என் மலர்
விளையாட்டு
சுரேஷ் ரெய்னாவைத் தொடர்ந்து ஹர்பஜன் சிங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விலகியுள்ளார்.
ஐபிஎல் கிரிக்கெட் லீக் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அங்கு சென்றுள்ளது. ஹர்பஜன் சிங் அணியுடன் அப்போது செல்லவில்லை. ஓட்டல் அறையில் வீரர்கள் தனிமப்படுத்தப்பட்டிருந்த நேரத்தில் துணைக் கேப்டன் சுரேஷ் ரெய்னா சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஹர்பஜன் சிங்கும் சொந்த காரணத்திற்கான ஐபிஎல் தொடர் முழுவதிலும் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடக்கிறது.
சவுதம்டன்:
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது. ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து இப்போது ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது.
இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளிவைக்கப்படாமல் இருந்திருந்தால், அதற்கு தயாராவதற்கு இந்த தொடர் உதவியிருக்கும். என்றாலும் இரு பலம் வாய்ந்த அணிகள் கோதாவில் குதிப்பதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கிறது.
உலகின் ‘நம்பர் ஒன்’ அணியான ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் வலுவாக விளங்குகிறது. கடைசியாக ஆடிய 11 இருபது ஓவர் போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்று இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் ஆரோன் பிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், கிளைன் மேக்ஸ்வெல் ஆகியோர் மிரட்டுவார்கள். பந்து வீச்சில் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஆஷ்டன் அகர், கேன் ரிச்சர்ட்சன் வலுசேர்க்கிறார்கள்.
மார்னஸ் லபுஸ்சேன் பயிற்சி ஆட்டத்தில் 51 பந்தில் சதம் அடித்த போதிலும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்று தெரிகிறது. ‘ஆஸ்திரேலிய 20 ஓவர் அணிக்குரிய கட்டமைப்பு தற்போது நன்றாக உள்ளது. எனவே லபுஸ்சேன் சர்வதேச 20 ஓவர் போட்டியில் அறிமுகம் ஆவதற்கு இன்னும் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டியது இருக்கும்’என்று கேப்டன் பிஞ்ச் நேற்று தெரிவித்தார்.
மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் தந்தைக்கு உடல்நலக்குறைவால் விலகியிருப்பது பின்னடைவாகும். இருப்பினும் ஜோஸ் பட்லர், மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, டாம் பான்டன், சாம் பில்லிங்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க்வுட் என்று திறமையான வீரர்கள் அணிவகுத்து நிற்கிறார்கள். ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறுகையில், ‘இங்கிலாந்து அபாயகரமான அணி. அந்த அணியின் கேப்டன் மோர்கன் விளையாடும் விதத்தை கண்டு இருக்கிறேன். களம் இறங்கி முதல் பந்தில் இருந்தே விளாசுவதை பார்க்கவே திகைப்பாக இருக்கும். அவர்களின் சவாலை சமாளிக்க தயாராக இருக்கிறோம்’ என்றார்.
இவ்விரு அணிகளும் இதுவரை 16 இருபது ஓவர் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 6-ல் இங்கிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை.
இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பிளிஸ்கோவா அதிர்ச்சிகரமாக தோற்று வெளியேறினார்.
நியூயார்க்:
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 44-ம் நிலை வீரரான கைல் எட்மன்டை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.
முதல் செட்டை டைபிரேக்கரில் கோட்டை விட்ட ஜோகோவிச் அதன் பின்னர் தனது ஆட்ட வேகத்தை அதிகரித்ததுடன் அடுத்த 3 செட்களையும் சொந்தமாக்கி தனது ஆதிக்கத்தை நிரூபித்தார். 3 மணி 13 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்டை துரத்தியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்றில் ஜோகோவிச், 29-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை சந்திக்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் இருக்கும் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 7-6 (7-2), 6-3, 6-4 என்ற நேர்செட்டில் அமெரிக்காவின் மேக்சிம் கிரேசியை தோற்கடித்தும், இன்னொரு ஆட்டத்தில் 7-ம் நிலை வீரர் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-5, 6-7 (8-10), 6-3, 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்க வீரர் பிரன்டன் நகாஹிமாவை வீழ்த்தியும் 3-வது சுற்றுக்குள் நுழைந்தனர்.
