என் மலர்

  செய்திகள்

  சவுரவ் கங்குலி, முகமது அசாருதீன்
  X
  சவுரவ் கங்குலி, முகமது அசாருதீன்

  கங்குலியை கேப்டனாக வடிவமைத்த பெருமைக்கு அசாருதீன் தகுதியானவர்: பாக். முன்னாள் கேப்டன்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சவுரவ் கங்குலியை சிறந்த கேப்டனாக வடிவமைத்த பெருமைக்கு முகமது அசாருதீன் தகுதியானவர் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.
  இந்திய கிரிக்கெட் அணியில் தலைசிறந்த கேப்டனாக திகழ்ந்தவர்களில் ஒருவர் சவுரவ் கங்குலி. ஐசிசி சாம்பியன் கோப்பையை வெல்லவில்லை என்பதை தவிர மற்ற எந்த குறையும் கங்குலியின் கேப்டன்ஷிப்பில் காண முடியாது.

  இவர் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளித்து அவர்களை ஊக்குவித்து உருவாக்கிய சிறந்த அணியை வைத்துதான எம்எஸ் டோனி உலக கோப்பையை வென்றார் என கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுவது உண்டு.

  சவுரவ் கங்குலி முகமது அசாருதீன் கேப்டனாக இருக்கும்போது 1992-ல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும், 1996-ல் டெஸ்ட் போட்டியிலும் அறிமுகம் ஆனார். 

  கங்குலியை சிறந்த கேப்டனாக வடிவமைத்தவர் முகமது அசாருதீன். அந்த பெருமையை பெற முகமது அசாருதீனுக்கு தகுதி உள்ளது என்று பாகிஸ்தான் அணி முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீஃப் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து ரஷித் லத்தீஃப் கூறுகையில் ‘‘எனக்கு முகமது அசாருதீன் மீது அதிக மரியாதை உள்ளது. நீண்ட காலம் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மேலும், கங்குலி போன்ற வீரர்களை விட்டுச் சென்றார். கங்குலியை சிறந்த கேப்டனாக முன்னேற்றுவதில் முகமது அசாருதீன் சிறந்த பங்காற்றினார். சச்சின் தெண்டுல்கர், டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கங்குலியின் தலைமையின் கீழ் விளையாடினர்.

  டோனியின் கிரிக்கெட் வாழ்க்கையை பார்த்தால் கங்குலியை சற்று சார்ந்து இருந்தது. தலைமை பதவிக்கான திறமை கங்குலியிடம் இருந்தது. அசாருதீன் அவரை உருவாக்கினார். எம்எஸ் டோனி இருவரின் திறமையையும் ஒருங்கிணைத்து, நவீன கிரிக்கெட்டிற்கு ஏற்றபடி தனது ஸ்டையில் உருவாக்கினார்.’’ என்றார்.
  Next Story
  ×