என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரோகித் சர்மா, எம்எஸ் டோனி
    X
    ரோகித் சர்மா, எம்எஸ் டோனி

    ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் மும்பை - சென்னை பலப்பரீட்சை

    ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை மும்பைய எதிர்கொள்கிறது.
    ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று மாலை வெளியிடப்பட்டது.

    முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2-வது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் - கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், 3-வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    செப்டம்பர் 22-ந்தேதி சென்னை - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    10 நாட்களில் இரண்டு போட்டிகளில் நடைபெறுகின்றன. முதல் போட்டி 3.30 மணிக்கும், 2-வது போட்டி 7.30 மணிக்கும் நடபெறுகிறது.
    Next Story
    ×