என் மலர்
விளையாட்டு
தென்ஆப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ், சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கேயே குடியேறுகிறார்.
தென்ஆப்பிரிக்கா அணியின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் ஜான்டி ரோட்ஸ். இவர் சுவீடன் கிரிக்கெட் பெடரேசன் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறார்.
ஜான்டி ரோட்ஸ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியில் பீல்டிங் பயிற்சியாளராக இருந்தார். இந்த சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை பீல்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சுவீடன் கிரிக்கெட் பெடரேசனுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. கடந்த மூன்று மாதங்களில் சிறந்த ஒப்பந்தம் நிகழ்ந்துள்ளது. எனது குடும்பத்துடன் சுவீடனில் குடியேற இருக்கிறேன். இது ஒரு ஆலோசனை பாத்திரம் இல்லை. நான் நீண்ட காலமாக செய்ய விரும்பும் ஒன்று.
தற்போது குழந்தைகளுக்கு 13, 10, 5, 3 வயது ஆகிறது. எப்போதாவது ஒரு இடத்தில் இருந்து நகர முடியும் என்றால், தற்போது அது தேவை’’என்றார்.
பிரான்ஸ் நாட்டில் இருந்து வாங்கப்பட்ட ஐந்து ரபேல் விமானங்கள் முறைப்படி இன்று இந்தியா விமானப்படையிடம் ஒப்படைக்கப்பட்டதற்கு எம்எஸ் டோனி வாழ்த்து தெரிவித்ள்ளார்.
உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் கடந்த ஜூலை 27-ந்தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.
இந்த விமானங்கள் இன்று (வியாழக்கிழமை) முறைப்படி இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான விழா, அம்பாலா விமானப்படை தளத்தில் நடைபெற்றது. முதலில் ரபேல் விமானம் முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் அனைத்து மத வழிபாட்டுடன் சம்பிரதாய பூஜை (சர்வ தர்ம பூஜை) செய்யப்பட்டது. பின்னர் ரபேல் விமானங்கள் மற்றும் தேஜஸ் விமானங்கள் வானில் சாகசங்கள் நிகழ்த்திக் காட்டின.
ரபேல் விமானங்களுக்கு தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின்னர், முறைப்படி ரபேல் விமானங்கள் விமானப்படையில் சேர்க்கப்பட்டன. இதற்கான ஆவணத்தை விமானப்படையின் 17 படைப்பிரிவின் 'தங்க அம்புகள்' குழு கட்டளை அதிகாரி கேப்டன் ஹர்கீரத் சிங்கிடம் பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் வழங்கினார்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்எஸ் டோனி ரபேல் விமானங்கள் சேர்க்கப்பட்ட நிலையில், இந்திய விமானப்படைக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எம்எஸ் டோனி டுவிட்டர் பக்கத்தில் ‘‘உலகின் சிறந்த போர் விமானம் என்று பெயர் பெற்ற ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இறுதியாக சேர்க்கப்பட்ட விழா நடைபெற்றுள்ளது. புகழ்பெற்ற 17 படைப்பிரிவுக்கு (கோல்டன் அம்புகள்) வாழ்த்துக்கள். ரபேல் ‘மிராஜ் 2000’-ன் சேவை சாதனையை முறியடிக்கும் என்று நம்புகிறோம். ஆனால் Su30MKI என் விருப்பமாக உள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் செரீனாவுடன் அசரென்கா விளையாட உள்ளார்.
வாஷிங்டன்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டித் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டி உள்ளது. நேற்று மகளிர் ஒற்றைய பிரிவு காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. 6 முறை சாம்பியன் பட்டம் பெற்ற செரீனா வில்லியம்ஸ், காலிறுதி ஆட்டத்தில் பல்கேரிய வீராங்கனை ஸ்வெட்டானா பிரான்கோவாவை எதிர்கொண்டார். பரபரப்பான இப்போட்டியில் 4-6, 6-3, 6-2 என்ற செட்கணக்கில் செரீனா வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
இந்த ஆட்டத்தில் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த செரீனா, இப்போட்டி தனக்கு மிகவும் சவாலாக இருந்ததாகவும், தொடர்ந்து விட்டுக் கொடுக்காமல் ஆடியதாகவும் கூறினார்.
மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் ஷெல்பி ரோஜர்சை 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்திய நவோமி ஒசாகா அரையிறுதியை உறுதி செய்தார். இதேபோல் இன்று நடைபெற்ற ஒரு காலிறுதி ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா 6-1, 6-0 என்ற நேர்செட்களில் எலிஸ் மெர்டன்சை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், அசரென்கா பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கி விட்டு மோசடி செய்ததாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் புகார் கொடுத்துள்ளார்.
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ஹர்பஜன் சிங் தன்னிடம் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் 4 கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு மோசடி செய்ததாகவும், அந்த பணத்தை பெற்றுத் தரும்படியும் சென்னை மாநகர காவல்துறையிடம் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். தொழிலதிபர் மற்றும் சிலர் தன்னை ஏமாற்றியதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது அந்த தொழிலதிபர் முன்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தன்னிடம் மோசடி செய்தவர்களிடம் இருந்து பணத்தைத் திரும்பப் பெற்றுத்தரும்படி ஹர்பஜன் சிங் சென்னை மாநகர காவல் துறையிடம் அளித்திருந்த புகார் மனுவியில் கூறியிருப்பதாவது:-
சென்னை உத்தண்டியைச் சேர்ந்த மகேஷ் என்ற தொழிலதிபர் நண்பர்கள் மூலம் அறிமுகமானார். தொழிலை விருத்தி செய்யப்போவதாகத் தெரிவித்து 2015ஆம் ஆண்டு என்னிடம் 4 கோடி கடன் வாங்கினார். அதன்பின்பு, அவரை என்னால் தொடர்புகொள்ள முடியவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி 25 லட்ச ரூபாய்க்கான செக் வழங்கினார். ஆனால் அந்த செக் பவுன்ஸ் ஆனது.
இவ்வாறு ஹர்பஜன் கூறியிருந்தார்.
ஹர்பஜன் சிங்கின் புகார் மனு மீது சென்னை நீலாங்கரை காவல் கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரையா தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், மகேஷ் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பினார்.
இதனால், குற்றம்சாட்டப்பட்ட தொழிலதிபர் மகேஷ் தனது வழக்கறிஞர்கள் மூலம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
பணம் மோசடி குறித்து மகேஷ் கூறுகையில், சென்னைக்கு அருகில் உள்ள தாளம்பூரில் உள்ள எனது அசையா சொத்துக்களை பிணையாக வைத்துதான் ஹர்பஜன் சிங்கிடம் பணம் பெற்றேன். இதற்காக திருப்போரூரில் உள்ள சார் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆவண எண் 3635/2015. ஹர்பஜன் சிங்கிற்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்திவிட்டேன்’ என்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒன்றைய பிரிவில் செரீனா வில்லியம்ஸ் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின்
காலிறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், பல்கேரியாவின் டிஸ்விடனா பிரொன்கொவாவை எதிர்கொண்டார்.
போட்டியின் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் டிஸ்விடனா கைப்பற்றினார். இதையடுத்து ஆக்ரோஷமாக ஆடிய செரீனா போட்டியின் இரண்டாவது மற்றும் இறுதி செட்களை 6-3, 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார்.
இதன் மூலம் 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் டிஸ்விடனாவை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒன்றையர் பிரிவின் அரையிறுதி சுற்றுக்குள் செரீனா வில்லியம்ஸ் நுழைந்தார்.
சுவீடனுக்கு எதிரான போட்டியில் முதலாவது கோலை அடித்த போது ரொனால்டோ ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ தொட்டு சாதனைப்படைத்தார்.
சோல்னா:
ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.
இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ (45-வது மற்றும் 72-வது நிமிடம்) அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ (165 ஆட்டம்) தொட்டது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்தார். உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. இதையும் ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ஓபன்டென்னிஸ் போட்டியில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா அரைஇறுதிக்கு முன்னேறினார்.
நியூயார்க்:
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருக்கும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 32-வது இடத்தில் உள்ள போர்னா கோரிச்சை (குரோஷியா) எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தொடக்கத்தில் திணறியதுடன், சில தவறுகளையும் இழைத்தார். இதனால் முதல் செட்டை எளிதில் இழந்ததுடன், 2-வது செட்டில் 2-4 என்ற கணக்கில் பின்தங்கினார். பின்னர் சுதாரித்து ஆடிய அவர் 2-வது செட்டை டைபிரேக்கரில் கைப்பற்றியதுடன், அடுத்த செட்டையும் டைபிரேக்கர் வரை போராடி சொந்தமாக்கினார். 3 மணி 25 நிமிடம் நடந்த ஆட்டத்தின் முடிவில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 1-6, 7-6 (7-5), 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் போர்னா கோரிச்சை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதியை எட்டினார். அவரது இந்த வெற்றிக்கு 18 ஏஸ் சர்வீஸ்களும் கைகொடுத்தது.
