என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஐபிஎல் போட்டி அட்டவணை இன்று வெளியிட்டுள்ள நிலையில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணிகளும் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரே அணியில் பெரும்பாலானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் போட்டி நடக்குமா? என்ற அச்சம் கூட எழுந்தது. ஆனால் மற்ற நபர்கள் ஆரோக்கியத்துடன் இருக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

    இன்று போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ரசிகர்கள் மட்டுமின்றி வீரர்களும் போட்டியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துணை பிசியோதெரபிஸ்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ‘‘கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டடு துணை பிசியோதெரபிஸ்ட் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். முதல் இரண்டு சோதனையின்போது நெட்டிவ் முடிவு வந்தது. 3-வது சோதனையில் பாசிட்டிவ் வந்துள்ளது’’ என்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தெரிவித்துள்ளது.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 158 இலக்கை 4 விக்கெட் மட்டுமே இழந்து இங்கிலாந்து அணி எட்டி தொடரை கைப்பற்றியது.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது போட்டி இன்று நடைபெற்றது. முதலில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. வார்னர் ரன்ஏதும் எடுக்காமலும், அலேக்ஸ் கேரி 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இதனால் 3 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது ஆஸ்திரேலியா.

    கேப்டன் ஆரோன் பிஞ்ச் 33 பந்தில் 40 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 26 பந்தில் 35 ரன்களும், மேக்ஸ்வெல் 18 பந்தில் 26 ரன்களும் அடித்தனர். பேட் கம்மின்ஸ் 5 பந்தில் 13 ரன்களும், ஆஷ்டோன் அகர் 20 பந்தில்  23 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் அடித்தது.

    பின்னர் 158 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள்  பேர்ஸ்டோவ்  9 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஜோஸ் பட்லர் உடன் தாவித் மலன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மலன் 32 பந்தில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    பட்லர் 54 பந்தில் 77 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க இங்கிலாந்து 18.5 ஓவரில் 158 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலையி உள்ளது.

    3-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளைமுறுதினம் (செப்டம்பர் 8-ந்தேதி) நடக்கிறது. அதன்பின் செப்டம்பர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்க இருக்கிறது.
    மீண்டும் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு திரும்ப முடியும் என்ற நம்பிக்கையை விடவில்லை என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை பேட்ஸ்மேன் ஷிகர் தவான். சேவாக் அணியில் இருந்து விலகிய பின்னர் தொடர்ந்து தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வருகிறார். 34 வயதாகும் தவான், இங்கிலாந்துக்கு எதிராக ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டிக்குப்பின் டெஸ்ட் போட்டியில் களம் இறங்கவில்லை. ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாக விளையாடினாலும், டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாடவில்லை.

    தற்போது ரோகித் சர்மா தொடக்க வீரராக களம் இறங்கி வருகிறார். இளம் வீரர்கள் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, ஷுப்மான கில் போன்றோர் உள்ளனர். முரளி விஜயும் உள்ளார். இதனால் ஷிகர் தவானின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

    இந்நிலையில் மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கையை விடவில்லை என்று ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஷிகர் தவான் கூறுகையில் ‘‘நான் இந்திய டெஸ்ட் அணியில் இல்லை. அதற்காக நான் மீண்டும் அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை விட்டுவிட்டேன் என்று அர்த்தமில்லை.

    வாய்ப்பு கிடைத்த போதெல்லாம், ரஞ்சி டிராபியில் கடந்த ஆண்டு செஞ்சூரி அடித்துள்ளேன். அப்புறம் ஒருநாள் அணியில் இடம் பிடித்தேன். வாய்ப்பு கிடைத்தால், ஏன் இல்லை என்று சொல்ல முடியும்.

