என் மலர்
விளையாட்டு
ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் உள்பட விளையாட்டு மைதானங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் விளையாட்டு மைதானங்களை திறப்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேர் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியதாவது:-
* விளையாட்டு மைதானங்களுக்குள் ஆரம்ப கட்டத்தில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி.
* உடல்வெப்ப பரிசோதனை செய்த பிறகே மைதானங்களுக்குள் அனுமதி.
* மைதானங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் எச்சில் துப்ப தடை.
* மைதானங்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் அனுமதி இல்லை.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டிக்கான நாள் நெருங்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி துபாய் விரைந்துள்ளார்.
ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீகரத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. போட்டியில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர்.
அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்த நிலையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதி, வீரர்கள் துபாய், அபு தாபி, ஷார்ஜா போன்ற இடங்களுக்கு எளிதில் சென்று வர எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு அனுமதி வாங்கியுள்ளது.
இதனால் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டது. இனிமேல்தான் வீரர்கள் பயோ-செக்யூர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் வீரர்கள் வெளியே வர முடியாது.
இந்த பணி முக்கியமானது. ஒருங்கிணைப்பு வேலை மிக மிக முக்கியமானது. இதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதற்கான பணியை மேற்பார்வையிட துபாய் சென்றுள்ளனார்.
இன்று துபாய் புறப்பட்ட கங்குலி தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக சுமார் ஆறு மாதம் கழித்து துபாய்க்கு என்னுடைய முதல் விமானம். மூர்க்கத்தனமாக வாழ்க்கை மாற்றம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாட திட்டமிட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீபத்தில் இங்கிலாந்து சென்று மூன்று டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. போட்டி தொடங்குவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே பாகிஸ்தான் அணி இங்கிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டது. அதன்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்று சிறப்பான வகையில் தொடரை முடித்தது.
இந்த நிலையில் வருகிற நவம்பர் மாதம் பாகிஸ்தான் தேசிய அணி மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ அணிகளை நியூசிலாந்து அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு திட்டமிட்டுள்ளது.
போட்டி தொடங்குவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் வீரர்கள் நியூசிலாந்து சென்று 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்வார்கள். அதன்பின் பாதுகாப்பு வளையத்திற்குள் சென்று போட்டியில் கலந்து கொள்வார்கள்.
பாகிஸ்தான் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டியிலும் தேசிய அணி விளையாட இருக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் ‘ஏ’ அணி சில முதல்தர போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இதற்காக சுமார் 40 முதல் 45 வீரர்களை நியூசிலாந்துக்கு அனுப்ப பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு செய்துள்ளது. முன்னணி வீரர்கள் சென்றால் பாகிஸ்தானில் நடைபெறும் முக்கிய உள்ளூர் கிரிக்கெட் தொடர் பாதிக்கப்படும் என்ற விமர்சனமும் எழும்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் மீண்டும் ஜேசன் ராய் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது. இதில் இங்கிலாந்து 2-1 எனத் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடருக்கான அணியில் ஜேசன் ராய் இடம் பிடித்திருந்தார். இடிப்பு வலி காரணமாக அணியில் இருந்து விலகினார். அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் விளையாடவில்லை.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். டி20 போட்டியில் சிறப்பாக விளையாடிய தாவித் மலன் ரிசர்வ் வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. இயன் மோர்கன், 2. மொயீன் அலி, 3. ஜாஃப்ரா ஆர்சர், 4. பேர்ஸ்டோவ், 5. டாம் பாண்டன், 6. சாம் பில்லிங்ஸ், 7. ஜோஸ் பட்லர், 8. சாம் கர்ரன், 9. டாம் கர்ரன், 10. அடில் ரஷித், 11. ஜோ ரூட், 12. ஜேசன் ராய், 13. கிறிஸ் வோக்ஸ், 14. மார்க் வுட்.
சர்வதேச கால்பந்து போட்டியில் 100 கோல்கள் அடித்து சாதனைப் படைத்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரசிகர்கள் இல்லாதது கோமாளி இல்லாத சர்க்கஸ் போன்றது எனத் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து போட்டிகள் ரசிகர்கள் இன்றி வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்கள் ஆரவாரத்திற்கு மத்தியில் கம்பீரமாக விளையாடிய வீரர்களுக்கு இது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முன்னணி வீரர்களுக்கு ரசிகர்களின் ஆரவாரம் கூடுதல் பூஸ்ட் அளிப்பதாக இருக்கும்.
