என் மலர்
விளையாட்டு
2016-ம் ஆண்டு இருந்ததுபோன்ற அணி தற்போது உள்ளது என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் திறமை வாய்ந்த அணிகளில் ஒன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி.) ஆகும். ஆனால் அந்த அணி இதுவரை ஐ.பி.எல். கோப்பையை வென்றதில்லை. விராட் கோலி, டி வில்லியர்ஸ் மற்றும் ஏற்கனவே ஆடிய அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் இருந்தும் சாம்பியன் பட்டம் பெற முடியாமல் போனது பரிதாபமே.
இந்தநிலையில் 13-வது ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலம் வாய்ந்தது என்றும், 2016-ம் ஆண்டு ஆடிய அணிபோல தற்போது உள்ளது என்றும் அந்த அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்த ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளது. 2016-ம் ஆண்டு நாங்கள் சிறப்பாக விளையாடினோம். நினைவில் நிற்கும் சீசனாக அது அமைந்தது. அப்போது இருந்த அணிபோல் தற்போதைய அணி இருக்கிறது. நான் மிகவும் ஆவலுடன் இந்த போட்டியை எதிர்நோக்கி இருக்கிறேன்.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
ஆர்.சி.பி. அணி ஐ.பி.எல் போட்டியில் 2 முறை 2-வது இடத்தை பிடித்தது. 2009-ம் ஆண்டும், 2016-ம் ஆண்டும் அந்த அணி இறுதி போட்டியில் தோற்று கோப்பையை இழந்தது.
கடைசியாக விளையாடிய 3 ஐ.பி.எல்.லிலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் ஆட்டம் மோசமாக இருந்தது. 2017 மற்றும் 2019-ல் கடைசி இடமான 8-வது இடத்தையும், 2018-ல் 6-வது இடத்தையும் பிடித்து இருந்தது.
தற்போது உள்ள ஆர்.சி.பி. அணியில் கேப்டன் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், மொயீன் அலி, கிறிஸ் மோரிஸ், ஸ்டெய்ன், இஸ்ரு உதானா, சாஹல், ஆடம் ஜம்பா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இருக்கிறார்கள்.
13-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந்தேதிமுதல் நவம்பர் 10-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடக்கிறது.
ஐ.பி.எல். போட்டிக்காக டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஐ.பி.எல் போட்டியின் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேகப்பந்து வீரர் தீபக் சாஹர், ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் 14 நாட்கள் தனிமை முடிந்த பிறகே அணியோடு இணைந்து கொள்ள முடியும். பரிசோதனைக்கு பிறகே அவர்களது நிலை பற்றி தெரியவரும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வெளிநாட்டு வீரர்களில் ஆல்-ரவுண்டர் வாட்சன் (ஆஸ்திரேலியா), பேட்ஸ்மென் டு பிளிஸ்சிஸ், பந்துவீச்சாளர் நிகிடி (தென் ஆப்பிரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்களே தற்போது அணியோடு உள்ளனர்.
பிராவோ (வெஸ்ட் இண்டீஸ்), சான்ட்னெர் (நியூசிலாந்து), இம்ரான் தாஹிர் (தென் ஆப்பிரிக்கா) ஆகியோர் கரீபியன் பிரிமீயர் லீக் (சி.பி.எல்) போட்டி முடிந்த பிறகு 13-ந்தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வருவார்கள்.
சி.எஸ்.கே. அணியில் உள்ள வேகப்பந்து வீரர் ஹசில்வுட் (ஆஸ்திரேலியா), ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் (இங்கிலாந்து) ஆகியோர் முதல் 2 ஆட்டத்தில் விளையாட மாட்டார்கள். இருவரும் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் முடிந்த பிறகே அணியோடு இணைந்து கொள்வார்கள்.
இருவரும் வருகிற 17-ந்தேதி துபாய் வருவார்கள் என்று சி.எஸ்.கே. அணியின் தலைமை செயல் அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் தெரிவித்தார்.