இதே போல் டேவிட் கோபின் (பெல்ஜியம்), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா), பிலிப் கிராஜினோவிச் (செர்பியா), ரிச்சர்ட் பிரான்கிஸ் (லிதுவேனியா), ஜோர்டான் தாம்சன் (ஆஸ்திரேலியா), பாப்லோ காரெனோ பஸ்டா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் திவிஜ் சரண் (இந்தியா)- நிகோலா காசிச் (செர்பியா) ஜோடி முதல் சுற்றில் தோற்று நடையை கட்டியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியோர்ஜியை எளிதில் விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் தொடர்ச்சியாக 5-வது முறையாக அடியெடுத்து வைத்தார். முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் சக நாட்டவரான அன்னா லினா பிராட்சாமை வீழ்த்தினார். உலக தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், இந்த போட்டிக்குரிய தரநிலையில் முதலிடத்தில் உள்ளவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 1-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் 50-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வியை தழுவினார். வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), செவஸ்தோவா (லாத்வியா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகிய முன்னணி வீராங்கனைகளின் சவாலும் 2-வது சுற்றுடன் முடிவுக்கு வந்தது.
அதே சமயம் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), பெட்ரா மார்டிச் (குரோஷியா), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), கிராசெவா (ரஷியா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), புதின்சேவா (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளில் நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் ஒன் வீரரும், 17 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), 44-ம் நிலை வீரரான கைல் எட்மன்டை (இங்கிலாந்து) எதிர்கொண்டார்.
முதல் செட்டை டைபிரேக்கரில் கோட்டை விட்ட ஜோகோவிச் அதன் பின்னர் தனது ஆட்ட வேகத்தை அதிகரித்ததுடன் அடுத்த 3 செட்களையும் சொந்தமாக்கி தனது ஆதிக்கத்தை நிரூபித்தார். 3 மணி 13 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-7 (5-7), 6-3, 6-4, 6-2 என்ற செட் கணக்கில் கைல் எட்மன்டை துரத்தியடித்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த ஆண்டில் தோல்வியையே சந்திக்காத ஜோகோவிச் தொடர்ச்சியாக பெற்ற 25-வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்றில் ஜோகோவிச், 29-ம் நிலை வீரரான ஜெர்மனியின் ஜான் லினர்ட் ஸ்ரப்பை சந்திக்கிறார்.

இதே போல் டேவிட் கோபின் (பெல்ஜியம்), டெனிஸ் ஷபோவலோவ் (கனடா), போர்னா கோரிச் (குரோஷியா), பிலிப் கிராஜினோவிச் (செர்பியா), ரிச்சர்ட் பிரான்கிஸ் (லிதுவேனியா), ஜோர்டான் தாம்சன் (ஆஸ்திரேலியா), பாப்லோ காரெனோ பஸ்டா (ஸ்பெயின்) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் திவிஜ் சரண் (இந்தியா)- நிகோலா காசிச் (செர்பியா) ஜோடி முதல் சுற்றில் தோற்று நடையை கட்டியது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2018-ம் ஆண்டு சாம்பியனான நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-2 என்ற நேர்செட்டில் இத்தாலி வீராங்கனை கமிலா ஜியோர்ஜியை எளிதில் விரட்டியடித்து 3-வது சுற்றுக்குள் தொடர்ச்சியாக 5-வது முறையாக அடியெடுத்து வைத்தார். முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-3, 7-6 (8-6) என்ற நேர்செட்டில் சக நாட்டவரான அன்னா லினா பிராட்சாமை வீழ்த்தினார். உலக தரவரிசையில் 3-வது இடம் வகிப்பவரும், இந்த போட்டிக்குரிய தரநிலையில் முதலிடத்தில் உள்ளவருமான கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு) 1-6, 6-7 (2-7) என்ற நேர்செட்டில் 50-ம் நிலை வீராங்கனையான கரோலின் கார்சியாவிடம் (பிரான்ஸ்) அதிர்ச்சி தோல்வியை தழுவினார். வோன்ட்ரோசோவா (செக்குடியரசு), செவஸ்தோவா (லாத்வியா), எலினா ரைபகினா (கஜகஸ்தான்) ஆகிய முன்னணி வீராங்கனைகளின் சவாலும் 2-வது சுற்றுடன் முடிவுக்கு வந்தது.
