என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கவுன்ட்டி கிரிக்கெட் போட்டியின்போது பந்து மீது சானிடைசர் தடவிய சசக்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
    கிரிக்கெட் போட்டியின்போது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பந்தை ஷைனிங் செய்வதற்காக எச்சில் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பந்து ஷைனிங் தன்மையை உடனேயே இழந்து விடுவதால் பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

    கடந்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறும் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் - மிடில்செக்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.

    அப்போது சசக்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியாவின் மிட்ச் கிளேடன் பந்தில் சானிடைசரை தடவியதாக தெரிகிறது. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு விசாரணை நடத்தி வரும் நிலையில் சசக்ஸ் அணி அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது. அந்த போட்டியில் மிட்ச் கிளேடன் மூன்று விக்கெட் வீழ்த்தினார்.
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் 23 முதல் 25 பேர் இடம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஐபிஎல் 13-வது சீசன் வருகிற 19-ந்தேதி தொடங்கி நவம்பர் 10-ந்தேதி முடிவடைகிறது. அதன்பின் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

    கொரோனா காலம் என்பதால் ஆஸ்திரேலியாவில் வீர்ரகள் தனிமைப்படுத்திக் கொள்வது அவசியம். இதனால் முன்னதாகவே செல்ல வேண்டும்.

    இதனால் ஐபிஎல் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு இடம் பெறாத அணிகளில் இடம்பிடித்திருக்கும் வீரர்கள், ஐபிஎல் தொடரில் இடம்பெறாத ரவி சாஸ்திரி போன்றோர் அக்டோபர் இறுதி வாரத்தில் ஆஸ்திரேலியா செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்பின் ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர் மற்ற வீரர்கள் அவர்களுடன் இணைந்து கொள்வார்கள்.

    மேலும், ஆஸ்திரேலியா தொடருக்கான டெஸ்ட் அணி அக்டோபர் 2-வது வாரத்தில் அறிவிக்கப்படலாம் எனவும், அணியில் 23 முதல் 25 பேர் இடம் பெறலாம் எனவும் தெரிகிறது.

    ஒருவேளை கொரோனா தொற்றால் வீரர்கள் பாதிக்கப்பட்டால் மாற்று வீரர்களுக்கான இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் அணியில் 20-க்கும் மேற்பட்டோர் இடம்பிடித்திருந்ததால் இந்த விசயத்தில் பிரச்சினை ஏற்பட வாய்ப்பில்லை.

    மேலும், நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்திற்கு 25 பேர் சென்றால் சிறப்பாக இருக்கும் எனவும், வலைப்பயிற்சிக்கான வீரர்களை தேட வேண்டாம் எனவும் பிசிசிஐ விரும்புகிறது.
    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து வெளியே வேண்டும் என்று ஒருபோதும் நினைத்தது இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணி கேப்டன் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் போட்டியில் அவர் அறிமுகமான காலத்தில் இருந்தே ஆர்.சி.பி. அணிக்காகத்தான் விளையாடி வருகிறார்.

    இவரது கேப்டன் பதவியல் கடந்த மூன்று வருடங்களில் 8-வது, 6-வது மற்றும் 8-வது இடத்தை பிடித்தது. 2016-ல் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இந்நிலையில் ஆர்சிபி அணியை விட்டு வெளியேறும் எண்ணம் வந்ததே இல்லை என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘நான் ஆர்சிபி அணிக்காக 12 வருடங்கள் விளையாடிள்ளேன். இது மிகவும் சிறப்பான பயணம். நம்பமுடியாதது. ஆர்சிபி அணிக்காக சாம்பியன் கோப்பையை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஏராளமான மக்கள் விரும்புகின்றனர். மூன்று முறை சாம்பியன் பட்டத்தை மகவும் நெருங்கி வந்துள்ளோம். ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் போய்விட்டது.

    நாங்கள் எப்போதும் இணைந்து அதே நோக்கத்துடன்தான் சென்று கொண்டிருக்கிறோம். நான் எந்தவொரு சூழ்நிலையிலும் அணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்தது கிடையாது. அதற்கு அணி என் மீது வைத்துள்ள அன்பும், அக்கறையும்தான்.