சி.எஸ்.கே. அணியோடு இணையும் வெளிநாட்டு வீரர்கள் 6 நாட்கள் தனிமை படுத்தப்படுவார்கள். அப்போது அவர்களுக்கு 2 முறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை இந்தியன்ஸுடன் தொடக்க ஆட்டத்திலும், 2-வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸுடனும் (21-ந்தேதி) மோதுகிறது. இந்த 2 ஆட்டத்திலும் ஹசில்வுட்டும், சாம் கர்ரன் விளையாட மாட்டார்கள்.
நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
நியூயார்க்:
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது.
23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்றவரும், 3-ம் நிலை வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ஷகாரியை எதிர்கொண்டார்.
இதில் செரீனா முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றினார். 2-வது செட்டில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்ததால் டை பிரேக்கருக்கு சென்றது. இதில் ஷகாரி 8-6 என்ற கணக்கில் வென்றார்.
வெற்றி-தோல்வியை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி செட்டில் செரீனா ஆக்ரோசமாக ஆடினார். இதனால் அவர் 6-3 என்ற கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார். ஸ்கோர்: 6-3, 6-7 (6-8), 6-3.
மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த பிரோன்கோவா 6-4, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் அலிசியா கோர்னெட்டை (பிரான்ஸ்) தோற்கடித்தார்.
2-வது வரிசையில் உள்ள சோபியா கெனின் (அமெரிக்கா) 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 16-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்ஸ் (பெல்ஜியம்) 6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் சோபியாவை வீழ்த்தினார்.
இன்னொரு ஆட்டத்தில் அசரென்கா (பெலாரஸ்) 5-7, 6-1, 6-4 என்ற கணக்கில் கரோலினாவை (செக் குடியரசு) தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான டொமினிக் தீம் (ஆஸ்திரியா) 7-6 (7-4), 6-1, 6- 1 என்ற கணக்கில் பெலிக்சை (கனடா) வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார்.
3-வது வரிசையில் உள்ள மெட்வதேவ் ( ரஷியா ) 6-4, 6-1, 6-0 என்ற கணக்கில் பிரான்செசை (அமெரிக்கா) தோற்கடித்தார்.
இன்னொரு ஆட்டத்தில் 6-வது வரிசையில் உள்ள மெட்டோ பெரானட்டி (இத்தாலி) அதிர்ச்சிகரமாக தோற்றார். 10-வது இடத்தில் உள்ள ஆந்த்ரே ருப்லேவ் (ஜெர்மனி) 4-6, 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.
இதேபோல 21-வது வரிசையில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் மினாவுரும் 4-ம் சுற்றில் வெற்றி பெற்றார்.

இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது
சவுதம்டன்:
கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் முதலாவது ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. அத்துடன் அந்த அணி தரவரிசையில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளி முதலிடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்த நிலையில் இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.
இயான் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் டேவிட் மலான், விக்கெட் கீப்பர் ஜோஸ்பட்லர் ஆகியோர் அசத்தி வருகிறார்கள். முதலாவது ஆட்டத்தில் 44 ரன்னும், 2-வது ஆட்டத்தில் ஆட்டம் இழக்காமல் 77 ரன்களும் குவித்த ஜோஸ்பட்லர் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இன்றைய போட்டியில் இருந்து விலகி இருக்கிறார். இது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக சாம் பில்லிங்ஸ் அணியில் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது.
ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியில் மிடில் ஆர்டர் பேட்டிங் சொதப்பி வருகிறது. இதனால் அந்த அணி சறுக்கலை சந்தித்துள்ளது. அதில் இருந்து மீண்டு வந்து ஆறுதல் வெற்றியை ருசிக்க ஆஸ்திரேலியா தீவிரம் காட்டும். அதேநேரத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றி தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் முழுமுயற்சி மேற்கொள்ளும். எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது. இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் விளையாடிய இந்திய வீரர்கள்தான் ரசிகர்கள் எங்கே? என வியப்படைவார்கள் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2020 சீசன் டி20 லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐபிஎல் போட்டி என்றாலே திருவிழா போன்று இருக்கும். ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவார்கள். வீரர்கள் களத்திற்குள் வரும்போது ரசிகர்களின் சத்தம் அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் இந்த முறை ஒரு கைதட்டல் கூட கிடைக்க பெற முடியாத நிலையில் வீரர்கள் உள்ளனர்.
