என் மலர்
விளையாட்டு
அமெரிக்கா ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-ம் நிலை வீரரான டேனில் மெட்வெதேவ் காலிறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்கா ஓபன் டென்னிசில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஒன்றில் ரஷிய வீரர்களான 3-ம் நிலை வீரர் டேனில் மெட்வெதேவ் - 10-ம் நிலை வீரரான ஆன்ட்ரே ருப்லேவ் ஆகியோர் மோதினார்கள்.
முதல் செட்டில் இருவருக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது. இதனால் முதல் செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் மெட்வெதேவ் 7(6) - 6(6) என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டை 6-3 என மெட்வெதேவ் எளிதாக கைப்பற்றினார். 3-வது செட்டில் ஆன்ட்ரே ருப்லேவ் கடும் நெருக்கடி கொடுத்தார். இதனால் 3-வது செட்டும் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் 7(7) - 6(5) என கைப்பற்றினார்.
இதன்மூலம் 3-0 என வெற்றி பெற்று டேயல் மெட்வெதேவ் அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்களுக்கான அரையிறுதியில் தியெம் - மெட்வெதேவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ் - கர்ரேனோ பஸ்டா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
சிறந்த பேட்ஸ்மேன்களில ஒருவரான ஸ்டீவ் ஸ்மித், ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலிதான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் போட்டியில் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் இருந்து வருகிறார். அதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் கேன் வில்லியம்சன் ஆகியோரும் இந்த தலைமுறையின் சிறந்த வீரராக கருதப்படுகிறார்கள்.
இவர்களில் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித்திற்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிதான் தற்போதைய நிலையில் உலகின் தலைசிறந்த ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் என்று ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களான கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன் ஆகியோரை பாராட்டியுள்ளார்.
விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 11,867 ரன்கள் அடித்துள்ளார். அதில் 43 சதங்கள் அடங்கும். சச்சின் சாதனையை தொட இன்னும் ஏழு சதங்களே தேவையுள்ளது. ஏபி டிவில்லியர்ஸ் பற்றி ஒரு வார்த்தையில் கூறு வேண்டுமென்றால், அவர் வித்தியாசமானவர்’’ என்றார்.
ஐபிஎல் 13-வது சீசனில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு இந்த அணி கட்டாயம் தகுதி பெறும் என்பதை பிரெட் லீ கணித்துள்ளார்.
ஐபிஎல் 13-வது சீசன் வருகிற 19-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் விளையாடுகின்றன.
8 அணிகளில் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறும் அணிகள், சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகள் எவை என்பது குறித்து பிரெட் லீ கூறுகையில் ‘‘எந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் என்பதை கூறுவது கடினம்தான். ஆனால், சிஎஸ்கே சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளது. கேகேஆர் அணி உறுதியாக பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு தகுதி பெறும்’’ என்றார்.
போட்டியை ஒளிபரப்பு செய்யும் ஸ்டார் நிறுவனம் பிரெட் லீயை வர்ணனையாளராக பணி அமர்த்தியுள்ளது. இதற்காக பிரெட் லீ மும்பை வந்துள்ளார். தற்போது 14 நாட்கள் தனிமையில் உள்ளார்.
சவுரவ் கங்குலியை சிறந்த கேப்டனாக வடிவமைத்த பெருமைக்கு முகமது அசாருதீன் தகுதியானவர் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. ஐசிசி சாம்பியன் கோப்பையை வெல்லவில்லை என்பதை தவிர மற்ற எந்த குறையும் கங்குலியின் கேப்டன்ஷிப்பில் காண முடியாது.
இவர் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை ஊக்குவித்து உருவாக்கிய சிறந்த அணியை வைத்துதான எம்எஸ் டோனி உலக கோப்பையை வென்றார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுவது உண்டு.
சவுரவ் கங்குலி முகமது அசாருதீன் கேப்டனாக இருக்கும்போது 1992-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும், 1996-ல் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகம் ஆனார்.