    ஒரு சீசனில் சிறப்பாக விளையாடினாலும், விளையாடாவிட்டாலும் நீங்கள் அதுகுறித்து உணர்ச்சிவசப் படலாம். ஆனால், விசுவாசம் ஆர்சிபி அணியோடு இருக்கும். ஆர்சிபி மிகவும் விசித்திரமானது.  ஐபிஎல் போட்டியில் விளையாடும் இந்த நேரம் வரை, அணியை விட்டு ஒருபோதும் வெளியேறமாட்டேன்’’ என்றார்.
    பார்சிலோனா அணியில் நான் மகிழ்ச்சியாக இல்லை, ஒருபோதும் கோர்ட்டுக்கு செல்ல மாட்டேன் என்று லியோனல் மெஸ்சி கூறியுள்ளார்.

    மாட்ரிட்:

    உலகின் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவர் லியோனல் மெஸ்சி. அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இவர் 6 முறை உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருதை பெற்றுள்ளார்.

    ஸ்பெயின் நாட்டில் உள்ள பிரபல கால்பந்து கிளப்பான பார்சிலோனா அணிக்காக மெஸ்சி விளையாடி வருகிறார். 2000-ம் ஆண்டு தனது 13-வது வயதில் அவர் அந்த கிளப்பில் இளம் வீரராக கால் பதித்தார். அவரது ஒப்பந்த காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கிறது.

    இதற்கிடையே கருத்து வேறுபாடு காரணமாக பார்சிலோனா கிளப்பில் இருந்து வெளியேற அவர் முடிவு செய்தார். இலவச பரிமாற்றம் அடிப்படையில் தன்னை விடுவிக்கும்படி அவர் பார்சிலோனா கிளப் நிர்வாகத்திற்கு கடிதம் அனுப்பினார்.

    ஆனால் தற்போது அது சாத்தியமில்லாமல் இருக்கிறது. ரூ.6 ஆயிரம் கோடி கட்டணமாக செலுத்தினால் மட்டுமே மெஸ்சியை விடுவிக்க முடியும் என்று அந்த கிளப் நிர்வாகம் அறிவித்து விட்டது.

    அவரது தந்தை பார்சிலோனா கிளப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து மெஸ்சி மேலும் ஒரு சீசனில் (2020-2021) அந்த கிளப்புக்காக விளையாடுகிறார். ஆனாலும் அவர் பயிற்சியில் பங்கேற்கவில்லை.

    இந்த நிலையில் பார்சிலோனா அணியில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று மெஸ்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பார்சிலோனா அணியில் நான் மகிழ்ச்சியாக இல்லை. இதனால்தான் அந்த கிளப்பிலிருந்து விலக விரும்பினேன். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே அணித் தலைவர் ஜோசப் மரியாவுடன் இதை தெரிவித்தேன். விருப்பம் இருந்தால் இருக்கலாம். இல்லையென்றால் போகலாம் என்றார்.

    ஆனால் தற்போது அவர் வேறு மாதிரி பேசுகிறார். நானும் வேறு வழியில்லாமல் சட்ட சிக்கல்களை தவிர்க்க பார்சிலோனா அணியில் நீடிக்கிறேன்.

    பார்சிலோனா கிளப்புக்கு எதிராக ஒருபோதும் கோர்ட்டுக்கு செல்ல மாட்டேன். ஏனென்றால் இந்த அணியை நான் நேசிக்கிறேன். இங்குதான் என் வாழ்க்கை உருவானது. எனக்கு தேவையான அனைத்தையும் இங்குதான் பெற்றேன்.

    இவ்வாறு மெஸ்சி கூறியுள்ளார்.

    33 வயதான மெஸ்சி பார்சிலோனா அணிக்காக 731 போட்டிகளில் 634 கோல்களை அடித்துள்ளார். அந்த அணி 10 லாலிகா பட்டம், 4 சாம்பியன்ஸ் லீக் உள்பட 34 கோப்பைகளை வென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3-வது வீரராக டோனி விளையாட வேண்டும் என்று சுரேஷ் ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 19-ந் தேதி முதல் நவம்பர் 10-ந் தேதி வரை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜாவில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான ஐ.பி.எல். அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று அதன் தலைவர் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    ஐ.பி.எல். போட்டியில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா விலகினார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் துபாயில் இருந்து நாடு திரும்பினார்.