அதே சமயம் பெட்ரா கிவிடோவா (செக்குடியரசு), பெட்ரா மார்டிச் (குரோஷியா), ஜெனிபர் பிராடி (அமெரிக்கா), கிராசெவா (ரஷியா), அனெட் கோன்டாவிட் (எஸ்தோனியா), புதின்சேவா (கஜகஸ்தான்) உள்ளிட்டோர் தங்களது ஆட்டங்களில் வெற்றியை ருசித்தனர்.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு ஒரே பிராண்ட் பந்தை பயன்படுத்தினால்தான் பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக இருக்காது என்று வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பந்து நாட்டிற்கு நாடு வேறுபடுகிறது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அயர்லாந்து போன்ற நாடுகள் டியூக்ஸ் வகை பந்தையும், இந்தியா எஸ்.ஜி. பந்தையும், ஆஸ்திரேலியா கூக்கப்புரா பந்தையும் பயன்படுத்துகின்றன.
இதனால் ஒருநாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று விளையாடும்போது, பந்து வீச்சாளர்கள் அந்த நாட்டின் சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ள சிரமப்படுகிறார்கள்.
இதனால் டெஸ்ட் கிரிக்கெட் என்றாலே ஒரே பிராண்ட் பந்துதான் என்பதை ஐசிசி உறுதிப்படுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளரும், தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஜாம்பவானும் ஆன வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘பல ஆண்டுகளாக நான் டியூக்ஸ் பந்திற்கு ஆதரவாக இருந்துள்ளேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் உலகம் முழுவதும் ஒரு பிராண்ட் பந்தை பயன்படுத்த வேண்டும் நான் உணர்கிறேன்.
அது எந்த பிராண்ட் என்பது முக்கியமல்ல. ஆனால், ஐசிசி இந்த முடிவை கட்டாயம் எடுக்க வேண்டும். பந்து வீச்சாளர்கள் உலகின் பல்வேறு இடங்களில் விளையாடும்போது, மாறுபட்ட பந்துகளுக்கு ஏற்ப தங்களை தயார்படுத்திக் கொள்வது கஷ்டம்’’ என்றார்.
ஐக்கிய அரபு அமீரகம் புறப்படாமல் இருக்கும் ஹர்பஜன் சிங் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவாரா? என்பது சஸ்பென்ஸாகவே உள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுவதற்கு முன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை பயிற்சி மேற்கொண்டது. இதில் ஹர்பஜன் சிங் கலந்து கொள்ளவில்லை. அதன்பின் சென்னை சூப்ப் கிங்ஸ் அணி துபாய் புறப்பட்டு சென்றது. அப்போது ஹர்பஜன் சிங் அணியுடன் செல்லவில்லை.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வெளிநாட்டு வீரர்கள் துபாய் சென்றடைந்துள்ளனர். ஹர்பஜன் சிங் மட்டும் இன்று தனிப்பட்ட காரணத்தால் புறப்படாமல் இருக்கிறார். இதனால் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பாரா? என்ற சஸ்பென்ஸ் இன்னும் நீடித்துக் கொண்டே இருக்கிறது.
ஏற்கனவே துணைக் கேப்டன் ரெய்னா சொந்த காரணத்திற்கான தொடரில் இருந்து விலகியுள்ளார். 13 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜோ ரூட் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும், இன்னும் டி20 அணிக்கான திட்டத்தில்தான் உள்ளார் என இங்கிலாந்து கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட்டில் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட். டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிக்கான அணியில் விளையாடும் ஜோ ரூட்டுக்கு டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை.
இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் டெஸ்ட் போட்டிக்கு என ஒரு அணியையும், ஒயிட்-பால் போட்டிக்கு ஒரு அணி எனவும் தயார்படுத்தியுள்ளது.