கங்குலியை சிறந்த கேப்டனாக வடிவமைத்தவர் முகமது அசாருதீன். அந்த பெருமையை பெற முகமது அசாருதீனுக்கு தகுதி உள்ளது என்று பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரஷித் லத்தீஃப் கூறுகையில் ‘‘எனக்கு முகமது அசாருதீன் மீது அதிக மரியாதை உள்ளது. நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், கங்குலி போன்ற வீரர்களை விட்டுச் சென்றார். கங்குலியை சிறந்த கேப்டனாக முன்னேற்றுவதில் முகமது அசாருதீன் சிறந்த பங்காற்றினார். சச்சின் தெண்டுல்கர், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கங்குலியின் தலைமையின் கீழ் விளையாடினர்.
டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை பார்த்தால் கங்குலியை சற்று சார்ந்து இருந்தது. தலைமை பதவிக்கான திறமை கங்குலியிடம் இருந்தது. அசாருதீன் அவரை உருவாக்கினார். எம்எஸ் டோனி இருவரின் திறமையையும் ஒருங்கிணைத்து, நவீன கிரிக்கெட்டிற்கு ஏற்றபடி தனது ஸ்டையில் உருவாக்கினார்.’’ என்றார்.
ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடும்போது ரசிகர்களின் ஆரவாரத்தால் கிடைக்கும் எனர்ஜியை மிஸ் செய்கிறோம் என தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டி இதுவரை 12 முறை நடைபெற்றுள்ளது. இதில் இரண்டு முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஈடன் கார்டன் மைதானத்தை சொந்த மைதானமாக கொண்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய மைதானம் ஈடன் கார்டன் ஆகும். இந்த மைதானத்தில் 80 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம். இதனால் கொல்கத்தா அணி வீரர்கள் விளையாடும்போது ரசிகர்கள் ஆதரவு மிகப்பெரிய அளவில் இருக்கும். இதுவே அந்த அணிக்கு மிகப்பெரிய உத்வேமாக இருக்கும்.
தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகள் நடைபெற இருப்பதால், ரசிகர்களின் எனர்ஜியை மிஸ் செய்கிறோம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில் ‘‘இந்த வருடம் நாங்கள் எங்களுடைய ரசிகர்கள் மற்றும் ஈடன் கார்டன் எனர்ஜியை தவற விடுகிறோம். கே.கே.ஆர். ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் இருக்க விரும்புகிறோம். அவர்கள் தற்போது எங்களுடன் இருக்க முடியாது என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், அவர்கள் எங்களுடைய இதயத்தில் இருக்கிறார்கள்.
இந்த வருடம் நீங்கள் எங்களுடன் இருக்க முடியாது. உங்கள் எல்லோருக்காகவும் நாங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். எங்களுடைய கிரிக்கெட் மூலம் உங்களது முகத்தில் சிரிப்பை பார்க்க விரும்புகிறோம். நாங்கள் சரியாக கிரிக்கெட் பிராண்ட் உடன் விளையாடினால், ஒவ்வொரு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முகத்தில் சிரிப்பு வெளிப்படும் என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
ஆஸ்திரேலியா தொடரின் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சேர்க்கப்பட்ட நிலையில், முன்னதாகவே வந்திருந்தால் தொடரை வென்றிருப்போம் என டோனி கூறியதாக பும்ரா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருப்பவர் பும்ரா. இவர் 2016-ம் ஆண்டு டோனியின் தலைமையில் இந்தியாவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் அறிமுகம் ஆனார்.
நான்கு போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்து தொடரை இழந்த நிலையில் ஐந்தாவது போட்டியில் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலியா 7 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் அடித்தது. அந்த போட்டியில் 10 ஓவரில் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். மணிஷ் பாண்டே சதத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
அப்போது முன்னதாகவே வந்திருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒட்டுமொத்த தொடரையும் வென்றிருக்கலாம் என எம்எஸ் டோனி தெரிவித்ததாக பும்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பும்ரா கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில், டோனி தலைமையின் கீழ் நான் அறிமுகம் ஆனேன். அவர் எனக்கு அதிக அளவில் நம்பிக்கை அளித்தார். அப்போதைய நிலையில் என்னுடைய பந்து வீச்சை எம்எஸ் டோனி பார்க்கவில்லை என்பது நிறைய பேருக்கு தெரியாது.