    அவருக்கும் கேப்டன் டோனிக்கும் மோதல் இருந்ததாகவும், மேலும் சி.எஸ்.கே. நிர்வாகத்துடன் கருத்து மோதல் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் விலகியதாக தகவல் வெளியானது.

    இதை ரெய்னா மறுத்திருந்தார். தனது சொந்த காரணத்துக்காகவே போட்டியில் இருந்து விலகியதாக தெரிவித்தார்.

    ரெய்னா ஆடாததால் சி.எஸ்.கே.அணியில் அவரது இடமான 3-வது வரிசையில் யார் களம் இறங்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. கேப்டன் டோனி இந்த வரிசைக்கு பொறுத்தமானவர் என்று முன்னாள் வீரர் காம்பீர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஐ.பி.எல். போட்டியில் டோனி 3-வது வீரராக களம் இறங்க வேண்டும் என்று ரெய்னா விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    3-வது வரிசையில் அசாத்திய திறமை படைத்த பேட்ஸ்மேன்களால் மட்டுமே விளையாட முடியும். அந்த வரிசை அணிக்கு அஸ்திவாரம் போன்றது. இதனால் டோனி 3-வது பேட்ஸ்மேனாக ஆடவேண்டும்.

    சர்வதேச போட்டிகளில் 3-வது வீரராக ஆடிய அனுபவம் டோனிக்கு இருக்கிறது. 2005-ல் பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக டோனி அபாரமாக ஆடிய ஆட்டத்தை மறக்க முடியுமா?

    இவ்வாறு ரெய்னா கூறியுள்ளார்.

    இதற்கிடையே ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருசில ஆட்டங்களில் மட்டுமே அவர் ஆடாமல் இருப்பார். போட்டியின் இடையே அவர் சி.எஸ்.கே. அணியுடன் இணைந்து கொள்வார் என்று அந்த தகவல் தெரிவிக்கிறது.

    கரீபியன் பிரிமீயர் லீக்கில் செயிண்ட் லூசியா அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டிரிபாகோ நைட் ரைடர்ஸ் அணி.
    கரீபியன் பிரிமீயர் லீக்கில் செயின்ட் லூசியா சாக்ஸ் - டிரிபாகோ நைட்ரைடர்ஸ் மோதிய போட்டி டிரினிடாடில் நடந்தது. 

    டாஸ் வென்ற செயிண்ட் லூசியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    டிரிபாகோ அணியில் வெப்ஸ்டர் 20 ரன்னும், செல்பர்ட் 33 ரன்னும் எடுத்தனர். பிராவோ அரை சதமடித்தார். பொலார்ட் அதிரடியாக ஆடி 21 பந்தில் 42 ரன் எடுத்தார். இதனால் டிரிபாகோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா அணி களமிறங்கியது.

    அந்த அணியில் மார்க் டெயல் 40, பிளெட்சர் 42 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து ஆடவில்லை.

    இதனால் செயிண்ட் லூசியா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் டிரிபாகோ அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பொலார்டு தேர்வு செய்யப்பட்டார். டிரிபாகோ அணி தொடர்ச்சியாக பெறும் 9வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜேசன் ஹோல்டர் அபாரம்:  டிரினிடாடில் நடந்த மற்றொரு போட்டியில் ஜமைக்கா தலைவாஸ் மற்றும் பார்படாஸ் டிரைட்ண்ட் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய ஜமைக்கா தலைவாஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. பிளாக்வுட் 74 ரன்னும், ரசல் 54 ரன்னும் எடுத்தனர். 

    அடுத்து ஆடிய பார்படாஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக ஆடி 69 ரன் எடுத்தார்.  கார்டர் 42 ரன்னும் , சாண்ட்னர்35 ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர். 
    ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்காளதேச வீரர் முஸ்தாபிஜூருக்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது.
    டாக்கா:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஹாரி கர்னி (இங்கிலாந்து) காயம் காரணமாக விலகினார். இதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து இலங்கையை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா சொந்த விஷயம் காரணமாக ஒதுங்கினார்.