வெளிநாட்டு வீரர்கள் ரசிகர்கள் குறைவான மைதானங்களிலும், ரசிகர்கள் இல்லாமலும் விளையாடியுள்ளனர். இந்திய வீரர்கள்தான் ரசிகர்களை எங்கே என வியப்படைவார்கள் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில் ‘‘வெளிநாட்டு வீரர்கள் ரசிகர்கள் இல்லாத நிலையில் விளையாட மிகப்பெரிய அளவில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் சிறிய மைதானத்திலும் அல்லது ரசிகர்கள் இல்லாத மைதானத்திலும் விளையாடியுள்ளனர். அந்த அனுபவத்தை தற்போது பயன்படுத்திக் கொள்வார்கள்.
ஆனால் இந்திய வீரர்கள்? என்னால் நினைக்க முடியவில்லை. விராட் கோலியை போன்ற வீரர்கள் 10 வருடத்திற்கு மேல் விளையாடியுள்ளனர். அவர்கள் தடுமாறமாட்டார்கள். ஆனால், ரசிகர்களை எங்கே என வீரர்கள் வியப்படைவார்கள். அவர்கள் எனர்ஜிக்காக அடுத்த வழியை தேடவேண்டும்’’ என்றார்.
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறுகையில் ‘‘முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சற்று தடுமாற்றம் இருக்கும். தொடர் முடிந்த பின்னர், தொடர் நடத்தப்பட்டதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் சில கிரிக்கெட் போட்டிகளை விளையாடி இருப்பீர்கள்.
ஏராளமான வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் பீக்காக இருந்தார்கள். தற்போது அவர்கள் ஆறு மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை. இது மிகப்பெரிய இழப்பு. ஆகவே, இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ஆர்வமாக இருப்பார்கள்’’ என்றார்.
பெண் லைன் அம்பயர் கழுத்தில் பந்து பட்டு காயம் ஏற்படுத்திய சம்பவத்திற்கு ஜோகோவிச் மன்னிப்பு கேட்டுள்ளார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்தித்தார்.
ஆட்டம் தொடங்கியது முதல் ஜோகோவிச் தடுமாற்றத்துடன் ஆடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது. 5-6 என பின்தங்கிய நிலையில் இருந்ததால், ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் பின்னோக்கி வேகமாக அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த பெண் லைன் அம்பயர் கழுத்தில் பட்டு அவர் காயமடைந்தார். இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார்.
ஆனாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் வாய்ப்பு இழந்தார்.
நடந்த சம்பவம் குறித்து ஜோகோவிச் கூறுகையில் ‘‘இந்த மொத்த சூழ்நிலையும் என்னை கவலையாகவும், காலியாவும் வைத்து விட்டது. நான் லைன் அம்பயரை பரிசோதித்தேன். அவர் சிறப்பாக இருப்பதாக உணர்கிறேன் என்று சொன்னதால் கடவுளுக்கு நன்றி.
அவருக்கு இதுபோன்ற மன அழுத்தத்தை கொடுத்ததற்காக மிகவும் வருந்துகிறேன். இது திட்டமிடாதது. இருந்தாலும் தவறு. அவருடைய தனியுரிமைக்கு மரியாதை கொடுக்கும் விதமாக பெயரை நான் வெளியிடவில்லை.
இந்த தகுதி நீக்கத்தில் இருந்து, என்னுடைய ஏமாற்றத்தின் மீது கவனம் செலுத்தி, பாடம் கற்றுக்கொண்டு சிறந்த வீரராகவும், சிறந்த மனிதராகவும் வளர வேண்டியது அவசியம்.