அறிமுக போட்டியில் நான் டெத் ஓவரை வீச சென்று கொண்டிருந்தேன். அப்போது டோனியிடம், நான் யார்க்கர் பந்துகளை வீசலாமா? என்று கேட்டேன். அவர் வேண்டாம் என்றார். யார்க்கர் பந்து கடினம் என்பதால், அதை என்னால் வீச முடியாது என்று அவர் நினத்தார்.
நான் அவரிடம், டெத் ஓவரில் என்ன செய்ய வேண்டும் எனத் தெரியவில்லை என்றேன். ஆகவே, நான் என் வழியில் சென்று எனது மனதிற்கு பிடித்த வகையில் பந்து வீசினேன். அப்புறம் அவர் என்னிடம் வந்து, இது எல்லாம் எனக்குத் தெரியாது. நீங்கள் முன்னதாகவே வந்திருந்தால், நாம் ஒட்டுமொத்த தொடரையும் வென்றிருப்போம் என்றார்.
எனக்கு அறிமுகம் போட்டி என்பதால் சற்று பதற்றம் இருந்தது. கேப்டனாகிய டோனி என்னிடம், இந்த தொடரை நீங்கள் எங்களுக்கு வென்று தந்திருக்கனும் என்று கூறினார். அவர் எனக்கு அதிகமான சுதந்திரம் கொடுத்தார்’’ என்றார்.
இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளின் வருமானத்தை குறைத்ததற்காக ஷஷாங்க் மனோகரை பாகிஸ்தானைச் சேர்ந்து முன்னாள் ஐசிசி தலைவர் புகழ்ந்துள்ளார்.
கிரிக்கெட்டில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஐசிசி போட்டிகள் மூலம் வரும் வருமானத்தில் மிகப்பெரிய பகுதி இந்த மூன்று அணிகளுக்கும் பிரித்து வழங்கப்படும். இதனால் இந்த மூன்று அணிகளையும் ‘பிக் த்ரீ’என்று அழைக்கப்பட்டது.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த ஷஷாங்க் மனோகர் ஐசிசி தலைவராக பொறுப்பேற்றார். அப்போது பிக் த்ரீ அணிகளுக்கு வழங்கப்படும் வருவாய் பகிர்வை மற்ற அணிகளுக்கும் வழங்கும் வகையில் ‘பிக் த்ரீ’ நடைமுறையை நீக்கினார்.
இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் வருமானம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. இந்த செயலுக்காக முன்னாள் ஐசிசி தலைவராக இருந்து பாகிஸ்தானின் எஹ்சான் மானி ஷஷாங்க் மனோகரை புகழ்ந்துள்ளார்.
இதுகுறித்து எஹ்சான் மானி கூறுகையில் ‘‘உலக கிரிக்கெட்டை மிகவும் பாதித்த ‘பிக் த்ரீ’ பார்முலா நீக்கப்பட்டது. பிசிசிஐ-யின் தலைவராக இருந்த ஸ்ரீனிவாசன், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் உடன் இணைந்து வடிவமைக்கப்பட்டது.
ஐசிசி-யில் நான் பதவி வகித்த நேரத்தில், நான் மிகவும் அதிர்ஷ்டம் பெற்றவன், ஏனென்றால், அனைவரும் ஒன்றாக இணைந்து ஐசிசி வடிவமைக்கப்பட்டது. ‘பிக் த்ரீ’ பகிர்ந்துஅளிப்பு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. மூன்று நாடுகளும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்றால், உங்களுடன் விளையாட மாட்டோம் என மிரட்டினார்கள். எல்லோரும் இப்போது ஆரோக்கியமற்ற சூழலில் தங்கள் சொந்த நலன்களைக் கவனிக்க துடிக்கிறார்கள்.