    என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் டி20 உலக கோப்பை தொடர் நடைபெற இருக்கிறது. அதற்காக சிறப்பாக விளையாடுவது, உடற்தகுதியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தல், தொடர்ச்சியான ரன்கள் குவிப்பது அவசியம். இதை சரியாக செய்தால், தானாகவே அணியில் இடம்பிடிக்க முடியும்’’ என்றார்.
    இங்கிலாந்து அணியின் இளம் வீரரான டாம் பாண்டன் புதிய வெர்சன் அல்லது கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சன் என கே.கே.ஆர். அணியின் தலைமை ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
    இங்கிலாந்து அணியின் இளம் அதிரடி பேட்ஸ்மேன் டாம் பாண்டன். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் டி20 லீக்கில் சிறப்பாக விளையாடியதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள பிரெண்டன் மெக்கல்லம் அவரை ஏலம் எடுக்க விரும்பினார்.

    மெக்கல்லம் விருப்பத்தின்படி அவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. இந்நிலையில் டாம் பாண்டன் கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சன் என்று அந்த அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி தெரிவித்துள்ளார்.

    டாம் பாண்டன் குறித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை ஆலோசகர் டேவிட் ஹசி கூறுகையில் ‘‘டாம் பாண்டனை ஒப்பந்தம் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுவரை வெளிநாட்டு வீரர்கள் அணியில் வந்து இணையவில்லை. டாம் பாண்டன் நேரடி ஆட்டத்தை காண உற்சாகமாக இருக்கிறோம். பிக் பாஷில் அவரது ஆட்டம் தனித்துவமானதாக இருந்தது.

    அனுபவ வீரர்களான தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், சுனில் நரைன், ஆந்த்ரே ரஸல் ஆட்டங்களும் சிறப்பாக இருக்கும். அவர்கள் இளைஞர்களுக்கு உதவி செய்து வழிநடத்தி செல்வார்கள். 21 வயதான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் டாம் பாண்டன் புதிய வெர்சன் அல்லது கெவின் பீட்டர்சனின் சிறந்த வெர்சன்.

    அந்ரே ரஸல் 3-வது வீரராக களம் இறங்கி 60 பந்துகளை சந்தித்தால், அவரால் இரட்டை சதம் அடிக்க முடியும். அவர் அற்புதமான வீரர். அவர் எப்போதும் அணியின் இதய துடிப்பாக உள்ளார்’’என்றார்.
    இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளரான புவனேஷ்வர் குமார், ஐக்கிய அரபு அமீரக சீதோஷ்ண நிலை ஏறக்குறைய இந்தியாவை போன்றதுதான் எனத் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஷ்வர் குமார். புதுப்பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். மேலும், டி20 போட்டியில் நக்குல் பால், ஸ்லோவர் ஒன், யார்க்கர் என பலவிதமான பந்துகளை வீசி அசத்தக்கூடியவர். இதனால் டி20 போட்டிகளில் புவனேஷ்வர் குமார் பந்து வீச்சை எதிர்கொள்ளவது அவ்வளவு சுலபம் அல்ல.

    தற்போது துபாய், ஷார்ஜா, அபு தாபி சீதோஷ்ண நிலை எப்படி இருக்கும் என்பதுதான் பந்து வீச்சாளர்களின் ஒரே கேள்வி.

    இந்நிலையில் ஏறக்குறைய இந்தியாவை போன்ற சீதோஷ்ண நிலைதான் ஐக்கிய அரபு அமீரகத்திலும் என புவனேஷ்வர் குமார் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து புவனேஷ்வர் குமார் கூறுகையில் ‘‘டெக்னிக்கலாக அதிக அளவில் மாற்றம் செய்து கொள்ள வேண்டியதில்லை. இங்குள் சீதோஷ்ண நிலை இந்தியாவை போன்றுதான் உள்ளது. ஒரே விசயம் நாம் இந்தியாவில் 8 மைதாங்களில் விளையாடினோம். இங்கு மூன்று மைதானம். சீதோஷ்ண நிலை ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். தொடரின் 2-வது பாதி நேரத்தில் ஆடுகளம் சற்று ஸ்லோவர் ஆகும்.