    இதனை அடுத்து இந்த இரு அணிகளும் வங்காளதேச அணியின் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமானை தங்கள் அணிக்காக விளையாட விருப்பம் தெரிவித்து அணுகி இருந்தன. ஆனால் அதற்கு வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதி அளிக்க மறுத்து விட்டது. இது குறித்து வங்காளதேச கிரிக்கெட் வாரிய இயக்குனர் அக்ரம்கான் கருத்து தெரிவிக்கையில், ‘ஐ.பி.எல். போட்டியில் விளையாட முஸ்தாபிஜூர் ரகுமானுக்கு அழைப்பு வந்து இருந்தது.

    வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எங்கள் அணி இலங்கை சென்று விளையாட இருக்கிறது. அவர் எங்களுக்கு முக்கியமான வீரர் என்பதால் ஐ.பி.எல். போட்டியில் விளையாட தடையில்லா சான்றிதழ் வழங்கவில்லை’ என்றார். 24 வயதான முஸ்தாபிஜூர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் கடைசியாக 2018-ம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார்.
    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், கிவிடோவா ஆகியோர் 4-வது சுற்றுக்கு முன்னேறினார்கள்.
    நியூயார்க்:

    ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 29-வது இடத்தில் உள்ள ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜோகோவிச் 6-3, 6-3, 6-1 என்ற நேர்செட்டில் ஜான் லினர்ட் ஸ்ரப்பை ஊதித்தள்ளி 4-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற அவருக்கு 1 மணி 43 நிமிடமே தேவைப்பட்டது.

    இந்த ஆண்டில் தோல்வியையே தொடாமல் தொடர்ச்சியாக 26-வது வெற்றியை பெற்ற ஜோகோவிச் கடின தரை போட்டியில் பதிவு செய்த 600-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்று ஆட்டத்தில் ஜோகோவிச், தரவரிசையில் 27-வது இடத்தில் இருக்கும் ஸ்பெயின் வீரர் பாப்லோ காரெனோ பஸ்டாவை சந்திக்கிறார்.

    பெட்ரா கிவிடோவா பந்தை ஆக்ரோஷமாக விளாசுகிறார்.


    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் முதல் செட்டை இழந்தாலும் சரிவில் இருந்து மீண்டு வந்து 6-7 (4-7), 6-4, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் பிரான்சின் அட்ரியன் மன்னரினோவை தோற்கடித்தும், தரவரிசையில் 32-வது இடத்தில் இருக்கும் குரோஷிய வீரர் போர்னா கோரிச் 6-7 (2-7), 6-4, 4-6, 7-5, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் 6-வது இடத்தில் உள்ள சிட்சிபாசை (கிரீஸ்) போராடி வீழ்த்தியும் 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர். போர்னா கோரிச் 4 மணி 36 நிமிட இழுபறிக்கு பிறகு வெற்றியை தனதாக்கினார்.

    மற்ற ஆட்டங்களில் டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), டேவினோவிச் போகினா (ஸ்பெயின்), டேவிட் கோபின் (பெல்ஜியம்), ஜோர்டான் தாம்சன் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தங்கள் தடையை வெற்றிகரமாக கடந்தனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) இணை வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது.

    பெண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா 6-3, 6-7 (4-7), 6-2 என்ற செட் கணக்கில் உக்ரைனின் மார்டா கோஸ்ட்யுக்கை விரட்டியடித்து 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்றொரு ஆட்டத்தில் 2 முறை விம்பிள்டன் சாம்பியனான பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு) 6-4, 6-3 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை தோற்கடித்தார். இன்னொரு ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் அன் லியை வீழ்த்தினார்.

    பெட்ரா மார்டிச் (குரோஷியா), புதின்சேவா (கஜகஸ்தான்), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), செல்பி ரோஜர்ஸ் (அமெரிக்கா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா) ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் வெற்றியை ருசித்து 4-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
    ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ளும் இந்திய அணியில் 25 வீரர்கள் இடம் பெற கூடும் என கூறப்படுகிறது.
    புதுடெல்லி:

    ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்ட பின் இந்திய கிரிக்கெட் வீரர்கள் அடங்கிய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் விளையாட உள்ளது.

    கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் சூழலில், சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்து கொள்ள 23 முதல் 25 வீரர்கள் அடங்கிய இந்திய கிரிக்கெட் அணியை பி.சி.சி.ஐ. அனுப்பி வைக்க கூடும் என கூறப்படுகிறது.

    இதற்காக தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தலைமையில், ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடாத வீரர்கள் அக்டோபர் மாத இறுதியில் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் நேரடியாக ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டு செல்ல கூடும்.  மற்ற வீரர்கள் ஐ.பி.எல். போட்டிகளை முடித்து கொண்டு அணியில் இணைந்து கொள்வார்கள் என கூறப்படுகிறது.
    ஐபிஎல் டி20 தொடருக்கான போட்டி அட்டவணை நாளை வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் தெரிவித்துள்ளார்.
    இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டி20 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. வழக்கமாக போட்டி தொடங்குவதற்கு மிகவும் முன்னதாகவே அட்டவணை வெளியிடப்படும்.

    ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் போட்டி நடைபெற இருப்பதால் கொரோன வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் நிலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீரர்கள் தங்குதடையின்றி சென்று வர ஒப்புதல் வாங்க வேண்டியிருந்தது.

    சில தினங்களுக்கு முன்புதான் அதற்கான அனுமதி கிடைத்தது. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் சிலருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான போட்டியை எப்போது வைத்துக் கொள்வது என்ற நெருக்கடியும் ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில், இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான போட்டி கால அட்டவணை நாளை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிடப்படும் என ஐபிஎல் சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் தெரிவித்துள்ளார்.

    ஐபிஎல் விதிமுறைப்படி நடப்பு சாம்பியனும், 2-ம் இடம் பிடித்த அணியும் வரும் 19-ம் தேதி நடைபெற உள்ள முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும். 
    அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்ள வேண்டும். ஆனால், கொரோனா போன்ற காரணங்களால் முதல் ஆட்டத்தில் மாற்றம் ஏற்படலாம் என கருத்துக்கள் நிலவி வருகிறது. 

    இதற்கிடையில், ஐபிஎல் போட்டி அட்டவணை தொடர்பாக பல நாட்களாக நிலவி வந்த குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

    சவுதாம்ப்டனில் நடைபெற்ற முதல் டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 2 ரன்னில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது இங்கிலாந்து.
    சவுதாம்ப்டன்:

    கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது.

    அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது.

    அதன்படி, இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதாம்ப்டனில் நடைபெற்றது. 
    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் ஓரளவு பொறுப்புடன் ஆடி 44 ரன்கள் எடுத்தார். டேவிட் மலன் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் இறுதி வரை போராடி 43 பந்தில் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்ற ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இதனால் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது.

    ஆஸ்திரேலியா சார்பில் அகர், ரிச்சர்ட்சன், மேஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக டேவிட் வார்னர், ஆரோன் பின்ச் களமிறங்கினர். முதலில் இருந்தே இருவரும் அதிரடியாக
    ஆடினர். 

    இதனால் அணியின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. வார்னர் அரை சதமடித்து அசத்தினார். அரை சதமடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் ஆரோன் பின்ச் 46 ரன்னில் அவுட்டானார். வார்னர் 58 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை. இதனால் எளிதில் வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்த ஆஸ்திரேலியா வெற்றிக்காக போராடியது.

    கடைசிக் கட்டத்தில் அந்த அணியின் ஸ்டோய்னிஸ் போராடினார். அவர் 23 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா அணி 20 ஒவரில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

    பரபரப்பாக நடந்த போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன்மூலம் அந்த அணி 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. 
    சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.
    ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு சென்றுள்ளது. ஹர்பஜன் சிங் அணியுடன் அப்போது செல்லவில்லை. ஓட்டல் அறையில் வீரர்கள் தனிமப்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகினார்.

    இந்நிலையில் ஹர்பஜன் சிங்கும் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
    ×