‘பிக் த்ரீ’ எந்த வடிவிலான கிரிக்கெட்டிற்கும் ஆதாயத்தை கொடுக்கவில்லை. உலக கிரிக்கெட்டை மிகப்பெரிய அளவில் பாதித்தது. உலகளாவிய முன்னேற்றம், ஐசிசி-யின் துணை உறுப்பினர் நாடுகளின் நிதியை எடுத்துக் கொண்டார்கள். முழு விஷயம் மிகவும் விரும்பத்தகாததாக இருந்தது. ஐசிசி-யின் பெரும்பாலான போட்டியில் இந்த மூன்று நாடுகளால் பிரிக்கப்பட்டன.
ஷஷாங்க் மனோகர் அதிக முயற்சி எடுத்து ஏராளமான சேதங்களை தவிர்க்க வேண்டியிருந்தது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டும், அது ஐ.சி.சி-யின் சரியான நிர்வாக மறுஆய்வு மூலம் மட்டுமே செய்ய முடியும், இது நடக்கும். இல்லையெனில் திவாலாகும் நாடுகள் நம்மிடம் இருக்கும்’’ என்றார்.
இங்கிலாந்து தொடரின்போது கடைசி போட்டியில் விளையாட சர்பராஸ் அகமது மறுக்கவில்லை என்று மிஸ்பா உல் ஹக் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடியது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது இடம்பிடித்திருந்தார்.
ஆனால் மூன்று டெஸ்ட் மற்றும் முதல் இரண்டு டி20 போட்டிகளில் அவர் சேர்க்கப்படவில்லை. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு தருவதாக அணி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அப்போது அவர் விளையாட மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்டது.
ஆனால், சர்பராஸ் அகமது கடைசி போட்டியில் விளையாட விரும்பவில்லை என்று தலைமை பயிற்சியாளர் மிஸ்பா-உல்-ஹக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மிஸ்பா உல் ஹக் கூறுகையில் ‘‘சர்பராஸ் அகமது விளையாட மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அவரது ஒதுக்கீடு மற்றும் தொடரின் கடைசி போட்டியில் விளையாட அழைத்ததால் தயக்கம் காட்டினார்.
நான் அந்த நிலையில் இருந்திருந்தாலும் அதே மாதிரிதான் செய்திருப்பேன். ஒரு தொடரில் முன்னதாக அனைத்து போட்டிகளிலும் சேர்க்கப்படாமல், கடைசி போட்டியில் மட்டும் சேர்க்கப்பட்டால் வீரர்கள் தயக்கம் மற்றும் உறுதியற்ற நிலையை உணர்வார்கள்.
அவருடன் நாங்கள் ஆலோசனை நடத்திய பிறகு, எதிர்கால திட்டத்தில் உள்ளீர்கள். அதனால் தயக்கமின்றி விளையாடலாம் எனக் கூறினோம்’’ என்றார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தடைக்காலம் முடியும் நிலையில், இன்னும் ஏழு வருட கிரிக்கெட் வாழ்க்கை மீதமுள்ளது என்று ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசந்த். வேகப்பந்து வீச்சாளரான இவர் இந்திய அணிக்காக விளையாடி வந்தார். 2013-ம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
இதனால் செப்டம்பர் 13-ந்தேதி இவருக்கு வாழ்நாள் தடைவிதித்தது பிசிசிஐ. பின்னர் தடைக்காலம் ஏழு ஆண்டுகளாக குறைக்கப்பட்டது. இதனால் இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்குள் அவரது தடைக்காலம் முடிய இருக்கிறது.
இந்நிலையில் இன்னும் ஐந்து முதல் ஏழு ஆண்டுகள் கிரிக்கெட் மீதமுள்ளது என்று ஸ்ரீசந்த் தெரிவித்துள்ளார். மேலும் 2021 ஐபிஎல் ஏலத்தில் பெயரை உறுதியாக சேர்ப்பேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கேரள மாநில அணிக்காக ஸ்ரீசந்த் விளையாடுவார் என்று கூறிவந்த நிலையில், பயிற்சியாளரும், கேப்டனும் அதை உறுதிப்படுத்தவில்லை. தற்போது அவருக்கு 37 வயது என்பதால், அவருடைய உடற்தகுதி, முன்னணி கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்து கவலை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த தீபக் சாஹர் குணமடைந்ததால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட தொடங்கியுள்ளார்.
