என் மலர்
செய்திகள்

வெயின் பிராவோ, எம்எஸ் டோனி
அடுத்த கேப்டனை உருவாக்குவது பற்றி எம்எஸ் டோனி சிந்தித்து வருகிறார்: வெயின் பிராவோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான அடுத்த கேப்டனை உருவாக்குவது பற்றி எம்எஸ் டோனி சிந்தித்து வருகிறார் என வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக எம்எஸ் டோனி உள்ளார். சென்னை அணியில் பெரும்பாலான வீரர்கள் 33 வயதை தாண்டியவர்களாக உள்ளனர். எம்எஸ் டோனி சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.
ஐபிஎல் டி20 லீக்கில் மட்டுமே விளயாடுவார். இன்னும் இரண்டு வருடங்கள் சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருப்பார் என அணி நிர்வாகம் தெரிவித்துவிட்டது. அதன்பின் வேண்டுமென்றால் கூடுதல் ஒருவருடம் விளையாட வாய்ப்புள்ளது. இதனால் அவருக்குப்பின் அணியை வழிநடத்திச் செல்ல அடுத்த கேப்டனை தயார்படுத்த வேண்டிய நிலை உள்ளது.
அதுகுறித்துதான் எம்எஸ் டோனி சிந்தித்து வருகிறார் என்று சென்னை அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் வெயின் பிராவோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெயின் பிராவோ கூறுகையில் ‘‘இதுகுறித்து சிந்தனை அவரது மனதில் ஓடுவதை நான் அறிவேன். ஒரு குறிப்பிட்ட நேரம் வரும்போது நாம் அனைவரும் ஒதுங்கிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டும். அவரது பதவி ரெய்னா அல்லது ஒரு இளைஞரிடம் ஒப்படைக்க வேண்டும். அது எப்போது என்பது முக்கியம்.
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் என்பதால் எம்எஸ் டோனி லட்சக்கணக்கான ரசிகர்கள் பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால், அணியை வழிநடத்திச் செல்வதில் அவர் மாறுபடுவார் என்று நான் நினைக்கவில்லை. பழைய மாதிரியே செயல்படுவார்.
நாங்கள் சிறந்த திறமை கொண்ட, அனுபவம் வாய்ந்த அணியை பெற்றுள்ளோம். உரிமையாளர், நிர்வாகத்திடம் இருந்து எங்களுக்கு எந்தவொரு நெருக்கடியும் கிடையாது. டோனியில் கீழ் விளையாடும்போது நெருக்கடியை உணர்ந்தது கிடையாது’’ என்றார்.
Next Story






