search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஸ்காட் ஸ்டைரிஸ்
    X
    ஸ்காட் ஸ்டைரிஸ்

    வெளிநாட்டு வீரர்களை விட இந்திய வீரர்கள்தான் ரசிகர்கள் எங்கே? என வியப்படைவார்கள்- ஸ்காட் ஸ்டைரிஸ்

    மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்திற்கு மத்தியில் விளையாடிய இந்திய வீரர்கள்தான் ரசிகர்கள் எங்கே? என வியப்படைவார்கள் என்று ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் டி20 லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்கள் இல்லாமல் வெறிச்சோடிய மைதானத்தில் நடைபெறுகிறது.

    ஐபிஎல் போட்டி என்றாலே திருவிழா போன்று இருக்கும். ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவார்கள். வீரர்கள் களத்திற்குள் வரும்போது ரசிகர்களின் சத்தம் அவர்களுக்கு உத்வேகத்தை கொடுக்கும். ஆனால் இந்த முறை ஒரு கைதட்டல் கூட கிடைக்க பெற முடியாத நிலையில் வீரர்கள் உள்ளனர்.

    வெளிநாட்டு வீரர்கள் ரசிகர்கள் குறைவான மைதானங்களிலும், ரசிகர்கள் இல்லாமலும் விளையாடியுள்ளனர். இந்திய வீரர்கள்தான் ரசிகர்களை எங்கே என வியப்படைவார்கள் என்று நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான ஸ்காட் ஸ்டைரிஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்காட் ஸ்டைரிஸ் கூறுகையில் ‘‘வெளிநாட்டு வீரர்கள் ரசிகர்கள் இல்லாத நிலையில் விளையாட மிகப்பெரிய அளவில் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என நான் நினைக்கவில்லை. ஏராளமான வெளிநாட்டு வீரர்கள் சிறிய மைதானத்திலும் அல்லது ரசிகர்கள் இல்லாத மைதானத்திலும் விளையாடியுள்ளனர். அந்த அனுபவத்தை தற்போது பயன்படுத்திக் கொள்வார்கள்.

    ஆனால் இந்திய வீரர்கள்? என்னால் நினைக்க முடியவில்லை. விராட் கோலியை போன்ற வீரர்கள் 10 வருடத்திற்கு மேல் விளையாடியுள்ளனர். அவர்கள் தடுமாறமாட்டார்கள். ஆனால், ரசிகர்களை எங்கே என வீரர்கள் வியப்படைவார்கள். அவர்கள் எனர்ஜிக்காக அடுத்த வழியை தேடவேண்டும்’’ என்றார்.

    இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் கூறுகையில் ‘‘முதல் ஒன்றிரண்டு போட்டிகளில் சற்று தடுமாற்றம் இருக்கும். தொடர் முடிந்த பின்னர், தொடர் நடத்தப்பட்டதற்கு நன்றியுள்ளவனாக இருக்கிறீர்கள். ஏனென்றால் நீங்கள் சில கிரிக்கெட் போட்டிகளை விளையாடி இருப்பீர்கள்.

    ஏராளமான வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் பீக்காக இருந்தார்கள். தற்போது அவர்கள் ஆறு மாதங்கள் கிரிக்கெட் விளையாடவில்லை. இது மிகப்பெரிய இழப்பு. ஆகவே, இந்தத் தொடரில் விளையாடுவதற்காக ஆர்வமாக இருப்பார்கள்’’ என்றார்.
    Next Story
    ×