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதி முதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபு தாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.
ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே.) அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சி.எஸ்.கே. அணியின் வேகப்பந்து வீரர் தீபக் சாஹர், பேட்ஸ்மேன் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகிய 2 வீரர்கள் உள்பட 13 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி தாமதம் ஆனது. 2 வீரர்களை தவிர மற்ற வீரர்கள் கடந்த 4-ந்தேதியில் இருந்து பயிற்சி பெற்று வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தீபக் சாஹர் அதில் இருந்து முற்றிலும் குணமடைந்து உள்ளார். இதனால் அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடு மீண்டும் இணைந்து கொண்டார்.
கொரோனா பாதிப்புக்கு பிறகு 2 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர். 14 நாட்கள் தனிமைக்கு பிறகு தீபக் சாஹகருக்கு 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவருக்கு கொரோனா இல்லை என்பதற்கான நெகடிவ் முடிவு வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து அவர் சி.எஸ்.கே. அணியோடு மீண்டும் இணைந்து, பயிற்சியில் பங்கேற்றார். பயிற்சிக்கு முன்பு அவருக்கு பல்வேறு உடல் தகுதி சோதனை செய்யப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் தீபக் சாஹர் இடம்பெறுவாரா? என்பது உறுதியில்லை.
புதுமுக வீரரான ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு வருகிற 12-ந்தேதிதான் தனிமை முடிகிறது. அதன்பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதன் முடிவை பொறுத்தே அவர் அணியோடு இணைவது தெரியவரும்.
தற்போது ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு கொரோனா அறிகுறி இல்லை என்று சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கேயே குடியேறுகிறார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் ஜான்டி ரோட்ஸ். இவர் சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறார்.
ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சுவீடன் கிரிக்கெட் பெடரேசனுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களில் சிறந்த ஒப்பந்தம் நிகழ்ந்துள்ளது. எனது குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறேன். இது ஒரு ஆலோசனை பாத்திரம் இல்லை. நான் நீண்ட காலமாக செய்ய விரும்பும் ஒன்று.
தற்போது குழந்தைகளுக்கு 13, 10, 5, 3 வயது ஆகிறது. எப்போதாவது ஒரு இடத்தில் இருந்து நகர முடியும் என்றால், தற்போது அது தேவை’’என்றார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ஐந்து ரபேல் விமானங்கள் முறைப்படி இன்று இந்தியா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எம்எஸ் டோனி வாழ்த்து தெரிவித்ள்ளார்.
உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 27-ந்தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.
இந்த விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான விழா, அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்றது. முதலில் ரபேல் விமானம் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மத வழிபாட்டுடன் சம்பிரதாய பூஜை (சர்வ தர்ம பூஜை) செய்யப்பட்டது. பின்னர் ரபேல் விமானங்கள் மற்றும் தேஜஸ் விமானங்கள் வானில் சாகசங்கள் நிகழ்த்திக் காட்டின.
ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், முறைப்படி ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான ஆவணத்தை விமானப்படையின் 17 படைப்பிரிவின் 'தங்க அம்புகள்' குழு கட்டளை அதிகாரி கேப்டன் ஹர்கீரத் சிங்கிடம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் வழங்கினார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ் டோனி டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகின் சிறந்த போர் விமானம் என்று பெயர் பெற்ற ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இறுதியாக சேர்க்கப்பட்ட விழா நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற 17 படைப்பிரிவுக்கு (கோல்டன் அம்புகள்) வாழ்த்துக்கள். ரபேல் ‘மிராஜ் 2000’-ன் சேவை சாதனையை முறியடிக்கும் என்று நம்புகிறோம். ஆனால் Su30MKI என் விருப்பமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.