ஜோ ரூட்டுக்கு பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக டி20 போட்டியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் இனிமேல் இங்கிலாந்து டி20 அணியில் விளையாட முடியுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் டி20 அணிக்கான திட்டத்தில்தான் ஜோ ரூட் உள்ளார் என்று இங்கிலாந்து ஒயிட்-பால் அணி கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘‘நாங்கள் ஜோ ரூட் உடன் பேசினோம். அவருக்கான எதிர்காலம் நிச்சயம் உள்ளது. தற்போதைய நிலையில் அவருக்கு ஆடும் லெவன் அணியில் இடமில்லை என்ற பேச்சு நடைபெற்று கொண்டிருந்தது. நாங்கள் அவரை எல்லாவித கிரிக்கெட் போட்டிக்கும் விளையாட அழைத்துச் செல்ல விரும்பவில்லை.
ஜோ ரூட் டி20 போட்டியில் விளையாட விரும்புகிறார். அவருக்கு கவுன்ட்டி போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் அதிக அளவில் கிடைக்கவில்லை. தற்போது இந்த இடைவெளி அவருக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என நாங்கள் உணர்கிறோம்’’ என்றார்.
முன் எச்சரிக்கையுடன் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் நிகழும், சிஎஸ்கே கற்றுக்கொடுத்த பாடம் இதுதான் என்கிறார் பஞ்சாப் அணி உரிமையாளர் வாடியா.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக 8 அணி வீரர்கள், உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள், சப்போர்ட் ஸ்டாஃப்கள் ஐக்கிய அரபு அமீரகம் சென்றுள்ளனர்.
ஒரு வாரத்தில் மூன்று முறை கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதில் நெட்டிவ் வந்தால் வீரர்கள் செக்யூர் பாதுகாப்பு வளையத்திற்குள் வந்து, பயிற்சியை தொடங்குவார்கள். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் இரண்டு வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் முன்னெச்சரிக்கையுடன் இருந்தாலும் யாருக்கு வேண்டுமென்றாலும் இதுபோன்று நிகழும் என்பதுதான் சிஎஸ்கே சம்பவம் கற்றுக்கொடுத்த பாடம் என்று கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் உரிமையாளர்களில் ஒருவரான நெஸ் வாடியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நெஸ் வாடியா கூறுகையில் ‘‘சிறந்த முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டாலும் கூட அது யாருக்கும் ஏற்படக்கூடும் என்பதை சிஎஸ்கே சம்பவம் நமக்குக் கற்பித்திருக்கிறது, எனவே பயோ-செக்யூர் நெறிமுறைகளில் நாம் மிகவும் இணக்கமாகவும் கடினமாகவும் இருக்க வேண்டும்.
வீரர்களுடன் உண்மையிலேயே இருக்க வேண்டியவர்கள் மட்டுமே பயோ-செக்யூர் வளையத்தில் இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்.
அணிக்கு வெளியில் உள்ள ஏராளமான ஸ்டாஃப்கள், அவர்களுடைய ஆதரவு ஸ்டாஃப்கள், போட்டி அதிகாரிகள் போன்றோரை எவ்வளவு குறைக்க முடியுமோ, அந்த அளவிற்கு குறைக்க வேண்டும்.
போட்டிகளை பார்ப்பதற்காக நான் ஐக்கிய அரபு அமீரகம் செல்வது குறித்து இன்னும் இறுதியாகவில்லை. ஆனால், வழக்கமாக ஏராளமான வீரர்களுடன் கலந்துரையாடுவது கிடையாது. நான் அனில் கும்ப்ளேவிடம் எப்படி செல்கிறது என்று இரண்டுமுறை மட்டுமே கேட்டுள்ளேன். ஜூம் மற்றும் மற்ற ஆன்லைன் தகவல் தொடர்பு மூலம் பேசுவது எனக்கு வசதியாக இருக்கிறது’’ என்றார்.
உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பயத்துடன் டி20 தொடரை எதிர்கொள்ள மாட்டோம் என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
மார்ச் மாதம் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையில் ஒயி்ட்பால் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. அப்போது கொரோனா தொற்று அதிகரித்ததால் முதல் போட்டியுடன் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்பின் ஆஸ்திரேலியா அணி இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடவில்லை. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான இங்கிலாந்து சென்றுள்ளது.
