்கும் சலுகைகளையும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். தேவையில்லாத செயலில் யாரும் ஈடுபடக்கூடாது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த ஐ.பி.எல். போட்டி நடக்கும் என்று நீங்கள் நினைத்து கூட பார்த்து இருக்கமாட்டீர்கள். பயிற்சி செய்யும் போது எத்தனை நாள் கழித்து இதில் ஈடுபடுகிறோம் என்பதை உணர முடிந்தது.
பதற்றத்துடன் தான் பயிற்சிக்கு சென்றேன். நான் நினைத்தது போல் அந்த அளவுக்கு ஆட்டத்தை தவறவிடவில்லை. ரசிகர்கள் இல்லாமல் விளையாடுவது தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சொல்லமாட்டேன். அதேநேரத்தில் ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமல் விளையாடிய அனுபவம் இருப்பதால் போட்டி தொடங்கியதும் விரைவில் இந்த பிரச்சினை குறைந்து விடும்’ என்று தெரிவித்தார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் 7 ஆண்டுகளுக்கு பின் முதல் முறையாக ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றி ரசிகர்கள் இன்றி இந்த போட்டி அரங்கேறியது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சுமித் நாகல் அமெரிக்காவின் பிரட்லி ஹெலனை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 6-1, 6-3, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரரை வீழ்த்தி இந்தியாவின் சுமித் நாகல் வெற்றி பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் 2-வது சுற்றுக்கு சமித் முன்னேறினார்.
அது மட்டுமல்லாமல் 7 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சுமித் நாகல் பெற்றார்.
இதற்கு முன் 2013 ஆம் ஆண்டு இந்தியாவின் சோம்தேவ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். அவரையடுத்து இத்தனை ஆண்டுகளில் வெறு எந்த ஒரு இந்திய வீரரும் அமெரிக்க ஓபனில் முதல் சுற்றில் வெற்றி பெறவில்லை என்ற நிலை இருந்து வந்தது.
முதல் சுற்றில் பெற்ற வெற்றியை வெற்றியை தொடர்ந்து அமெரிக்க ஓபன் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ள சுமித் நாகல் நாளை நடைபெற உள்ள ஆட்டத்தில் டொமினிக் திய்ம்மை எதிர்கொள்கிறார்.
ஐபிஎல் போட்டியை பாதுகாப்பாக நடத்துவதற்கான 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ள பிசிசிஐ 10 கோடி ரூபாய் செலவு செய்ய இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.
இதற்காக 8 அணிகளும் கடந்த 20-ந்தேதியில் இருந்து புறப்பட்டுச் சென்றன. அணிகளைச் சேர்ந்தவர்கள் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர்.
அணியின் ஒவ்வொரு நபர்களும் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா டெஸ்ட் பரிசோதனை செய்யப்படுகிறது. ஆகஸ்டு 20-ந்தேதியில் ஐபிஎல் போட்டி முடியும் வரை சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார மையத்தை ஏற்பாடு செய்துள்ளது. ஒரு பிசிஆர் பரிசோதனைக்காக 200 திர்ஹம் பிசிசிஐ வழங்குகிறது. அதன்படி பார்த்தால் பிசிசிஐ 10 கோடி ரூபாய் செலவழிக்க இருக்கிறது. பரிசோதனை பணியில் 75 சுகாதார அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அபு தாபி அரசு பச்சைக்கொடி காட்டிய போதிலும், ஐபிஎல் போட்டி அட்டவணையை வெளியிட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக பிசிசிஐ காத்திருக்கிறது.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. தற்போது 8 அணி வீரர்களும் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா காலம் என்பதால் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஷார்ஜாவில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து ஷார்ஜாவுக்கும் வீரர்கள் செல்ல வேண்டியிருக்கும்.
அப்போது தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை போன்ற சிக்கல் ஏற்பட வாய்புள்ளது. ஏனென்றால் மூன்று இடங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறை வெவ்வேறானவை. அபு தாபியில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இதனால் போட்டி அட்டவணையை தயாரிப்பதில் சற்று தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதியும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் கூறுகையில் ‘‘அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். எந்தவித தனிமைப்படுத்துதல் இல்லாமல் அணி வீரர்கள் மூன்று இடத்திற்கும் சென்ற வர அதிகாரிகளால் நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது. பிசிசிஐ-யின் நெறிமுறைப்படி வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார்கள். வெளியில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படலாம். ஆனால், அவர்கள் ஏற்கனவே அவர்களுடைய ஓட்டல்களில் இருந்தால் போட்டிக்கு சென்று வர எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.