மற்றொரு கால்இறுதியில் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா 3-6, 7-6 (7-5), 7-6 (7-4), 0-6, 6-3 என்ற செட் கணக்கில் 4 மணி 8 நிமிடங்கள் மல்லுகட்டி கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை சாய்த்தார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் செல்பி ரோஜர்சை தோற்கடித்து 2-வது முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். இதே போல் அமெரிக்க வீராங்கனை ஜெனிபர் பிராடி 6-3, 6-2 என்ற நேர்செட்டில் புதின்சேவாவுக்கு (கஜகஸ்தான்) அதிர்ச்சி அளித்தார். ஒரு அரைஇறுதியில் நவோமி ஒசாகா-ஜெனிபர் பிராடி சந்திக்கின்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடுமையான வெப்பம் நிலவுவதால், அதற்கேற்ப வீரர்கள் மாறிக்கொள்வது கடினமான சவால் என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் முக்கியமான வீரர்களை தொடர்ந்து போட்டியில் விளையாட அனுமதிப்பதில்லை. அவர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்புகள் வழங்கி வருகிறது. இதன் மூலம் வீரர்களின் காயம் தவிர்க்கப்படுகிறது.
ஐபிஎல் போட்டியில் ஒவ்வொரு அணிகளும் 14 லீக் போட்டிகளில் விளையாட வேண்டும். அப்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கிடைக்காது. இதனால் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்க இருக்கிறது. அங்கு அதிகமான வெப்பம் நிலவுகிறது. இதனால் வேகப்பந்து வீச்சாளர்களின் பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானது என்று முகமது ஷமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முகமது ஷமி கூறுகையில் ‘‘இந்தியாவை ஒப்பிடும்போது வெப்பநிலை மிகவும் அதிகமாக உள்ளது. நீரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தசைப்பிடிப்புகள் போன்ற பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விசயங்களை நாம் நினைப்பில் வைத்திருக்க வேண்டும்.
ஆடுகளங்கள் மாறுபட்டதால் கடினமானதாகும். ஆகவே, பணிச்சுமையை நிர்வகிப்பது முக்கியமானது. ஆனால் அதை நிர்வகிக்க முடியாது என்பது அவ்வளவு கடினம் அல்ல. நாம் எப்படி நம்முடைய பணிச்சுமையை நிர்வகிக்கிறோம் என்பதை சார்ந்தது.
வீட்டை விட்டு வெளியேறி துபாய்க்கு வந்ததை சிறப்பானதாக உணர்கிறோம். நமக்கு மிகவும் பிடித்தமான விளையாட்டை விளையாட இருப்பதற்கு நன்றி தெரிவித்தாக வேண்டும். ஆகவே, உணர்வை ஒப்பிட இயலாது. ஒவ்வொருவரும் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்வது சிறந்த பகுதி. இந்தியாவில், ஐபிஎல் போட்டி அனைவரின் முகத்திலும் சிரிப்பை வரவழைக்கும்’’ என்றார்.
அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து விளையாட்டு போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை ஓர் உலுக்கு உலுக்கியது. இதனால் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஜூலை மாதத்திற்குப் பிறகு ஜெர்மனி, இங்கிலாந்து என ஒவ்வொரு நாடாக விளையாட்டை தொடங்கின.
ஆனால் ரசிகர்களை அனுமதிக்க அரசுகள் மறுத்து விட்டன. இதனால் போட்டிகள் அனைத்து ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்தில் ரசிகர்களுக்கு வருகிற 1-ந்தேதி (அக்டோபர்) முதல் அனுமதி வழங்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து போரிஸ் ஜான்சன் கூறுகையில் ‘‘இந்த மாத இறுதியில் அதிக பார்வையாளர்களுடன் நடைபெற இருக்கும் பைலட் நிகழ்ச்சியை திருத்த வேண்டும். அக்டோபர் 1-ந்தேதியில் இருந்து மைதானத்தினங்களுக்கு ரசிகர்கள் திரும்புவதற்கான நமது நோக்கத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்.