ஆஸ்திரேலியா உலக கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்த பிறகு தற்போது அங்கு சென்று விளையாடுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்த பயத்தை சுமந்து செல்லமாட்டோம் என்று ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆரோன் பிஞ்ச் கூறுகையில் ‘‘பின்னால் திரும்பி அந்த போட்டியை பார்த்தோம் என்றால், எங்களால் ரன்கள் குவிக்க இயலாது. எங்களுடைய தொடக்க பேட்ஸ்மேன்கள் விரைவில் ஆட்டமிழந்தாலும் கடைநிலை வீரர்கள் சேஸிங் செய்வார்கள்.
சிறந்த அணியாக, உலகின் தலைசிறந்த அணியாக இருக்கும்போது, குறைந்த ஸ்கோரை சேஸிங் செய்யும்போது, அவர்கள் ஆக்ரோசமாக செயல்பட்டு எங்களது விக்கெட்டுக்களை வீழ்த்தினர். அது கடினமான நாள், ஆனால் டி20 மாறுபட்ட கிரிக்கெட். தோல்வியடைந்த போட்டியின் பயத்தை சுமந்து கொண்டு செல்லமாட்டோம். டி20 போட்டியில் அதை என்னால் உறுதியாக சொல்ல முடியும்’’ என்றார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டது எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நேரம் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார். ஐக்கிய அரபு அமீரகம் சென்ற கிரிக்கெட் வீரர்கள் ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.
அப்போது மூன்று முறை கொரோனா பரிசோதனை செய்யப்படும். நெகட்டிவ் முடிவு வந்த பின்னர், பாதுகாப்பு வளைத்திற்குள் வந்து பயிற்சி மேற்கொண்டு, தொடருக்கு தயாராக வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைத் தவிர மற்ற ஏழு அணிகளும் ஆறு நாட்கள் தனிமைப்படுத்துதல் காலத்தை முடித்துக் கொண்டு பயிற்சியை தொடங்கிவிட்டன.
இந்நிலையில் தனிமையில் இருந்த அந்த ஆறு நாட்கள் மிகவும் மோசமான நேரம் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அஸ்வின் கூறுகையில் ‘‘கடந்த ஐந்து ஆறு மாதங்களாக நான் வீட்டில் இருந்தேன். ஆனால், ரசிகர்களுடன் தொடர்பில் இருந்தேன். யூடியூப் சேனல் மூலம் எனது வேலையை பார்த்துக் கொண்டிருந்தேன். இன்ஸ்டாகிராம் லைவ் போன்றவற்றை ஆக்கிரமிக்க முயற்சி செய்தேன்.
ஆனால் என்னைப் பொறுத்த வரைக்கும் இந்த ஆறு நாட்கள் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான நேரம். ஏனென்றால், முதல்நாளில் நான் வெளியே பார்க்கும்போது, துபாய் ஏரியை பார்க்க முடிந்தது.
வலது பக்கம் பார்க்கும்போது என்னால் புர்ஜ் கலிபாவை பார்க்கமுடியும், மிகவும் சிறப்புமிக்க இடம். இருந்தாலும் எத்தனை நாட்களுக்கு வெளியில் இருந்தே பார்க்க முடியும்?. மேலும், வெயில் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. நான் பொதுவாக அதிக அளவில் செல்போன் பார்க்க மாட்டேன், அதை நீண்ட நேரம் பயன்படுத்த மாட்டேன். ஆனால் கடந்த வாரத்தில் எனது முழு டேட்டாவும் தீர்ந்து விட்டது. அல்லது ஆறு மணி நேரத்திற்கு மேல் பார்த்துள்ளேன்’’ என்றார்.
ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை சனிக்கிழமை வெளியிடப்படும் நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் முதல் ஆட்டத்தில் விளையாடுவது யார் என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
ஐபிஎல் 13 சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. போட்டி தொடங்குவதற்கு மிகவும் முன்னதாகவே அட்டவணை வெளியிடப்படும். ஆனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபு தாபி, ஷார்ஜா ஆகிய இடங்களில் போட்டி நடைபெற இருப்பதால் கொரோன வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கும் நிலையில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு வீரர்கள் தங்குதடையின்றி சென்று வர ஒப்புதல் வாங்க வேண்டியிருந்தது.