இதனால் போட்டியை நடத்துவதற்கான தடை நீங்கியுள்ளது. ஆகவே ஐபிஎல் போட்டி அட்டவணை தயாரிப்பில் பிசிசிஐ கவனம் செலுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு இன்னும் 18 நாட்களே உள்ளதால் ஒவ்வொரு அணிகளும் அட்டவணையை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
ஐபிஎல் விதிப்படி நடப்பு சாம்பியன் அணியும், 2-வது இடம் பெற்ற அணியும் முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும். அதன்படி மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளும் மோத வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் 2 பேர் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த அணியின் அனைத்து நபர்களும் மேலும் ஒருவாரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று நடைபெற்ற கொரோனா பரிசோதனையில் 13 பேரைத் தவிர மற்ற அனைவருக்கும் நெகட்டிவ் வந்துள்ளது. இன்னும் ஒரு பரிசோதனை நடத்த வேண்டியுள்ளது. அந்த பரிசோனையிலும் நெகட்டிவ் வந்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் 4-ந்தேதி அல்லது 5-ம் தேதி பயிற்சியை தொடங்கும்.
போட்டி அட்டவணையை பிசிசிஐ விரைவில் வெளியிட விரும்புகிறதாம். ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியில் விளையாடுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஒரு வாரம் கழித்து போட்டியை தொடங்கும் வகையில் அட்டவணையை தயாரிக்கும் யோசனை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக காத்திருக்கவில்லை என்றால் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் அல்லது இந்த வாரத்திற்குள் போட்டி அட்டவணையை வெளியிட்டு விடும்.
இதற்கிடையில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஸ்டாஃப்கள் என்பதால் முதல் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சிஇஓ கே.எஸ். விஸ்வநாதன் இதுகுறித்து கூறுகையில் ‘‘நாங்கள் விளையாட தயாராக இருக்கிறோம். ஆனால் பிசிசிஐ-தான் முடிவு எடுக்க வேண்டும். எங்கள் அணியில் கொரோனா பாதித்தவர்களில் பெரும்பாலானோர் சமூக வலைத்தளத்தை கையாளும் நபர்கள்தான். கேட்டுக்கொண்டால் முதல் போட்டியில் விளையாட தயாராக இருக்கிறோம்.
இந்த வாரத்திற்குள் போட்டி அட்டவணை தயாராகிவிடும் என்று கூறப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்குள் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கியிருந்த சென்னை அணி வீரர்கள் மற்றும் சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஆகியோருக்கு 3-ம் கட்ட பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
பின்னர் வீரர்கள் இருவரும் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் எனத் தெரியவந்தது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மற்ற வீரர்களும் கூடுதலாக ஒரு வாரம் தனிமையில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று வீரர்கள் மற்றும் ஸ்டாஃப்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது அனைவருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது.
இன்னும் ஒரு கொரோனா பரிசோதனை உள்ளது. அதிலும் வீரர்களுக்கு நெகட்டிவ் என வந்தால், வீரர்கள் ஐந்தாம் தேதியில் இருந்து பயிற்சிக்கு தயாராகிவிடுவார்கள்.
இருந்தாலும் தீபக் சாஹர், ருத்துராஜ் ஆகியோர் செப்டம்பர் 12-ந்தேதி வரை தனிமைப்படுத்தியிருக்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் சிங் இன்னும் துபாய் சென்றடையவில்லை. தென்ஆப்பிரிக்காவின் டு பிளிசிஸ், லுங்கி நிகிடி ஆகியோர் தென்ஆப்பிரிக்காவில் இருந்து துபாய் வந்து, தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு அதன்பின் அணியுடன் இணைவார்கள்.
ஐபிஎல் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரகம் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற இருக்கின்றன. தற்போது 8 அணி வீரர்களும் மூன்று இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது கொரோனா காலம் என்பதால் தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக ஷார்ஜாவில் இருந்து துபாய்க்கும், துபாயில் இருந்து அபுதாபிக்கும், அபுதாபியில் இருந்து ஷார்ஜாவுக்கும் வீரர்கள் செல்ல வேண்டியிருக்கும்.
அப்போது தனிமைப்படுத்துதல், கொரோனா பரிசோதனை போன்ற சிக்கல் ஏற்பட வாய்புள்ளது. ஏனென்றால் மூன்று இடங்களிலும் கொரோனா வழிகாட்டுதல் முறை வெவ்வேறானவை.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதியும் பெற்றுள்ளோம் என்று ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகம் கூறுகையில் ‘‘அபுதாபி, துபாய், ஷார்ஜாவில் ஐபிஎல் போட்டிக்கான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளோம். எந்தவித தனிமைப்படுத்துதல் இல்லாமல் அணி வீரர்கள் மூன்று இடத்திற்கும் சென்ற வர அதிகாரிகளால் நெறிமுறை உருவாக்கப்பட்டுள்ளது.
பிசிசிஐ-யின் நெறிமுறைப்படி வீரர்கள் பாதுகாப்பு வளையத்திற்குள் இருப்பார்கள். வெளியில் இருந்து வருபவர்கள் தனிமைப்படுத்தப்படலாம். ஆனால், அவர்கள் ஏற்கனவே அவர்களுடைய ஓட்டல்களில் இருந்தால் போட்டிக்கு சென்று வர எந்த பிரச்சினையும் இல்லை’’ என்று தெரிவித்துள்ளது.