ஆனால், நாம் ஒட்டுமொத்தமாக இந்த நிகழ்ச்சியை ரத்து செய்கிறோம் என்று அர்த்தம் அல்ல. அதுகுறித்து ஆய்வு செய்து, சுருக்க வேண்டும்.’’என்றார்.
இந்திய அணியின் தலைசிறந்த ஆல்-ரவுண்டராக திகழ்ந்த யுவராஜ் சிங், ஓய்வு முடிவை திரும்பப் பெற இருப்பதை உறுதி செய்துள்ளார்.
இந்திய அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். பீல்டிங், பேட்டிங், பவுலிங் என மூன்று துறைகளிலும் அசத்தியவர். 2007-ம் ஆண்டு இந்திய அணி டி20 உலக கோப்பையையும், 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையையும் இந்தியா கைப்பற்ற முக்கிய நபராக திகழ்ந்தார்.
கடந்த ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பின்னர் 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடினார்.
இவர் சமீபத்தில் பஞ்சாப் அணி இளம் வீரர்களுடன் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது பஞ்சாப் மாநில அணிக்காக விளையாட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிக்கு மீண்டும் திரும்பும் வகையில் ஓய்வு முடிவை திரும்ப பெற இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் அதை உறுதி செய்துள்ளார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் கூறுகையில் ‘‘நான் இளைஞர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டேன். விளையாட்டு குறித்து பல்வேறு அம்சங்கள் பேசினோம். அவர்களிடம் நான் பேசும்போது பல்வேறு விசயங்களை அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என உணர்கிறேன்.
நான் இரண்டு மாதங்களாக பயிற்சி மேற்கொண்டேன். ஆஃப்-சீசன் முகாமில் பேட்டிங் மேற்கொண்டேன். பயிற்சி ஆட்டத்தில் போதுமான அளவிற்கு ரன்கள் அடித்தேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் புனீத் பாலி என்னை அணுகி, ஓய்வு முடிவை திரும்ப பெறுவது குறித்து பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.
தொடக்கத்தில் அவரது கோரிக்கையை நான் ஏற்க விரும்புகிறேன் என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. உள்ளூர் கிரிக்கெட் தொடரை நான் முடித்துவிட்டேன். பிசிசிஐ அனுமதி கொடுத்தால், உலகளவில் பிரான்சிஸ் அளவிலான லீக்குகளில் விளையாட விரும்புகிறேன்.
ஆனால் என்னால் பாலியின் வேண்டுகோளையும் நிராகரிக்க முடியாது. கடந்த மூன்று அல்லது நான்கு வாரங்களாக ஏராளமான நினைப்புகள் வந்தன. ஆனாலும், எது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை.
பஞ்சாப் அணி சாம்பியன்ஷிப் ஆக வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. நான், ஹர்பஜன் சிங் தொடர்களை வென்றுள்ளோம். ஆனால் நாங்கள் இணைந்து பஞ்சாப்பிற்கு எதுவும் செய்யவில்லை. ஆகவே, இது என்னுடைய இறுதி முடிவில் முக்கிய காரணியாக இருக்கும்’’ என்றார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட்டை சீண்டிய ரசிகருக்கு கூலாக பதில் அளித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட். சமீபத்தில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2-வது இங்கிலாந்து பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். இவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் தனது போட்டோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அதற்கு கருத்து தெரிவித்திருந்த ரசிகர் ஒருவர் ‘‘நீங்கள் பும்ரா போன்று சிறந்த வீரர் இல்லை’’ என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதில் அளித்த ஸ்டூவர்ட் பிராட் ‘‘நான் பும்ராவை விரும்புகிறேன். எனக்கு பிடித்த வீரர்களில் அவரும் ஒருவர். நாங்கள் உங்களுடன் இணைந்து ஒப்புக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஒப்பிட வேண்டிய தேவையில்லை. சிறந்த பந்து வீச்சாளர்களை மகிழ்ச்சிப் படுத்துங்கள்’’என பதில் அளித்துள்ளார்.
ரசிகர்கள் ஸ்டூவர்ட் பிராட் இப்படி ஒரு பதிலை அளிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. வேறு மாதிரி பதில் அளித்தால் ‘ட்ரோல்’ செய்யலாம் என நினைத்த ரசிகர்களுக்கு, அதற்கான வாய்ப்பை அளிக்காமல் கூலாக சென்றுவிட்டார் ஸ்டூவர்ட் பிராட்.
ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:-
* விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.
* உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதி.
* மைதானங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்ப தடை.
* மைதானங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.