சில தினங்களுக்கு முன்புதான் அதற்கான அனுமதி கிடைத்தது. இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்தவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கான போட்டியை எப்போது வைத்துக் கொள்வது என்ற நெருக்கடியும் ஏற்பட்டது.
இந்நிலையில் நாளைமறுதினம் போட்டி அட்டவணை வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் விதிமுறைப்படி நடப்பு சாம்பியனும், 2-ம் இடம் பிடித்த அணியும் முதல் ஆட்டத்தில் விளையாட வேண்டும்
ஒருவேளை சென்னை அணிக்கான போட்டிகள் ஒரு வாரம் கழித்து தொடங்கும் நிலையில் தயாரிக்கப்பட்டால் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் விளையாடும் அணி எது? என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
முதல் போட்டியிலேயே ரசிகர்களை ஆர்வத்தை சுண்டி இழுக்க ஒளிபரப்பு நிறுவனம் விரும்பும். இதனால் இரண்டு முன்னணி அணிகள் விளையாடவே வாய்ப்புள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் மீண்டும் நவம்பரில் நடத்தப்படுகின்றன.
பாகிஸ்தான் சூப்பர் லீக் ஆண்டுதோறும் பிப்ரவரி - மார்ச் மாதங்களில் நடைபெற்று வருகின்றன. இந்த வருடத்திற்கான பாகிஸ்தான் சூப்பர் லீக் பிப்ரவரி மாதம் தொடங்கியது. மார்ச் மாதம் 17-ந்தேதி வரை நடைபெற்ற நிலையில், கொரோனா வைரஸ் தொற்றால் போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டன.
லீக் ஆட்டங்கள் நடைபெற்று முடிந்த நிலையில் பிளே-ஆஃப்ஸ் மற்றும் இறுதி போட்டி ஆகியவற்றை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ஒத்திவைக்கப்பட்ட போட்டிகள் நவம்பர் மாதம் நடத்தப்படும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.
குவாலிபையர் 1 மற்றும் எலிமினேட்டர் 1 ஆகியவை நவம்பர் 14-ந்தேதியும், எலிமினேட்டர் 2 நவம்பர் 15-ந்தேதியும், இறுதிப் போட்டி நவம்பர் 17-ந்தேதியும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் அனைத்தும் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் பின்பற்றி லாகூர் கடாஃபி மைதானத்தில் நடத்தப்படும். வீரர்களுக்கான பயோ-செக்யூர் நடைமுறை கடைபிடிக்கப்படும். தற்போதையை திட்டத்தில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்க முடிவு எடுக்கவில்லை. அக்டோபர் மாதம் சூழ்நிலையை பார்த்து முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன், அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேன் ரிச்சர்ட்சன். இவர் இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரிலும், அதனைத் தொடர்ந்து ஐபிஎல் போட்டியிலும் விளையாட இருந்தார்.
அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க இருப்பதால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் இருந்தும் விலகியுள்ளார்.
இதுகுறித்து கேன் ரிச்சர்ட்சன் கூறுகையில் ‘‘ஐபிஎல் லீக் போன்ற சிறந்த தொடரில் இருந்து விலகுவது கடினமான ஒன்று. உலகின் தலைசிறந்த லீக்குகளில் ஒன்று ஐபிஎல். முதல் குழந்தை பிறக்க இருப்பதால் வீட்டில் சவால்கள் நிறைந்துள்ளன.
குழந்தை பிறக்கும் நேரத்தில் வீட்டில் இல்லாமல் இருக்கும் ரிஸ்க்கை எடுக்க விரும்பவில்லை. ஐபிஎல் போட்டியை தவற விடுவது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனால், இன்னொரு முறை ஐபிஎல் போட்டிக்கான வாய்ப்பு வரலாம். ஆனால் குழந்தை பிறக்கும்போது மனைவி அருகில் இருக்கும் வாய்ப்பு எப்போதும் கிடைக்கும் என்றும் நான் நினைக்கவில்லை’’ என்றார்.