அமெரிக்க ஓபன் தொடர் ஏற்பாட்டாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சூழ்நிலையில் எனக்கு மிப்பெரிய அளவில் ஆதரவாக இருக்கும் என்னுடைய அணிக்கும், குடும்பத்திற்கும், எப்போதும் என்னுடன் இருக்கும் ரசிகர்களுக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன். ’’ என்றார்.
இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஐபிஎல் தொடரின் முதல் பாதி ஆட்டத்தில் விளையாடுவது சந்தேகம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ். உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக திகழ்கிறார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 12.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான தொடரின்போது அவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவசரமாக நியூசிலாந்து சென்றார். நியூசிலாந்தில் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் குடும்பத்தினரை பார்க்க முடியும். இதனால் பென் ஸ்டேக்ஸ் 14 நாட்கள் காத்திருந்து குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
வருகிற 19-ந்தேதி ஐபிஎல் போட்டி தொடங்குகிறது. முதல் போட்டியில் விளையாட வேண்டுமென்றால் ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்து ஆறு நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஏற்கனவே அங்கு 14 நாட்கள் தனிமைப்படுத்தியதால் குடும்பத்துடன் அவர் தங்கியிருக்கும் காலம் மிகக் குறைவாக இருக்கும்.
இதனால் கூடுதல் நாட்கள் நியூசிலாந்தில் தங்கிருப்பார் என்று கூறப்படுகிறது. ஆகவே, ஐபிஎல் தொடக்கத்தில் அவர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தெரிகிறது.
தற்போதைய நிலையில் பென் ஸ்டோன்ஸ் அணியில் இடம்பிடித்தால்தான் முடியும் என்ற நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இல்லை. இதனால் அவர் குடும்பத்துடன் கூடுதல் நாட்களை செலவிட முடியும். பின்னர்தான் பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம் பெறுவது குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி யோசிக்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கேஎல் ராகுல் தலைமையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட இருப்பதை எதிர்பார்த்து இருக்கிறேன் என கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். யுனிவர்ஸ் பாஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ் கெய்ல் ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த சீசனில் கேஎல் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அனில் கும்ப்ளே தலைமை பயிற்சியாளராக உள்ளார். இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘திரும்பவும் வகுப்பறைக்கு வந்துள்ளோம். சில புதிய வீரர்கள் வந்துள்ளனர். அவர்களுடன் இருப்பது சிறப்பான விசயம். அதுபோல் சில புதிய ஆசிரியர்கள் வந்துள்ளனர். நாங்கள் புதிய தலைமை ஆசிரியரை (அனில் கும்ப்ளே) பெற்றுள்ளோம். புதிய கேப்டனாக கேஎல் ராகுல் இருக்கிறார். இருவருடன் சேர்ந்து பணியாற்ற காத்துக் கொண்டிருக்கிறேன்.
தனிமைப்படுத்துதல் முறை வழக்கமானதுதான். எனக்கு அதிக சிறந்த அளவில் ரிலாக்ஸ் கொடுத்தது. சில உடற்பயிற்சிகளை செய்தேன். டிவி பார்த்தேன். தற்போது அணியுடன் பயிற்சிக்கு தயாராகியுள்ளேன்’’என்றார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டன்:
நியூயார்க்,
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்தித்தார்.
ஆட்டம் தொடங்கியது முதல் ஜோகோவிச் தடுமாற்றத்துடன் ஆடினார். இதனால் முதல் செட்டில் புள்ளிகளை இழக்க நேர்ந்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜோகோவிச் பந்தை தரையில் வேகமாக அடித்தார். இதில் அந்த பந்து அங்கிருந்த நடுவரின் மீது பட்டதில் அவர் காயமடைந்தார். இதனால் பதறிபோன ஜோகோவிச் அவரிடம் சென்று மன்னிப்பு கேட்டதுடன் நிலைமையை விளக்கிக் கூறினார்.