    நாங்கள் நீண்ட வருடங்களாக குறைந்த அளவில் ஸ்கோர் அடித்து எதிரணிகளை அதற்குள் கட்டுப்படுத்தியுள்ளோம். இதுதான் எங்கள் அணியில் பலம். இனிமேலும் அதுபோன்று செய்ய இயலும் என்பதை என்னால் கணிக்க இயலாது. ஆனால் அதை செய்ய விரும்பிறோம்’’ என்றார்.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்த இயன் பெல் தொழில்முறை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேனாக திகழ்ந்தவர் இயன் பெல். 38 வயதாகும் இவர் இங்கிலாந்து அணிக்காக 118 டெஸ்ட், 161 ஒருநாள் மற்றும் 8 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    2004-ம் ஆண்டு முதல் 2015 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடிய பெல் டெஸ்ட் போட்டியில் 7,725 ரன்களும், ஒருநாள் போட்டியில் 5,416 ரன்களும் அடித்தார். டெஸ்ட் போட்டியில் 22 சதங்களும் 46 அரைசதங்களும், ஒருநாள் போட்டியில் நான்கு சதங்களும், 35 அரைசதங்களும் அடித்துள்ளார்.

    கடந்த ஐந்து ஆண்டுகளாக இங்கிலாந்து அணியில் இடம் பிடிக்காத இயன் பெல் கவுன்ட்டி போட்டியிலும் மட்டும் விளையாடி வந்தார். இந்நிலையில் 38 வயதாகும் இயன் பெல் நேற்று கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

    2013-ம் ஆண்டு ஆஷஸ் தொடரை இங்கிலாந்து கைப்பற்றியபோது தொடர் நாயகன் விருதை பெற்றார். 2012-ம் ஆண்டு இங்கிலாந்து அணி இந்திய மண்ணில் தொடரை வெல்லும்போது அணியில் ஒரு நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரைன் பந்து வீச்சை பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ள கஷ்டப்படுவார்கள் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. ஒவ்வொரு அணிகளும் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வெல்ல ஆர்வமாக உள்ளனர்.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். தற்போது அவர் தனது பந்து வீச்சில் மாற்றம் செய்துள்ளார். கரீபியன் பிரிமீயர் லீக்கில் சிறப்பாக விளையாடி வருகிறார்.

    அதேபோல் ஐபிஎல் லீக்கில் சுனில் நரைன் பந்து வீச்சை எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்று கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘என்னை பொறுத்த வரைக்கும் முக்கியமான விசயம் என்னவென்றால், சுனில் நரைன் பந்தை மறைத்து வைத்து பந்து வீசும்போது, அது பேட்ஸ்மேன்களுக்கு கூடுதலாக கஷ்டத்தைத கொடுக்கும்.

    அப்படி வீசும் பந்து உள்ளே வருகிறதா? அல்லது வெளியே செல்கிறதா? என்பதை பேட்ஸ்மேன்களால் கணிப்பது மிகவும் கடினமாக இருக்கும். மிகவும் தாமதமாகத்தான் அவரது கையில் பந்தை ரிலீஸ் ஆவதை பார்க்க முடியும். அதனால் பேட்ஸ்மேன்கள் கஷ்டப்படுவார்கள்.

    ஆடுகளதில் பந்து சற்று அதிகமாக க்ரீப் ஆனால், அவருக்கு மிகவும் பயனுள்ளதாக அதை மாற்றிவிடுவார். பந்தில் சற்று வேகத்தை கூட்டுவது சுனில் நரைன், ரஷித் கான் ஆகியோருக்கு சாதகமாக இருக்கும்’’ என்றார்.

    சுனில் நரைன் 2012-ல் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 110 போட்டிகளில் 122 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்தப்படுவதால், இளம் வீரர்களுக்கு நெருக்கடி சற்று குறைவாக இருக்கும் என ஆர்சிபி பயிற்சியாளர் சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.
    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 13-வது சீசன் நடைபெற இருக்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஐபிஎல் போட்டி எப்போதும் மைதானம் நிரம்பிய ரசிகர்களின் ஆரவாரத்துடன் நடைபெறும். இந்த முறை அது மிஸ்சிங்.

    ரசிகர்கள் இல்லாதது இளம் வீரர்களுக்கான நெருக்கடியை சற்று குறைக்கும் என்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைமை பயிற்சியாளர் சைமன் காடிச் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சைமன் காடிச் கூறுகையில் ‘‘என்னுடைய தனிப்பட்ட முறையில், சில இளம் வீரர்கள் இந்த சூழ்நிலையில் மகிழ்ச்சியாக விளையாடுவார்கள். மைதானத்தில் ரசிகர்கள் இல்லாதது சத்தம் மற்றும் கவனச் சிதறல்கள் போன்றவற்றில் அவர்களுக்கான நெருக்கடியை சற்று குறைப்பதாக இருக்கும் என நினைக்கிறேன்.

