search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரெட் லீ"

    • 2012ல் விளையாட துவங்கிய மேக்ஸ்வெல், அனைத்து வடிவத்திலும் சிறப்பாக ஆடினார்
    • ஐசிசி உலக கோப்பை தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர், 35 வயதான க்ளென் மேக்ஸ்வெல் (Glenn Maxwell).

    2012ல் இருந்து அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியவர் மேக்ஸ்வெல்.

    கடந்த 2023 நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஐசிசி உலக கோப்பை ஆண்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரில் அதிவேக இரட்டை சதம் அடித்தார்.

    2022ல் கால்முறிவின் காரணமாக 3 மாதங்களுக்கும் மேல் விளையாடாமல் இருந்தார்.

    சென்ற வருடம் க்ளென் தொடர்ச்சியாக பல காயங்களை சந்தித்தார். அகமதாபாத் நகரில் கீழே விழுந்ததில் ரத்த கட்டு ஏற்பட்டது.

    ஆனாலும், உலக கோப்பை போட்டிகளில் சிறப்பாக விளையாடினார். இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வழிவகுத்த இறுதி ரன்களை எடுத்தவர் க்ளென் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஒரு இரவு விருந்தில் கலந்து கொண்டு மது அருந்தினார். பிறகு முன்னாள் ஆஸ்திரேலிய வேக பந்து வீச்சாளர் ப்ரெட் லீ நடத்தி வரும் "சிக்ஸ் அண்ட் அவுட்" எனும் இசைக்குழுவின் கச்சேரியை ரசித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, உடனடியாக அவர் ராயல் அடிலெய்ட் (Royal Adelaide) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    சில மணி நேரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    இந்நிலையில், அதிக மது அருந்தியதால் அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என கண்டறிய ஆஸ்திரேலிய தேசிய கிரிக்கெட் அமைப்பான கிரிக்கெட் ஆஸ்திரெலியா (Cricket Australia), இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

    • இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது.
    • 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக்கோப்பை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. இந்த உலகக் கோப்பையை வெல்வதற்காக தற்போது அனைத்து அணிகளும் முழுஅளவில் தயாராகி வருகின்றன. 13-வது முறையாக நடைபெறவுள்ள இந்த 50 ஓவர் உலகக்கோப்பை அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 1987, 1996 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஐசிசி-யின் 50 உலகக் கோப்பை தொடரானது நடைபெற்றது.

    அதில் 2011-ஆம் ஆண்டு டோனியின் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற பல ஐசிசி தொடர்களை இந்திய அணி இழந்த வேளையில் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்காக முனைப்பு காட்டி வருகிறது.

    மேலும் இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா என அனைத்து அணிகளுக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

    இந்த அனைத்து தொடர்களிலும் இந்திய அணி சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்த ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றப்போகும் அணி எது என்பது குறித்து பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்து வருகின்றனர்.


    இந்நிலையில் உலக கோப்பையை இந்திய அணிதான் வெல்லும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிரட் லீ கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    இந்த ஆண்டு நடைபெற இருக்கும் உலக கோப்பையை கைப்பற்ற இந்திய அணிக்கு தான் வாய்ப்பு அதிகம் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி தற்போது மிகச் சிறப்பான அணியாக உள்ளது. அந்த அணியில் அனுபவமும் இளமையும் கலந்துள்ளது.

    அதுமட்டும் இன்றி இந்திய மைதானத்தில் இந்திய அணியை வீழ்த்துவது என்பது சவாலான காரியம். இங்குள்ள மைதானங்கள் அனைத்தும் இந்திய அணிக்கு ரொம்பவே பழக்கப்பட்டவை என்பதனால் இந்திய அணிக்கு இந்த தொடரை வெல்ல அதிக வாய்ப்பு என்று எந்தவித தயக்கமும் இன்றி பிரெட் லீ தெரிவித்துள்ளார்.

    ×