என் மலர்
செய்திகள்

சவுரவ் கங்குலி
ஐபிஎல் தொடர் ஏற்பாடுகளை கவனிக்க துபாய் விரைந்தார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
ஐபிஎல் போட்டிக்கான நாள் நெருங்கும் நிலையில், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி துபாய் விரைந்துள்ளார்.
ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீகரத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜாவில் நடைபெற இருக்கிறது. போட்டியில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர்.
அவர்களின் தனிமைப்படுத்துதல் காலம் முடிவடைந்த நிலையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் போட்டிகளை நடத்துவதற்கான அனுமதி, வீரர்கள் துபாய், அபு தாபி, ஷார்ஜா போன்ற இடங்களுக்கு எளிதில் சென்று வர எமிரேட்ஸ் கிரிக்கெட் போர்டு அனுமதி வாங்கியுள்ளது.
இதனால் போட்டி நடைபெறுவதற்கான அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு விட்டது. இனிமேல்தான் வீரர்கள் பயோ-செக்யூர் என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் செல்ல வேண்டும். அதன்பின் வீரர்கள் வெளியே வர முடியாது.
இந்த பணி முக்கியமானது. ஒருங்கிணைப்பு வேலை மிக மிக முக்கியமானது. இதனால் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அதற்கான பணியை மேற்பார்வையிட துபாய் சென்றுள்ளனார்.
இன்று துபாய் புறப்பட்ட கங்குலி தனது இன்ஸ்டாகிராமில் ‘‘ஐபிஎல் போட்டிக்காக சுமார் ஆறு மாதம் கழித்து துபாய்க்கு என்னுடைய முதல் விமானம். மூர்க்கத்தனமாக வாழ்க்கை மாற்றம்’’ எனத் தெரிவித்துள்ளார்.
Next Story