ஆனாலும் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து, ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டா காலிறுதிக்கு முன்னேறினார்.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரீனா, ஆஸ்திரியாவின் டொமினிக் திம் ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினர்.
நியூயார்க்:
‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 6-2, 6-2, 3-6, 6-3 என்ற செட் கணக்கில் முன்னாள் சாம்பியன் மரின் சிலிச்சை (குரோஷியா) சாய்த்து 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் கனடாவின் வாசெக் போஸ்பிசில் 11-ம் நிலை வீரர் பாவ்டிஸ்டா அகுட்டுக்கு (ஸ்பெயின்) 7-5, 2-6, 4-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அதிர்ச்சி அளித்தார்.
டேனில் மெட்விடேவ் (ரஷியா), பெரேட்டினி (இத்தாலி), பிரான்சிஸ் டியாபோ (அமெரிக்கா), பெலிக்ஸ் ஆஜெர் அலியாசிம் (கனடா), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), அலெக்ஸ் டி மினார் (ஆஸ்திரேலியா) ஆகியோரும் 3-வது தடையை வெற்றிகரமாக கடந்தனர்.
ஆண்கள் இரட்டையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் கூட்டணி 4-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் கெவின் கிராவிட்ஸ்- ஆன்ட்ரியாஸ் மீஸ் இணையை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. இந்த ஆட்டம் 1 மணி 47 நிமிடங்கள் நீடித்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், 6 முறை சாம்பியனுமான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், சக நாட்டவரான 2017-ம் ஆண்டு சாம்பியன் ஸ்லோன் ஸ்டீபன்சை எதிர்கொண்டார். இதில் முதல் செட்டை பறிகொடுத்த செரீனா பிறகு சுதாரித்து ஆக்ரோஷமாக விளையாடி சரிவில் இருந்து மீண்டார். 12 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது அவருக்கு உதவிகரமாக இருந்தது. முடிவில் செரீனா 2-6, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் ஸ்லோன் ஸ்டீபன்சை தோற்கடித்து 18-வது முறையாக 4-வது சுற்றுக்கு முன்னேறினார். செரீனா அடுத்து கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியை சந்திக்கிறார்.
இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 7-6 (4), 6-4 என்ற நேர் செட்டில் ஆன்ஸ் ஜாபெரை (துனியா) வெளியேற்றி முதல்முறையாக 4-வது சுற்றில் கால் பதித்தார். அஸரென்கா (பெலாரஸ்), கார்னெட் (பிரான்ஸ்), மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கரோலினா முச்சோவா (செக்குடியரசு), பிரோன்கோவா (பல்கேரியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி கண்டனர்.

ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று வெளியிட்டுள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே அணியில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி நடக்குமா? என்ற அச்சம் கூட எழுந்தது. ஆனால் மற்ற நபர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.
இன்று போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘‘கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடு துணை பிசியோதெரபிஸ்ட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் இரண்டு சோதனையின்போது நெட்டிவ் முடிவு வந்தது. 3-வது சோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது’’ என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 158 இலக்கை 4 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி எட்டி தொடரை கைப்பற்றியது.
ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2-வது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. வார்னர் ரன்ஏதும் எடுக்காமலும், அலேக்ஸ் கேரி 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.
கேப்டன் ஆரோன் பிஞ்ச் 33 பந்தில் 40 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்தில் 35 ரன்களும், மேக்ஸ்வெல் 18 பந்தில் 26 ரன்களும் அடித்தனர். பேட் கம்மின்ஸ் 5 பந்தில் 13 ரன்களும், ஆஷ்டோன் அகர் 20 பந்தில் 23 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது.
பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பேர்ஸ்டோவ் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜோஸ் பட்லர் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மலன் 32 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பட்லர் 54 பந்தில் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையி உள்ளது.
3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளைமுறுதினம் (செப்டம்பர் 8-ந்தேதி) நடக்கிறது. அதன்பின் செப்டம்பர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.