    சில அனுபவ வீரர்களுக்கு இது அதிக சவால்களை ஏற்படுத்தும். அவர்கள் ரசிகர்கள் ஆரவாரத்தை மிகப்பெரிய பலமாக கருதுவார்கள். எங்களுடைய அணி அதிகமாக உத்வேகத்துடன் சென்று, சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள்’’ என்றார்.
    எம்.எஸ். டோனியை போன்று சிறந்த பினிஷராக மார்கஸ் டாஸ்னிஸை உருவாக்க ஆஸ்திரேலியாக கிரிக்கெட் விரும்புகிறது.
    இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டி20 போட்டி சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. 163 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. டேவிட் வார்னர் 58 ரன்களும், பிஞ்ச் 46 ரன்கள் அடித்தாலும் ஆஸ்திரேலியா 2 ரன்னில் தோல்வியடைந்தது. மார்கஸ் ஸ்டாய்னிஸ் 18 பந்தில் 23 ரன்கள் அடித்தாலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. 9 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

    இந்நிலையில் எம்.எஸ். டோனியை போன்று மிடில் ஆர்டர் வரிசையில் ஒரு வீரரரை உருவாக்க விரும்புகிறோம். அது ஒரேநாள் இரவில் நடந்து விடாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

    அந்த அணி வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸை பினிஷராக உருவாக்க விரும்புகிறது ஆஸ்திரேலியா. முதல் போட்டியில் அவர் அந்த பணியை சிறப்பாக செய்யாவிடிலும், அடுத்த இரண்டு வருடங்கள் அடுத்தடுத்து உலக கோப்பை தொடர் வர இருப்பதால் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டன் பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘எந்தவொரு கிரிக்கெட் போட்டியிலும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் பணியை செய்வது மிகவும் கடினம் என சொல்லக்கூடும். அதற்கான வழியை கண்டுபிடித்து, அந்த நபருடன் நாங்கள் செல்ல வேண்டும்.

    எம்.எஸ். டோனிய போன்ற ஒருவர் இருக்க வேண்டும். எம்.எஸ். டோனி உலகின் சிறந்த வீரர். ஏனென்றால், அவர் 300-க்கு மேலான ஒருநாள் போட்டியில் விளையாடியுள்ளார். எங்களுடைய வார பயிற்சி போட்டியை பார்த்தீர்கள் என்றால், நாங்கள் அதுபோன்ற ஏராளமான வீரர்களை பெற்றுள்ளோம்.

    ஆனால் ஒரேநாள் இரவில் நடந்து விடாது என்பது எங்களுக்குத் தெரியும். தேர்வாளர்கள், ஆரோன் பிஞ்ச் இதுகுறித்து பேசவேண்டும். அவர்களின் பணியை கண்டுபிடித்து, அந்த இடத்தில் விளையாட அதிகமான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் சரியான அணியை, சரியான வீரர்களை பெற்றுள்ளோம். இதன்மூலம் அவர்களுக்கு ஏராளமான போட்டிகள் கிடைக்கும்’’ என்றார்.

    பிக் பாஷ் லீக்கில் அதிக ரன்கள் குவித்த ஸ்டாய்னிஸ் ஆரோன் பிஞ்ச், வார்னர், ஸ்டீவ் ஸ்மத், மேக்ஸ்வெல் ஆகியோருக்க பின்னர் விளையாட வேண்டியுள்ளது.

    பந்தை பவராக அடிக்கும் திறமை பெற்ற ஸ்டாய்னிஸ், தொடக்கதில் இருந்தே அதிரடிய ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் சற்று திணறுகிறார். இது அவருக்கு சற்று பின்னடைவாக உள்ளது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது.

    முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ந்தேதி வரை லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் 14 போட்டிகளின் விவரம் வருமாறு:-

    1. செப்டம்பர் 19-ந்தேதி சனிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை - அபு தாபி (இரவு 7.30 மணி)

    2.  செப்டம்பர் 22-ந்தேதி - செவ்வாய்க்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் - ஷார்ஜா (இரவு 7.30 மணி)

    3.  செப்டம்பர் 25-ந்தேதி - வெள்ளிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் - துபாய் (இரவு 7.30 மணி)

    4. அக்டோபர் 2-ந்தேதி - வெள்ளிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் -  சன்ரைசர்ஸ் ஐதராபாத் - துபாய் (இரவு 7.30 மணி)

    5. அக்டோபர் 4-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - துபாய் (இரவு 7.30 மணி)

    6. அக்டோபர் 7-ந்தேதி - புதன்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அபு தாபி (இரவு 7.30 மணி)

    7. அக்டோபர் 10-ந்தேதி சனிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - துபாய் (இரவு 7.30 மணி)

    8. அக்டோபர் 13-ந்தேதி - செவ்வாய்க்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் - துபாய் (இரவு 7.30 மணி)

    9. அக்டோபர் 17-ந்தேதி - சனிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஷார்ஜா (இரவு 7.30 மணி)

    10. அக்டோபர்  19-ந்தேதி - திங்கட்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - அபு தாபி (இரவு 7.30 மணி)

    11. அக்டோபர் 23-ந்தேதி - வெள்ளிக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் - ஷார்ஜா (இரவு 7.30 மணி)

    12. அக்டோபர் 25-ந்தேதி - ஞாயிற்றுக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (மதியம் 3.30 மணி)

    13. அக்டோபர் 29-ந்தேதி - வியாழக்கிழமை - சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - துபாய் (இரவு 7.30 மணி)

    14. நவம்பர் 1-ந்தேதி - ஞாயிற்றுக்கிழம - சென்னை சூப்பர் கிங்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் - அபு தாபி (மதியம் 3.30 மணி)
    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை மும்பைய எதிர்கொள்கிறது.
    ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது.

    முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    செப்டம்பர் 22-ந்தேதி சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    10 நாட்களில் இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. முதல் போட்டி 3.30 மணிக்கும், 2-வது போட்டி 7.30 மணிக்கும் நடபெறுகிறது.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அடுத்த கேப்டனை உருவாக்குவது பற்றி எம்எஸ் டோனி சிந்தித்து வருகிறார் என வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் டோனி உள்ளார். சென்னை அணியில் பெரும்பாலான வீரர்கள் 33 வயதை தாண்டியவர்களாக உள்ளனர். எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

    ஐபிஎல் டி20 லீக்கில் மட்டுமே விளயாடுவார். இன்னும் இரண்டு வருடங்கள் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. அதன்பின் வேண்டுமென்றால் கூடுதல் ஒருவருடம் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் அவருக்குப்பின் அணியை வழிநடத்திச் செல்ல அடுத்த கேப்டனை தயார்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

    அதுகுறித்துதான் எம்எஸ் டோனி சிந்தித்து வருகிறார் என்று சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்  வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘இதுகுறித்து சிந்தனை அவரது மனதில் ஓடுவதை நான் அறிவேன். ஒரு குறிப்பிட்ட நேரம் வரும்போது நாம் அனைவரும் ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டும். அவரது பதவி ரெய்னா அல்லது ஒரு இளைஞரிடம் ஒப்படைக்க வேண்டும். அது எப்போது என்பது முக்கியம்.

    இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் என்பதால் எம்எஸ் டோனி லட்சக்கணக்கான ரசிகர்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால், அணியை வழிநடத்திச் செல்வதில் அவர் மாறுபடுவார் என்று நான் நினைக்கவில்லை. பழைய மாதிரியே செயல்படுவார்.

    நாங்கள் சிறந்த திறமை கொண்ட, அனுபவம் வாய்ந்த அணியை பெற்றுள்ளோம். உரிமையாளர், நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு நெருக்கடியும் கிடையாது. டோனியில் கீழ் விளையாடும்போது நெருக்கடியை உணர்ந்தது கிடையாது’’ என்றார்.
    ×