தற்போது நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று போர்ச்சுக்கல் - சுவீடன் அணிகள் மோதின. போர்ச்சுக்கல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடிக்க போர்ச்சுக்கல் 2-0 என வெற்றி பெற்றது. முதல் கோலை அடிக்கும்போது ரொனால்டோ சர்வதேச அளவில் 100-வது கோலை பதிவு செய்தார்.
ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடைபெறுவது குறித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறுகையில் ‘‘ரசிகர்கள் இல்லாமல் நடைபெறும் போட்டி என்பது, கோமாளி இல்லாத சர்க்கஸ், பூக்கள் இல்லாத தோட்டம் போன்றது. வீரர்களாகிய நாங்கள் ரசிகர்கள் இல்லாததை விரும்பவில்லை.
ஆனால் நான் ஏற்கனவே இந்த சூழ்நிலையில் விளையாடியிருக்கிறேன். மைதானம் வெறிச்சோடி இருக்கும் என்பது முன்னதாகவே தெரியும் என்பதால், அதற்கு ஏற்ப என்னைத் தயார்படுத்திக் கொள்வேன். ரசிகர்கள் இல்லாதது கவலை அளிக்கிறது.
வெளி மண்ணில் விளையாடும்போது ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவது எனக்கு உத்வேகமாக இருக்கும். ஆனால், உடல்நிலை முக்கியம் என்பதால், அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். இன்னும் சில மாதங்களில் ரசிகர்கள் மீண்டும் மைதானத்திற்கு திரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் போட்டியை ரசிக்கக் கூடியர்கள்’’ என்றார்.
சர்வதேச கால்பந்தில் தேசிய அணிக்காக 100 கோல்களை கடக்கும் 2-வது வீரர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளார். ஈரானின் அலி தயேய் 109 கோல்கள் அடித்துள்ளார்.
ஐபிஎல் லீக்கில் பந்து வீச்சாளர்களுக்கு தலா ஐந்து ஓவர்கள் வழங்க வேண்டும் என ஷேன் வார்னே ஆலோசனை வழங்கிய நிலையில், பிசிசிஐ தலைவர் கங்குலி அதை ஏற்பாரா? எனத் தெரியவில்லை.
உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக்கில் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் டி20 லீக் முதன்மையானதாக விளங்குகிறது. இதில் விளையாடும் வீரர்களுக்கு சம்பளம் அதிக அளவில் வழங்கப்படுகிறது. இதனால் வெளிநாட்டு வீரர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஐபிஎல் தொடரில் ஒரு பந்து வீச்சாளர் அதிகபட்சமாக நான்கு ஓவர்கள்தான் வீச முடியும். இந்த விதியை மாற்றி ஒரு பவுலர் ஐந்து ஓவர்கள் வீச அனுமதிக்க வேண்டும் என ஷேன் வார்னே ஆலோசனை வழங்கியுள்ளார்.
மேலும், ஐபிஎல் இதை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வார்னே கங்குலிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து வார்னே தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘டி20 லீக்கில் பந்து வீச்சாளர்கள் தலா ஐந்து ஓவர்கள் வீச வேண்டும் என்று நான் கூறிய ஆலோசனைக்கு ஏராளமான வரவேற்புகள் கிடைத்துள்ளன. இது ஐசிசி-யால் நடைமுறைப்படுத்த வேண்டும். செப்டம்பர் 19-ந்தேதி நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் முயற்சி செய்து பார்க்கலாம்’’ எனப் பதிவிட்டுள்ளார். டுவிட்டரில் கங்குலியை டேக் செய்து நடைமுறைப்படுத்துங்கள் எனத் தெரிவித்துள்ளார்.
வார்னே ஆலோசனைக்கு ‘‘சூப்பர் ஐடியா, 6 பேட்ஸ்மேன், கீப்பர், 4 பவுலர்கள். போட்டி இன்னும் முன்னேற்றம் அடையும்’’ என்றும், ‘‘இந்த முறையால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு இடையில் சரியான பேலன்ஸ் இருக்கும். குறிப்பாக மேட்ச் கடினமாக செல்லும்போது இது சிறந்ததாக இருக்கும்’’ என்றும் தெரிவித்துள்ளனர்.
