என் மலர்
செய்திகள்

அரை சதமடித்த பிராவோ
கரீபியன் பிரிமீயர் லீக் - டிரிபாகோ நைட்ரைடர்ஸ், பார்படாஸ் டிரைடண்ட் அணிகள் வெற்றி
கரீபியன் பிரிமீயர் லீக்கில் செயிண்ட் லூசியா அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது டிரிபாகோ நைட் ரைடர்ஸ் அணி.
கரீபியன் பிரிமீயர் லீக்கில் செயின்ட் லூசியா சாக்ஸ் - டிரிபாகோ நைட்ரைடர்ஸ் மோதிய போட்டி டிரினிடாடில் நடந்தது.
டாஸ் வென்ற செயிண்ட் லூசியா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
டிரிபாகோ அணியில் வெப்ஸ்டர் 20 ரன்னும், செல்பர்ட் 33 ரன்னும் எடுத்தனர். பிராவோ அரை சதமடித்தார். பொலார்ட் அதிரடியாக ஆடி 21 பந்தில் 42 ரன் எடுத்தார். இதனால் டிரிபாகோ அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து, 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் செயின்ட் லூசியா அணி களமிறங்கியது.
அந்த அணியில் மார்க் டெயல் 40, பிளெட்சர் 42 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து ஆடவில்லை.
இதனால் செயிண்ட் லூசியா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் டிரிபாகோ அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக பொலார்டு தேர்வு செய்யப்பட்டார். டிரிபாகோ அணி தொடர்ச்சியாக பெறும் 9வது வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜேசன் ஹோல்டர் அபாரம்: டிரினிடாடில் நடந்த மற்றொரு போட்டியில் ஜமைக்கா தலைவாஸ் மற்றும் பார்படாஸ் டிரைட்ண்ட் அணிகள் மோதின.
முதலில் ஆடிய ஜமைக்கா தலைவாஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்தது. பிளாக்வுட் 74 ரன்னும், ரசல் 54 ரன்னும் எடுத்தனர்.
அடுத்து ஆடிய பார்படாஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் ஜேசன் ஹோல்டர் அதிரடியாக ஆடி 69 ரன் எடுத்தார். கார்டர் 42 ரன்னும் , சாண்ட்னர்35 ரன்னும் எடுத்து அணியை வெற்றி பெறச் செய்தனர்.
Next Story