டி20 கிரிக்கெட் லீக்கை அறிமுகம் செய்துள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் வாரியம் 10 ஓவர் கிரிக்கெட் லீக்கையும் அறிமுகம் செய்கிறது
இலங்கை கிரிக்கெட் போர்டு நவம்பர் மாதத்தில் டி20 கிரிக்கெட் லீக்கை நடத்துகிறது. ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டிருந்தது. கொரோனா அச்சுறுத்தலால் வெளிநாட்டு வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறை இருந்ததால் நவம்பர் மாத்திற்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில் டிசம்பர் மாதம் 10 ஓவர் கிரிக்கெட் லீக்கை நடத்த இருக்கிறது. இந்தத் தொடர் டிசம்பர் மாதம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் போர்டு கூட்டத்தில் நிர்வாக கமிட்டி ஒருமித்த கருத்தோடு இந்த முடிவை எடுத்துள்ளது.
எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரில் ஒவ்வொரு அணிகளும் தலா ஆறு வெளிநாட்டு வீரர்களை ஏலம் எடுக்க அனுமதி வழங்கப்படும். போட்டிகள் அனைத்தும் இரண்டு மைதானங்களில் நடைபெற இருக்கிறது. அணியின் பெயர்கள் மற்றும் நடைபெறும் இடங்கள் இதுவரை முடிவு செய்யப்படவில்லை.
இலங்கை கிரிக்கெட் போர்டு நடத்தும் டி20 லீக் நவம்பர் 14-ந்தேதி முதல் டிசம்பர் 6-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில் ஐந்து அணிகள் 23 போட்டிகளில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 129 ரன்கள் அடித்ததன் மூலம் டி20 தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி தாவித் மலன் முதலிடம் பிடித்தார்.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இதில் 2-1 இங்கிலாந்து தொடரை வென்றது. இந்தத் தொடரில் இங்கிலாந்து வீரர் தாவித் மலன் 129 ரன்கள் அடித்திருந்தார். இதன்மூலம் டி20 பேட்ஸ்மேன் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி முதலிடம் பிடித்தார்.
கடைசி 16 போட்டிகளில் 682 ரன்கள் அடித்துள்ள தாவித் மலன், 48.71 சராசரியும், 146.66 ஸ்டிரைக் ரேட்டும் வைத்துள்ளார். 7 அரைசதங்களுடன் ஏழு அரைசதங்கள் அடித்துள்ளார்.
877 புள்ளிகளுடன் தாவித் மலன் முதல் இடத்திலும், 869 புள்ளிகளுடன் பாபர் அசாம் 2-வது இடத்திலும், 835 புள்ளிகளுடன் ஆரோன் பிஞ்ச் 3-வது இடத்திலும், 824 புள்ளிகளுடன் கேஎல் ராகுல் 4-வது இடத்திலும், 785 புள்ளிகளுடன் கொலின் முன்றோ 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணி கேப்டன் விராட் கோலி 9-வது இடத்தில் உள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் டோனி, அவரது 100 சதவீதம் பங்களிப்பை கொடுப்பார் என்று அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன எம்.எஸ். டோனி கடந்த மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஏற்கனவே கடந்த ஒரு வருடமாக விளையாடாமல் இருக்கும் அவரால் ஐபிஎல் போட்டியில் 100 சதவீதம் பங்களிப்பை கொடுக்க இயலுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் எம்எஸ் டோனி 100 சதவீதம் ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று இந்தியாவின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ப்ளே கூறுகையில் ‘‘எம்.எஸ். டோனி பற்றி தெரியும், அவருடைய 100 சதவீதம் பங்களிப்பை கொடுப்பார். முதல் ஐபிஎல் தொடரில் விளையாடினாலும் கூட, நான் 2-வது சீசனில் விளையாடிய போது, சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றிருந்தேன்.
ஐபிஎல் அணியில் என்னைத் தவிர மற்ற ஏழு அணிகளிலும் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள்தான் தலைமை பயிற்சியாளராக உள்ளனர். ஐபிஎல் போட்டியில் மேலும் இந்தியாவைச் சேர்ந்த நபர்கள் தலைமை பயிற்சியாளராக இருக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன்.
இது இந்திய வளங்களின் உண்மையான பிரதிபலிப்பு இல்லை. ஐபிஎல் தலைமை பயிற்சியாளராக அதிக அளவில் இந்தியாவை சேர்ந்தவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரேயொரு ஹெட் கோச் என்பது சற்று முரண்பாடாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகப்படியான பயிற்சியாளர்கள் இருப்பார்கள் என நினைக்கிறேன்.’’ என்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் ஆஸ்திரேலியா ஐந்து விக்கெட் வித்தியாசத்ததில் வெற்றி பெற்று ஒயிட்வாஷை தடுத்தது.
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றியிருந்தது.
இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது.
தொடக்க வீரர் டாம் பாண்டன் 2 ரன்னில் வெளியேறினார். பேர்ஸ்டோவ் 44 பந்தில் 55 ரன்கள் எடுத்தார். ஜோ டென்லி 19 பந்தில் 29 ரன்களும், மொயீன் அலி 21 பந்தில் 23 ரன்களும் அடித்தனர்.
பின்னர் 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. ஆரோன் பிஞ்ச் 26 பந்தில் 39 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 பந்தில் 26 ரன்களும் அடித்தனர். மிட்செல் மார்ஷ் ஆட்டமிழக்காமல் 36 பந்தில் 39 ரன்களும், ஆஷ்டோன் அகர் 13 பந்தில் 16 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசதத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியா ஒயிட்வாஷ் ஆவதை தடுத்தது. மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருதும், ஜோஸ் பட்லர் தொடர் நாயகன் விருதையும் பெற்றது.
ஐ.பி.எல். ஏலம் முறை மீது எனக்கு வருத்தமோ, கவுரவ பிரச்சினையோ இருந்ததில்லை என புஜாரா கூறியுள்ளார்.
புதுடெல்லி:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக வலம் வரும் 32 வயதான புஜாரா, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார். ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். ஏலம் வியூகங்களும், தந்திரமும் நிறைந்தது என்பதை அறிவேன். உலகத்தரம் வாய்ந்த வீரரான அம்லா கூட விலை போகவில்லை. 20 ஓவர் போட்டிகளில் சிறந்த பல வீரர்களும் விடுபட்டு உள்ளனர்.
அதனால் என்னை எடுக்காததற்காக ஐ.பி.எல். ஏலம் முறை மீது எனக்கு வருத்தமோ, கவுரவ பிரச்சினையோ இருந்ததில்லை. ‘புஜாரா ஒரு டெஸ்ட் வீரர்’ என்று முத்திரை குத்தி விட்டனர். வாய்ப்பு அளிக்கப்பட்டால் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டிலும் எனது திறமையை நிரூபித்து காட்ட முடியும். உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக (சராசரி 54) விளையாடி உள்ளேன். முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறேன். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்’ என்றார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக வலம் வரும் 32 வயதான புஜாரா, ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ஓரங்கட்டப்படுகிறார். ஐ.பி.எல். ஏலத்தில் விலைபோகாத அவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘ஐ.பி.எல். ஏலம் வியூகங்களும், தந்திரமும் நிறைந்தது என்பதை அறிவேன். உலகத்தரம் வாய்ந்த வீரரான அம்லா கூட விலை போகவில்லை. 20 ஓவர் போட்டிகளில் சிறந்த பல வீரர்களும் விடுபட்டு உள்ளனர்.
அதனால் என்னை எடுக்காததற்காக ஐ.பி.எல். ஏலம் முறை மீது எனக்கு வருத்தமோ, கவுரவ பிரச்சினையோ இருந்ததில்லை. ‘புஜாரா ஒரு டெஸ்ட் வீரர்’ என்று முத்திரை குத்தி விட்டனர். வாய்ப்பு அளிக்கப்பட்டால் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டிலும் எனது திறமையை நிரூபித்து காட்ட முடியும். உள்ளூர் ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக (சராசரி 54) விளையாடி உள்ளேன். முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறேன். மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடினால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன்’ என்றார்.
உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து விலகியிருக்கிறார்.
சிட்னி:
உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா அச்சத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்பதை தவிர்த்தார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் ‘நம்பர் ஒன்’ டென்னிஸ் வீராங்கனை ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) கொரோனா அச்சத்தால் அமெரிக்க ஓபனில் பங்கேற்பதை தவிர்த்தார். இந்த நிலையில் வருகிற 27-ந்தேதி பாரீஸ் நகரில் தொடங்கும் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்தும் கொரோனா பயத்தால் ஆஷ்லி பார்ட்டி விலகியிருக்கிறார். 24 வயதான ஆஷ்லி கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.






